Thursday, April 30, 2009

குகையில் புலியைப் பிடிக்க முடியுமா?

1987 ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் ஒரு நாள். புதுடில்லியின் ஆடம்பர விடுதி ஒன் றின் அறையில் - இந்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் குழாய்ப்புகை பிடித்தபடி கோபம் கொப்பளிக்க நின்று கொண்டிருந்தார். ஈழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனின் சம்மதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார். இந் திய அரசும் இலங்கை அரசும் ஈழத்தில் அமை தியை ஏற்படுத்தத் திட் டம் போட்டிருந்த ஒரு யோசனைக்கு அவரின் சம்மதத்தை அளிக்கும் படி வற்புறுத்திக் கொண் டிருந்தார்.

தமிழர் பெரும்பான் மையாக வாழும் பகு திக்கு கூடுதல் அதிகா ரங்களை அளிக்கும் திட் டத்திற்கு நிபந்தனை - புலிகள் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்பதுதான் திட்டம். தனி நாடு கோரிக்கை யைக் கைவிடவேண்டும் என்பதும் மற்றொரு நிபந்தனை. எதையும் ஏற் றிட பிரபாகரன் தயா ராக இல்லை.நாங்கள் சொல்வ தைக் கேட்காவிட்டால், இந்தப் புகைக் குழாய்ப் புகையிலை தீர்வதற்குள் உம்மைத் தீர்த்துக் கட்டி விடுவோம் என்று அந்த அதிகாரி கூறி னார். அவர் இலங்கைக்கான அன்றைய இந்தியத் தூதர் ஜே.என். தீட்சித்.நான்கு மாதங்களுக் குப் பிறகு விடுதலைப் புலிகளிடம் வசமாகச் சிக்கிக் கொண்டது இந்திய ராணுவம்தான்! ஒரே வாரத்தில் தீர்த்து விடுவோம் என்று போனவர்கள் - மூன்று ஆண்டுகள் போராடி னார்கள் - 1155 இந்திய ராணுவ வீரர்களைச் சாகக் கொடுத்தனர்.


22 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது இலங்கை ராணுவம் விடு தலைப்புலிகளை முற்றி லுமாகத் தீர்த்துக் கட்டி விடும் என்றும் பிரபாக ரனை உயிருடனோ, இல் லாமலோ பிடித்து விடும் என்றும் கூறு கிறது. புதுக்குடியிருப் பைப் பிடித்துவிட்ட தாக ஏப்ரல் 5 இல் அறி வித்தது. 420 புலிகளின் உடல்களைக் கைப்பற்றி யதாகக் கூறுகிறது. கடந்த இரண்டு மாதங் களாக ஏதுமறியாத் தமி ழர்கள் கொல்லப்பட் டுக் கொண்டிருக்கும் போர் இல்லாப் பகுதி யில் 20 கி.மீ. பரப்பிற் குள் பிரபாகரன், அவ ரது மகன் சார்லஸ் ஆன்டனி, பொட்டு அம் மான் போன்ற தலைவர் கள் முடக்கி வைக்கப் பட்டிருப்பதாக ராணு வச் செய்தித் தொடர் பாளர் பிரிகேடியர் உதயா நானயக்கரா கூறுகிறார்.


அவர்கள் தப்பிப்ப தற்கு வழியே இல்லை என்று கொழும்பிலி ருந்து தெகல்கா இத ழுக்குக் கூறியுள்ளார். விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலை வர் நடேசன் இதனை ஏளனமாகப் புறந்தள்ளு கிறார். கடந்த ஜனவரி மாதம் இலங்கை ராணு வத் தளபதி சரத் பொன் சேகா பத்திரிகையாளர் களிடம் பேசும்போது, கடல் வழியாக பிரபா கரன் தப்பிச் சென்று விட்டார் எனக் கூறி னார். ஏப்ரல் முதல் நாளன்று பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆன் டனி சண்டையில் காய மடைந்தார் என்றனர். புலிகள் இதனையும் மறுக்கின்றனர். இப் போது இலங்கை ராணு வம் ஆன்டனியைத் தீவி ரமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறது. அவர் போர் முனையில் படையை நடத்துகிறார் எனத் தெரிகிறது.


ஆன்டனி இரண்டு சக்தி வாய்ந்த குண்டு களைத் தயாரித்துள் ளார் என இணைய தளத்தில் செய்தி வெளி யிட்ட இலங்கை ராணு வம், இதுபற்றிய விவ ரங்களைச் சொல்ல வில்லை. 2007 முதல் பல் வேறு குற்றங்கள் தொடர் பாக அவரைச் சம்பந்தப் படுத்துகிறது ராணுவம்.
அவர் சிறந்த தொழில் நுட்ப அறிவுள்ளவர்; அவர்தான் பிரபாகர னின் லட்சிய தீபத்தைத் தொடர்ந்து தூக்கிப் பிடிப்பவராக இருப் பார். இலங்கையின் நிலப் பரப்புக்குள், ஈழம் எனும் பெயரில் தனி மாநிலத்தை பிரபாக ரன் அமைத்துவிட் டார். 150-க்கு 100 கி.மீ. என்ற அளவில் இலங் கையின் வடபகுதியில் அமைத்து தங்களது நிருவாகம், நீதிமன்றம், ராணுவம், கடற்படை, விமானப் படை போன் றவற்றை அவர்கள் வைத் திருந்தார்கள். போர் நிறுத்த ஒப்பந்தத்தை ராஜபக்சே அரசு மீறி விட்ட 6 ஆண்டுகாலத் தில் இவற்றைத் தாக்கி வந்து, கடந்த 2008 ஜனவரியில் நேரடியான போரையே தொடுத்து விட்டது.


குசால் பெரரா எனும் இலங்கையின் இதழா ளர் ஒருவர் கூறுவது போல, இந்தக் குட்டி மாநிலத்தைச் சிறுகச் சிறுக அழித்துவிட்டார் கள். அதில் கடைசியாக அழிக்கப்பட்ட பகுதி தான் புதுக்குடியிருப்பு என அவர் கூறுகிறார். மறுதலிக்கும் லங்கா (Lanka Dissent) எனும் ஏட்டின் ஆசிரியர் இவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வெளி யேற்றப்பட்ட இலங் கையின் கிழக்குப் பகுதி யில் இருந்து, கொரில்லா தாக்குத லைத் தொடங்க விடு தலைப்புலிகள் திட்ட மிட்டிருப்பதாக நம்புகிறார். (அரசின் கொள் கைகளைக் கண்டித்து எழுதிய காரணத்திற் காக பத்திரிகை ஆசிரி யர் வசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட தன் பின்னர், இவரும் தன் இணைய தளத்தை மூடிவிட்டார்).


சிறீலங்காவின் கிழக் குப் பகுதிகளான பட்டி கோலா, திரிகோணமலை, அம்பாறை போன்ற பகுதி களுக்கு விடுதலைப்புலி கள் ஊடுருவிச் சென்றுள் ளதாகப் பெரரா கூறு கிறார். கண்ணி வெடிகளை வெடிக்கச் செய்து அவர்கள் காவல்துறை, ராணுவம், அரசுக்கு ஆதரவான கரு ணாவின் கூட்டம் ஆகிய வற்றைத் தாக்கி வருகின் றனர்.அம்பாறையில், ஏப் ரல் 5 ஆம் நாள் காவல் அதிகாரி எச்.எல். ஜமால் தீன் என்பவரைப் புலி கள் சுட்டுக் கொன்றுள் ளனர். இதற்கு 2 நாள் கள் முன்பாகத்தான் 13 புலிகளைக் கொன்ற தாக ராணுவம் கூறியது. ஏப்ரல் 1 இல் ஒரு ராணுவ வீரர் கொல்லப் பட்டார்; ஒருவர் கையெறி குண்டுத் தாக்குதலில் பட்டிகோலாவில் காய மடைந்தார். அதற்கும் சில நாள்கள் முன்ன தாக, அதே பகுதியில் 6 சிறப்புப் பாதுகாப்புப் படையினர் கொல்லப் பட்டனர். அம்பாறை யில் மார்ச் 26 இல் கருணா கும்பலைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கும் ஒரு வாரத் திற்கு முன்பு பட்டி கோலாவில் சிறப்புப் பாதுகாப்புப் படையின ரைத் தாக்கி 3 வீரர் களைக் கொன்றுவிட்ட னர்.

இதுவரை அப்பாவி மக்கள் 3 ஆயிரம் பேர் தாக்குதலில் கொல் லப்பட்டுள்ளனர்.இலங்கை ராணுவத் திற்கு ஏற்பட்ட சாவுக் கணக்கு பகிரங்கமாகத் தெரிவிக்கப்படுவது கிடையாது. இலங்கை எதிர்க்கட்சியான அய்க்கிய சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் சிறீ துங்க ஜயசூரியா, இது வரை 10 ஆயிரம் படை வீரர்கள் கடந்த 2 ஆண் டுகளில் கொல்லப்பட் டனர் எனக் கூறுகிறார். ராஜபக்சேவை எதிர்த்து அதிபர் தேர்தலில் இவர் போட்டியிட்டவர்; அர சின் கொள்கைகளைக் கடுமையாகத் தாக்குபவர். ராணுவத்தின் இணைய தளத்தில் உள்ள செய்தி இது: சமீப காலத்தில் திரி கோணமலை, பட்டி கோலா, அம்பாறை ஆகிய பகுதிகளில் நுழைந் துள்ள புலிகள் தாக்குத லில் ஈடுபட்டு மக்களை யும், படையினரையும் ஆத்திரமூட்டுகின்றனர்.


பல விடுதலைப்புலி கள் அடர்ந்த முல்லைத் தீவுக் காட்டுப் பகுதிக் குள் நுழைந்துள்ளனர். இந்தப் பகுதியில் தான் 1980 களில் இந்தியப் படையுடன் புலிகள் மோதிப் பலரையும் கொன்றனர். உண்மை யிலேயே, இந்தப் பகுதி புலிகளின் (குகைகள்) வாழ்விடம்தான். இந்தி யப் படையின் வலு வான தடுப்பு நடவடிக் கைகளுக்குப் பின்னரும் புலிகள் நிறைய படைக் கலன்களைக் கடத்தி வந்தனர் என்று 1987-இல் இப்பகுதியில் போர்ப் படைக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் கூறியுள்ளார். இதே கருத்தை யாழ்ப் பாணத்தின் நாடாளு மன்ற உறுப்பினர் என் சிறீகாந்தா எதிரொலிக் கிறார். ஆயிரக்கணக் கான புலிகள் காட்டுக் குள் கலந்து உறைகின்ற னர் என்று தெகல்கா ஏட்டுக்கு சிறீகாந்தா தெரிவித்தார்.
சிறீலங்கா படையி னரைத் தாக்கும் கொரில்லா போரை பிரபாகரனின் மகன் ஆன்டனி தலைமை தாங்கி நடத்துவார் என்று நோக்கர் கள் கருதுகின்றனர்.

பிரபாகரனைப் பேட்டி கண்டு பெயர் பெற்ற அனிதா பிர தாப், என்றாவது ஒரு நாள் ஆன்டனி தன் தந் தையிடம் இருந்து தலை மைப் பொறுப்பைப் பெறுவார் என்று கூறு கிறார்.
தலைமைப் பொறுப் பைப் பெறுவது எளிது: ஆனால், அவரின் லட்சி யத்தை வரித்துக் கொள் வது எளிதானதல்ல எனக் கூறும் இவர், அந்த ஆசைகளை நிறை வேற்றுவாரா என்ப தைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என்று கூறுகிறார்.
தரவு: தெகல்கா 18.4.2009
தமிழில்:அரசு

உண்ணாவிரதம்: குளிக்கப் போய் சேறு பூசிக் கொண்ட கதை

“இலங்கை போர் நிறுத்தம் அறி விக்குமா என ஞாயிற்றுக்கிழமை இரவு முழுதும் கண் விழித்திருந்து எதிர்பார்த் திருந்தேன். ஆனால், போர் நிறுத்தத்தை அறிவிக்காததால், என்னையே நான் அர்ப்பணித்துக் கொள்ள இந்த உண்ணா நோன்பை மேற்கொண்டிருக்கிறேன்” - என்ற அறிவிப்போடு அண்ணா நினைவிடம் அருகே, காலை 6 மணி யளவில் (ஏப்.27, 2009) கலைஞர் கருணாநிதி தொடங்கிய உண்ணா விரதம், ஆறரை மணி நேரத்தில், “இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவித்து விட்டது; உண்ணாவிரதம் மாபெரும் வெற்றி” என்ற அறிவிப்புடன் முடிவுக்கு வந்துவிட்டது.
உண்ணாவிரதம் முடிந்த உடனேயே முல்லிவாய்க்கால் பகுதியில் ராணுவம் பகல் 12.50 மணிக்கு ஒரு முறையும், மீண்டும் பகல் 1.10 மணிக்கு மறு முறையும் முப்படைகளும் இணைந்து நடத்திய தாக்குதலில் 272 தமிழர்கள் பிணமாகி விட்டனர். கலைஞர் கருணாநிதி உண்ணா விரதத்தை முடித்து ‘வெற்றிப் பிரக டனத்தை’ வெளியிட்ட சில மணி நேரத்துக்குள் சிங்கள ராணுவத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர் உதய நாணயக்காரா, “அரசு போர் நிறுத்தம் அறிவிக்கவில்லை. விமானத் தாக்குத லும், எரிகணை வீச்சும் மட்டும், அது பொது மக்களுக்கு பாதிப்பை ஏற் படுத்துபவை என்பதால் நிறுத்தப்பட் டுள்ளது” என்று கூறியுள்ளார்.
ராஜ பக்சேயும், சி.என்.என்., அய்.பி.என். தொலைக்காட்சியில் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். உண்மையில் போர் நிறுத்தம் ஏற்பட் டிருக்குமானால், அதை மகிழ்ச்சியோடு வரவேற்று, முதல்வர் கலைஞர் கருணா நிதிக்கு பாராட்டு மாலைகளை நாமே குவித்திருப்போம். ஆனால், நிகழாத ஒரு போர் நிறுத்தத்தை நிகழ்ந்ததாக பரப்பி, தமிழின அழிப்பு என்னும் மாபெரும் மனிதகுல அவலப் பிரச்சினையில் அதன் பரிமாணத்தைக்கூட கவனத்தில் கொள்ளாமல், மக்களை திசை திருப்பும் கபட நாடகங்களை அரங் கேற்றும்போதுதான் நாம் வேதனைப் படுகிறோம். இந்த உண்ணாவிரதம் யாரை எதிர்த்து நடத்தப்பட்டது என்பது முதல் கேள்வி! போரை நடத்துவதே சோனியா தான்.
எனவே சோனியாவும், காங் கிரசும் நினைத்தால்தான் போரை நிறுத்த முடியும், என்பதே, ஈழத் தமிழர்களின் மீது உண்மையான கவலை கொண்ட அனைவரது கோரிக்கை. கலைஞர் கருணாநிதியோ, காங் கிரசையும், சோனியாவையும் தலைமீது வைத்துக் கொண்டாடி வந்தார். சோனி யாவும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, தனக்கு கடிதம் எழுதிவிட்டார் என்றார். உண்மையில் சோனியா அப்படி ஒரு கடிதம் எழுத வேண்டியது ராஜபக் சேவுக்குத்தான். மற்றொரு நாட்டின் இறையாண்மை யில் ஒரு அளவுக்கு மேல் தலையிட முடியாது என்று ‘முரசொலி’யில் எழுதினார். காங்கிரசின் அதிகாரபூர்வ பேச்சாளர் ஜெயந்தி நடராசன், கடந்த வாரம் டெல்லியில் செய்தியாளர் களிடம் பேசும் போது, “இந்தியா இலங்கையிடம் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது, அவர்கள் கேட்க மறுக்கிறார்கள்” என்றார். அப்போது ஒரு செய்தியாளர் கேட்டார், “அப்படியானால் இந்தியா வின் வெளியுறவுக் கொள்கை தோற்று விட்டது என்கிறீர்களா?” ஆத்திர மடைந்த ஜெயந்தி நடராசன், பேட்டியை பாதியில் முடித்து விட்டு எழுந்து சென்றார்.
இந்தியாவால் இதற்கு மேல் இலங்கையிடம் வலியுறுத்த முடியாது என்று பேசிய அதே கலைஞர் தான் - இப்போது, தமது உண்ணாவிரதப் போராட்டத்தால் - இந்தியா, இலங்கையை வலியுறுத்தி போர் நிறுத்தத்தைக் கொண்டு வந்துவிட்டது என்கிறார். அப்படியானால், இப்படி ஒரு போராட்டத்தை, சில மாதங் களுக்கு முன்பே நடத்தியிருந்தால் எத்தனையோ ஆயிரம் தமிழர்களைக் காப்பாற்றி இருக்க முடியுமே என்ற கேள்வியும் எழத் தானே செய்யும்? கலைஞர் கருணாநிதி போராடாதது மட்டுமல்ல; போராடியவர்களையும் தி.மு.க. ஆட்சியின் காவல்துறையைக் கொண்டு ஒடுக்கியது. இனப்படு கொலைக்கு எதிரான பெண்கள் அமைப்பைச் சார்ந்த 20 பெண்கள் 14 நாட்கள் சாகும் வரை பட்டினி போராட்டம் நடத்தினர். மாவீரன் முத்துக்குமார் உடல் வைக்கப்பட்ட இடத்தில் போராட்டத்தைத் தொடங்கிய பெண்களை காவல்துறை மிரட்டி, விரட்டியது.
தனியார் இடங் கள் ஏதும் அவர்களுக்கு கிடைக்க விடாதபடி காவல்துறை மிரட்டியது. இறுதியாக மூன்றாவது நாள் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தங்களது கழகத்தின் தலைமையகத்தைப் பயன் படுத்திக் கொள்ளுமாறு தாமாக முன் வந்து, உதவினார். 12 ஆம் நாள் போராட்டத்தில் பெண்கள் பலர் உயிருடன் போராடிய நிலையில் அவ் வழியே தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை வாக்கு கேட்க காவல்துறை அனுமதித்தது. அவர் பின்னால் வந்தவர்கள் பெண்கள் உண்ணாவிரதம் இருந்த ம.தி.மு.க. அலுவலகத்தின் வாயி லில் வெடிகளை வெடித்து மகிழ்ச்சிக் கூத்தாடினர். அங்கே திரண்டிருந்த இன உணர்வாளர்கள் மீது கற்களை வீசியதில் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்த ஒரு பெண் பலத்த காயமடைந்தார். அவரது முகத்தில் ஏழு தையல் போடப்பட்டது.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போராடிய அமைப்புகளை எல்லாம் தி.மு.க. அரசின் காவல்துறை ஒடுக்கியது. ஈழத் தமிழர் பற்றிய பரப்புரைகளே நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். இந்தத் தேர்தலில், ஈழத் தமிழர் பிரச்சினையை மக்கள் பிரச்சினை யாகவே கருதவில்லை என்று கலைஞர் கருணாநிதி கூறினார். தங்களின் சாதனைகளையே முன்னிறுத்துவோம் என்றார். உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினும், இதே கருத்தை செய்தியாளர்களிடம் வலியுறுத்தினார். எதைச் செய்தாவது ஈழத் தமிழர் பிரச்சினை தேர்தல் களத்துக்கு வந்து விடக் கூடாது என்பதில் தி.மு.க. தீவிர மாக கவனம் செலுத்தியது. ‘சங்கமம்’ இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் குழுவை மக்களை மகிழ்விக்க, கனி மொழி தேர்தல் பிரச்சாரக் களத்தில் இறக்கி விட்டார்.
ஒவ்வொரு நாளும் தொப்புள் கொடி உறவான தமிழர்கள் பிணங் களாக வீழ்கிறார்களே என்ற அடக்க முடியாத துயரங்கள் சூழ்ந்து நிற்கும் இந்த தேர்தல் களத்தை கேளிக்கைக் கொண்டாட்டமாக்கி மகிழ்ந்திடும் பிரச்சாரத் திட்டங்களை உருவாக்கி, வெந்த புண்ணில் வேலை சொருகியது தி.மு.க. அனைத்து முயற்சிகளும் மக்கள் மன்றத்தில் தோல்வியைத் தழுவி, சென்ற விடமெல்லாம் ஈழத் தமிழர் பிரச்சினை, காங்கிரசின் துரோகத்துக்கு எதிராக வீறு கொண்டது. கடும் நெருக்கடிக் குள்ளான தி.மு.க. தலைமை தேர்தல் வெற்றிக்காக இந்த உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றி, அதிலும் மிக மோசமான தோல்வியையே சந்தித்திருக் கிறது. கலைஞர் கருணாநிதியின் இந்த உண்ணாவிரதம் இரண்டு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஒன்று - தி.மு.க., மத்திய அரசுக்கு வலிமையான அழுத்தம் தந்தால், போரை நிறுத்தியிருக்க முடியும் என்பதை இப்போது கலைஞர் கருணாநிதியே, இந்தப் போராட்டத் தின் வழியாக, தமிழ்நாட்டுக்கு சொல்லியிருக்கிறார்.
அப்படியானால், ‘முடிந்ததை எல்லாம் செய்து விட்டோம்’ என்று ஏற்கனவே கூறி வந்தது பொய்யா? அல்லது எங்கள் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது என்று இப்போது கூறுவது பொய்யா? இரண்டாவதாக போரை நிறுத்து வது - இந்தியாவிடம் இல்லை என்று கூறி, இது வரை காங்கிரசைக் காப் பாற்றிக் கொண்டிருந்தார் கலைஞர் கருணாநிதி. இப்போது உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் போரை நிறுத்த ஏற்பாடு செய்துவிட்டதாக தம் மிடம் உறுதி கூறியதால், உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டிருக் கிறார். அப்படியானால் போரை இந்தி யாவால் நிறுத்தியிருக்க முடியும் என் பதை, இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அப்படியால் ஏற்கனவே காங்கிரசைக் காப்பாற்ற இவர் எடுத்து வைத்த வாதமெல்லாம் உண்மையானவை அல்ல என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது. ஆக ‘போர் நிறுத்தம்’ ஏற்பட்டுவிட்டது என்ற பொய்மையுடன் முடிவடைந்த இந்த ‘உண்ணாவிரதம்’, குளிக்கப் போய் சேறு பூசிக்கொண்ட கதையாகி விட்டது!

Wednesday, April 29, 2009

சு.சாமி மீது சட்டம் பாய மறுப்பது ஏன்?

கேள்வி: ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது விடுதலைப் புலிகள்தான் என்கிறீர்கள். ஆனால், நீங்கள் எழுதி வெளியிட்ட ‘ராஜீவ் காந்தி கொலை - விடை கிடைக்காத வினாக்களும், கேட்கப்படாத கேள்விகளும்’ என்ற புத்தகத்தில் ராஜீவ் படுகொலைக்குக் காரணமே ‘சோனியா, அவருடைய அம்மா பவ்லோமைனா, அர்ஜுன் சிங், மார்க்ரெட் ஆல்வா ஆகிய நான்கு பேர்தான். அவர்களை விசாரிக்க வேண்டும்’ என்றெல்லாம் எழுதியிருக் கிறீர்களே? எது உண்மை?
சுப்பிரமணியசாமி: “ஆமாம். அப்படித்தான் எழுதி யிருந்தேன். அதை எப்போதும் கூறு வேன். ராஜீவ் படு கொலைக்குக் காரணமே, அதைத் திட்டமிட்டுச் செய்ததே சோனியா தான். இதில் சோனியாவின் அம்மா பவ் லோமைனா, அர்ஜுன்சிங், மார்க் ரெட் ஆல்வா ஆகியோரது பங்கும் இருக்கிறது. இந்த நால்வரையும் சி.பி.ஐ. முறையாக விசாரித்தாலே உண்மைகள் வெளிவந்துவிடும். இதில் கூலிப் படையாகச் செயல்பட்டது மட்டுமே விடுதலைப்புலிகளின் பங்கு. சோனியாவிடம் ஏராளமான பணத்தை வாங்கிக் கொண்டு அந்தக் கொலையைச் செய்தார்கள். இதுதான் உண்மை. இதை நான் மறுக்கவில் லையே. புலிகள் கொலை செய்தார் கள். செய்யச் சொன்னது சோனியா.” சுப்ரமணியசாமி பேட்டி - ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ (26.2.09)
சோனியாவை சேலை கட்டிய முசோலினி என்று பேசியதற்காக, நாஞ்சில் சம்பத் மீது ஓராண்டுக்கு வெளியே வர முடியாத தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்த - கலைஞர் கருணாநிதி. சோனியாவின் உருவப் பொம்மையை எரித்தால் கைது செய்ய ஆணையிடும் - கலைஞர் கருணாநிதி. ராஜீவ் காந்தியின் கொலைக்கே திட்டமிட்டது சோனியாதான் என்று சுப்பிரமணியசாமி பேட்டி அளித் துள்ளாரே, இதற்காக சு.சாமி மீது தி.மு.க. அரசின் சட்டங்கள் பாயாதது ஏன்? ‘சூத்திரர்கள்’ மீது பாயும் அடக்கு முறை சட்டங்கள் பார்ப்பனர்கள் மீது பாயாதா?

Monday, April 27, 2009

தமிழ்நாட்டுக்கு ஒரு எம்.ஜி.ஆர்,தமிழ்ஈழத்துக்கு ஒரு பிரபாகரன்?-இயக்குனர் சீமானின் ஆவேச பேட்டி

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இயக்குனர் சீமான்நேற்று இரவு விடுதலையானவுடன் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:சட்டம் என்னை விடுதலை செய்துள்ளது. இது தனிப்பட்ட சீமானின் விடுதலை அல்ல.கருத்து சுதந்திரத்திக்கு கிடைத்த வெற்றி.என் மீது போடப்பட்ட வழக்கு தேவையற்றது,தவறானது.தடை செய்யப்பட்ட இயக்கத்திக்கு எதிராக எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம்,ஆதரித்து பேசக்கூடாது என்ற சர்வாதிகாரம் இருந்தது.அதை எனது வழக்கு உடைத்தெறிந்துள்ளது.

எங்களுக்கு கிடைக்க வேண்டியது விடுதலை.அது கிடைக்கும் வரை போராடுவோம்.ஈழவிடுதலையை யார் அங்கீகரிக்கிறார்களோ,விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க யார் பாடுபடுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிப்போம்.தமிழீழத்தை ஆதரிக்கும் இயக்கத்துக்கு ஆதரவுஅளிப்போம்.இதற்காக பலபேர் பலவடிவத்தில் போராடுகிறார்கள்.13 பேர் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள்.இந்த சமூகத்தை அதிகம் நேசிப்பவர்களை சமூகவிரோதிகள் என்கிறார்கள்.இதற்காக போராட்டங்கள் நடத்தினால் என் போன்றவர்கள் போராட வேண்டியிருக்காது.


காங்கிரஸ் தான் இனப்பேரழிவுக்கு காரணம். காங்கிரசை வீழ்த்தும்வரை போராடுவோம் .அது யாருக்கு சாதகம்,பாதகம் என்று பார்க்க மாட்டோம். இலங்கை தமிழர் பற்றி பலரும் பேசும்போது, சோனியாகாந்தி ஒருவார்த்தைகூட பேசவில்லை.அதற்கு என்ன அர்த்தம்? என்றார்.பின்னர் இரவு 8:45 மணியளவில் அவர் உட்பட பத்து இயக்குனர்கள் சேர்ந்து நடித்துள்ள "மாயாண்டி குடும்பத்தார்"படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார்:"சிறை என்றால் எல்லோரும் பயப்படுகிறார்கள்.எனக்கு பெரியபயம் இருந்தது.ஆனால் உள்ளே போய்வந்த பிறகுதான் அந்த பயம்நீங்கியது.சிறைக்குள் எந்த பயமும் கிடையாது.ரொம்ப நல்லவர்கள்எல்லாம் உள்ளே இருக்கிறார்கள்.ரொம்ப கெட்டவர்கள் எல்லாம் வெளியே இருக்கிறார்கள்.நான் 70 நாட்கள் தனிமையில் இருந்தேன்.உள்ளே எனது அலைபேசியை(செல்போன்) பயன்படுத்தக்கூடாது.ஒரேஒரு ரூபாய் நாணயம் போட்டு வெளியில் யாரிடமாவது பேசிக்கொள்ளலாம்.அப்படி பேசும்போது இலங்கையில் நடப்பதையும்,இங்கே நடப்பதையும் தெரிந்துகொண்டு கழிவறைக்குள் உட்கார்ந்து அழுதேன்.


கட்டிப்பிடித்து அழக்கூட துணைக்கு யாருமில்லை.எம்.ஜி.ஆர் தான் தமிழ் இனத்தலைவன்.தமிழ் இனத்துக்காக பாடுபட்டவர்.தமிழ்நாட்டுக்கு ஒரு எம்.ஜி.ஆர்.தமிழ் ஈழத்துக்கு ஒரு பிரபாகரன்.இப்படி பேசுவதால் என்னை யாரும் கைது செய்யமுடியாது.கைதுசெய்தால் தேர்தலில் தோற்றுப்போய்விடுவார்கள்" இவ்வாறு இயக்குனர் சீமான் பேசினார்.

கலைஞர் - பிரணாப் நடத்தும் நாடகம்

இலங்கை - போரை நிறுத்தினால் தான் கடன் தொகையை வழங்க முடியும் என்று உலக வங்கி கூறிவிட்டது. உலக வங்கி தராவிட்டால் என்ன; இதோ நான் தருகிறேன் என்று, இந்தியா ரூ.5800 கோடி கடன் வழங்க முன் வந்துள்ளது. இந்த நிதி - மேலும் - தமிழர்களை கொன்று குவிப்பதற்கே - இலங்கை அரசுக்கு பயன்படப் போகிறது. இலங்கைக்கு வழங்கி வரும் இராணுவ உதவியையோ, நிதி உதவியையோ, நிறுத்துவதாக இதுவரை இந்தியா வாய் திறக்கவே இல்லை. மாறாக, இந்தியாவின் உதவியுடன் தான், சிங்களம், இன அழிப்பையே நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்திய - இலங்கை இராணுவ உயர் மட்டத்தில் இதற்கான திட்டமிடல்கள் நடப்பதாக விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் ஒரு பேட்டியிலேயே வெளிப்படையாகக் கூறிவிட்டார். இந்த நிலையில் - தமிழ்நாட்டில், காங்கிரசின் துரோகம் தமிழர்களிடையே அம்பலமாகிவிட்டதால் - தி.மு.க., செய்வதறியாது திகைத்துப்போய் முன்னுக்குப் பின் முரண்பட்ட கருத்துகளை கூறி வருகிறது. போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். பிறகு அவரே குரலை மாற்றி, மற்றொரு நாட்டின் இறையாண்மையில், எப்படி தலையிட முடியும் என்று சமாதானம் கூறினார். இப்பொழுது இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியுள்ள இந்தியாவின் கோரிக்கையை ஏற்காவிட்டால், இலங்கையுடனான தூதரக உறவை துண்டித்துவிடுமாறு பிரதமர் - சோனியா - பிரணாப்புக்கு தந்தி அனுப்பியுள்ளாராம்.
உண்மையில் ‘போர் நிறுத்தம்’ செய்யுமாறு - இந்தியா, இலங்கையை வற்புறுத்தியதா? கொல்கத்தாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்த பேட்டியில், “Colombo should extend the pause” என்று தான் கூறியுள்ளார். இதனுடைய உண்மையான அர்த்தம் போர் நிறுத்தம் (Ceasefire) அல்ல. அடுத்த கட்ட தாக்குதலைத் தொடருவதற்கு சிறிது ‘கால இடைவெளி’ தரப்பட வேண்டும் என்பதுதான். ஆனால், தமிழக முதல்வரோ ஏதோ ‘போர் நிறுத்தத்தையே’ பிரணாப் வலியுறுத்துவதாக பாசாங்கு காட்டுகிறார்.
அது மட்டுமல்ல - ‘இந்தியா எந்த சமரச முயற்சியிலும் ஈடுபடாது’ என்றும் பிரணாப் கூறி விட்டார். (Mr. Mukherjee ruled out any mediation by India - The Hindu, Apr.18, 2009) இதன் உண்மையான பொருள் - இந்தியா சண்டைக்குத்தான் பின்புலமாக இருக்குமே தவிர, சமரசத்துக்குஅல்ல என்பதுதான். இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு, தமிழக வாக்காளர்களை ஏமாற்றிவிடலாம் என்று தி.மு.க. கருதினால் அவர்கள் ஏமாற்றத்தைத்தான் சந்திப்பார்கள்.

ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை அன்று கடுமையாக எதிர்த்த கலைஞர் - இன்று ஆதரிக்கிறார்

1987 ஆம் ஆண்டு ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி இப்போது காங்கிரசோடு சேர்ந்து நியாயப்படுத்த முன் வந்திருக்கிறார். கலைஞர் கருணாநிதிக்கு சோனியா எழுதிய கடிதத்தில் இந்த ஒப்பந்தம் பற்றி குறிப்பிட்டுள்ளதை கலைஞர் கருணாநிதி எடுத்துக்காட்டி, இந்த ஒப்பந்தத்தையும், மருத்துவர் ராமதாசு கபட நாடகம் என்கிறாரா என்று ‘முரசொலி’யில் (13.4.2009) கேள்வி எழுப்பியுள்ளார். மக்களின் நினைவு மறதிதான் - இவர்களின் அரசியல் மூலதனமாகிவிட்டது.
இந்த ஒப்பந்தம் பற்றி 27.11.1987 அன்று கலைஞர் கருணாநிதி தலைமையில், சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகக் குழு கூடி ஒப்பந்தத்தில் ஒவ்வொரு பிரிவையும் அலசி ஆராய்ந்து, நீண்ட தீர்மானத்தையே நிறைவேற்றியிருப்பதை தி.மு.க. தலைவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். “ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தினால் நடைமுறையில் ஈழத் தமிழ் மக்கள் பெரிதும் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பதை தி.மு.கழகத்தின் தலைமை நிர்வாகக் குழு ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டக் கடமைப்பட்டுள்ளது” என்ற பீடிகையுடன் அந்தத் தீர்மானம் தொடங்குகிறது. இந்த ஒப்பந்தத்தால் தமிழர்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கப் போவதில்லை என்பதை விரிவாக ஆராய்கிறது அத் தீர்மானம். ஒப்பந்தத்துக்கு எதிரான இலங்கை அரசின் செயல்பாடுகளையும் தீர்மானம் பட்டியலிட்டுள்ளது.
இவ்வளவையும் குறிப்பிட்டு, இறுதிப் பகுதியில் தி.மு.க.வின் தீர்மானம் இவ்வாறு கூறுகிறது: “இத்தனையும் இந்திய அரசுக்கு தெரிந்தும்கூட தெரியாததுபோல் நடிப்பதும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் காரியமாக ஈழத் தமிழர்களையும் அவர்களின் உரிமைகளுக்கும் நல்வாழ்வுக்கும் பாடுபடும் விடுதலைப்புலிகளை வேரோடுஅழிக்க முனைவதும் எந்த வகையில் நியாயம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். “சிங்களப் படையினரின் பயங்கரவாத நட வடிக்கைகளிலிருந்தும், தமிழினப் படுகொலையிலி ருந்தும் அப்பாவித் தமிழ் மக்களைப் பாதுகாக்கவே ஈழப் போராளிகள் ஆயுதமேந்தினார்கள். அவர்கள் மேற்கொண்டது தற்காப்பு நடவடிக்கைகளே.
சிங்களப் படைகளிடமிருந்து ஈழத் தமிழ் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய அரசு ஏற்றுக் கொள்வதாக கூறி, ஈழப் போராளிகள் தங்களிடமுள்ள ஆயுதங்களை ஒப்படைக்கும்படி இந்திய அரசு நெருக்கடி கொடுக்கவே, இந்திய அரசின் வாக்குறுதியை நம்பியும், இந்தியப் படைகளுடன் ஒரு மோதல் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் ஈழப் போராளிகள் தங்களிடமிருந்து ஆயுதங்களில் பெரும் பகுதியை ஒப்படைத்தார்கள். ஆனால், திருகோணமலை போன்ற இடங்களில் இலங்கை ஊர்க்காவல் படையினரும், ஆயுதம் தாங்கிய சிங்கள மக்களும் தமிழ் மக்களைத் தாக்கினார்கள்.
சிங்கள அரசின் பயங்கரவாதத்தினால் தங்கள் சொந்த வீடுகளை விட்டு, கிராமங்களை விட்டு வெளியேறிய தமிழர்கள், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையொட்டி மீண்டும் தங்கள் கிராமங் களுக்குத் திரும்பி, வீடுகளுக்குப் போக முயன்றபோது ஆயுதம் தாங்கிய சிங்கள மக்களும், சிங்கள ஊர்க் காவல் படையினரும் மீண்டும் மீண்டும் தாக்கி னார்கள். அவர்களைத் தங்கள் சொந்த வீடுகளுக்குப் போக விடாமல் தடுத்தார்கள். இதுபற்றி ஈழத் தமிழர்கள் இந்திய அதிகாரிகளிடம் முறையிட் டார்கள். ஆனால் எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதனால் நிர்கதிக்கு ஆளான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உதவிகளை நாடினார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் விடுதலைப் புலிகள் திரும்பவும் ஆயுதம் ஏந்தி தமிழ் மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இது தவிர்க்க முடியாத தற்காப்பு நடவடிக்கை என்பதை எவரும் புரிந்து கொள்ளலாம். இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவோ, சிங்களக் குண்டர்களை அடக்குவதற்குப் பதில் தமிழ்ப் போராளிகளிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்யும்படி இந்தியப் படைகளை ஏவிவிட்டார். சிங்களக் காடையர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிக்க முற்படாத இந்திய அமைதிப்படையினர், ஈழப் போராளிகளிடமிருந்து மட்டும் ஆயுதங்களைப் பறிக்க முற்பட்டதானாலேயே இந்தியப் படை களுக்கும் ஈழப் போராளிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. எனவே, போராளிகள் வலுவில் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்று சொல்வது உண்மைக்கு மாறுபட்டதாகும். மேலும், ஒப்பந்தத்தின்படி ஈழப் போராளிகளின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்யும் உரிமையோ, கடமையோ இந்தியப் படைகளுக்கு இல்லை.
உலகின் பல்வேறு நாடுகளில் அமைதிப் படைகள் பணியாற்றியிருக்கின்றன. ஐ.நா. சபையின் சார்பில் சென்ற பல்வேறு அமைதிப் படைகளில் இந்தியப் படையினரும் சென்றிருக்கின்றனர். அவைகள் மோதுகின்ற இரு தரப்பினருக்கிடையே அமைதியை நிலைநாட்டப் பாடுபட்டிருக்கின்றன. ஆனால், இரு தரப்பினருக்கும் மத்தியில் நடுநிலை யோடு நடந்து கொண்டு அமைதியைப் பராமரிப் பதில் மாத்திரமே அவர்கள் கவனம் செலுத்தி யிருக்கிறார்களே தவிர ஒரு தரப்பாரிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்து மறுதரப்பாரிடம் ஒப்படைக்கும் செயலில் ஈடுபடவில்லை. இந்தச் சர்வதேச நியதியை இந்திய அமைதிப் படையினர் ஈழத்திலும் கடைப்பிடித்திருந்தால், தற்போது நடந்து கொண்டிருக்கும் தேவையற்ற மோதலும், அதன் காரணமாகத் தமிழ் மக்களுக்கு ஏற் பட்டுள்ள அளப்பரிய இழப்புக்களும் தொல்லை களும் இந்திய ராணுவத்தினர் பலரின் உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டிருக்கும். நாற்பது ஆண்டுகாலமாக ஈழத்தில் தமிழர்கள் அனுபவித்து வரம் இன்னல்களைத் துடைக்கவும், அவர்களுக்கு அமைதியான வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கவும், “அமைதி ஒப்பந்தம்” நடைமுறைப் படுத்தப்படுவதற்கு உதவுவதற்காகவுமே இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவதாகத் தெரிவித்த ராஜீவ் காந்தியின் அரசு ஒப்பந்தத்திற்கு மாறாகவும் அதை மீறுகிற வகையிலும் நடந்து கொண்ட சிங்கள இனவெறி அரசைத் தட்டிக் கேட்பதற்கு பதில் அந்த அரசுடன் சேர்ந்து கொண்டு ஜெயவர்த்தனாவின் கட்டளைகளையேற்று இந்திய ராணுவத்தைக் கொண்டே ஈழத் தமிழ் இனத்தை அறவே அழித்திடும் இந்தக் கொடுமையைத் தமிழ் இன உணர்வு படைத்தோர் மட்டுமல்ல; மனிதாபி மானமுடைய எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த நிலையிலும்கூட, “48 மணி நேர போர் நிறுத்தம்” என அறிவித்துவிட்டு, அறிவித்த போதே விடுதலைப் புலிகள் மீது அவதூறுச் செய்திகளை இந்திய பாராளுமன்றத்திலேயே மத்திய அமைச்சர்கள் கூறியதோடு, தொடர்ந்து வானொலி, தொலைக்காட்சி வாயிலாகவும் அதே பொய்ப் பிரச்சாரத்தைச் செய்து கொண்டு, விடுதலைப்புலி இயக்கத்தினர் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருந்தும், பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து ஆயுதங்களை ஒப்படைக்க தயாராக இருந்தும் அவர்கள் எடுத்துரைத்த கருத்துக்களை காதிலே போட்டுக் கொள்ளாமல் மீண்டும் விடுதலைப் புலிகளை வேட்டையாடுவது என்ற பெயரால் ஈழத் தமிழ் மக்களை அழிக்கவும் தமிழச்சிகளின் கற்பை சூறையாடவும், நகரங்கள், கிராமங்களை அடியோடு நாசம் செய்யவும் இந்திய ராணுவம் டாங்கிகள் மூலமும், ஹெலிகாப்டர்கள் மூலமும், விமானங்கள் மூலமும் தனது தாக்குதலை தொடங்கியிருப்பதை திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.” - என்று தி.மு.க.வின் தீர்மானம் கூறுகிறது.
இப்போது - தி.மு.க. சார்பில் முன் வைக்கப்படும் ‘அதிகாரப் பகிர்வு’ “புலிகளும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்”, “புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும்”; “மத்திய அரசு 30 ஆண்டுகளாக ஈழப் பிரச்சினையில் அக்கறை செலுத்தி வருகிறது”; “புலிகள்தான் இந்த நிலைக்கு காரணம்” என்று முன் வைக்கும் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும்
தி.மு.க.வின் தீர்மானத்திலேதெளிவானவிளக்கம்அடங்கியுள்ளது.

தே.பா.சட்டதில் இருந்து கொளத்தூர் மணி விடுதலை

பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்.இவர் திண்டுக்கல்லில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அவரது பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து மார்ச் 2 ந்தேதி கைது செய்தனர். இந்நிலையில் திண்டுக்கல் கலெக்டர், கொளத்தூர் மணி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் கொளத்தூர் மணியின் சகோதரர் பழனிச்சாமி, தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை நீதிபதிகள் தர்மராஜ், சுப்பாராவ் ஆகியோர் முன்பு இன்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.

கலைஞர்உண்ணாவிரதம்,நாங்கள் போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்லைஇலங்கை அரசு அதிரடி,உறுதிமொழியை மீறி இலங்கை ராணுவம் தாக்குதல் விடுதலைப்புலிகள்

உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் கலைஞர்
இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை முதல் சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். கலைஞரின் உண்ணாவிரத்தை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உலக தமிழர்கள் பலர் உடல் நலத்தை கருத்தில்கொண்டு உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் இலங்கையில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தலைமையில் போர் நிறுத்தம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். உண்ணாவிரத்தில் பேசிய கலைஞர், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியான தகவலை கொடுத்துள்ளதால் இத்துடன் உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார்.முதல் அமைச்சர் கருணாநிதி உண்ணா விரதத்தை முடிக்கும் முன்பு வாசித்த அறிக்கை வருமாறு: 1924ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 3ஆம் நாள் முத்துவேலர் என்கிற இசைத் தமிழ் தந்தைக்கும் அஞ்சுகம் என்கிற அன்னைக்கும் திருக்குவளை எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து, குவா குவா என்று குளிர் தமிழ் மொழியில் ஒலியெழுப்பிய அந்தக் காலத்தில் நான் பிறந்த அறையிலேயே திருடர்கள் புகுந்து பொருள்களைக் களவாடிய போது அவர்களிலே யாரோ ஒருவருடைய கையோ, காலோ என் கழுத்தில் அழுத்தப்பட்டிருந்தால் அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி தமிழ் என்கிற அந்த தன்னேரில்லா சொல் என்னால் உச்சரிக்கப்பட்டிருக்க மாட்டாது.
அதை உச்சரிப்பதற்கு உயர்த்துவதற்கு உலக மொழிகளில் செம்மொழிகளில் ஒன்றாக ஆக்குவதற்கு நான் உயிரோடு இருக்க வேண்டுமென்று தமிழன்னை கருதினாள் போலும்! அதனால் நான் ஊர்ந்து தவழ்ந்து வளர்ந்து 13ஆம் வயதிலேயே தமிழ் எழுதவும் கட்டுரைகள் தீட்டவும் கதைகள் புனையவும் கற்கண்டு தமிழ் எனக்கு உதவிற்று. அந்நாளில் தான் 1938ஆம் ஆண்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் தமிழ்ப்புலவர் பெருமக்கள் தமிழ்க்காத்திடும் போரில் குதித்த வரலாறு தோன்றிற்று. அந்த வரலாற்றில் ஒரு துளியாக நான் இருந்தேன். சிறு துளி பெரு வெள்ளம் என்பார்களே, அப்படி இன்று கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நல் இதயங்களின் வாழ்த்துகளைப் பெறுகின்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறேன். இந்த வளர்ச்சியும், வலிமையும் எதற்காக பயன்பட வேண்டும்? என் தமிழைக்காக்கவும் என் தமிழர் எங்கெல்லாம் அல்லல் படுகின்றாரோ அவர்களைக்காக்கவும் பயன்படாத இந்த உடல் இருந்து என்ன பயன்? உயிர் இருந்து தான் என்ன பயன்? உடலில், முதுகில் அறுவை சிகிச்சை ஆயிற்றே, இந்த நிலையில் இலங்கைத்தமிழர்களுக்காக இப்படி ஒரு உண்ணா நோன்பு போராட்டம் என்றால் உடல் என்னவாகும்? உயிர் என்னவாகும்? எங்களுக்கு நீங்கள் வேண்டும் என்றெல்லாம் என் தமிழர்கள், என் உடன் பிறப்புகள் முழக்கமிடுகிறார்கள்; வேண்டுகிறார்கள். ஆமாம், அவர்களுக்கு நான் வேண்டும் எனக்கு அவர்கள் வேண்டும் என் தமிழ் வேண்டும் என் தமிழன் காலமெல்லாம் நலமாக வாழ வேண்டும். அவனை அல்லலோ, அவதியோ அண்டவும் கூடாது. தமிழனுக்கு ஒரு காயம் என்றால், அந்தக் காயம் என் உள்ளத்தில் ஆகாய மளவு பரவி நிற்கிறது. அதனால் தான் இலங்கையிலே வாடிக்கொண்டிருக்கின்ற மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களை தமிழ்த் தாய்களை தமிழ்ச்சகோதரிகளை தமிழ் மழலைகளை காப்பாற்ற முடியவில்லையே என்ற சோகத்தோடு வாடினேன், வதங்கினேன்.
நேற்றிரவெல்லாம் கண் விழித்து இலங்கையில் போர் நிறுத்தம் என்ற நல்ல செய்தி ஏதாவது வருகிறதா என்று டெல்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே இருந்தேன். உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை பல முறை தொடர்பு கொண்டேன். பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார். நல்ல வார்த்தைகள் தான் சொன்னார்கள். நல்லதே நடக்கும் என்று தான் உறுதியளித்தார்கள். அதிகாலை 4 மணி வரையில் தொலைக்காட்சியில் நல்ல செய்தி வருமா என்று எதிர்பார்த்தேன். எந்தச்செய்தியும் வரவில்லை. இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்தி தான் கிடைத்தது. அதற்குப்பிறகு 5 மணியளவில் என் வீட்டாருக்கும் சொல்லாமல் அறிவாலயம் செல்கிறேன் என்று கூறி விட்டு, அண்ணா இருக்கும் இடம் எனக்கு அறிவாலயம் தானே என்று இந்த அறிவாலயத்திற்கு வந்து உண்ணா நோன்பைத்தொடங்கினேன். இதன் விளைவாக இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இலங்கை அரசின் பாதுகாப்பு கவுன்சில் கூடி போருக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது என்பதோடு, இனி இலங்கை ராணுவம் இந்தப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பணிகள் அளிக்கப்பயன் படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
நாங்கள் போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்லை:இலங்கை அரசு அதிரடி
போர் நிறுத்தம் செய்வதாக இலங்கை அறிவித்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்துள்ளது. இதை இலங்கை அரசு மறுத்துள்ளது. இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் உதயநாணயக்கார, இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்ல என்று விளக்கம் அளித்துள்ளார்.இருப்பினும் கனரக ஆயுதங்களை மற்றும் விமானத்தாக்குதல்களை மோதல் களங்களில் பயன்படுத்த வேண்டாமென அரசாங்கம் இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் பொதுமக்களுக்கு உயிர்ச்சேதங்கள் அதிகளவில் ஏற்படும் என்பதால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உறுதிமொழியை மீறி இலங்கை ராணுவம் தாக்குதல்: விடுதலைப்புலிகள்
தமிழர்களுக்கு எதிராக கனரக ஆயுதங்கள், விமான தாக்குதல் போன்றவை நடத்தப்பட மாட்டாது என்று இலங்கை அரசும், ராணுவமும் வாக்குறுதி அளித்த சில மணி நேரங்களிலேயே அது மீறப்பட்டு, 2 போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கியதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.முள்ளிவாய்க்கால் பகுதியில், 2 போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அமைதிச் செயலக இயக்குநர் புலிதேவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இன்று பிற்பகல் 12.50 மணியளவில் (போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்திருப்பதாக கூறி கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்த நேரம் 12.30 மணி) முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் உள்ள இடங்களைக் குறி வைத்து இரண்டு போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கின.
அதேபோல, 1.10 மணிக்கு இன்னொரு முறை விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

கனரக ஆயுதங்கள், விமான தாக்குதல்களை நடத்த மாட்டோம் என அறிவித்த இலங்கை அரசு அதை மீறும் வகையிலும், உலக சமுதாயத்தையும், குறிப்பாக தமிழக மக்களையும் ஏமாற்றும் வகையில் விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.மேலும், பாதுகாப்பு வளையப் பகுதியில், இலங்கை ராணுவம் தொடர்ந்து எறிகணைகளை வீசித் தாக்கி வருகின்றன. வலைஞர்மடப் பகுதியிலும் தாக்குதல் தொடருகிறது என்று கூறியுள்ளார்.

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கலைஞர் உண்ணாவிரதம்

இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி சென்னை அண்ணா நினைவிடத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை 7 மணி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று விடுதலைப்புலிகள் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தம் அறிவித்த போதிலும், இலங்கை அரசு அதனை ஏற்காமல், தாக்குதல் நடத்தி வருவது எனக்கு மிகுந்த வருத்தை அளிக்கிறது. தமிழக மக்கள் சார்பாக இலங்கை தமிழர்களை பாதுகாக்க உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பதாக கூறினார்.
இரவு முழுவதும் கண் விழித்து போர் நிறுத்தம் குறித்து அறிவிப்பு செய்தி வெளிவரும் என்று எதிர்பார்த்தும் போர் நிறுத்தம் வராததால் தன்னை அர்பணிக்க தமிழர்களுக்காக உண்ணாவிரம் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

Sunday, April 26, 2009

துரோக காங்கிரசை கண்டித்து நங்கவள்ளி பெரியார் தி.க ஆர்ப்பாட்டம்

26.04.2009 காலை 11.00 மணிக்கு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சேலம் நங்கவள்ளியில் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து தோழர் டைகர் பாலன் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து , சிங்கள இராணுவத்துக்கு இன்றளவும் உதவி வரும் இந்திய துரோக காங்கிரசை கண்டித்து. இந்தியாவின் தொடர் உதவிக்கு இலங்கை மக்களின் நன்றி தெரிவித்த சரத்பொன்சேகாவின் பேட்டியை கண்டும் மத்திய அரசுக்கு இலங்கை போர் நிறுத்த நடவடிக்கைக்கு முழு அளவில் அழுத்தம் தராத தமிழக கருணாநிதி அரசைக் கண்டித்து, விடுதலை புலிகளின் மீதானதடையை நீக்க கோரி , இனியாவது எம் மக்களின் படுகொலையை தடுக்க இந்தியா நடவடிக்கை எடுக்க கோரி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழின துரோக காங்கிரசுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டாமென முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் டைகர் பாலன் , நங்கவள்ளி அன்பு, கோகுலகண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.80 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள் தோழர் கோபால் நன்றியுரை கூரினார்.
ஈழத்தில் நம் தொப்புள் கொடி உறவுகள் பூண்டோடு அழிக்கப்படுவது கண்டு அங்கு போர் நிறுத்தத்தை கொண்டுவா என்று பொங்கி எழுந்தோமே நாம் . எத்தனை உண்ணாவிரதங்கள், எத்தனை மறியல்கள், எத்தனை ஆர்ப்பாட்டங்கள், எத்தனை எத்தனை தீக்குளிப்புகள், அத்தனை நடந்தும் நம்மை யார் மதித்தார்கள்? நம் குரலை யார் கேட்டார்கள்?
தமிழ் உறவுகளே ! நாம் 6.5 கோடி தமிழர்கள் இருந்தும் தட்டிக்கேட்க நாதியற்ற இனமாய் ஈழதமிழினம் பூண்டோடு சிதைவதை பார்த்தீர்களா? நம் போராட்டங்கள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காய், சிங்கள, பேரினவாதத்துக்கு ஆயுதம் வழங்கி அனைத்து உதவிகளையும் செய்து கொண்டு இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முற்றும் முழுதாக உதாசீன படுத்திவிட்ட நிலையில் இனி நாம் என்ன செய்யப் போகிறோம்? தொடர்ந்து நம் வெற்றுக்கைகளால் அடிவயிற்றில் அடித்துக்கொண்டு அழப்போகிறோம்? பிறகு, என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு கேள்வி வரும். ஆயுதம் இருக்கு அது வாக்குச்சீட்டு எனும் வறலாற்றையே திருப்பும் ஒற்றைப் பேராயுதம் அவ்வாயுதம் கொண்டு, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், நம் மண்ணில் காங்கிரஸ் எனும் துரோக கட்சியே இல்லாமல் ஒழித்துக்கட்டுவோம். அவர்களின் தோள் மீது கை போட்டு வரும் துரோகிகளையும், நம் இனத்தின் விடுதலையை எதிர்க்கும் விரோதிகளையும், நம் மண்ணில் இருந்து தூர தூர துரத்தியடிப்போம் . தமிழ் வாழ, நம் தமிழ் இனம் வாழ “மை” தொடும் நம்முடைய விரலில் தான் இருக்கிறது எல்லாம் .......
பாசமுள்ள தமிழ் உறவுகளே அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தில் நம் சகோதரர்களும், பிள்ளைகளும் ஈழத்தில் உயிராயுதம் ஏந்தியிருக்கிரார்கள்.
இங்கு உங்கள் நன்பர்களிடமும், உறவினர்களிடமும் துரோக காங்கிரஸை தோற்க்கடிக்க ஆதரவு திரட்டுங்கள். அதுவே நம் இனதிற்கு நாம் செய்யும் பேருதவி
















Saturday, April 25, 2009

உடனடியாக சண்டையை நிறுத்துங்கள்: அமெரிக்கா கோரிக்கை

நியூயார்க் (ஏஜென்சி), சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2009 ( 13:27 IST )
இலங்கையில் நடைபெற்றுவரும் சண்டையால் அப்பாவி மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம் கவலையளிக்கிறது என்று கூறியுள்ள அமெரிக்க அரசு, சிறிலங்க அரசும், விடுதலைப் புலிகளும் உடனடியாக சண்டையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.இலங்கை இனப் பிரச்சனைக்கு இராணுவத் தீர்வ காண சிறிலங்க அரசு முற்பட்டால் அது இலங்கையின் ஒற்றுமைக்கே ஆபத்தாக முடியும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளது.அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பொறுப்பேற்றப் பிறகு இலங்கைப் பிரச்சனையில் வெள்ளை மாளிகை இன்று முதல் முறையாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
“சிறிலங்க அரசிற்கும் தமிழ் புலிகளுக்கும் இடையே நடைபெற்றுவரும் போரினால் அப்பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்கள் அனுபவித்துவரும் துயரம் அமெரிக்காவை மிகவும் கவலை கொள்ளச் செய்துள்ளது. அங்கு பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு தரப்பினரும் உடனடியாக சண்டையை நிறுத்தி அங்கு சிக்கியுள்ள அப்பாவி மக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ள வெள்ளை மாளிகை அறிக்கை, மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும், போர் பகுதியி்ல் இருந்து வெளியேறியுள்ள மக்களுக்கு உதவிட சர்வதேச குழுக்களையும், ஊடகங்களையும் அனுமதிக்குமாறும் சிறிலங்க அரசை கோரியுள்ளது.போர் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை அனுப்புவது தொடர்பாக சர்வதேச கூட்டாளிகளுடன் அமெரிக்கா ஆலோசித்து வருவதாக கூறியுள்ள வெள்ளை மாளிகை அறிக்கை, இராணுவ நடவடிக்கை மூலம் இனப் பிரச்சனைக்குத் தீ்ர்வு காண்பது இலங்கையின் ஒற்றுமைக்கு ஆபத்தாக முடியும் என்று எச்சரிக்கை செய்துள்ளது.
“இலங்கை இனப் பிரச்சனையை இராணுவ நடவடிக்கையின் மூலம் முடித்துவிட முனைவது தற்பொழுது தொடரும் இந்த துயரத்தை மேலும் சிக்கலாக்கிவிடும் என்பது மட்டுமின்றி, அது இரண்டு இனங்களுக்கும் இடையே மேலும் பகைமையை வளர்த்துவிடும். அதன் பிறகு பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பதற்கான வாய்ப்பைபிற்கும், இலங்கையின் ஒற்றுமைக்கும் அது முடிவு கட்டிவிடும்” என்று அறிக்கையில் கூறியுள்ளது.சிறிலங்க அரசும் விடுதலைப் புலிகளும் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்குட்பட்டு நிற்கவேண்டு்ம் என்றும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்கள் தங்களுக்கு மிகுந்த கவலையளிக்கிறது என்றும், அதனை அமெரிக்கா மிக கடுமையாக எடுத்துக் கொள்ளும் என்றும் எச்சரித்துள்ளது.
மூலம் - வெப்துனியா

இலங்கை அரசு மீது உலகநாடுகள் அதிருப்தி : ஹில்லாரி

வாஷிங்டன், வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2009

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவித் தமிழர்களைக் கொல்லும் இலங்கை அரசின் நடவடிக்கை அதிருப்தியளிப்பதாக அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அயலுறவு விவகாரங்களுக்கான பேரவையில் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், " அப்பாவித் தமிழர்களை கொல்லப்படுவதால் உலகநாடுகள் அதிருப்தி அடைந்துள்ளதை இலங்கை அரசு உணர்ந்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இலங்கை அரசு தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், உலக மக்களிடையே சொல்ல முடியாத அளவு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது " என்றார்.இலங்கையின் தற்போதைய சூழ்நிலை “மனிதப் பேரவலம்” எனக் குறிப்பிட்ட ஹில்லாரி, போரை நிறுத்தும்படி இலங்கை அரசை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், இதன் மூலமே போர்ப் பகுதியில் சிக்கியுள்ள பல ஆயிரக்கணக்கான மக்களை மீட்க முடியும் என்றும் கூறினார்.போர் நிறுத்தப்படுவது அல்லது போரை முடிவுக்கு கொண்டு வருவதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் மட்டுமின்றி அரசியல் தீர்வும் கிடைக்கும் என்பதை அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளதாகவும் ஹில்லாரி அப்போது தெரிவித்தார்.
மூலம் - வெப்துனியா

Thursday, April 23, 2009

அடுத்தது நாடகம் என்ன?

ராஜினாமா டிராமா முடிஞ்சுது. மனித சங்கிலி நீ்ட்டமா 60 கிலோ மீட்டர் போச்சு, உண்ணாவிரதம் நல்லபடியா போச்சு. கடிதம் எழுதியாச்சு. அதவிட வேகமா போகனும்னு தந்தியும் அடிச்சாச்சு. பேரணி நடத்திக் காமிச்சாச்சு. உணர்ச்சித்தமிழர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போட்டாச்சு, இப்போ பொது வேலை நிறுத்தம்.அடுத்தது என்ன? சவ ஊர்வலம் தான? எது பண்றதாருந்தாலும் முன்னாடியே சொல்லிடுங்க. அடிக்கடி உங்களையெல்லாம் திட்டி திட்டி வாய் வலிக்கறது தான் மிச்சம். அதுசரி. மனுஷனா இருந்தா உரைக்கும். தெருத் தெருவா ஒட்டு பொறுக்குற நாய்ங்களுக்கு (நாய்கள் சங்கம் மன்னிக்கவும்) எப்படி உரைக்கும்?அப்புறம். ஊர்வலத்தின் போது தாரை தப்பட்டைக்கு பதிலா ஜால்ரா அடிக்கனும்னா செலவே இல்லாம நிறைய பேர் வருவாங்க. தாரை தப்பட்டை செலவ மிச்சம் பிடிச்சு அதுல ஏதாவது புதுசா சேனல் ஆரம்பிச்சு உங்க மகத்தான சேவையை தொடருங்க.கடைசியா வயித்தெரிச்சலுடன் ஒரு சாபம் - உங்க யாருக்கும் நல்ல சாவே வராது.அளவில்லா எரிச்சலுடன்தமிழன் என சொல்லிக்கொள்ள வெட்கப்படுபவன்.

Wednesday, April 22, 2009

சிறிலங்கா இராணுவம் தமிழ்மக்களை மிருக வெறி கொண்டு தாக்குகிறது; இதுபோன்று படுகொலை உலகில் எங்குமே நிகழ்ந்ததில்லை: ஜெயலலிதா

’இலங்கையில் பாதுகாப்பு வளையத்தில் சிக்கி இருக்கும் தமிழர்கள் அனைவரையும் இலங்கை இராணுவம் மிருக வெறி கொண்டு தாக்கி வருகிறது. தப்பி ஓடுபவர்களை எல்லாம் இலங்கை இராணுவம் விரட்டி அடித்துக் கொள்கிறது. என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:-அங்கே தமிழ் இனமே அழிந்து கொண்டிருப்பதாக கவலை தரும் செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற இனப் படுகொலை உலகத்தில் எங்குமே நிகழ்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் முதல்வர் கருணாநிதி தெளிவான முடிவை, தைரியமாக எடுக்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள். பல நாடுகளில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால் கருணாநிதி உடனடி நடவடிக்கை எதையும் எடுக்காமல், நிமிடத்திற்கு ஒரு பேச்சு பேசிக் கொண்டிருக்கிறார். மீண்டும் மீண்டும் தந்தி கொடுப்பதுதான் கருணாநிதிக்கு தெரிந்த ஒரே தீர்வு போலும்.
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்த நிமிடத்தில் நமது ஒரே முழக்கம். அதற்கு அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அதை இந்திய அரசு உடனடியாகச் செய்ய வேண்டும். அதற்கு தமிழக முதலமைச்சரின் பங்கு என்ன என்பதுதான் எல்லோரும் கேட்கும் கேள்வி. இந்த நேரத்திலாவது கருணாநிதி ஒரு முதலமைச்சராக செயல்பட்டு மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும். எஞ்சியுள்ள தமிழர்களை காப்பாற்ற முன்வர வேண்டும். இல்லையெனில் வரலாறு எப்படி அவரை மன்னிக்கும்? ’’என ஜெயலலிதா கூறியுள்ளார்.

Tuesday, April 21, 2009

இந்திய அரசாங்கத்தின் நேரடி உதவிகளுக்கு இலங்கை மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும்: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா

இலங்கையில் ஊடறுத்துள்ள பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கு நட்புறவு நாடுகள் வழங்கிவரும் இராணுவ ரீதியிலான உதவிகள் பாராட்டிற்குரியவை என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறைமையையும் பிரதேசத்தின் தன்னாதிக்கத்தினையும் பாதுகாப்பதற்கென இந்திய அரசாங்கம் வழங்கிவரும் நேரடி உதவிகளுக்கு நாட்டு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் இராணுவ தளபதி மேலும் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது இந்நியா உள்ளிட்ட பல நட்புறவு நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்குத் தேவையான அனைத்துவித இராணுவ உதவிகளையும் வழங்கி வருகின்றன.
இந்நிலையில் இலங்கை இராணுவ வீரர்களுக்குத் தேவையான பயிற்சிகளையும் வழங்க அந்நாடுகள் முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும். விடுதலைப் புலிகள் இயக்கமானது முழு நாட்டினையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் ஈழம் இராச்சியத்தை அமைப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர் என்று பாதுகாப்பு தரப்பினருக்கு இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. அவர்களின் இந்த கனவு ஒருபோதும் நனவாகிவிட இராணுவத்தினர் இடமளிக்கப் போவதில்லை.
இலங்கை மக்கள் ஒற்றுமையாக வாழ்வதன் மூலமே பலமான அபிவிருத்தியுள்ள நாட்டினைக் கட்டியெழுப்ப முடியும். இன அடிப்படையில் நாட்டைப் பிரிப்பது நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதை அனைத்து இன மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். இந்நிலையில் இராணுவத்தின் பலத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் இராணுவத்தின் பலத்தை ஒன்றுதிரட்டும் நீண்ட கால நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டுமானால் இராணுவம் முற்றாக புனரமைக்கப்பட வேண்டும் என்றார்.
கூட்டமைப்பினரின் போர்நிறுத்த கோரிக்கையினை நிராகரித்த இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு நன்றி - அரசாங்கம் தெரிவிப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் போர்நிறுத்த கோரிக்கையை நிராகரித்த இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு தொடர்பில் அந்நாட்டுக்கு இலங்கை மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றது. பிராந்திய வல்லரசான இந்தியா ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றமை பிராந்தியத்தை மேலும் பலப்படுத்தும் விடயமாகும்.
விரைவில் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். மேலும் சில தினங்களில் புலிகளிடமிருந்து அனைத்து சிவிலியன்களையும் பாதுகாப்பு படையினர் மீட்டுவிடுவர். உலகில் பிரதேசங்களை கைப்பற்றியுள்ள பயங்கரவாத இயக்கங்களை எவ்வாறு தோற்கடிப்பது என்பதற்கு இலங்கை இராணுவத்தினர் சிறந்த முன்னுதாரணத்தை வழங்கியுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஊடகத்துறை அமைச்சில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழின துரோககாங்கிரசுக்கு வாக்கு போடாதீர்

19.04.09 மாலை 4.00 மணிக்கு சேலம் இளம்பிள்ளையில் ஈழமக்களை இத்தாலி சோனியா ஆதரவுடன் இந்தியப்படையின் துணையுடன் நச்சுவாயு குண்டுகளை வீசி கொன்றுக்குவிக்கும் சிங்கள இந்தியப்படையினை கண்டித்து இலங்கை அரசுக்கு இன்றுவரை துணை நிற்க்கும் காங்கிரசு அரசை வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டி காயக்கட்டு ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் தி.க மாவட்ட இணைசெயலாளர் முத்துமாணிக்கம் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் ஈழத்தமிழரை கொன்று குவிக்கும் காங்கிரசை புறக்கணிப்பீர், வாக்குக்காக தமிழர்களை தேடிவரும் சோனியாவை தமிழகத்தில் அனுமதிக்க மறுப்போம், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும்,
தமிழர்களே தமிழர்களே மன்றாடி கேட்கின்றோம், காலில் விழுந்து கேட்கின்றோம் உங்கள் மானமுள்ள வாக்கை தமிழின துரோக காங்கிரசுக்கு போடாதீர்- கை சின்னத்திற்கு போடாதீர் என்று முழக்கமிட்டு சென்றனர். ஊர்வலத்தில் 100 கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.











ஈழத்தமிழர்மீது இரசாயன குண்டு வீச்சுக்கு எதிர்ப்பு - பெரியார் தி.க ஆர்ப்பாட்டம்-ஊர்வலம்

ஈழத்தமிழர்மீது படுகொலை தாக்குதலை அதிகரித்து உலகநாடுகள் தடை செய்யப்பட்ட இரசாயன எறிகுண்டுகளை ஏவி வன்கொடுமை தாக்குதல் மேற்கொண்டுள்ள சிங்கள காடையர்களையும் அவர்களுக்கு துணை போகும் இந்திய அரசை கண்டித்தும் இக்கொடுமைகளையெல்லாம் கண்டும் காணாம்மல் இருக்கும் முதல்வர் கருணாநிதி அரசை கண்டித்து கண்டன ஊர்வலம் ஆர்ப்பாட்டம் பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பில் சேலம் தீயணைப்பு நிலையத்தில் துவங்கி கண்டன முழக்கங்களுடன் பழைய பேருந்து நிலையம் மத்திய தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழினம் அனாதையாகி விட்டதா, உலகில் தடைசெய்யப்பட்ட இரசாயன குண்டுகளுக்கு ஆயிரம் ஆயிரமாய் தமிழர்கள் பலியாகிரார்களே சிங்களர்களுக்கு ஆயுதம் வழங்கிவிட்டு தமிழர்களிடம் வாக்கு கேட்கவரும் காங்கிரசே போரை நிறுத்து, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு, சிங்கள இராணுவத்தை வழிநடத்தி செல்லும் இந்திய இராணுவ வல்லுனர்களை திரும்பபெரு, தேர்தல் களம்காணும் அரசியல் கட்சிகளே ஈழப்போர்களத்தில் எம் இன தமிழர்களும் குழந்தைகளும் பிணமாவதை எதிர்த்து குரல் கொடுங்கள் உணர்ச்சியுள்ள தமிழர்களே ஈழத்தில் போரை நிறுத்தும்வரை போராட வாருங்கள் என முழக்கமிட்டு ஊர்வலமாக வந்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் தி.க மாவட்ட செயலாளர் அ.சக்திவேல் தலைமை தாங்கினார். மற்றும் தோழமை அமைப்புகள் கலந்துகொண்டனர்.