Friday, July 31, 2009

பெரியார் எழுத்துகளை வெளியிட தடை இல்லை

பெரியார் எழுத்துகளை வெளியிட தடை இல்லை
வீரமணி பதிப்புரிமை கோர முடியாது
உயர்நீதிமன்றத்தின் சிறப்பு மிக்க தீர்ப்பு

பெரியார் எழுத்து பேச்சுகளுக்கு - பதிப்பு உரிமை கோரும் உரிமை கி. வீரமணியை செயலாளராகக் கொண்டுள்ள பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்கு கிடையாது என்றும், பெரியார் அந்த உரிமைகளை தனக்கும் கோரவில்லை; மற்றவர் களுக்கும் வழங்கிடவில்லை என்றும், சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிபதி கே. சந்துரு, ஜூலை 27, 2009 அன்று காலை 10.30 மணியளவில் இத்தீர்ப்பை வழங்கினார்.

பெரியார் எழுத்து பேச்சுகளை 1925 முதல் 1938 வரை தொகுத்து, 27 தொகுதிகளாக, பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டது. அதை எதிர்த்து, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி வழக்கு தொடர்ந்தார். ‘அறிவுசார் சொத்துடைமை’, ‘பதிப்புரிமை’ சட்டப் பிரிவுகளின் கீழ் பெரியார் எழுத்து பேச்சுகளை வெளியிடும் உரிமை - தமது நிறுவனத்துக்கு மட்டுமே உண்டு என்று கோரிய வீரமணி, பெரியார் திராவிடர் கழகம் வெளியிட தடைகோரியதோடு, ரூ.15 லட்சம் இழப்பீடும் கேட்டு வழக்கு தொடர்ந்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கோவை இராம கிருட் டிணன் இருவர் மீதும் இந்த வழக்கு தொடரப்பட்டது. வழக்கு தொடர்ந்ததோடு, தங்களிடமிருந்த ‘குடிஅரசு’ பிரதிகளை “திருடிச்” சென்றதாக சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் மனுவும் தந்தார்கள்.

வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர்நீதி மன்றம், ‘குடிஅரசு’ தொகுதிகள் வெளியீட்டுக்கு இடைக்கால தடைவிதித்திருந்தது. (ளுவயவரள ணுரடி) பெரியாரியலாளர்களாலும், தமிழின உணர்வாளர் களாலும் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பைக் கேட்டு, உண்மை பெரியார் தொண்டர்கள் மகிழ்ந்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பெரியார் தனது எழுத்து பேச்சுகளுக்கு பதிப்புரிமை ஏதும் கோரவில்லை என்பதோடு, பதிப்புரிமை கோரும் உரிமையையும் எவருக்கும் வழங்கிடவும் இல்லை என்பதை நீதிமன்றத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சார்பில் வாதாடிய வழக்கறிஞர் துரைசாமி எடுத்துக் காட்டினார். பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் சார்பில் வாதாடிய திருமதி கிளாடிஸ் டேனியல் அவர்களும் இதே வாதத்தை முன் வைத்தார்.

1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டத்தின் 52(1) (எம்) பிரிவை - இந்த வழக்கின் தீர்ப்புக்கு மய்யமான ஆதாரமாக நீதிபதி முன் வைத்துள்ளார்.

பதிப்புரிமை எவற்றிற்கெல்லாம் கோர முடியாது என்பதை மேற்குறிப்பிட்ட சட்டத்தின் பிரிவு விளக்குகிறது. இதன்படி பொருளாதாரம், அரசியல், சமூகம் அல்லது மதம் தொடர்பான தலைப்புகளில், நாட்டின் நடப்புகள் குறித்து - செய்தித்தாள், இதழ் களில் வெளிவரும் கட்டுரைகளை மீண்டும் வெளி யிட்டால், அதற்கு பதிப்புரிமை கோர முடியாது. அப்படி பதிப்புரிமை கோர வேண்டுமானால், இந்தக் கட்டுரைகளை எழுதியவர்கள், அதற்கான பதிப்புரிமையை கோரி இருந்திருக்க வேண்டும் என்று இந்த பிரிவு குறிப்பிடுகிறது. இந்த சட்டப்பிரிவை முன் வைத்து வழக்கறிஞர் துரைசாமி முன் வைத்த வாதம் வலிமையானதாகும் என்று நீதிபதி தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். (He (Mr.Duraisamy) Pleaded a strong reliance upon the said provision and pleaded for the dismissal of the application) இந்த வழக்கில் எழுப்பிய பிரச்சினைக்கு, மேற்குறிப்பிட்ட சட்டத் தின் விதிவிலக்குப் பிரிவு பதிலாக அமைந்துள்ளது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அந்த சட்டப் பிரிவின் அடிப்படையிலே கி.வீரமணியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். (The issue raised here is squarely covered by the exemption provided under section 52(1) (m) of the copy right act, 1957. Accordingly the application is dismissed.)

“குடிஅரசு - பத்திரிகையில் எழுதியவர் பெரியார்; அவரே அதன் உரிமையாளர். குடிஅரசில் வெளிவந்த கட்டுரைகளில் பெரும்பாலானவை பொருளாதாரம், அரசியல், சமூகம், மதம் தொடர்பான தலைப்புகளில் தான். இந்தக் கட்டுரைகளுக்கு தனக்கு பதிப்புரிமை ஏதும் பெரியார் கோரவில்லை. எனவே 52(1) (எம்) பிரிவின்படி பெரியார் எழுத்தை வெளியிடுகிறவர்கள் பதிப்புரிமையில் குறுக்கிட்டுவிட்டதாகக் கூற முடியாது” என்று தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதி, “சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் அமைப்பு விதிகளில் கூட, பெரியாரின் எழுத்துகளுக்கான உரிமைகள் பற்றி ஏதும் குறிப்பிடப் படவில்லை. இன்னும் சொல்லப் போனால், எதிர்காலத்தில் வாங்கக் கூடிய சொத்துகள் தான் இந்த நிறுவனத்துக்கு உரிமையாகும் என்றே, அச்சங்கத்தின் விதிகள் 22, 23 குறிப்பிடுகின்றன” என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

பெரியார் எழுத்துகளை இலக்கியம் என்ற பிரிவின் கீழ் கொண்டு வந்து - எனவே அது ‘அறிவுசார் சொத்துடைமை’யாகவும் கருத வேண்டும் என்று கி.வீரமணி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள நீதிபதி, ‘அறிவுசார் சொத்துரிமை’ கோருவதற்கும் - எழுத்துபூர்வமாக தரப்பட்டிருக்க வேண்டும். அப்படி எழுத்து பூர்வமாக பெரியார் வழங்கிடவில்லை. பெரியார் எந்த உயிலும் எழுதி வைக்காமல்தான் இறந்துள்ளார். இது எல்லோருக்கும் தெரியும்” என்று விளக்கமளித்துள்ளார். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், பெரியார் எழுத்துகளுக்கு பதிப்புரிமை கோரும் உரிமை கிடையாது என்ற இந்த தீர்ப்பின் வழியாக - இனி பெரியார் எழுத்து - பேச்சுகளை வெளியிடும் உரிமை அனைவருக்கும் கிடைத்துள்ளது. தஞ்சை பகுத்தறிவாளர்கழகம் தயாரித்திருந்த தொகுப்பையே பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுகிறது என்று தஞ்சை இரத்தினகிரி, கி.வீரமணிக்கு ஆதரவாக தாக்கல் செய்த மனுவை - ஏற்கனவே உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்தின் இந்த கோரிக்கை ‘வலிமையாக மறுக்கப்பட்டுவிட்டது’ (நுஅயீhயவiஉயடடல னநnநைன) என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

25 பக்கங்கள் கொண்ட இத்தீர்ப்பின் தொடக்கத்தில், பெரியாரின் குடிஅரசு தொடங்கிய காலகட்டம்; குடிஅரசு சந்தித்த எதிர்நீச்சல், வகுப்புவாரி உரிமைக்காக பெரியார் காங்கிரசுக்குள் நடத்தியப் போராட்டம்; காங்கிரசிலிருந்து வெளியேறி, அதனால் சந்தித்த எதிர்ப்புகள் போன்ற வரலாறுகளை நீதிபதி பதிவு செய்துள்ளார். காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வெளியேறிய பெரியார், “கடவுள் ஒழிக; மதம் ஒழிக; காந்தி ஒழிக; காங்கிரஸ் ஒழிக; பார்ப்பான் ஒழிக” என்பதையே தனது எதிர்கால அரசியல் செயல் திட்டமாக்கினார் என்றும், நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பெரியாருடன் சமகாலத்தில் வாழ்ந்த சைவப் பண்டிதர் ஈ.எம்.சுப்ரமணியபிள்ளைக்கு 1947 இல் பெரியார் எழுதிய கடிதத்தில், “என்னுடைய நூல்கள், மிகக் குறைந்த விலைக்கே தரப்படுகின்றன. அவைகளுக்கு முறையான விற்பனையும் கிடையாது. பெரும்பாலான நூல்கள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. வியாபாரம் என்ற முறையில் இதில் தொண்டாற்றுவது இயலாது; அப்படி தொண்டாற்றுவது கடினம்” என்று எழுதியுள்ளதை நீதிபதி, “தமிழ்ப் பெரும் புலவர் ஈ.எம்.சுப்ரமணியபிள்ளை” என்ற நூலிலிருந்து மேற்கோளாக எடுத்துக்காட்டியுள்ளார். பெரியார் தனது கருத்துகள் மக்களிடம் பரவிட தனது வெளியீடுகளை இலவசமாகக்கூட வழங்கியவர் என்ற இந்த கருத்து பதிப்புரிமை கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கான பதிலாக அமைந்துள்ளது.

பெரியார் திரைப்படத்துக்கு தமிழக அரசு 95 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியதை எதிர்த்து, டி. கண்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து, மனுவை தள்ளுபடி செய்தது. அதில், ஒரு நீதிபதி கே. சந்துரு, 2007 ஆம் ஆண்டு தமது அமர்வு வழங்கிய தீர்ப்பில் பெரியார் சாதி, மத, தீண்டாமைக்கெதிராக போராடிய சிறப்புகளை குறிப்பிடப்பட்டிருந்ததை இந்தத் தீர்ப்பில் மீண்டும் நீதிபதி எடுத்துக்காட்டியுள்ளார்.

“பெரியாரை நீதிமன்ற காகித கட்டுக்குள் புதைத்துவிடக் கூடாது!”

“விடை பெறுவதற்கு முன்பு - இந்த நீதிமன்றம் நிறைவாக ஒன்றை கூற விரும்புகிறது. பெரியார் ‘குடிஅரசில்’ எழுதியவை எல்லாம், இரண்டு உலகப் போர்கள் நடந்த காலத்தின் இடையே வெளி வந்தவை. காலனி ஆட்சியாளர் களின் அடக்குமுறைப் பிடியில் சிக்கிய பெரியார் சிறைச் சாலைகளை சந்தித்தார். அவர் நடத்திய பத்திரிகைகளுக்காக பிரிட்டிஷ் காலனி ஆட்சி வைப்புத் தொகை கேட்டது. பிறகு அதை பறிமுதல் செய்தது. இந்து பழமைவாதிகளால் அவர், புறக் கணிக்கப்பட்டார். சமூகநீதிக்காக போராடு வதற்காக அவர் தேசிய இயக்கத்திலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக சக்தி மிக்க காங்கிரஸ் கட்சி யின் கடுங்கோபத்தையும் அவர் எதிர் கொண்டார். ஆனாலும், எந்தப் பலனை யும் எதிர்பாராத அவரது பயணம் தொடர்ந்தது.

தற்குறிகள் எண்ணிக்கையே நிறைந் திருந்த அந்தக் காலகட்டத்தில் படித்தவர் களிடம், தமது கருத்துகளைக் கொண்டு சேர்க்க விரும்பிய பெரியார், பல சந்தர்ப் பங்களில் ‘குடிஅரசு’ பத்திரிகைகளை இலவசமாகவே வழங்க வேண்டி யிருந்தது.

பெரியாரின் 130 ஆவது ஆண்டாக மலரப் போகும் 2009 இல் பெரியாரின் எழுத்துகள், பதிப்புரிமைப் பிரச்சினைக் குள் சிக்கி, சட்டங்களின் ‘சண்டைக் களமாக’ மாற்றப்படுவதை கடும் வேதனை வலியுடனேயே இந்த நீதி மன்றம் பார்க்கிறது. அவரது சிந்தனைகளை ‘சகோதர சண்டைக்குள்’ பெரியாரை சிக்க வைத்து, நீதிமன்றங்களின் காகிதக் கட்டுகளுக்குள் புதைந்து விடக்கூடாது. நியாயங்கள் வெல்லும் என்று இந்த நீதிமன்றம் நம்புகிறது.

எமது குறிக்கோள் இதுதான்.

“நூறு மலர்கள் பூக்கட்டும்; ஆயிரம் சிந்தனைகள் குலுங்கட்டும்.”- நீதிபதி கே. சந்துரு, தீர்ப்பின் இறுதிப் பகுதியில், பதிவு செய்துள்ள கருத்து
மீண்டும் நீதிமன்றம் சென்றார், வீரமணி!

சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் ரவிராஜ் பாண்டியன், ஜனார்த்தன ராஜா ஆகியோர் அமர்வுக்கு முன் மேல்முறையீட்டு மனுவை தமது நிறுவனம் சார்பில் ஜூலை 29 அன்று கி.வீரமணியின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர். நீதிமன்றம், ‘ஏற்கனவே இருந்த நிலை தொடர்கிறது’Status Quo என்று கூறியுள்ளது.

வாதாடிய வழக்கறிஞர்கள்

‘குடிஅரசு’ வழக்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சார்பாக மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி மற்றும் வழக்கறிஞர்இளங்கோ ஆகி யோரும், பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன் சார்பில் வழக்கறிஞர் திருமதி கிளாடியஸ் டேனியல் ஆகியோரும் வாதிட்டனர். வழக்கறிஞர் குமாரதேவன், வழக்கறிஞர் அமர்நாத் பல்வேறு நிலைகளில் வழக்கிற்கு தங்கள் பங்களிப்பை வழங்கினர். 2008 செப்டம்பரில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி ஜெயபால் முன் முதலில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் நீதிமன்றம் முதலில் குடிஅரசு தொகுதிகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்தது. வழக்கு பல முறை தள்ளி வைக்கப்பட்டது. இறுதி யாக நீதிபதி கே. சந்துரு முன் விசாரணைக்கு வந்தது.

கடந்த ஜூலை 20 ஆம் தேதி - வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தடைக்கான கெடு முடிந்திருந்தது. தடையை மேலும் நீட்டிக்க மறுத்த நீதிபதி, 22 ஆம் தேதி வழக்கை விசாரணைக்கு ஏற்று, இரு தரப்பு வாதங்களையும் கேட்டார். ஜூலை 27ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நீதிமன்றம் தொடங்கியவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நீதிபதி வெளியிட்டார்.

வரலாற்றில் பதியும் தீர்ப்பு

பெரியாரின் சிந்தனைகளை மக்கள் மன்றத்தில் முழுமையாக காலவரிசைப்படி கொண்டு சேர்க்க பெரியார் திராவிடர் கழகம் எடுத்த பெருமுயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. ‘குடிஅரசு’ தொகுப்புகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட தடையில்லை என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. தனித்துவமான புரட்சிகர தீர்ப்புகளை வழங்கி வரும் பெருமைக்குரிய உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு, மற்றொரு சிறப்பான நேர்மையான தீர்ப்பை வழங்கியிருப்பதை பெரியாரிய சிந்தனையாளர்கள், மகிழ்வுடன் வரவேற்கிறார்கள்!

மகத்தான தியாகங்களை சுமந்து, மக்களிடம் பெரியார் விதைத்த சிந்தனைகளை நீதிமன்றத்தில் வழக்குகளாக்கி, அந்த வழக்குகளின் காகிதக் கட்டுகளுக்குள் முடக்குவது, பெரியாருக்கு இழைக்கும் நீதியாகாது என்பதை நீதிபதியே தமது தீர்ப்பில் கவலையுடன் பதிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டியாக வேண்டும்.

யாருக்கு குழந்தை சொந்தம் என்று வழக்காடிய இரண்டு தாய்மார்களில் ஒருவர், குழந்தையை இரண்டு பகுதியாக வெட்டி பிரித்துத் தந்து விடுங்கள் என்றுகூற, உண்மைத் தாயோ, குழந்தையை வெட்ட வேண்டாம், அவளிடமே இருக்கட்டும் என்று மன்றாடிய கதையில் இழையோடும் அதே உணர்வுதான், நீதிபதியின் இந்த கருத்திலும் பிரதிபலிக்கிறது என்பதாகவே நாம் உணருகிறோம்.

தமது வெளியீடுகள் எவற்றுக்கும் பதிப்புரிமை கோராத பெரியார், பல நேரங்களில் மக்களுக்கு இலவசமாகவே வழங்கினார் என்ற உண்மையை நீதிபதி எடுத்துக் காட்டியிருப்பது, பதிப்புரிமை கோரி நிற்பவர்களுக்கு, நீதிமன்றம் வழங்கியுள்ள சரியான பதிலாகும்.

அதனால்தான் ‘மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு’ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெரியாரை மிகச் சரியாக படம் பிடித்துக் காட்டினார். ‘நீதிமன்ற நீதிக்கே நீதி சொல்வார்’ என்று ஒரு கவிஞர், பெரியாரைப் பாடினார். அந்தத் தலைவரின் சிந்தனைகளை நீதிமன்றங் களின் தடை ஆணைகளுக்குள் முடக்கத் துடிப்பது, பெரியாரியலுக்கு இழைத்துள்ள துரோகம். இதை வரலாறு பதிவு செய்தே தீரும்.

வழக்கைத் தொடர்ந்தவர்களுக்குக்கூட ஒரு வகையில் நன்றி சொல்லத்தான் வேண்டும். இந்த வழக்கு வந்த காரணத்தால்தான் ‘குடிஅரசு’ பற்றிய செய்திகள் மேலும் பரவலாக மக்களிடம் சென்றடைந்திருக்கிறது.

1925 ஆம் ஆண்டு அமெரிக்க மாநிலங்களில் ஒன்றில் (கூநுசூசூநுளுளுநுநு) நடந்த புகழ் பெற்ற ‘ஸ்கோப்ஸ் மங்கி’ (ளுஉடியீநள ஆடிமேநல) என்ற வழக்கை குறிப்பிடலாம். ‘மனிதனை இறைவன் படைத்தான்’ என்பதை மட்டுமே பள்ளிகளில் பாடமாக கற்பிக்க வேண்டுமே தவிர, மனிதன் பரிணாம வளர்ச்சியை விஞ்ஞான ரீதியாகக் கண்டறிந்த டார்வின் கோட்பாட்டை கற்பிக்கக் கூடாது என்ற சட்டத்தை எதிர்த்து (ரெடடநவ யஉவ), ஜான் ஸ்கோப் என்ற பள்ளி ஆசிரியர், தமது மாணவர்களுக்கு டார்வின் கோட் பாட்டை கற்றுத் தந்தார். அதன் காரணமாக ஆசிரியர் ஆட்சியாளரால் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டார்.

பைபிளின் இறைக் கொள்கைக்கு ஆதரவாக அமெரிக்க தேர்தலில் மூன்று முறை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நின்ற வில்லியம் ஜென்னிங்ஸ் பயாஸ் வாதாடினார். டார்வின் கோட்பாட்டுக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் லாரன்ஸ் டாரோ வாதாடினார்.

இருதரப்பு வாதங்களும், எட்டு நாட்கள் இரவு பகலாக தொடர்ந்து நடந்தன. ஏடுகளில் வெளிவந்த அந்த வாதங்களை மக்கள் பரபரப்பாகப் படித்தார்கள். பைபிளின் படைப்புக் கொள்கைக்கு எதிரான வாதங்கள் அப்போதுதான் மக்களை சென்றடைந்தன. அதே போன்ற தாக்கத்தையே இந்த வழக்கும் சந்தித்திருக்கிறது.

பெரியாரியலை பரப்பும் இயக்கம் எது? முடக்கும் அமைப்பு எது என்பதை நீதிமன்றங்களின் வழியாக மக்கள் மன்றம் இப்போது புரிந்து கொண்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்தாலும், நாம் வியப்படைய மாட்டோம். மக்கள் மன்றம், மீண்டும் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளவே செய்யும்.

நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, பெரியார் திராவிடர் கழகத்துக்கு கிடைத்த வெற்றியாக மட்டும் நாம் கருதவில்லை. பெரியாரியலைப் பரப்பத் துடிக்கும் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம்.

தீர்ப்பு குறித்து சிந்தனையாளர்கள் கருத்து - பெரியார் விடுதலையானார்!

நீதிமன்றத் தீர்ப்பை சிந்தனையாளர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு இது தொடர்பாக சிந்தனை யாளர்களின் கருத்தை வெளியிட்டுள்ளது. பெரியாரியல் சிந்தனையாளர் எஸ்.வி.ராஜதுரை கூறுகையில், “நீதிமன்றத்துக்கு சென்ற கி.வீரமணி, இதன் மூலம் பெரியார் சிந்தனைகள் பரவுவதை தடுக்க முயன்று, பெரியாருக்கு முழுமையாக நீதி வழங்க மறுத்திருக்கிறார்” என்றார். மேலும் “இத் தீர்ப்பு குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். பெரியாரைப் பற்றி பல நூல்கள் எழுதப்பட் டுள்ளன. ஆனால், எந்த வரலாற்றுச் சூழலில் பெரியார் தனது குரலை ஒலித்திருக்கிறார் என்பது வெளிப்படுத்தப்படவே இல்லை. சமூக, வரலாற்றுச் சூழலிலிருந்து பெரியார் எழுத்து களைப் பிரித்து தனிமைப்படுத்திவிடக் கூடாது” என்று கூறினார்.

“பெரியார் நூல்கள் தேச உடைமை யாக்கப்பட வேண்டும் என்பதற்கான முதல் படியாக இத்தீர்ப்பு வெளிவந்துள்ளது” என்று எழுத்தாளர் ஞாநி கூறியுள்ளார். “இந்தத் தீர்ப்பை பெருந்தன்மையுடன் திராவிடர் கழகம் ஏற்றுக் கொண்டு, மேல்முறையீடு செய்யாதிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று ஞாநி மேலும் கூறியுள்ளார். பெரியாரின் எல்லா எழுத்துகளுக்குமான உரிமைகளைப் பெற்று அரசு பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். “பெரியார் சிந்தனைகள் பொதுச் சொத்து அல்ல என்பது எங்களின் வழக்கு அல்ல. ஆனால், பதிப்புரிமை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டுமே உண்டு என்பதே எங்கள் வழக்கு. காரணம் பெரியாரின் கருத்துகள் சிதைக்கப்பட்டு விடக்கூடாது” என்று தி.க. வழக்கறிஞர் வீரசேகரன் கூறினார்.

“எழுத்துகள் திரித்துக் கூறப்பட்டுவிடும் என்ற காரணத்தைக் கூறி, பெரியார் நூல்களை வெளியிடும் உரிமைகளை மற்றவர்களுக்கு வழங்காமல் இருந்துவிட முடியாது. பெரியாரின் எழுத்துகள் முழுமையாக பொது மக்களிடம் கிடைக்கும்போதுதான் திரிபுவாதங்களை எதிர்த்து அம்பலப்படுத்த முடியும்” என்று எஸ்.வி.இராஜதுரை கூறியுள்ளார்.

தீர்ப்பை வரவேற்ற சமூக அரசியல் ஆய் வாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வம், “தனிஉடைமை கோட்பாட்டுக்கு எதிரான பொதுமைக் கோட்பாட்டுக்கு அனைவருக்கும் கிடைத்த வெற்றி, இத் தீர்ப்பு” என்றார். 1995 இல் உச்சநீதிமன்றம் , அலைவரிசை பொதுவானது என்று வழங்கிய தீர்ப்புக்கு சமமானது இத்தீர்ப்பு என்றார். கல்கத்தாவில் நடந்த கிரிக்கெட் போட்டியை நேரடியாக ஒளிபரப்பும் உரிமை, தூர்தர்ஷனுக்கு மறுக்கப்பட்டு தனியார் தொலைகாட்சிக்கு தந்த கிரிக்கெட் வாரியத்தை எதிர்த்து தூர்தர்ஷன் தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் மேற்குறிப்பிட்ட தீர்ப்பை வழங்கியது. ‘டெக்கான் கிரானிக்கல்’ ஆங்கில நாளேடு ‘தமிழக பெரியாரியல்வாதிகள் தீர்ப்புக்கு வரவேற்பு’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியில் “தி.க. கட்டுப்பாட்டிலுள்ள பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், பெரியார் நூல்களை வெளியிடுவதை தனக்கே உரிமை கோருவதற்கு எதிராக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழக பெரியாரியலாளர்கள் வரவேற்றுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.

“மகிழ்ச்சியாக நாம் கொண்டாட வேண்டும். பெரியார், இப்போது சுதந்தரமாக நடமாட முடியும். சிலரால் சிறைபிடிக்கப்பட்டிருந்த பெரியார், அதிலிருந்து விடுதலைப் பெற்று விட்டனர்” என்று பெரியாரிய சிந்தனையாளரும் எழுத்தாளருமான வ.கீதா கூறினார். “பெரியார் கருத்துகள் மேலும் மக்களிடையே சென்றடைய இத்தீர்ப்பு உதவும்” என்றார் அவர்.

Tuesday, July 28, 2009

சாதி, மத பேதமற்ற அரசியல் சாசனத்தை உருவாக்கி தமிழ்நிலத்தை ஆண்டவர்கள் விடுதலைப் புலிகள் – விடுதலை க.இராசேந்திரன்

தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில பி.யூ.சி.எல் அமைப்பின் சார்பில் Sri Lanka: Lessons and implications for Human Rights in India and South Asia என்ற தலைப்பில் கருத்தரங்கம் தொடங்கியுள்ளது.
பெங்களூரின் புறநகர் பகுதியான உத்தரி கிராமத்தில் பயர் பிளைஸ் 2 நாள் கருத்தரங்கம் ஜூலை25ந் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கியது. தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில பி.யூ.சி.எல் அமைப்பின் தலைவர்.டாக்டர். வி.சுரேஸ் நிகழ்வு குறித்த அறிமுக உரை நிகழ்த்தினார். தொடர்ந்து,மனித உரிமை செயற்பாட்டாளர் டாக்டர்.கே.பாலகோபால், சிறீலங்காவில்,தீவிரவாதத்தை ஒடுக்குதல் என்ற பெயரில் மனித உரிமைகள் மட்டுமல்ல, மனிதர்களே அழிக்கப்பட்ட கொடூரத்தை விளக்கிப் பேசினார்.
முதலாவது அமர்வில், கருநாடக மாநில மாநில பி.யூ.சி.எல் அமைப்பின் தலைவர் தலைவர் பேரா.ஹசன் மன்சூர் தலைமையேற்றார். பேரினவாத சிங்கள அரசு வேட்டையாடக் காத்திருக்கும் சிங்களப் பத்திரிக்கையாளர்.குஷால் பெராரா போருக்குப் பின் அங்கு நிகழும் மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசினார். தமிழ் வெப்துனியா ஆசிரியர்.அய்யநாதன்,கடைசிக் கட்ட போரின் போது,மே-18 மற்றும் மே-19 தேதிகளில் ஒட்டுமொத்த தமிழினமே கருவறுக்கப்பட்ட கொடூரத்தை ஆதாரங்களுடன் விளக்கிப் பேசினார். வதை முகாம்களில் தற்போதைய நிலை, மனிதக்கொடூரன்.ராஜபக்சே யின் ராணுவத்தின் இனவெறியாட்டம், சிங்கள ராணுவம் ந்டத்தும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் போன்றத தலைப்புகளில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆற்றிய உரைகள், இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த பி.யூ.சி.எல் அமைப்பினரை அதிர்ச்சிக் குள்ளாக்கியது பார்ப்பனத்திமிர் பிடித்த இந்து ராம் பற்றி குறிப்பிட்டு பேசும் போதெல்லாம், பார்வையாளர்கள் மத்தியில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.
‘ஒன் வாய்ஸ்’ அமைப்பின் சார்பில் திருமுருகன், போருக்குப் பின் நிவாரணம் என்றப் பெயரில் இந்திய/இலங்கை அரசுகள் மீண்டும் தமிழின அழிப்பு குறித்தும், “வடக்கில் வசந்தம்”என்றப் பெயரில் தமிழர்கள் சொந்தமண்ணில் நிர்க்கதியாகபடுகிறார்கள், அதற்கு தமிழகத்தைச் சேர்ந்த பார்ப்பனர் எம்.எஸ். சுவாமிநாதன் ராஜபக்சே யுடன் கைகோர்த்துள்ளது பற்றியும் என விளக்கிப் பேசினார். உணர்ச்சிவயப்பட்ட பார்வையாளர்,சுவாமிநாதன் – விபச்சாரியின் மகன் என்று கூற, திருமுருகனோ,பாலியல் தொழிலாளிகளை கொச்சைப் படுத்தவேண்டாம் ! என வேண்ட… அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. இறுதி நிகழ்வாக,தமிழினத்தின் எதிர்காலம், தமிழர்களின் அரசியல் என்றத் தலைப்பில், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளரும், ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்? இந்திய உளவு நிறுவனங்களின் சதி போன்ற தமிழினத்திற்கான வரலாற்று ஆவண நூல்களின் ஆசிரியருமான.
விடுதலை. இராசேந்திரன் உரையாற்றினார். இந்தியாவிலும், சிறிலங்காவிலும், மனித உரிமைகளை பறிக்கும் அரசியல் நடைபெற்றுக்கொண்டுள்ளது.பி.யூ.சி.எல் போன்ற மனித உரிமை அமைப்புகள், தேசிய இன உரிமை பேசுபவர்களின் பாதுகாப்பு செய்யும் அரசியலை வளர்த்தெடுக்க வேண்டும். நாடாளுமன்ற/அமைச்சரவை ஒப்புதலின்றி, தமிழினத்திற்கு மனித உரிமைத் துரோகத்தை இந்தியா செய்துள்ளது. இந்திய/இலங்கை கூட்டு சதியை, சர்வதேச சமுகத்தின் முன்பும்,சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடமும் அம்பலபடுத்தவேண்டும்.
கைத்தட்டல் பெறுவதற்காக, உணர்ச்சிக்கரமாகப் பேசுவது..மக்களை ரசிகர்கள் போல ஆக்காமல், அறிவுத் தளத்திற்கு கொண்டு செல்லவேண்டும். அமெரிக்காவின் மீதான செப்டம்பர்-11 தாக்குதலுக்கு முன்பே,சிறிலங்காவுடன் சம அரசியல் பலத்தில், தமிழீழம் என்ற தனியரசை நடத்திக் காட்டியவர்கள் விடுதலைப் புலிகள். சாதி, மத பேதமற்ற அரசியல் சாசனத்தை உருவாக்கி தமிழ்நிலத்தை ஆண்டவர்கள் விடுதலைப் புலிகள். சிங்கள ராணுவத்தை வெற்றிக் கொண்டு, ராணுவரீதியாக பலம் பெற்று அரசாங்கம் நடத்தும் போது தான்,அரசியல் தீர்வுக்கு ஒப்புக்கொண்டு, நார்வே பேச்சு வார்த்தையின் போது” தன்னாட்சி சபை” திட்டத்தை முன் வைத்தவர்கள் புலிகளே.
இவ்வாறு, இராணுவ ரீதியாக பலம் பெற்ற அரசியல் இயக்கத்தை “பயங்கரவாத அமைப்பாக” பட்டியலிட்டது சர்வதேசத்தின் தவறு. தற்போது, 15,000 ச .கிமீ இழந்த பின்பும் அய்க்கிய நாடுகளின் அவையில் தமிழீழம் குறித்து தீர்மானம் இடம்பெற செய்து வென்றவர்கள் விடுதலைப் புலிகளே ! புலம் பெயர் தமிழர்களின் தற்போதைய முயற்சியான “நாடு கடந்த அரசாங்கம்” அமைக்கும் முயற்சிக்கு, பி.யூ.சி.எல் போன்றமனித உரிமை அமைப்புகள் துணை நிற்கவேண்டும் எனக்குறிப்பிட்டுப் பேசினார். தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்.
டி.எஸ்.எஸ்.மணி உள்ளிட்ட பத்திரிகையாளர்கள்,மனித உரிமை ஆர்வலர்களும் கலந்துக்கொண்டனர். ஈழப்போராட்டத்தை சித்தரிக்கும் நிழல் படக்கண்காட்சியும் வளாகத்தில் இடம் பெற்றிருந்தது.
























































Saturday, July 25, 2009

உலகத் தமிழ் மக்களுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும்தமிழீழ விடுதலைப் புலிகளின் நிறைவேற்றுச் செயற்குழுவின் அறிவிப்பு.

தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எம்முடைய மக்களுடன் ஒன்றிணைந்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம் என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து இன்று விடுத்துள்ள அறிக்கையில்:

உலகத் தமிழ் மக்களுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும்தமிழீழ விடுதலைப் புலிகளின் நிறைவேற்றுச் செயற்குழுவின் அறிவிப்பு.
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
21 – யூலை – 2009.
எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழ் மக்களே,
எமது தமிழீழ தேசத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் நெருக்கடி மிகுந்த, துயர் படிந்த கால கட்டம் ஒன்றினுள் ஈழத் தமிழினம் இப்போது நிலை குலைந்து நிற்கின்றது. ஈடு செய்ய முடியாத – கனவில் கூட நாம் ஏற்றுக்கொள்ள விரும்பாத – மிகப்பெரிய இழப்புக்களை, எம்மினம் சந்தித்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்து விட்டதாகவும், முற்றாக ஒடுக்கிவிட்டதாகவும், சிறிலங்கா நாடு பரப்புரை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் – தமிழீழ விடுதலைக்காக நாம் வீறுகொண்டு எழுந்து போராட வேண்டியது எமது வரலாற்றுக் கடமை – ஒப்பற்ற எங்கள் தேசியத் தலைவர் அவர்களினாலும், எங்கள் மண்ணிற்காக விதையாகிப் போன மாவீரர்களினாலும், தமது உயிர்களைத் தந்து விட்ட மக்களினாலும் எங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிலையில் – வரலாற்றின் தேவை கருதி – பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப – புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் – தமிழீழ விடுதலைப் புலிகள் இயகத்தின் நிர்வாகக் கட்டமைப்பை நாம் மீள்-ஒழுங்கமைப்புச் செய்துள்ளோம் என்பதை எமது அன்புக்குரிய மக்களுக்கு எமது இயக்கம் பணிவோடு அறியத்தருகின்றது.
போராட்ட வடிவங்களும் அதற்கான உத்திகளும், பாதைகளும் காலத்திற்கேற்பவும் தேவைக்கேற்பவும் மாற்றமடையலாம். எமது இறுதி இலட்சியமான தமிழீழம் என்றும் மாறாதது. எனவே தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எம்முடைய மக்களுடன் ஒன்றிணைந்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். அன்றும் இன்றும் இனி என்றும் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே தமிழ் தேசியத்தின் தலைவர்.
எமக்கு முன்னாலுள்ள தடைகளை உடைத்தெறிந்து எமது செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள எமது ஒருங்கிணைப்பாளர்கள், தாயகத்தின் களத்தில் இருந்து எதிரியின் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளி வந்த போராளிகள், பொறுப்பாளர்கள் என எமது உறுப்பினர்கள் பலரையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட – நீண்ட – விரிவான – ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் விளைவாக இறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டு-முடிவுக்கு அமைய – தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த திரு.செல்வராஜா பத்மநாதன் அவர்கள் – இனிவரும் காலத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு அமைவாக எமது போராட்ட நகர்வுகளை வழிநடாத்திச் செல்வார் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிறைவேற்றுச் செயற் குழுவினராகிய நாங்கள் எமது அன்புக்குரிய மக்களுக்கும், இந்த உலக சமூகத்திற்கும் அதிகாரபூர்வமாக அறியத்தருகின்றோம்.
எமது போராட்டத்தை முனைப்புடன் முன்னகர்த்தும் நோக்கில் எமது இயக்கத்திற்கான ஒரு தலைமைச் செயலகமும், பல்வேறு துறைசார் வேலைத் திட்டப் பிரிவுகளும், நிறைவேற்றுச் செயற்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய விபரங்களை நாம் விரைவில் அறியத்தருவோம். எமது எதிர்கால செயற்பாடுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழ் மக்களாகிய உங்களின் மலையாய ஆதரவையும் அறிவார்ந்த கருத்துக்களையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.
தமிழ் மக்களுடைய நிலங்களை ஆக்கிரமித்ததாலும் பல்லாயிரம் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததாலும் தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டம் தோற்று விட்டதென்று சிங்கள தேசமும் அதனுடன் கூட்டுச் சேர்ந்த நாடுகளும் நினைக்குமாயின் அந்த மாயையை நாம் உடைத்தெறிவோம். எம் பெருந்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வளர்த்துவிட்ட விடுதலைத் தாகம் என்ற பெருநெருப்பு, உணர்வுளள் ஒவ்வொரு தமிழர்களின் நெஞ்சிலும் கனன்று கொண்டிருப்பதையும் தேச விடுதலை ஒன்று மட்டுமே அந்தப் பெருநெருப்பை அணைக்கும் சக்தியுள்ளது என்ற உண்மையையும் நாம் எமது அடுத்த கட்ட போராட்ட நகர்வுகளின் ஊடாக உலகிற்கு உணர வைப்போம்.

”புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
இவ்வண்ணம்,
நிறைவேற்றுச் செயற்குழு சார்ப்பாக,
திரு.சுரேஸ்(அமுதன்), திரு.ராம்.
தலைமைச் செயலகம்,
தமிழீழீழ விடுதலைப் புலிகள்.



Sunday, July 19, 2009

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தோழர் கொளத்தூர் மணி ஆற்றிய ஆங்கில உரை

Stop Genocide in Srilanka
Demand for Equal Rights for Tamils
Speech by
Kolathur T. S. Mani
(President, Periyar Dravidar Kazhagam)
- 04 July 2009 –
- Hyderabad – English & Foreign Languages

My dear friends
I am very glad, indeed proud to be here with you. I could see in you, the concern Periyar and Baba sahib Ambedkar had, for the society, for the oppressed and for the humanity as a whole. The same concern is what has brought you here. That’s what makes me proud.

Yes my dear friends.. the world has come to such a state that there is urgency for each one of us to join hands to save humanity. What we saw in Afghanistan, what we saw in Iraq has now come very close to us. We could sense it just beneath our feet. My dear friends.. it will
not be too long for us to experience it ourselves.

I am not exaggerating. It is a fact. In Afghanistan and Iraq it was mighty US which executed the crime against humanity. But in this tiny country called Srilanka, it wasn’t any big power from outside. Neither is Srilanka a powerful nation politically, geographically or economically. But such a weak country like Srilanka, could very openly execute a complete genocide on its own people, what bigger danger could befall on humanity?

And more importantly, as Indians, we need to be more ashamed of for what happened in Srilanka. Because, India not only turned its face away against the crying Tamils, but lent its hands full of arms and ammunitions to Srilanka for it to commit the brutality with more vigor. It is our hands, my friends, that are soaked with the blood of the Tamils of Srilanka.

Hence, we, first as Humans, then as Indians have the duty to Stop the Genocide and Demand the Equal Rights for the Tamils of Srilanka. We need to do this at least to wipe our hands off the blood.

When we talk of Demand for Equal Rights, we need to know the history of when these equal rights were deprived off from the Tamils.

Tamils of Srilanka have a very long history, as old as 2500-3000 years of documented history. Found in the context of a Megalithic burial at Aanaikkoaddai in the Jaffna peninsula in 1980, the seal, which is inscribed in Megalithic graffiti in the first line and early Brahmi in the second line, is datable to pre-Christian times. The Tamils are known to have inhabited the Island of Ceylon (now Sri Lanka) for over 2500 years. Eezham - is a name used in ancient Tamil Literatures to denote the whole Island. The word Eezham is found in the Sangam Literature dated more than 2000 years. These show that the Tamils are the original inhabitants of the Island.

Mahavamsa, the primary Epic of the Sinhalese, also says that the first Sinhalese King Vijayan came from Orissa of India. A stamp issued by the Srilankan Government in 1972 depicts the arrival of King Vijayan to the Island. The stamp shows King Vijaya in boat arriving at the island, where on the shore original inhabitants of the island look upon. Hence the Sinhalese through this stamp agree that the Tamils are the original inhabitants and Sinhalese are people who came in later. But later the Srilankan Government withdrew this stamp.

When the Portuguese occupied the Island in 1505, there were separate kingdoms for the Tamils and the Sinhalese; the Portuguese ruled the territories as separate units. Later, the Dutch (1658 - 1796) maintained this status quo. The British occupied the Island from 1796, and only in 1833 merged the Tamil and Sinhala nations into one unit for their administrative convenience.

Sir Hugh Cleghom, British Colonial Secretary says in June 1799 “Two different nations, from a very ancient period, have divided between them the possession of the Island: the Sinhalese inhabiting the interior in its Southern and western parts from the river Wallouwe to Chilaw, and the Malabars (Tamils) who possess the Northern and Eastern Districts. These two nations differ entirely in their religion, language and manners.”

On independence in February 1948, the British left the Island with a Westminster-style political representation, despite protests from the Tamils who made up almost 30% of the population. This made the Tamils a permanent minority, rendering their parliamentary representation meaningless; thus the seed of today’s conflict was sown.

Just as the British left the country, the Sinhalese wanted the whole nation for themselves. Within nine months of Independence, the Government passed the Citizenship Act. That disenfranchised more than a million Tamils of Indian Origin. These Tamils were brought to the Island in 1834 by the British to work on the plantations and since then they have been living in the Island and made it their home. These people were mainly from the downtrodden sector of the society, who through their hard toil, made tea Srilanka's main export commodity and created a viable economy.

The British who brought them here did not intervene or the least condemn when these people were made stateless.

The irony of fact is that this act was passed with the support of many Tamil MPs who were mostly from the Hindu higher hierarchical status. The ruling party proposed this Act with the slogan ‘Indians vs. Ceylonists’ and asked the Tamil MPs to support the Act as Ceylonists as against Indians.

One among the very few who opposed the Act was Mr. Chelvanayagam, who was then an MP of Ilankai Thamizhar Congress. Though his party was in support of the Act, he voted against the Act. Due to this conflict, he came out of the party. He then found the Federal Party which demanded for a Federal setup in the country.

After crippling the Tamils of Indian Origin legally, the Sinhalese turned their eye towards the indigenous Tamils.

The Tamils are spread over the Northern and Eastern parts of the Island. During 1930s they formed almost 95% of the total population in Northern and Eastern provinces. But this demographical density reduced drastically during a period of time. For instance, in Triconmalai District of the Eastern Province, in 1827, Sinhalese were just 1.3%. Even in 1921, Sinhalese were only 4.4%. This rapidly increased, as a result of which in 1981 Sinhalese were 33.6%. How did this happen?

Starting from 1948, the Srilankan Government brought in Sinhala settlements in the Northern and Eastern provinces in a systematic manner. Especially, the Eastern Province, which is a thin stripe of land, much closer to the Sinhalese dominated areas, was occupied by Sinhalese settlers, who were ex-convicts or the families of military personnel. They were settled in the name of land development schemes and such development schemes. What is the aim of such settlements?

Firstly, the Tamils should not have a distinct homeland of their own. Hence by bringing down the demographical density of Tamil population in their homeland, the legal right of Tamils to claim the land as their own is turned down.

Secondly, to exploit the resources of the Tamil Home land and thus take control of the entire Island. As a first step to this, the historical Triconamalai harbor, which was under the control of the district council, was nationalized and brought under the control of the Srilankan Government. Next, the fertile land in the rural areas of Eastern Province was re-distributed.

As a result of Sinhala settlements and intrusions in Tamil areas, incidents of violence against Tamils cropped up here and there. The ex-convicts who were settled were provided with arms. Tamils started having a feel of insecurity living among the Sinhalese. This began as early as 1950s.

Oppressing the Tamils through practical means on one side, the Srilankan Government also took steps to isolate the Tamils legally.

In 1956 came the Sinhala only act, which said that only the Sinhala language would be the official language at all levels of the Government, which means that only those who are well versed in Sinhala can alone become Government employees. Then in 1970s came the Educational Standardization which separated Tamil students, not taking into consideration of their social, economic or educational background and restricted their entry into higher education by fixing a minimum requirement which was much higher than that fixed for Sinhalese.

The Tamil leaders raised their voice against these kinds of legal isolations and agitated in a democratic way. But, not only did the Sinhala Government, yes my friends, it was no more a Government for the all the people of Srilanka comprising of Sinhalese, Indigenous Tamils, Muslims and Tamils of Indian Origins... but a Government that cares only for the Sinhalese majority.. This Sinhala Government.. not only disregarded the democratic agitations of the Tamil leaders, but sent in Sinhala thugs to make chaos in the demonstrations of the Tamil leaders. In 1956, in one such demonstration by the Tamils before the Parliament building in Colombo, the Sinhalese thugs intruded violently and attacked the demonstrators. The Police force, which also comprised of mainly Sinhalese, just stood aside and watched. About 150 people were killed in the attack. Almost 12,000 people took shelter in the Royal College in Colombo as refugees and later they were sent to the North Province in a ship by the Government directly. This 1956 riot was the first documented riot against Tamils in Srilanka.

Then it became a practice for such riots to crop up systematically and periodically in Tamil areas. I would say, riot is itself a wrong term. Riot means a conflict between two groups. But in these cases, the Tamils never retorted. Hence the attack against Tamils was nothing but a Pogrom - An organized, officially encouraged massacre.

The Pogroms, which started in 1956 and was executed periodically, most brutal and documented ones in 1958, 1961, 1972, and 1977, reached its peak in 1983.

In 1958, the Srilankan Government issued an order stating that all vehicles should inscribe the letter Shree in Sinhala script in their number plate. Tamils again opposed this. They requested for Tamil Grantha Shree script to be written in vehicles from Tamil areas. But, the sinhala thugs stopped the vehicles without the Sinhala shree, pulled down the drivers, and wrote the sinhala shree letter with tar or hot iron on their bodies. In one incident, a Tamil woman who was riding in such a vehicle was pulled down and the sinhala letter shree was written on her breast.

In the later part of 1960, Sinhala language was made the official language of the courts.

As the Pogroms continued on one side, the Srilankan Presidents entered into pacts with Tamil Leaders only to be broken. The Dudley-Chelva pact and the Chelva-Banda pact both were not heeded by the Government. SWRD Bandaranayake, who entered into a pact with Chelvanayagam, unable to withstand the resistance from the Buddhist monks and Sinhala racists against the pact, tore the original copy of the signed pact into pieces in front of his house thus humiliating the Tamils.

Due to such continious humiliations, at one stage the Tamil Leaders cry for Self-Determination grew aloud. In 1961, the Tamil Leaders started the Tamil State Postal Service, issued their own stamps, and ran it successfully.

Though the Tamil Leaders and political parties have been crying aloud to protect the political, social and educational rights of the Tamils, in a democratic way, the brutality of the pogroms increased day after day. The Tamils almost lost their land, their educational rights, their political rights & employment opportunities. In 1983, only 1% of Tamils were in armed forces and Police. There was no security for their life and belongings. The Tamils could very well understand that they can no more look upon for the Srilankan Sinhalese government to protect their life, leave alone their rights. It was evident that there was no security for Tamils within the Sovereignty of the Sinhalese dominated Srilankan state.

It was at this instance that the Tamil Leaders came to a conclusion that restoration and reconstitution of the Free, Sovereign, Secular, Socialist State of Tamil Eelam, based on the right of self determination inherent to every nation, has become inevitable in order to safeguard the very existence of the Tamil Nation in this Country. The Tamil Political parties joined hands under a common banner named Tamils United Liberation Front under the leadership of Mr. Chelvanayagam. The first conference of the Tamil United Liberation Front was held in Vaddukottai in 1976. It was at this conference the historical declaration of ‘Self-Determination for Tamils in the form of separate Tamil Nation’ was made.

Proposing this declaration as their election manifesto, and vowing to achieve this goal, the Tamil United Liberation Front contested the 1977 election. But just a few months after the Vaddukottai Conference and before the 1977 election, Mr. Chelvanayagam demised. A few words about Mr. Chelvanayagam. Fondly called as Thanthai Chelva or Father Chelva by the Tamil people, Mr. Chelvanayagam had been fighting for the legal and political rights of the Tamils from even before the Independence of Srilanka. In 1948 when the Government introduced the act, which made the Tamils of Indian Origin stateless, as an MP, he voted against the Act. He then found the Federal Party which demanded for a Federal setup in the country. Friends, Though the party was named Tamil Arasu katchi or Tamil State Party in Tamil, he called it Federal Party in English meaning that their demand was a Tamil State within the frame of Srilanka which is nothing but a Federal setup. In 1926, SWRD Bandaranayake himself stated that, ‘There are 3 nations in this country.. Tamils, Up-country Sinhalese and Sinhalese.. Hence we should have a Federal setup of these three nations’. The initial demand of the Tamils was also that of a Federal setup. But the continuous atrocities and discriminations against Tamils pushed the Tamil Leaders to decide that only a separate Tamil state will save their community.

The Tamil United Liberation Front asked for the referendum of the Tamil people for the declaration they had made in Vaddukottai. And the Tamil people gave their overwhelming mandate for an Independent Tamil Nation, the Tamil Eelam, as proposed by the Tamil Leaders.
Remember my friends, this, was purely a democratic move. It was well before the upsurge of armed struggle. It was a proposal by eminent, veteran Tamil Leaders, who had been struggling for equal rights for more than 3 decades. And the people's consent was spontaneous.

After the 1977 elections, the Sinhalese became even more furious on the unity of the Tamils. Immediately after the elections in 1977, was executed a pogrom. And then it was continuous. Almost each and every day, there was some violence against Tamils in some part of the Island. Hatred against Tamils was spread so rapidly and systematically among the Sinhalese commons. The effect of this hatred was exhibited in the notorious 1983 pogrom.

While the international community who had visited the island as tourists and the foreign media watching, the most brutal Pogrom against Tamils was executed in the very capital of the country. I would like to narrate two brutal incidents.

The first was reported by The Telegraph, London

Telegraph writes: " a mob attacked a Tamil cyclist riding near Colombo’s Eye Hospital, a few hundred yards from the home of Junius Jayawardene, the nation’s 76 year old President. The cyclist was hauled from his bike, striped naked. The mob danced around him for a while, then, drenched him with petrol and set alight. As he ran screaming down the street, the mob set on him and hacked him down with jungle knives..." This was reported with photographs.

Secondly.. a French magazine, quoting an eyewitness who is a French national, writes: "The bus I was traveling in was stopped and all the passengers were asked to get down. The Tamils among the passengers were identified and asked to board the bus. Others were asked to move away. Just before our eyes, the bus with 22 Tamils boarded in was set alight".

Friends.. Imagine.. Its not only brutality.. but how arrogant the mob should have been to commit such a crime near the home of the President of the nation and that too before the eyes of the media. This clearly indicates that the government machinery was completely in support of the Pogrom.

Media reported that senior ministers of the cabinet, led the mob with Voters list in their hands, identifying the residences and buildings belonging to Tamils.

The 1983 Pogrom was a turning point in the history of the Island. It was only after this that the youth of the Tamil community as well as the people came to a conclusion that they need some means to protect themselves. It was in this background, that the youth, took up arms, not to attack the Sinhalese but to protect themselves.. their people and their land.

The UN in its International Covenant on Civil and Political Rights 1966 says quite clearly in Article One that “All peoples have the right of self determination”. Most importantly Government of Sri Lanka is a party to this Covenant and hence is bound by its own treaty.

Based on the UN’s definition of Self-determination, many nations were provided with the right of Self-determination. Very recently 2 nations, East Timor and Montenegro were provided the right of Self-Determination based on a referendum. In East Timor 74.85% of the people voted in favor of Self-Determination. In Montenegro, only 55% voted in favor of Self-Determination. Yet the UN recognized their right to Self-Determination.

But the people of Tamil Eelam have been opting for Self-Determination from as early as 1977 and have been voting in favor of the same. In the 1977 elections, when the TULF contested the election with a single point manifesto, stating to achieve Self-Determination of Tamils through a separate Tamil Nation, out of the 19 seats 18 seats were won by them, which accounts to more than 90% people in favor of Self-Determination.

In 1983, during the Local bodies election, the Liberation Tigers of Tamil Eelam called for the people to boycott the election, on the line of Self-Determination. At that period, LTTE was just one of the five militant movements fighting for Self-Determination, and the smallest. Even then the people accepted the call and 95% of them boycotted the election.

In 2004 Parliamentary elections, the Tamil National Alliance (TNA), comprising of 4 Tamil Political parties, viz., TELO, EPRLF, TULF and SLTC, contested the election stating that they accept the leadership of LTTE in the struggle of Self-Determination for Tamils in the form of separate Tamil Nation. TNA won 22 of the total 23 seats. Here again the result indicates that more than 90% voted in favor of Self-Determination. Not only in the areas under the control of LTTE, but also in Jaffna, which is under Government Control, 90.65% of votes were polled in favor of TNA.

In 2005 Presidential Elections, LTTE called for boycott and more than 95% boycotted the election. In Jaffna, which is under Government Control the polling was only 1.21%.

Hence, not once, but in 4 elections, the Tamil people have expressed their consent for Self-Determination. That too every time it was more than 90%. When UN can recognize East Timor with 74.85% and Montenegro with just 55% why can’t it recognize Tamil Eelam with more than 90% for 4 times?

While the Tamils have been continously expressing their will for Self-Determination through all possible ways, the Sinhalese was using various political tactics to undermine the Tamils.
Not a single pact entered into by Sinhalese was respected by them. Not only the pacts entered into with Tamil Leaders like the Dudley-Chelva and Chelva-Banda pacts, also the pacts entered into with another country or with the mediation of third country were broken by the Sinhala Governments. In 1987, India represented by its Prime Minister Rajiv Gandhi, entered into an agreement with Srilanka represented by its President Jayawardane. This agreement had various clauses which included merging the northern and eastern provinces and withdrawal of military forces from educational institutions and places of worship. The LTTE respecting the agreement, surrrendered its arms. But on the Sinhalese side, the military was not withdrawn. LTTE commander Dileepan undertook fast unto death stressing the Indian Government to implement the clauses of the agreement. But India let Dileepan die. Yes friends.. coming from a militant organisation, Dileepan did not fight with India with arms. He followed the path of the Father of Indian Nation, Gandhi, and undertook fast unto death. But India did not respect his struggle. Gandhi’s country let an young man die on fasting. After 12 days of fasting without even a single drop of water, Dileepan gave up his last breath.

Recently, the Sinhalese made the merger of Northern and Eastern Provinces unlawful through a court verdict. The only clause remaining in the Indo-Srilankan agreement was also thrashed.

On February 22 2002, Srilanka entered into an agreement with LTTE in the presence of Norway in Oslo. The main clauses of the agreement was to withdraw the military from social buildings. The Military had occupied 156 school buildings in Tamil areas. Also, in 144 schools, stating that the buildings were un safe, the military had restrained the schools from functioning in the buildings and hence those schools were functioning under the trees. Further military had occupied places of worship like churches and hindu temples. Added to that they had occupied houses and residential places too. The Oslo agreement was that the military be withdrawn from Schools and places of worship in 160 days, from houses in 30 days and from other residential areas in 60 days. Further the agreement stated that Tamils would be allowed fishing in the sea in 90 days. But none of these were done.

It is this level of respect does the Sinhalese give to international community and international laws. It is this same Sinhalese Government which now says that it maintains the camps with international standards. The Sinhalese Government has always been unruly, uncontrolled by any of the International standards, rules and regulations.

Now the Srilankan Government says that it has eliminated the militants of the Tamil community. Friends.. it is not just elimination of militants only.. but an explicit genocide in the name of fighting terrorism.

United Nations defines Genocide as the "The systematic and widespread extermination or attempted extermination of an entire national, racial, religious, or ethnic group."

In less than 5 months starting from January 2009, more than one lakh people were killed. Friends.. not militants.. but innocent civilians and that too only Tamils. And that too, using universally banned Phosphorous bombs and cluster bombs. If this cannot be termed Genocide then what else is?
In the May 09 2009 issue Tehelka Magazine published an article on the last days of the Srilankan war (by P C Vinojkumar)
The article starts like this:
SRI LANKAN President Mahinda Rajapaksa should consider writing a book on how to win wars. The Rajapaksa Doctrine is quite simple. There are three main rules. The First (and most important) Rule: Conduct the War Without Witnesses. Ensure that the theatre of war is out of bounds for the media, international monitors and aid agencies. The Second Rule: Give the Army a Free Hand. Do not constrain them with rules and international conventions. The Third Rule: (In the absence of witnesses), Don’t Worry About Human Rights Violations.

Yes friends.. the lines aptly describe what happened in the Island. Though the Sinhalese Government has declared that the war is over, till today not even the International Aid agencies, like ICRC, are allowed free movement within the Island.

More than 3 Lakh Tamil people are detained in concentration camps. They are not Refugee camps. I consciously term them as concentration camps and also I consciously use the word 'detained'. No one is allowed to move out of the camp. Reports come on youth being separated. Young men are taken away by the military and their whereabouts are not heard of then after. Young women are subject to sexual harassment. Children are separated from their families. You may say that these may not have evidences. Fine.. but the past history of Sinhalese racism is fit enough to prove that they are capable of doing such atrocities. If the Srilankan Government truly cares for the people in the camps, why not allow the international aid agencies and media. From day one, Srilankan Government has been very cautious and stubborn in not allowing the International community in the conflict zone.

Not only in these camps.. even the Tamil people in Jaffna, which has been under the Srilankan Government control for about 14 years, are not allowed free movement in and out the district. They are not even allowed to go to the country’s capital, Colombo, without the permission of the authorities. Even within the district, they are not allowed to be on roads after 6 PM. Jaffna is very much away from the conflict zone. Not only that the people’s movement is curtailed, but also the food and medical supplies are restricted. The A-9 highway, the main route of supplies is closed for the past of 5 years. Jaffna district is almost an open prison. The camps have barbed wires. Jaffna does not have. That is the only difference. This is the situation in Jaffna for the past 14 years.

'War without witness' - That is what they have executed. And they do not want to leave behind any witness.

Three doctors, Srilankan Government employed doctors, Dr. Sathiyamoorthy, Dr. Varadarajah and Dr. Shanmugarajah who have been serving courageously in the conflict zone till the last day of war, and yet another doctor, Dr. Ilanchezhiya Pallavan, are now detained by the Srilankan Government under no charge. These doctors are authentic witnesses of the war and that is the very reason for their detention. They were arrested .. yes friends.. arrested just the day after the Government declared the war was over.. and till today.. no one knows their whereabouts.

Not only the doctors.. Vavuniya District Government Agent .. equivalent to our District Collector, Mr. Parthibaraja has disappeared. While the Srilankan government said that only 70,000 people were in the conflict zone, which was endorsed by the Indian External Affairs Minister in the parliament, it was Mr. Parthibaraja who said that it was not mere 70,000 people but it was 80,000 families who were in the conflict zone. From the next day he was not found.
The Amnesty International has taken up the issue of the doctors and has requested the Srilankan Government to release the doctors. It has also requested the international community to give pressure to the Srilankan Government for the release of the doctors. Various countries and International bodies have expressed their concern and requested the Srilankan Government. But in vain.

If the plight of well-known Government Employed doctors and Government Agents is such.. imagine the plight of common, vulnerable people in the camps. The people are of course the witnesses of the war. And what other reason does the Srilankan Government need to eliminate or silence these people.

Even after so much of hue and cry from the Western Countries requesting and pressurizing the Srilankan Government to allow International aid organizations and media, the Srilankan Government is not ready to give in.

In 1992-1995 Bosnian war, the Bosnian Serb Army massacred more than 40,000 Bosnian Muslims. This was taken to the International Court of Justice as war crime. The International Court of Justice declared its verdict on 2007 Feb 26. The court concluded that it was a 'War Crime' and convicted many army and government officials including the then Bosnian president Slobodan Milosevic, though he had demised in 2006 itself.

Now in Srilanka, more than 3 lakh people have been killed in the past 30 years of which more than 1 lakh in just 5 months. It is essential to bring the Srilankan President Mahinda Rajapakse and his associates, Godhapaya Rajapakse and Army chief Sarath Fonseka as criminals of war crime. Godhapaya Rajapakse, the defence secretary and President’s Mahinda Rajapakse’s brother, and Sarath Fonseka, the army chief, both hold American citizenship. Based on this, Mr. Bruce Fein an eminent Lawyer and a former attorney general of the US government has moved legally against these two in the US courts as war criminals.

Friends, Immediately after the Nazis’ war crimes trial, the famous Nuremberg policies were drafted which defined three major crimes, which can be prosecuted under International law. 1. War crime. 2. Crime against Humanity. 3. Genocide.

Friends.. we must note that Srilanka has committed all the three crimes.

As Ms.Karen Parker, an eminent Human rights advocate from Canada, puts it, the criteria for Self-determination as recognized by UN contains 5 basic points. 1. Land 2. Governance 3. Cultural Identity 4. Will to Self Determination and 5. Capability

The Sinhalese are aiming at taking away all of these basic criterion from the Tamils. Through Sinhalese settlements in the Tamils homeland, the land was grabbed away. It was Tamils who ruled the Tamils home land, Tamil Eelam, before the colonial rule. Since it is a historical fact the Sinhalese had nothing to do with it. The third is the Cultural Identity. In 1974, in the World Tamil Research Conference held at Jaffna, Sinhala thugs intruded and attacked the research scholars and visitors of the conference, in which 9 Tamils died. In 1981, the Jaffna Library, which stood as a symbol of pride for the Tamil Community, with a collection of more than 97,000 books and irreplaceble manuscripts on Tamil Literature and culture, was burnt down to ashes. These two incidents, both of which took place in the presence and guidance of two Sinhala Chauvinist ministers, Kamini Dissanayake and Cyril Mathew, are examples of the Sinhalese intention to devastate the cultural identity of the Tamils. Now with more than 3 Lakh people detained in concentration camps with their movements arrested, without proper food, education and other basic needs, the Srilankan Government is planning to produce a new generation of Tamils, without any capability, without the will to freedom, without any progressive thinking, without the fighting spirit, with their minds totally occupied on worries about their day to day life.

Is this not a crime against humanity? Is it not essential to prosecute Srilanka on these charges under International law? I feel this as highly essential for the future of humanity.
In May 2009, Switzerland moved a resolution in the United Nations Human Rights Council. The resolution was a much mild one, which states as :

12. The Council stresses the importance of combating impunity and calls on the government of Srilanka to investigate all allegations and bring to justice in accordance with international standards, perpetrators of violations of human rights and of international humanitarian law, including hostage taking, torture, enforced disappearances and extrajudicial, summary or arbitrary executions, and to increase its efforts to further prevent such violations.

13. The Council calls on the Government of Sri Lanka to take measures to ensure full respect for the right of freedom of opinion and expression and protect human rights defenders, and effectively investigate allegations of attacks on journalists and media personnel and human rights defenders and prosecute those responsible.

The resolution did not say that the UN or any international body should probe and take action on the human rights violations in Sri Lanka. It asked the Srilankan Government itself to take actions. Even such a mild resolution could not be passed successfully, though the whole of the western countries were in support of the resolution.
And friends, it is a shame that India stood in support of Srilanka to defeat the resolution. It is high time we understand the reason behind India’s stand on Srilanka.

We could understand that China, in the course of emerging as a new super power, wants to take control of South Asia and the Indian Ocean, against India and its interests and hence is supporting Srilanka.

As you might know, during the Indo-China war, Srilanka stood on China’s side. During Indo-Pakistan war too, Srilanka stood on Pakistan’s side. Historically Srilanka had never been a confident ally of India.

Now with China strongly putting down its feet in Srilanka, it is really surprising that India is also backing Srilanka even beyond a number of humiliating comments from the Srilankan ministers and authorities.

Friends.. it is here we must apply our mind with the messages rendered by Periyar and Baba sahib Ambedkar.

The Brahmin community, which does not form a nation by itself, wants to hold India as a whole under its domination. The huge investors from the Baniya community want to hold India together as a single large market. With the upsurge of Tamils in Srilanka, these communities are scared that it may lead to the rise of the nationalities in India. Already, in the northeast states, and in Jammu and Kashmir, the nationality struggle is on against the Indian dominance. Indian dominance is nothing but the dominance of the Brahmin-Baniya ruling class. Hence the upsurge of the nationalities is bound to affect the interests of the Brahmin-Baniya ruling class. Hence, it is this Brahmin-Baniya ruling class, which decides the so-called foreign policy, based on their own interests as against the interests of humanity.

There has always been rivalry between Aryans and Dravidians and between Aryan languages and Dravidian languages. It is the same conflict that is prevailing in Srilanka with Sinhalese of Aryan origin and Tamils of Dravidian origin.

Now whom do we look up to? The Governments have betrayed us. The Political parties always betray us.

What else we do?

Friends.. It is time that the younger generation takes the history in their hands. It is only in your hands.. the younger generation with humane and social concern.. to bring back peace to this world. To save humanity. To bring Liberty, Equality and Fraternity.

We, as human rights activists, socially concerned, need to ensure that the following are achieved.

As an immediate relief, the IDP camps are to be handed over to International bodies. Also the IDP camp now set up in a particular area should be distributed and set up in each region and people should be moved to camps nearest to their native places. This could avoid Sinhalese settlements to some extent.

Secondly, the people in the camps should be re-located in their own homes from the camps at the earliest.

Thirdly, the political prisoners and prisoners of war be treated in accordance with the International laws.

Finally, as a long-term objective, the Self-determination of the Tamils is to be recognized.

Let us join hands and work towards achieving these to ensure the safety of the Tamils of Srilanka and for their righteous, peaceful life with equal rights.

Thanks one and all

Saturday, July 18, 2009

ஈழத் தமிழர்களுக்கு தமிழக தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்: கொளத்தூர் மணி

ஈழத் தமிழர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பரிசீலிப்பதற்கு முன்னால், இதுவரை, நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஈழம் என்ற சொல், கடந்த காலங்களில் ஒட்டு மொத்த இலங்கையைக் குறிக்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இப்போது அது தமிழர்களின் தமிழர் தாயகத்தைக் குறிப்பதற்கான சொல்லாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம்.
தமிழர்களுக்கு தனி மாநிலம், ‘மாகாண சபை’, ‘மாநில சுயாட்சி’ என்ற கோரிக்கைகளை முன் வைத்த தமிழர்கள், 1976 இல் வட்டுக்கோட்டையில் கூடிய மாநாட்டில் தமிழ் ஈழக் கோரிக்கையை வைத்தார்கள். மாநாட்டின் தலைவர் தமிழர் கூட்டணியின் தலைவர் செல்வநாயகம் தலைமை தாங்கினார். அதே மாநாட்டில் தமிழர் கூட்டணியின் பெயர் ‘தமிழர் விடுதலை கூட்டணி’ என்று மாற்றப்பட்டது.

இனி சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது என்று அறவழியில் போராடிய அரசியல் தலைவர்கள் எடுத்த முடிவு தனி ஈழம் என்பதாகும். பிறகு அதே கோரிக்கைக்காக விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தைத் தொடங்கினார்கள். விடுதலைப்புலிகள் மட்டுமல்ல, ஈழத் துக்காக போராடிய ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலொ, புளோட் போன்ற அமைப்புகளின் ஆதரவாளர் களாக இருந்து, பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் களாக தேர்வு பெற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப் பினர்கள் விடுதலைப்புலிகளை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு தமிழ் ஈழக் கோரிக்கையையே முன் வைத்தனர்.
இன்று துரோகக் குழுக்களாக செயல் பட்டுக் கொண்டிருக்கிற குழுவினரும் தமிழ் ஈழக் கோரிக்கையையே முன் வைத்தனர். அங்கே – அமைதிப்படை என்ற பெயரில் சென்ற இந்திய ராணுவம் தான் ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற குழுவின் சார்பில் வரதராஜப் பெருமாள் என்பவரை வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராக அமர வைத்தது.
அந்த வரதராஜப் பெருமாளே முதலமைச்சராக இருந்தபோது, தமிழ் ஈழத்தையே பிரகடனம் செய்தார். அமைதிப் படை வெளியேறிய போது இனி அமைதி யாக இருக்க முடியாது என்று இந்தியாவுக்கு ஓடி வந்த வரதராஜப் பெருமாள் தமிழ் ஈழத்தை அறிவித்து விட்டுத்தான் ஓடி வந்தார். அவர்கூட தமிழ் ஈழத்தை எதிர்க்கவில்லை.
இப்போது அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற ஆனந்த சங்கரி போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட தமிழ் ஈழத்தை எதிர்க்கவில்லை. ஆக, 1976 இல் வட்டுக் கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலத்தி லிருந்து அந்த நாட்டில் விடுதலைப்புலிகள் ஆனா லும் புலிகளை எதிர்ப்பவர்கள் ஆனாலும் பொது மக்களும் தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர்களாகவே இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த நாட்டில் வாழவே முடியாது என்று கருதி, புலம் பெயர்ந்து சென்ற தமிழர்கள்கூட அந்த நாடுகளில் தமிழ் ஈழத்துக்காகப் போராடிக் கொண் டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அகதிகளாக வந்துள்ள ஈழத் தமிழர்கள் உரிமையற்றவர்களாக கேவலமானவர்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு போராட வேண்டும் என்ற உணர்வு இருக்கிறது. ஆனால் போராடுவதற்கான உரிமைகள் தமிழ்நாட்டில் இல்லை.

தமிழ்நாட்டில் 1938 இல் பெரியார் முன் வைத்த தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கத்தை நெஞ்சில் ஏந்திக் கொண்டிருக்கிற எங்களைப் போன்ற அமைப்புகளும் தமிழ்த் தேச தன்னுரிமை கோரும் தமிழ் தேசியவாதிகளும் ஈழத் தமிழர் விடுதலையை ஆதரித்தார்கள். இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற பொதுவுடைமை கட்சியினரும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவே போராடினார்கள்.
நமது அகில இந்திய’ தி.மு.க.வின் தலைவர் கலைஞர்கூட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வாயள விலாது பேசியே வந்தார். தமிழக அரசு கூட்டிய காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அக்டோபர் 2 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, உண்ணா விரதப் போராட்டத்தை அனைத்துக் கட்சி ஆதரவு டன் நடத்தியதைத் தொடர்ந்து மயிலை மாங் கொல்லையில் தி.மு.க. கூட்டத்தைக் கூட்டிப் பேசிய கலைஞர்கூட ஈழத் தமிழர்களைப் பாதுகாக்காத இந்த அரசு இருக்கக்கூட தேவை இல்லை என்றார். பிறகு இந்த அரசு என்பது தமிழக அரசு என்று விளக்கம் கூறினார்.
ஒரு வேளை ‘இந்த அரசு’ என்பதை ‘மத்திய அரசு’ என்று தவறாக கருதி, தமது அரசு மீது 356’ பாய்ந்து விடக் கூடாது என்று அவர் கருதியிருக்கக் கூடும்.
அதற்குப் பிறகு அக்.14 இல் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடியது. மூன்று தீர்மானங்களை நிறை வேற்றினார்கள். ஈழத்தில் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும். போரை நிறுத்த வேண்டும் என்பது முதல் தீர்மானம். இந்திய அரசு அந்தப் போருக்கு ஆயுதங்களை வழங்கக் கூடாது என்பது இரண்டாவது தீர்மானம். குறிப்பிட்ட காலத்துக்குள் போர் நிறுத்தப்படாவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்பது. மூன்றாவது தீர்மானம் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உட்பட, அதில் பங்கேற்ற எல்லா கட்சிகளும், இத் தீர்மானங்களை ஆதரித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியே சென்று, பதவி விலகல் என்பது பற்றி மட்டும் பின்னால் கருத்து கூறுவதாக கூறியது.
காங்கிரஸ் கட்சி, பதவி விலகல் பற்றி கூற முடியாது என்று கூறிவிட்டது. ஆனால், அதற்கு முன்னால் இருந்த இரண்டு தீர்மானங்களை எல்லா கட்சிகளுமே ஏற்றுக்கொண்டன. எந்தக் கட்சியும் மறுக்கவே இல்லை.
அந்தக் கூட்டத்துக்கு வராத ம.தி.மு.க.வும், ஜெய லலிதாவும் தீர்மானத்தை ஆதரித்தன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்பதில் கருத்து வேறுபட்டாலும், போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதையும், இந்தியா ஆயுதங்களை வழங்கக் கூடாது என்பதையும், எந்தக் கட்சியும் இன்று வரை மறுக்கவே இல்லை. அதற்குப் பிறகு, மாணவர்கள், பொதுமக்கள், அரவாணிகள், பார்வையற்றவர்கள் என்று எல்லா பிரிவினரும் போராட்டம் நடத்தி, ஈழத் தமிழர்களுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.
உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல், மனிதச் சங்கிலி என்று அனைத்து வடிவங்களிலும் போராட்டங்கள் நடந்தன. நமது சட்டமன்ற உறுப்பினர்கள் சட்ட சபையில் தீர்மானங்களை மூன்று முறை நிறை வேற்றினார்கள். கடைசியாக ‘அய்யகோ, தமிழினம் அழிகிறதே’ என்று அழுதுகொண்டே கலைஞர் தீர்மானத்தைப் படித்தார். எல்லோரும் சேர்ந்து போய் பிரதமரிடம் வலியுறுத்தினார்கள். ஆக ஒட்டு மொத்த தமிழினமும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இப்படிப்பட்ட கோரிக்கைக்கு என்ன விளைவு ஏற்பட்டது? நமது தலைவர்களும் இந்த அடிமைப் பட்ட தமிழினமும் முன் வைத்த கோரிக்கைக்கு மத்திய அரசிடமிருந்து நாம் என்ன பதிலைப் பெற்றோம்? கடைசியாக கலைஞர், மன்மோகன் சிங்கிடம் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியையாவது கொழும்புக்கு அனுப்புங்கள் என்றார். கோரிக்கைகளைக்கூட இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டாம். விமானத்திலாவது ஒருமுறை கொழும்பு போய் வந்தால் போதும். அவ்வளவுதான். அதுதான் கடைசியாக பிரதமரிடம், கலைஞர் வைத்த கோரிக்கை.

அதுகூட பல மாதங்களாக நிறைவேற்றப்பட வில்லை. இந்தக் கோரிக்கைக்குக்கூட அதாவது, பிரணாப் போய் வரவேண்டும் என்பதற்காக – சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தமிழகம் வந்த மன்மோகன்சிங்குக்கு கறுப்புக்கொடி காட்டினோம். எங்கள் தோழர்கள் ஆயிரம் பேர் கைதானார்கள். அப்போதும் மன்மோகன் சிங் விரைவில் பிரணாப் கொழும்புக்கு செல்வார் என்றுதான் கூறினார். அப்புறம் பிரணாப் போய் வந்தார்.
போய் வந்தவர் சொன்னார், 48 மணி நேர போர் நிறுத்தம் வர இருக்கிறது என்று. உடனே, இது போர் நிறுத்தம் அல்ல; 48 மணி நேர கெடு. அதற்குள் எல்லோரும் போரில்லாப் பகுதிக்கு வந்து விட வேண்டும், அதற்கான கெடு என்று இலங்கை அரசு கூறியது.

ஆக, தமிழகத்தில் போராட்டங்கள், கோரிக்கை கள் எதற்கும் வளைந்து கொடுக்காத மத்திய அரசு, இவ்வளவு அழுத்தங்களுக்குப் பிறகும், ஒரே ஒரு முறை – பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்பி வைத்தது. அவ்வளவு தான். தமிழகத்தின் ஒட்டு மொத்தமான கோரிக்கைக்கு மத்திய அரசு எந்த விதமான அசைவைக் கூட தமிழர்களுக்கு சாதக மாகக் காட்டவில்லை.

ஆனால், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வாழும் தேசிய இனங்கள், பல்வேறு கோரிக்கை களை முன் வைக்கிறார்கள். மராட்டியத்தில் வாழும் மராட்டியர்கள், இந்தியில் பேசக் கூடாது என்ற கோரிக்கையை முன் வைக்கிறார்கள். மராட்டியில் பேசு என்கிறான். இந்தி பேசுவோரை மராட்டியத்தை விட்டு விரட்டுகிறான். சிறிய கோரிக்கைகளுக்கு எல்லாம் கூட தாக்குதல் நடத்துகிறான். ரயில்களை கொளுத்துகிறான். கன்னட செய்தி நேரத்தை தள்ளி வைத்து, சம°கிருதத்தில் செய்தியை ஒளிபரப்பி யதற்காக கலவரம் நடத்தினான்.

கருநாடகத்தில் உள்ள இந்திய தொலைக்காட்சி அலுவலகத்துக்குள்ளேயே நுழைந்து கன்னடர்கள் தாக்கினார்கள். ஆஸ்திரியாவில் சீக்கிய மதகுரு தாக்கப்பட்டதற்காக பஞ்சாபில் சீக்கியர் கலவரம் நடத்தி ரூ.7000 கோடி பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள். இதற்கெல்லாம் அம்மாநில அரசுகள் அவர்கள் மீதெல்லாம் வழக்குகள் போடவில்லை. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவில்லை. பாதுகாப்புப் பகுதியாக கருதப்படும் மத்திய அரசு தொலைக்காட்சி நிலையத்தில் புகுந்து தாக்கியவர்கள் மீது கூட அத்துமீறி நுழைந்ததாக மட்டும் வழக்கு தொடர்ந்தார்கள். அடுத்த நாளே அனைவரும் வெளியே வந்துவிட்டார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஆதரித்துப் பேசினாலே தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது. ஆனால், உச்சநீதிமன்றம் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது பொடா சட்டப்படியே குற்றமல்ல என்று பலமுறை கூறிவிட்டது. ஆனாலும், தி.மு.க. ஆட்சி வழக்கு போடுவதை நிறுத்தவே இல்லை. ஒவ்வொரு வழக்கிலும் உயர்நீதிமன்றம் இந்த அரசின் கன்னத்தில் ஓங்கி அறைகிறது. அதற்குப் பின்னாலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் போடுகிறார்கள். சட்டம் ஒழுங்கு குலைந்து போனால் தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது. பொது ஒழுங்கு குலைந்து போனால்தான் பயன்படுத்த வேண்டும்.

சட்டம் ஒழுங்கு என்பது வேறு; பொது ஒழுங்கு என்பது வேறு. ஏற்கனவே பார்ப்பனர் பூணூலை அறுத்த ‘குற்றத்துக்காக’ இந்த ஆட்சி, எங்கள் தோழர்கள் பெரம்பலூர் லட்சுமணன், தாமோதரன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்தி யது. வேறு எந்த முன் வழக்கும் அவர்கள் மீது இல்லை. இந்த ஒரே வழக்குக்காக, அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் போட்டார் கலைஞர். மத்திய அரசுக்கு பயந்து அவர்களைத் திருப்திப் படுத்தவே தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் பயன் படுத்துவதாக சமாதானம் கூறினார்கள். இப்போது மத்திய அரசே கூறிவிட்டது. தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தியது தவறு என்று. இராணுவ வாகன மறிப்பு வழக்கில் ம.தி.மு.க. மாணவரணி செயலாளர் சந்திரசேகர் மீது தி.மு.க. ஆட்சி போட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை தவறாக போடப்பட்டுள்ளதாகக் கூறி மத்திய அரசே ரத்து செய்து விட்டது. அதற்குப் பின்னரும்கூட எங்கள் தோழர் சூலூர் வீரமணி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை போடுகிறார்கள். ஷேக்ஸ்பியர் நாடகத் தில் வருவதைப்போல் ‘அரசனை விட அரசனை மிஞ்சிய இராஜ விசுவாசியாக’ இவர்கள் செயல் படுகிறார்கள்.

பிற மாநிலத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தினால் கூட வழக்குப் போடுவது இல்லை. ஆனால், தி.மு.க. ஆட்சியில் பேசினாலே தேசிய பாதுகாப்பு சட்டம் என்றால், என்ன காரணம்? ஏன் விடுதலை இயக்கங்கள் மீது இவர்களுக்கு இவ்வளவு ஆத்திரம்?

தமிழர்களை எப்படி அடக்கினாலும் அதை ஏற்றுக் கொண்டு விடுவார்கள். எதிர்க்க மாட்டார்கள் என்பதுதான் காரணம். சீக்கியர்கள் கலவரம் நடத் தினால் பயப்படுகிறான்; மத்திய அரசு பணிகிறது. ஆனால், ஆறரை கோடி எண்ணிக்கையாக உள்ள ஒரு இனத்துக்கு ஏன் செவி சாய்க்க மறுக்கிறார்கள்? இந்த சிந்தனையோடுதான் ஈழத் தமிழர்களுக்குநாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சேர்த்து சிந்திக்க வேண்டும்.

ஈழத் தமிழர்கள் – தங்கள் விடுதலைக்காகப் போராடுகிறார்கள். அதில் உறுதியாக இருக்கிறார்கள். எல்லாம் முடிந்து விட்டது என்று அறிவிக்கப்பட்ட இந்த நிலையிலும்கூட முள்வேலிக் கம்பிக்குள் அகதி களாக அடைக்கப்பட்ட நிலையிலும்கூட அந்த அகதி முகாமுக்குள் இருந்த தமிழன், உயரமான கம்பத்தில் ஏறி புலிக் கொடியைக் கட்டிப் பறக்க விடுகிறான் (கைதட்டல்). அந்தத் துணிச்சல் அவனுக்கு இருக்கிறது. தன்னுடன் முகாமுக்குள் உள்ள பெண்ணிடம் ராணுவம் அத்து மீறி நடக்கும்போது அதை எதிர்த்துக் கேட்கும் துணிச்சல் அவனுக்கு இருக்கிறது. அப்படி எதிர்த்துக் கேட்ட இரண்டு தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அத்துமீறி நடந்த ராணுவ அதிகாரியின் துப்பக்கியைப் பிடுங்கி அடித் திருக்கிறார்கள். அதற்காகவும் சுட்டுக் கொல்லப்பட் டிருக்கிறார்கள். முகாமில் அடைத்தாலும் விடுதலை உணர்வை அப்படியே காத்துக் கொண்டிருக்கிற உணர்வோடு அந்தத் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதாக இங்கே நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

அடக்குமுறைகளை நேரில் அறிந்திடாத புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் இளைஞர்கள்கூட ஆயுதம் ஏந்திப் போராடத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களுக்கு உதவுவதாக எதுவும் செய்யாத, எதுவுமே செய்யும் துணிவில்லாதவர் களாகிய நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்; என்ன செய்ய வேண்டும் என்று! என்ன செய்ய முடியும்? மீண்டும் ஆர்ப்பாட்டம்; ஊர்வலம்; இதைத்தான் செய்வோம். அதற்கு அரசு செவி சாய்க்குமா? பலன் ஏதும் தராமல் கோரிக்கைகளை முன் வைப்பது மட்டுமே பலன் சேர்க்குமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கலைஞர் வேண்டுமானால் கடிதம் எழுதுவார். பிற்காலத்தில் – வரலாற்றில் கடிதம் எழுதியதாக சொல்லிக் கொள்வதற்கு அது பயன்படும். அல்லது அஞ்சல் துறைக்கு 5 ரூபாய் லாபம் சேர்ப்பதற்கும் பயன்படும். வேறு எந்தப் பயனும் நிகழ்ந்து விடாது. பதிவு செய்யக்கூடிய போராட்டங்களாக நமது போராட்டங்கள் இருக்கக் கூடாது. சிறு போராட்ட மாக இருந்தாலும் அதற்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்டு நடத்துகிற போராட்டமாக நமது போரட்டம் இருக்க வேண் டும். அது அறவழிப்பட்ட போராட்டமானாலும் சரி, வேறு வகைப் போராட்டமானாலும் சரி, அரசு செவி சாய்க்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணைக்குச் சட்டப்படியான தீர்ப்பை நாம் பெற்ற பிறகும்கூட அதை கேரள மார்க்சி°ட் ஆட்சி அமுல் படுத்த மறுக்கிறது. அதையும் நாம் பொறுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்; இது தானே நமது நிலை.

ஈழத் தமிழர் மீதான இனப் படுகொலைகளை இலங்கை அரசு விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக்கூட சீனாவும், கியுபாவும் தோற்கடிக் கின்றன. மாறாக, பயங்கரவாதத்தை ஒழித்து விட்டதாக நிதி உதவி கோரும் இலங்கை அரசு தீர்மானத்தை இந்தியாவும், சீனாவும் ஆதரிக்கின்றன. சாட்சிகளற்ற இனப்படுகொலையை அங்கே நடத்தி இருக்கிறார்கள். படுகொலைகளுக்கு சாட்சியாக இருந்த பத்திரிகையாளர் ‘இந்து’ பார்ப்பான் இராம் – மார்க்சியவாதி போல பேசிக் கொள்ளும் அந்த இராம் – தமிழர் அகதி முகாம்கள் மிகச் சிறப்பாக செயல்படுவதாக எழுதுகிறார். ஆனால் இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் நந்தன் சில்வா என்பவர் சுப்பிரமணியம் என்ற தமிழ் புகைப்படக் காரரை உடன் அழைத்துக்கொண்டு போய் அகதிகள் முகாமைப் பார்வையிட்டார். எல்லாவற்றையும் படம் பிடிக்கச் சொன்னார். அவர் தலைமை நீதிபதி என்பதால் புகைப்படம் எடுப்பதை தடுக்க முடியாது. அவர் அறிக்கை கொடுத்தார்.

“இலங்கை நாட்டின் குடிமகனாக இருப்பதை நான் கேவலமாக உணருகிறேன்”. அகதி முகாம்களில் எல்லாவற்றுக்கும் கியூ நிற்கிறார்கள். கூடாரத்துக்குள் தலைநிமிர்ந்து நிற்க முடியாது. இடுப்பு ஒடிந்து விடும். 5 பேர் இருக்கவேண்டிய கூடாரத்தில் 30-க்கும் மேல் இருக்கிறார்கள் என்றெல்லாம் அந்த நாட்டின் தலைமை நீதிபதி அறிக்கை விடுத்தார். அந்நாட்டு தலைமை நீதிபதி கூறுவதையாவது உலக நாடுகள் காது கொடுத்து கேட்க வேண்டாமா? அதற்குப் பின்னால் அவர் பதவி ஓய்வு பெற்றார். இப்படிக் கூறுவதால், தனது உயிருக்கும் உடைமைக் கும் ஆபத்து நேரிடலாம் என்று கூறிவிட்டே பேட்டி கொடுத்தார். எங்கள் நாட்டில் மனித உரிமைகளை மதிப்பதே இல்லை. எங்கள் நாட்டில் மனித உரிமைகளுக்கும், அறவழிகளுக்கும் யாரேனும் இருந்ததாக உதாரணம் கூறவேண்டுமானால் அது பிரபாகரன் ஒருவர் தான் என்று, அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தனது பதவி ஓய்வு பெறும் நாளில் பேசும் போது கூறியிருக்கிறார். (கைதட்டல்) எத்தனையோ வழக்குகளில் தமிழர்களுக்கு எதிராகத் தீர்ப்பளித்ததை எல்லாம் பட்டியல் போட்டுக் காட்டிவிட்டு கூறியிருக்கிறார்.
புலிகள் கட்டுப் பாட்டுப் பகுதியில் கிரிமினல் குற்றவாளிகள் இருப்பதை பட்டியல் போட்டுக் காட்டி நீதிமன்றம் வழியாக கேட்ட போது புலிகள் அந்த கிரிமினல் குற்றவாளிகளை இலங்கை நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். ஆனால், அதேபோல் புலிகள் கேட்ட குற்றவாளிகளை ஒருமுறைகூட இலங்கை நீதிமன்றம் ஒப்படைத்தது இல்லை என்று, அந்த நிகழ்ச்சியில் நீதிபதி கூறியிருக்கிறார்.

கடைசியாக தலைமை நீதிபதி கூறியிருக்கிறார்: நான் புலிகள் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குப் போன போது அவர்கள் மரியாதையுடன் நடத்தினார்கள். இவ்வளவு அறவழியைப் பின்பற்றுகிற விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், பிரபாகரனையும் நான் பாராட்டுகிறேன் என்று. (பலத்த கைதட்டல்) சிங்கள தேசிய இனத்திலிருந்தே இந்தக் குரல் கேட்கிறது, எத்தனையோ சிங்கள பத்திரிகை யாளர்கள் இலங்கையைக் கண்டித்து எழுதியதற்காக உயிருக்கு பாதுகாப்பு தேடி இந்தியாவில் அடைக் கலம் புகுந்துள்ளனர். அவர்கள் கூட தமிழ்நாட்டில் இல்லை. காரணம், தமிழ்நாடு அரசை நம்பத் தயாராக இல்லை. அதைவிட டெல்லியில் இருக்கும் ஆட் சியை நம்பலாம் என்று டெல்லியில் இருக்கிறார்கள்.

ஒரு சிங்கள பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப் பட்டார். இப்படி சிங்கள இனத்தில் கூட சிலர் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாது உரிமைக்கு குரல் கொடுக்கும்போது நம்முடைய தொப்புள்கொடி உறவான தமிழர்களுக்கு நாம் என்ன செய்தோம்? இங்கிருந்து செய்யும் கடமையை நாம் முழுமையாக செய்திருக்கிறோமா என்று கேட்டுக் கொள்ள வேண்டிய தருணம் இது.
புலிகள் என்று பேசினாலே குற்றம் என்ற நிலை இங்கு இருந்தது. இனி அந்த நிலை வராது. காரணம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஒழித்து விட்டதாக அவர்களே கூறுகிறார்கள். எனவே தடை செய்யப் பட்ட இயக்கத்தை ஆதரிப்பது குற்றமாகிவிடுமே என்ற அச்சம் நீங்கி நீங்கள் செயல்படலாம். ஆபத்து இல்லாத இத்தகைய போராட்டங்களில் ஆயிரக் கணக்கில் நீங்கள் திரண்டு நமது ஆதரவுக் குரலை எழுப்பவேண்டும். நூற்றுக்கணக்கில் கூடினால் மட்டும் போதாது.

சிறைக்குப் போகும் போராட்டத்துக்கு நாம் பழகிக் கொள்ள வேண்டும். காலையில் போராட்டம் நடத்தி, மாலையில் விடுதலையாகும் போராட்டத் துக்கு நாம் பழகிவிட்டோம். எனவே 15 நாள் சிறையிலிருக்கும் போராட்டத்துக்காவாவது உணர்வுள்ள இளைஞர்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் தமிழன் என்று உணர வேண்டும்; நமக்கான அடையாளத்துடன் தனித்த அரசை அமைத்து, நமக்கான அதிகாரம் நம்மிடம் வேண்டும் என்ற ஆவல் நம்மிடம் இருக்க வேண்டும் . அந்த ஆவல் வலுப்பட்டால்தான் இயக்கமாகும்; அந்த எண்ணத்தையாவது நாம் எழுப்ப வேண் டாமா? அதைப் பற்றி சிந்திக்க வேண்டாமா, என்பது தான் முக்கியம். குரல் எழுப்புவது மட்டும் போதாது; இதைச் சொன்னால் பிரிவினைவாதம் என்கிறார்கள்? என்ன பிரிவினைவாதம்? அய்.நா.சபை தோன்றிய பிறகு எத்தனை நாடுகள் தோன்றியிருக்கின்றன? ஏதாவது ஒரு நாட்டிலிருந்து பிரிந்துதான், மற்றொரு நாடு உருவாகிறது. எந்த நாட்டிலும் பிரிவினை வாதம் என்று பேசவில்லை.

இங்கேதான் பிரிவினை வாதம் என்று கூச்சல் போடுகிறான். ஆனால், அய்.நா.மன்றம், ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தனது உரிமையை நிர்ணயித்துக் கொள்ள உரிமை உண்டு என்று தெளிவாகக் கூறியிருக்கிறது. அய்.நா. மன்றத்தின் சிவில் அரசியல் உரிமை பிரகடனத்தின் முதல் விதி அது தான். தேசிய இனம் பற்றிய புதிய சிந்தனைகள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. கனடா நாட்டின் அம்மையார் கரண்பார்க்கர். அவர் தொடர்ந்து தமிழ் ஈழத்துக்கான குரலை எழுப்பி வருகிறார். அதற்காக உலக நாடுகளில் உள்ள எல்லா வழக்கறிஞர்களையும் சந்தித்து, தனது குரலை பதிவு செய்து வருகிறார். அவர்களுக்கான தனித்த நிலம்; தனித்த அடையாளம்; தொடர்ந்த அரசுகள் பற்றி எல்லாம் அவர் சொல்கிறார். இவைகளைத் தவிர மேலும் இரண்டு புதிய கோட்பாடுகளை அவர் சொல்கிறார்.
அதுதான், இப்போது நம்மிடம் இல்லை. சுதந்திர வேட்கை (றடைட வடி கசநநனடிஅ) இருக்க வேண்டும் என்பது ஒன்று; அதை நிறைவேற்றிக் கொள்கிற ஆற்றல் (உயயீயbடைவைல) இருக்கவேண்டும் என்பது மற்றொன்று. இந்த இரண்டு மட்டும் நமக்கு இல்லை. ஆனால், நிலம், தொடர்ந்து நடந்த தமிழர் அரசுகள், கலாச்சாரம் என்ற மூன்றும் நம்மிடம் இருக்கிறது. நாம் சுதந்திர வேட்கையை அதை நிறைவேற்றிக் கொள்கிற ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாததைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அல்லது அந்த நியாயமான உணர்ச்சிகள் நம்மிடம் இல்லை என்பதை விவாதத்திற்காகவாவது நாம் உட்படுத்த வேண்டும். அதைத்தான் தமிழர் களுக்கு உள்ள கடமையாக இப்போது நாம் உணருகிறோம்.

ஈழத் தமிழர்களுக்கான பிரச்சினை ஒரு நாளில் தீர்ந்துவிடப் போவது இல்லை. அது நீண்ட நாள் போராட்டம்; ஒன்றரை லட்சம் தமிழர்கள் ஒரு நாட்டில் இருந்தால் அதில் ஒரு லட்சம் பேர் ஊர்வலத்துக்கு வருகிறார்கள். ஆனால் ஆறரை கோடிப் பேராக இருக்கும் தமிழ்நாட்டில் 650 பேர்தான். அவ்வளவுதான் போராடியிருப்போம். எவ்வளவு வெட்கக்கேடான நிலை? எளிய போராட் டத்தைக்கூடநாம் நடத்த முன்வருவதில்லை. இப்படி எல்லாம் உள்ள ஒரு இனத்தை அல்லது மக்களை அரசும், அரசு அதிகாரங்களும் அடக்குகின்றன என்று சொன்னால், ஏன் அடக்க மாட்டார்கள்? அடக்கத்தான் செய்வார்கள். இந்த அடக்குமுறை அதிகமானால், நமக்கு ஒரு வேளை உணர்வு வரலாம். வீண் பெருமை பேசிக் கொண்டிருந்தால் போதாது. தமிழன் இமயத்தில் கொடி நாட்டினான் என்றெல்லாம் பேசுவதை விடுங்கள். முதலில் நமது நாட்டில் கொடியை உயர்த்த வேண்டும். நம் நாட்டில் நம் கொடியைப் பறப்பதற்கான சுதந்திரத்தைப் பெறுவதற்கு அதற்கான ஆற்றலை நாம் வளர்த்துக் கொள்வோம். வேட்கையை வளர்ப்போம். ஆற்றலை வளர்த்துக் கொள்ள முயற்சிப்போம். இதைத்தான் ஈழத் தமிழர்களுக்காக இந்தியத் தமிழர்கள் எடுக்க வேண்டிய முயற்சியாக நாங்கள் கருதுகிறோம். இதைத் தொடர்ந்து செய்யலாம். அதுவரை நமது நாட்டில் இருக்கிற, நமக்கு எதிரானவர்களை என்ன செய்யலாம்? முதலாவதாக எதிரானவர்களைப் புறக்கணிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்; வெறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரி யாருடைய உழைப்பு, ஒரு சமூகச் சூழலை உருவாக்கி வைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா இருக்கிறார் என்றால், ஏறத்தாழ வேறு பெயரில் இருக்கிற பா.ஜ.க. அவர், நரேந்திர மோடிப் பதவி ஏற்றால், பதவி ஏற்புக்குப் போவார். சென்னைக்கு நரேந்திர மோடி வந்தால், வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பார். ஆனால், அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டார். ஏனென்றால், இந்த மண்ணின் சூழல் பா.ஜ.க.வின் கூட்டணியைப் புறக்கணிக்கும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். எனவே அந்த உள்ளம் இருந்தா லும் உணர்வு இருந்தாலும், அவர்களோடு கூட்டுச் சேர அவர் துணியவில்லை. அதே போல, தீண்டத் தகாத கட்சியாக புறக்கணிக்க, வெறுக்கத்தக்க கட்சி யாக காங்கிரஸ் கட்சியை நாம் கருத வேண்டும். அந்த எண்ணத்தை மற்றவர்களுக்கு ஊட்ட வேண்டும். (கைதட்டல்) தொடர்ந்து, நமக்கு துரோகமே செய்து வந்திருக்கிற கட்சி, காங்கிரஸ். நமது உரிமைகளைப் பறித்தவன் யார்? ஈழத்தில் தமிழ்மொழி உரிமையை சிங்களன் பறித்தான் என்றால் – இங்கே நமது மொழி உரிமையைப் பறித்தது யார்?
கடந்த நாடாளுமன்ற இறுதிக் கூட்டத்திலேகூட 47 உயர்கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டைப் பறித்து, மாநிலங் களவையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்கள். மக்களவையில் நிறைவேற்றுவதற்கு முன்பு, தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது. ஒருவேளை, நாடாளு மன்றத்தில் இனி நிறைவேற்றப்படலாம். தமிழர்களை மட்டுமல்ல, சமுதாயத்தில் அடக்கப்பட்ட, ஒடுக்கப் பட்ட மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்குக்கூட, அவர்கள் துடிக்கிறார்கள். உச்சநீதிமன்றமும் நடுவர் மன்றமும் நமது மாநில உரிமைக்காக காவிரி நீர் உரிமைக்கு வழங்கிய தீர்ப்பைக் கூட அமுல்படுத்த மறுக்கிறார்கள். ஆனால், நாம் அவர்களோடு கூட்டணி சேர்ந்து கொண்டு நமது கூட்டணியில் இருக்கிறார்களே, எப்படி கண்டிப்பது என்று, கூட்டணி தர்மம் பேசி, காங்கிரஸ் கட்சியை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அய்ரோப்பிய நாடுகளில், மனித உரிமையை மிகவும் மதிக்கிறார்கள். அப்படிப்பட்ட நாடுகளில்கூட ஜெர்மனியில் ஹிட்லரைப் பாராட்டிப் பேசினால் குற்றம். இன்று வரை, அதை குற்றமாக வரையறுத்து வைத்துள்ளனர்.

அதுபோல் – தமிழ்நாட்டில் காங்கிரசை ஆதரிப்பது குற்றம் என்ற மனப்பான்மை நமக்கு வரவேண்டும். அதை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும். இப்போது காங்கிரஸ்காரனைவிட நமது ‘அகில இந்திய’ திராவிட முன்னேற்றக் கழகம் தீவிரமாக ஒருமைப்பாடு பேசுகிறது. கலைஞர் எல்லாம், இப்போது நமக்கு மட்டுமல்ல, ஈழத் தமிழர்களுக்கு கூட அறிவுரை கூறுகிறார். தனி ஈழம் எல்லாம் வேண்டாம். அதை எல்லாம் கைவிடுங்கள் என்று அறிவுரை கூறுகிறார். ஏனென்றால், தி.மு.க. – அந்தக் கொள்கை எல்லாம் கைவிட்டு விட்டது அல்லவா? எனவே எல்லோருமே கொள்கைகளை கைவிட்டுவிட்டால், மக்கள் கொள்கைகளைப் பற்றி கேள்வியே கேட்க மாட்டார்கள் அல்லவா?

ஆனால், அறிவு மிக்க இளைஞர்கள் எழுச்சி பெறத் தொடங்கிவிட்டார்கள். முத்துக்குமார் தனது மரண சாசனத்தில் அரசியல் தலைவர்களையெல் லாம் நம்பாதீர்கள் என்று எழுதி வைத்துவிட்டுப் போனார். எனவே பல இளைஞர்கள் அரசியல் கட்சிகளிலிருந்து விலகி முத்துக்குமார் பெயரில் இயக்கங்களைத் தொடங்கி வருகிறார்கள். மார்க் சி°ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி – முத்துக் குமார் மன்றம் தொடங்கியிருப்பதாக திருப்பரங் குன்றத்தில் தோழர்கள் என்னிடம் கூறினார்கள். கட்சிக் கட்டுப்பாடு என்று சொல்லிக் கொண்டு நமது உணர்வுகளைக்கூட வெளிப்படுத்த முடியாத மடை யர்களாக இனிவரும் இளைஞர் சமூகம் இருக்காது; இருக்கவும் கூடாது. கட்சியில் இருப்பதற்காகவே கட்சியின் கொள்கை துரோகங்களுக்கு துணை போய்க் கொண்டு, உணர்வுகளையேகூட வெளிப் படுத்தாது இருக்க வேண்டுமா?
இந்த மாநிலக் கட்சிகளுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இவர்கள் மசோதா நிறைவேற்றினாலும் கூட, டெல்லியில் உள்ளவர்கள் ஒப்புதலைத்தான் பெற வேண்டும். பதவிக்குப் போகிறவரை கொள்கையை நிறைவேற்றுவதற்காக ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்பார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கெள்கையைக் கைவிடுகிறோம் என்பார்கள். இதைத் தானே பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே இந்தக் கட்சிகளை வழிநடத்துகிற சக்திகளாக நாம் மாறவேண்டும்.

அகில இந்தியா பேசுகிற கட்சிகள்கூட வேறு மாநிலத்தில் எப்படி செயல்படுகிறான்? கருநாட கத்தில் அகில இந்தியாவைப் பேசும் கட்சிகள் தான் இருக்கின்றன. ஆனால், அவன் தனது மாநிலத்திற் காகத்தான் குரல் கொடுக்கிறான். கருநாடகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கட்சியின் பெயரில் அகில இந்தியா என்று இருக்கும். ஆனால் அவன் தனது மாநிலத்துக்காகத்தான் குரல் கொடுக்கிறான். தி.மு.க.வின் பெயரில் அகில இந்தியா இல்லை. ஆனால் அக்கட்சியின் சிந்தனை அகில இந்தியாவாகி விட்டது. இதுமட்டுமல்ல, சர்வ தேசியம் பேசுகிற கியுபா போன்ற நாடுகள் கதை என்ன? குறைந்த பட்சம், தமிழர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு கண்டனமாவது தெரிவித்திருக்கக் கூடாதா?

வியட்நாமில் மைலாய் எனும் கிராமத்தில் 148 பேரை குண்டுவீசி, அமெரிக்க படை கொன்றது. அதற்கு அமெரிக்க நாட்டிலேயே கொந்தளிப்பு எழுந்தது. அப்பாவி மக்களைக் கொல்லாதே என்று வீதிக்கு வந்து போராடினார்கள். வியட்நாமிலிருந்து அமெரிக்கப்படை விலகுவதற்கு அதுவும் ஒரு காரணம். அந்த ஆத்திரம் நமக்கு வந்ததா? நமது நாட்டுப் படை அமைதிப்படை என்ற பெயரில் இங்கிருந்து போய் கொன்றதே. 64000 பேரைக் கொன்றதாக, கணக்கு 70000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். 148 பேரைக் கொன்றதற்காக ஒரு ஆதிக்க நாட்டுக்காரன் நாட்டில் அவன் நாட்டிலேயே மக்கள் போராடியபோது நாம் 70000 மக்களைக் கொன்றதற்காக என்ன போராட்டத்தை நடத்தினோம்? அந்த அமைதிப் படையில் தளபதிகளாக இருந்தவர்கள் இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். அசோக் மேத்தா, ஹர்கரந்த்சிங் போன்றவர்கள் எல்லாம் தாங்கள் சொன்னதை இந்தியா கேட்கவில்லை என்று பேசுகிறார்கள். புத்தகங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். திலீபன் எதற்காக உண்ணாவிரதம் இருந்தார்?

இப்போது ராஜீவ் – ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என்று பேசுகிறார்களே. அந்த ஒப்பந்தத்தை முறையாக அமுல்படுத்து என்று வலியுறுத்திதான், திலீபன் உண்ணாவிரதம் இருந்தான். இப்போது அந்த ஒப்பந்தத்தை ஆதரித்துப் பேசும் காங்கிரசார், அப்போது, திலீபன் உண்ணாவிரதத்தை ஆதரித்து அல்லவா இருந்திருக்க வேண்டும்? திலீபனை போய் பார்ப்பதற்குக்கூட இந்திய அரசு அங்குள்ள இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. அதற்கு உத்தரவிடவில்லை.

இங்கேயும், நமது நாட்டிலும், என்ன நிலைமை? மக்கள் ரேஷன் கிடைக்கவில்லை, தண்ணீர் லாரி வரவில்லை என்று போராடினால், அதில் தொடர்புடைய அதிகாரிகளா வருகிறார்கள்? காவல்துறையைத்தான் எந்தப் போராட்டமானாலும் கைது செய்வதற்கு அனுப்புகிறான். தொடர்புடைய அதிகாரிகள் வருவது இல்லை. குடிமை உரிமைகளுக்கான போராட்டங்கள் நடக்கும்போது அதிகாரிகளோ, அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ வருவதில்லை. எல்லாவற்றுக்கும் காவல்துறைதான் வரும். மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும், அதை காவல்துறை தான் தீர்த்து வைக்கும் என்று அரசு செயல்படுகிறது. இதை நாம் எதிர்க்காதவரை, அரசு இதைத் தானே செய்யும்? இந்தப் போராட்ட உணர்வுகளை நாம் வளர்த்துக் கொள்ளாமல், வெறும் ரசிக மனப்பான்மையோடு விடுதலைப் புலிகளைப் பாராட்டிக் கொண்டு குதிரைப் போட்டிக்கு பந்தயம் கட்டுகிறவனைப் போல் நாம் நமது வேட்கையை வளர்த்துக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை.

ஈழத் தமிழினம் போராட்டத்துக்கு தயாராகிவிட்ட இனம். தங்களின் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற இனம். அந்தப் போராட்ட உணர்வு இன்றும் குன்றாமல் அவர்களிடம் இருக்கிறது. எனவே அவர்கள் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவார்கள். தங்களுக்கான உரிமையுள்ள ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டு விடுவார்கள்.

ஆனால், தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாம் என்ன செய்ய போகிறோம்? நமது குரலுக்கு செவி சாய்க்காத அரசோடு நாம் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமா அல்லது இணைந்திருக்க முடியுமா என்பதுபற்றி சிந்திக்கக்கூடத் தயங்கினோம் என்றால் எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்பதை மட்டுமே, ஈழத் தமிழர்களுக்கு எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்விக்கான விடையாய் உங்களிடம் விட்டு விடைபெற விரும்புகிறேன்.