Wednesday, May 30, 2012

பார்ப்பன - இந்தியதேசியப் பாதுகாவலர் சீமானைப் புறக்கணிப்போம்!

திராவிட எதிர்ப்பு என்ற போர்வையில்பெரியார் எதிர்ப்பை முன் வைத்து,பார்ப்பனர்களுடன் நேச சக்திகளாக அடையாளம் காட்டிக் கொள்ள முன் வந்திருக்கும் சில குழுக்களோடுநாம் தமிழர் கட்சியும்தன்னை இணைத்துக் கொள்ள முன் வந்திருக்கிறது. என்று பெரியார் திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம் 31.05.12 நாளிட்ட இதழ் வெளியிட்டுள்ள கட்டுரை. 

பார்ப்பனர் என்றால் ஆய்வாளராம்அந்தணர் என்றால் உயர்ந்தோராம்பெரியார் தமிழனை அடிமையாக்கி இனப் பெருமையை சிதைத்தவராம்
நாம் தமிழர் கட்சியின் கொள்கை” அறிவிப்பு
இந்திய ஒருமைப் பாட்டைக் காப்பாற்ற தொண்டர்களுக்கு அறைகூவல்!
நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம்கோவையில் கடந்த 18 ஆம் தேதி வெளியிடப்பட் டுள்ளது. மக்களிடம் கட்சிக் கொள்கையாக முன் வைக்கப்பட்டுள்ள அந்த ஆவணம்பெரியாரை தமிழினத்தின் பகைவராக சித்தரிக்கிறது.

திராவிட எதிர்ப்பு என்ற போர்வையில்பெரியார் எதிர்ப்பை முன் வைத்து,பார்ப்பனர்களுடன் நேச சக்திகளாக அடையாளம் காட்டிக் கொள்ள முன் வந்திருக்கும் சில குழுக்களோடுநாம் தமிழர் கட்சியும்தன்னை இணைத்துக் கொள்ள முன் வந்திருக்கிறது. 

பெரியார் முன் வைத்த கருத்துகள் தமிழர்களையும் ஏமாற்றும் நோக்கம் கொண்டவை. அவைகளில் தமிழர்களை அடிமைப்படுத்தும் உள்நோக்கம் இருந்தது என்றும் அந்த ஆவணம் கூறுகிறது. அந்த ஆவணத்தில் பெரியாருக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள சில கருத்துகளை மட்டும் அப்படியே இங்கு பதிவு செய்துள்ளோம்.

1938 ஆம் ஆண்டில் பார்ப்பன இராஜகோபாலாச் சாரி இந்தியைத் திணித்தபோதுஅதை எதிர்த்துத் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கமிட்டுபோராட்டத்துக்குத் தலைமை ஏற்றதே நாவலர் சோமசுந்தர பாரதியார்மறைமலையடிகள் மட்டும் தான் என்றும்,அவர்களை ஆதரிப்பதுபோல் ஆதரித்து பெரியார் நாடகமாடி பிறகு தமிழர்களை அடிமைப்படுத்தத் தொடங்கி விட்டதாகவும் பெரியார் பெயர் குறிப்பிடாமல்அந்த ஆவணம் கூறுகிறது.

தமிழ்நாட்டில் சாதிக் கொடுமைகளையும்சமற்கிருத மேலாளுமையையும் புகுத்திநிலை நிறுத்திய கிருட்டிண தேவராயர் காலத்தி லிருந்தேதமிழர் நிலங்களைப் பறித்துத் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த திராவிடர்கள் மட்டும்,இராசாசி இந்தியைத் திணித்தபோதுஅதை எதிர்த்துத் தமிழ்நாடு தமிழர்க்கேஎன்று நாவலர் சோமசுந்தர பாரதியார்மறைமலை யடிகள் ஆகியோர் தலைமையில் திரண்ட போதுஅவர்களை ஆதரிக்கிறாற்போல ஆதரித்துப் பின்,தங்களுடைய தமிழரைத் தொடர்ந்து அடிமைப்படுத்தும் திட்டத்தின் கீழ்அண்ணல் தங்கோ முயற்சியினால் முகிழ்த்த தமிழர் கழகத்தை முறியடித்துத் திராவிடர் கழகத்தை நிறுவினர். திராவிட நாட்டு முழக்கத்தை முன்னெடுத்தனர்.
தமிழர் அறிவையும் தன்மானத்தையும் மீட்டெடுப் பதாக முழங்கிக் கொண்டு, “தமிழ் அறிவியல் அற்ற மொழிஅதை வாழ்வியலி லிருந்து தலை முழுகி விடுவதே அறிவுடைமை” என்று பகுத்தறிவுப் பரப்புரையும் தன்மானப் பரப்புரையும் செய்தனர். தமிழை வாழ்வியலில் இருந்துத் தவிர்க்கச் சொல்லிவிட்டுதமிழ் வழிப்பட்ட தமிழ்த் தேசிய முழக்கமான தமிழ் நாடு தமிழர்க்கே” என்ற செயல் திட்டமற்ற வெற்று முழக்கத்தை அடையாளமாக முன் வைத்துக் கொண்டே, “அறிவியல் மொழியான ஆங்கிலமேதமிழர்க்கு மதிப்புமிக்க நல்வாழ்வு தரும்” என்று பேரளவில் பரப்பினர். தமிழர்களை ஆங்கில மோக வலைக்குள் வீழ்த்தினர். மேலும்மூடநம்பிக்கை ஒழிப்பின் பெயரால்சில வரலாற்றுச் சான்றுகளையும்பல வாழ்வியல் விழுமியங்களையும் தாங்கி நிற்கிற தமிழ் இலக்கியங்களிலிருந்துதமிழர்களை அயன்மைப்படுத்தினர். தமிழர் என்ற அடையாளம் இழிவுபடுத்தப்பட்டுமழுங் கடிக்கப்பட்டது.
என்கிறது ஆவணம்.

• ஈழத் தந்தை செல்வாதந்தை பெரியாரிடம் தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவு கேட்டபோது, “நாங்களே அடிமையாக இருக்கிறோம்இன் னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்?” என்று கூறியதை சிங்களத்திடம் பணிந்து போகுமாறு பெரியார் அறிவுரை கூறியதாக இந்த ஆவணம் கூறுகிறது. சிங்களமேதிராவிடம் தான் என்றுகூறும் இந்த ஆராய்ச்சி” ஆவணம்அதனால் சிங்களர்களிடம் தமிழர் களை அடிமைப்படுத்தவே பெரியார் கருதியதாகவும் பதிவு செய்துள்ளது.
ஆவணத்திலிருந்து:

ஈழத்தைச் சேர்ந்த திராவிடமாம் சிங்களம்தமிழர் மீது அரச பயங்கரவாதத்தை ஏவிஅழித்து வந்தது. அதை எதிர்த்துப் போராடிய தந்தை செல்வாவிற்குத் திராவிடம்சிங்களத்திடம் பணிந்து போகுமாறு அறிவுரை கூறியது. தமிழ்நாட்டிற்குள், “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று தான் முழங்குவதாக உரிமை கொண்டாடிய திராவிடம், “நானே அடிமைஇன்னொரு அடிமைக்கு உதவுவது எப்படி?” என்று வினவிகைவிரித்தது.

•                 தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் கல்விவேலை வாய்ப்புக்கான இடஒதுக்கீட்டினால் தங்கள் ஆதிக்கம் பறிப் போய்விட்டதே என்று குமுறிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களின் கண்ணீரைத் துடைக்க, ‘நாம் தமிழர்’ கட்சி முன் வந்திருக்கிறது.  சாதிவாரி இட ஒதுக்கீட்டினால் தமிழ்ச் சாதிகளுக்கிடையே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முரண்பாடு முற்றி வருகிறதாம்.
ஆவணத்திலிருந்து:

பற்றாக்குறைகளுக்கிடையே நடை முறைப்படுத்தப்பட்டுவரும் முழுமையற்றதும்பொருளற்றதும்மாநில உரிமையையும்மகளிர் உரிமையையும் பற்றிக் கவலைப்படாததும் ஆன சாதிவாரி ஒதுக்கீட்டினால்,தமிழ்ச் சாதிகளுக்கிடையே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முரண்பாடுகள் முற்றி வருகின்றன.

•                 பார்ப்பனர் என்ற சொல்லைத் தவிர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ள இந்த ஆவணம், ‘மனுவியல்’ என்ற சொல்லை அதற்கு மாற்றாகப் பயன்படுத்துகிறது. இறுதிப் பகுதியில் கலைச் சொல் விளக்கம்’ தரப்பட்டுள்ளது. அதில் தரப்பட்டுள்ள விளக்கங்கள்:

அந்தணன் - ஈவு இரக்கங் கொண்ட அறநெறியாளன்
பார்ப்பான் - ஆய்வாளன்இளைஞன்
ஆரியன் - சீரியன்உயர்ந்தவன்சீரிய தவசமான கேழ்வரகு. (தர்மபுரிசேலம் மாவட்ட வழக்கு)
பிராமணன் - பேரமணன்
திராவிடம் பல காலக்கட்டங்களில் தமிழிலிருந்து பிரிந்து சென்றுமனுவியம் சார்ந்துப் பல்வேறு மொழிகளாய்த் திரிந்து போன கோட்பாடு.

மேற்குறிப்பிட்ட உயர்ந்த பண்புகளைக் கொண்டவர்களே பார்ப்பனர்கள் என்பதே நாம் தமிழர் கட்சியின் பார்வை என்று ஆவணம் தெளிவுபடுத்தியுள்ளது.
மனு நெறியார் என்பதற்கு -

ஒரு குலத்துக்கு ஒரு ஞாயம் என்று சட்டம் எழுதிய மனு என்பானின் பின்பற்றாளர்கள்” - என்று இந்த ஆவணம் விளக்கம் தருகிறது.

பிராமணன்சத்திரியன்வைசியன்சூத்திரன் என்பவைதான் - மனு பிறப்பின் அடிப்படையில் பிரித்த குலங்கள்’ என்று எந்த ஒரு இடத்திலும் இந்த ஆவணம் குறிப்பிடவில்லை.

•                 தமிழர் அரசியல் விடுதலையை வென்று எடுக்காமல்பெரியார் முன்னிறுத்திய பார்ப்பன எதிர்ப்புசாதி எதிர்ப்புஇடஒதுக்கீடுபெண்ணுரிமை எல்லாம் தமிழர்களை இரண்டக நிலைக்குத் தள்ளிய சீர்திருத்தமே என்று கூறுகிறது இந்த ஆவணம்.
ஆவணத்திலிருந்து:

“2000 ஆண்டுகளுக்கு மேலாகவள்ளுவர் தொடங்கி வள்ளலார் ஊடாக மனுவிய எதிர்ப்பு மரபினைப் போற்றி வந்த அறிவு நெறிப் பொதுமைத் தமிழர் ஏற்றுக் கொள்ளும் வகையில்தமிழர்க்குத் தலைமையாய் உட்கார்ந்துகொண்டே திராவிடத்தின் குமுகாயத் தளம்மனு நெறியர் ஆளுமை எதிர்ப்புமனுவிய மடமை எதிர்ப்புசாதிய இடஒதுக்கீடுசமனியம்பெண்ணுரிமை ஆகிய தளங்களில் எண்ணற்ற தமிழர் ஒற்றுமையுடன் பாடாற்றித் தமிழர்க்கு அறிவும் மானமும் ஊட்டிஅரசியல் விடுதலையும்பொருளியல் விடுதலையும் வாங்கித்  தருவதாய் ஓங்கி உரைத்தது.

திராவிடத்தின் அரசியல் தளமும்தமிழர்க்கு அரசியல்பொருளியல் சார்ந்த முழு உரிமையைப் பெற்றுத்தந்துத் தமிழுக்கும் தமிழர்க்கும் பொற்கால நல்வாழ்வு படைப்பதாகச் சொல்லி தலைமுறை கோடிகண்ட தலைமொழியாம் தமிழின் புகழ் பாடிதமிழர்க்குத் தமிழின்ப உணர்வு ஊட்டியது. நூற்றாண்டுப் பெருமை கொண்டாடும் திராவிடத்தின் இரு தளங்களும் தமிழ்த் தேசிய இனத்தின் வாழ்வினைத் தீர்மானிக்கும் மேற்கட்டுமானக் கூறுகளோடு தங்கள் சீர்த்த பணிகளை நிறுத்திக் கொண்டுஅடிக்கட்டுமானக் கூறுகளான தமிழர் அரசியல் விடுதலைபொருளியல் விடுதலை என்பவற்றில் உளதுபோலக் காட்டிஇலதாக நாட்டும் இரண்டக நிலை கொண்டனர்.
என்கிறது இந்த ஆவணம்.

(குறிப்பு: இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மேற்கட்டுமானம்அடிக்கட்டுமானம் என்ற சொற்றொடர்கள் மார்க்சியம் தொடர்பானவைஇதற்கான கலைச்சொல் விளக்கம்என்ன காரணத்தினாலே தரப்படவில்லை.)

•                 பெரியார்திராவிடம் பேசிய தமிழன் அரசியல் விடுதலையை வென்றெடுக் காமல், ‘இரண்டகம்’ செய்து விட்டார் என்பதால்அந்த புரட்சியை வென்றெடுக்கபடை திரட்டிக் கிளம்பியிருக்கும்நாம் தமிழர் கட்சிதமது அமைப்பில் சேருவோர் புரட்சிகரஉறுதிமொழியை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.
அந்த உறுதிமொழிப் பிரகடனம் இது தான்:

நாட்டின் அரசியல் சட்டத்திற்கு உண்மையாக இருப்பதுடன்சமனியம் (சோசலிசம்)மதச்சார்பின்மைகுடிநாயகம் ஆகிய கொள்கைகளின்பால் உண்மையான நம்பிக்கைக் கொண்டுநாட்டின் இறையாண்மைஒற்றுமை ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலைநிறுத்திவலிமைப்படுத்தக் கட்சி உறுதி அளிக்கிறது.

•                 திராவிடம் இழைத்த துரோகங்களை நேர் செய்யக் கிளம்பியிருக்கும் நாம் தமிழர் கட்சிஇந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற மேற்கண்ட மாபெரும் அறைகூவலை’ விடுத்திருப்பதோடு அதன் பொதுக் கூட்ட மேடைகளில் பெரியார் படத்துக்கும் தடை விதித்துவிட்டது.

கட்சி நிகழ்ச்சிகளுக்கு உரிய பதாகைகளில் நம் வாழ்வியல் வழிகாட்டி திருவள்ளுவர்நம் உரிமை மீட்சியியல் வழிகாட்டி தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் (பெரும்பாகரன்) ஆகிய இருவரின் உருவங்கள் தவிர வேறெந்த உருவமும் பயன்படுத்தக் கூடாது.” - என்றது அந்த ஆவணம்.

Friday, May 11, 2012

‘மனுதர்ம’ப் பிடிக்குள்!!!

மனுதர்மம்’ – ‘பிராமணர்களுக்குஉரிய தொழிலாக, ‘வேதம் கற்றல், வேதம் கற்பித்தல், யாகம் நடத்துதல், யாகம் நடத்த உதவுதல் பணக்காரர்களாக இருந்தால் பிச்சை கொடுத்தல், ஏழையாக இருந்தால் பிச்சை எடுத்தல்என்று கூறுகிறது.

(அத் 1 – ஸ்லோகம் 88)

ஷத்திரியனுக்கு ‘மக்களைக் காத்தல், பிச்சைப் போடுதல், வேள்வி செய்வது, வேதம் கற்பது, புலன் இன்பத்தில் பற்றுக் கொள்ளாது இருத்தல்’ என்று கூறுகிறது. (அத் 1, ஸ்லோகம் 89)‘ஆடு மாடு மேய்த்தல், கொடையளித்தல், யாகம் செய்தல், வாணிபம் செய்தல், வட்டிக்கு கடன் தருதல், நிலத்தைப் பயிர் செய்தல்’ ஆகியவை வைசியனுக் குரிய தொழிலாகக் கூறுகிறது.

(அத் 1 – ஸ்லோகம் 90)

‘சூத்திரனு’க்கு உரிய தொழிலாக ‘மனுதர்மம்’ கூறுவது …..?

“மேலாண்மை படைத்த இறைவன் சூத்திரருக்கு விதித்துள்ள ஒரே கடமை, மேல் வர்ணத்தாருக்கு, அவர் தம் மதிப்பு மரியாதை குன்றாமல் உழைத்தல்”.

(அத் 1. ஸ்லோகம் 91)

‘பிராமணன்’, ‘சத்திரியன், வைசியனுக்கு மனு விதித்த தொழில்களை எல்லாம் மீறி விட்டார்கள். ‘சூத்திரர்களுக்கு’ விதிக்கப்பட்ட பல தொழில்களும் மீறப்பட்டு விட்டன. ஆனாலும், இன்னும் சூத்திரர் களுக்கும் கீழான அவர்ணஸ்தர்களாக்கப்பட்ட பஞ்சமர்கள் மீது திணிக்கப்பட்ட சில இழி தொழில்கள் அப்படியே மாறாமல் தொடருகிறது. அதில் ஒன்றுதான் மனித மலத்தை மனிதரே எடுக்கும் இழிவு, ஒரு குறிப்பிட்ட தீண்டப்படாத சாதியின் தொழிலாகவே இது இன்றும் நீடிக்கிறது என்றால் ‘மனுதர்மம்’ உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதுதானே அதன் அர்த்தம்?

எதிர்வரும் மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மசோதா ஒன்று வரப் போகிறாராம்! மனித மலத்தை மனிதனே எடுக்கும் இழிதொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மற்றொரு சட்டம் இது. இதுகூட அரசு ஏதோ, இந்த இழிவை ஒழிக்க வேண்டும் என்ற கவலையில் கொண்டு வந்துவிட வில்லை. 1993 ஆம் ஆண்டு மனிதக் கழிவை மனிதன் எடுப்பதற்கும், உலர் கழிப்பறைக்கும் தடை போடும் சட்டம் ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. ‘மனுதர்ம’ ஆட்சியில் மனுதர்ம ஒழிப்புக்கு ஒரு சட்டம் வந்தால், அதை எப்படி, உளப்பூர்வமாக நிறைவேற்றுவார்கள்? இப்படி ஒரு சட்டம் வந்த பிறகும், பல மாநிலங்களில் ஆயிரக்கணக்கான தோழர்கள் மலம் அள்ளும் இழி தொழிலிலிருந்து விடுவிக்கப்படவே இல்லை. கடந்த ஆண்டு இந்த மக்களுக்கு மறு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்துக்காக அரசு ஒரு புள்ளி விவரம் எடுத்தது. அதன்படிஇந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் கிராமங்களில் 1,18,474 பேர் இன்னும் கைகளால் மலம் எடுத்து வருவதாக அரசு அறிவித்தது. அடிப்படை சுகாதார வசதிகள் நிறைவேற்றப்படாத கிராமங்களில் இன்னும் உலர் கழிப்பறைகள் ஒழிக்கப்படவில்லை.

கிராம பஞ்சாயத்துகள் சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கும், சாக்கடைக் குழிக்குள் இறங்கி அடைப்புகளை நீக்கவும் இந்த தாழ்த்தப்பட்ட பழங்குடி சாதியினரையே பயன்படுத்தி வருகிறது. சென்னை மாநகராட்சியில் இப்படி சாக்கடைக் குழிக்குள் இறங்கி, நச்சு வாயுவால் மரணத்தைத் தழுவும் செய்தியும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது.

இறப்பது மனுதர்மப்படி ‘கீழ் சாதி’ மனிதன் உயிர் என்பதால், ‘மனுதர்ம’ சிந்தனையில் ஊறிப் போன சமூகம். இந்த மரணங்களை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. 1993 ஆம் ஆண்டு சட்டம் கிடப்பில் போடப்பட்டுக் கிடப்பதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப் பட்டது. உயர்நீதிமன்றம் ஓர் அதிரடி ஆணையைப் பிறப்பித்தது. மலத்தை மனிதன் எடுப்பதை தடை செய்யும் சட்டம் உடனடியாக கடுமையாக திருத்தியமைக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் பிரதமர் போன்ற உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே நீதிமன்றத்துக்கு நேரில் அழைத்து விளக்கம் கேட்க வேண்டியிருக்கும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த ஆணை உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதற்குப் பிறகு தான், டெல்லி ஆட்சி அசைந்து கொடுத்து, மழை காலக் கூட்டத் தொடரில் புதிய மசோதாவைக் கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு உள்துறை அமைச்சகமும், மாநில அரசுகளுக்கு ஒரு அறிவுறுத்தலை வாங்கியது. மலம் அள்ளும் வேலையில் மனிதர்களை ஈடுபடுத்துவோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டாலும் இதுவரை ஒரு வழக்குகூட அப்படிப் பதிவு செய்யப்படவே இல்லை.

பார்ப்பன உயர்சாதி ‘வர்ணத்தவர்கள்’ தங்கள் வாழ்க்கை வசதிகளுக்கு ‘மனுதர்மம்’ விதித்த கட்டளைகளை மீறிக் கொள்கிறார்கள். ஆனால், அடித்தட்டில் உழலும் மக்கள் மீது மனுதர்மச் சிந்தனையைத் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்களும் இதற்கு துணைப் போகும் அவலம் நீடிக்கிறது. எனவேதான் பெரியார் திராவிடர் கழகம் அழைக்கிறது: “சாகாமல் உயிர்த் துடிப்போடு இயங்கும் மனுதர்மத்துக்குத் தடை போட வேண்டும்! நவம்பர் 26 இல் அந்த இழிவுக் குப்பைக்குத் தீ வைப்போம்”!