Tuesday, October 23, 2012

பிள்ளையார் சிலை அகற்றம்

 சேலம் மாவட்டம் கண்ணாமூச்சி கிராம பஞ்சாயத்துக்கு சொந்தமான நிலத்தில் அரசு நடுநிலைப்பள்ளி, ஊட்டச்சத்துணவு மையம், ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ள வளாகத்தில் பொது மேடை ஒன்றும் உள்ளது. இந்த மேடை பள்ளி மற்றும் அனைத்து பொது விழாக்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் 22.10.12 அன்று இரவு அப்பகுதியை சேர்ந்த மர்மநபர்களால் பிள்ளையார் சிலை ஒன்று வைத்து பூசை செய்யப்பட்டிருந்நது. இத்தகவலை அறிந்த திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் திரண்டு கண்ணாமூச்சி பஞ்சாயத்து தலைவரை அணுகி இது பஞ்சாயத்துக்கு சொந்தமான அரசு இடம் இதை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

மேலும் தமிழக அரசாணைப்படி அரசுக்கு சொந்தமான வளாகங்களில், இடங்களில் மதம் சம்மந்தப்பட்ட குறியீடுகள் கோவில்கள் அமைப்பது சட்டப்படி குற்றம் என்ற அரசாணையை கொடுத்து பிள்ளையார் சிலையை உடனடியாக அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அப்படி பிள்ளையார் சிலையை அகற்றாவிட்டால் அரசாணைப்படி நாங்கள் அகற்ற நேரிடும் என வேண்டுகோள்விடுக்கப்பட்டது. உடனடியாக பஞ்சாயத்து தலைவர் திரு.கே.கே.பழனிசாமி அவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் விவரத்தை கூறினார். உடனடியாக மேட்டூர் காவல்துறை துணைகண்கானிப்பாளர் தலைமையில் கொளத்தூர் ஆய்வாளர், துணை ஆய்வாளர்  கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தி பிரச்சணைக்குரிய பிள்ளையார் சிலையை உடனடியாக அகற்றினர். மீண்டும் அந்த பொது மேடை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.






சரஸ்வதி பூஜை என்பது என்ன?

சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை! கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது சரஸ்வதி என்கின்ற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில் அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி அதற்கு உடன்படாமல் பெண் மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் வேடன் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேடம் உருவெடுத்து ஆண் மானைக்கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை சொல்லுகிறது.

அதாவது தன்னை பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது. மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்கு பேத்தி என்று சொல்லப்படுகின்றது. அதாவது பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின்மீது ஆசைப்பட்டபோது வெளியான இந்திரீயத்தை ஒரு குடத்தில் விட்டு வைக்க, அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாகி அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது. இதனால் பிரம்மனுக்கு சரஸ்வதி மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள். எனவே, சரஸ்வதியின் பிறப்பும், வளர்ப்பும், நடவடிக்கையும் மேற்படி பார்ப்பனப் புராணப்படி மெத்த ஆபாசமும், ஒழுக்க ஈனமுமானதாகும்.

நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால் வித்தையின் பயன் தொழி லென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் ஒரு நாளைக் குறித்துக்கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி புஸ்தகங்களையும், ஆயுதங்களையும் வைத்து பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், திராசு, படிக்கல், அளவு மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும், தொழிலாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும், இயந்திர சாலைக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணாக்கர்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சீலைகளையும், நகைகளையும், வாத்தியார்கள் வாத்தியக் கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொருவர்களும் அவரவர்கள் லட்சியத்திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள். இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய் பூஜை செலவு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தை செலவு செய்தும், போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது.

ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த,- வருகின்ற அரசர்களெல்லாம் இன்றைய தினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்துகொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பூஜையின் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர்களைக் காணோம்.

சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய் கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிறுக்காமலோ, குறை அளவு அளக்காமலோ இருக்கிறார் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத் தொழிலாளிக்கும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகு பக்தியாய் அவைகளை கழுவி, விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்துகொள்கின்றார்கள் என்றாவது அல்லது அவர்களுக்கு தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக்கின்றார்கள். அது போலவே புஸ்தகங்களையும், பென்சிலையும், கிழிந்த காகிதக் குப்பைகளையும், சந்தனப் பொட்டு போட்டு பூஜை செய்கின்றார்களே அல்லாமல் காலோ, கையோபட்டுவிட்டால் தொட்டு கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களே அல்லாமல் நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5 பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள்.

இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை செய்தும், இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள், நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வருகிறார்கள். நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக் கருதி வேறு நாட்டிற்கு குடி போகின்றார்கள். நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித்திருக்கிறார்கள். சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.

இதன் காரணம் என்ன?

நாம் செய்யும் பூஜைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய் கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்கவேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம். வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ, கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது.
அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய் கருதி தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்கு கல்வி இல்லை. ஆனால், வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண்களும், நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள். உண்மையிலேயே சரஸ்வதி என்று ஒரு தெய்வமிருந்திருக்குமானால் பூசை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும், கல்வி மான்களாகவும் செய்யுமா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகளுக்கு உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூசை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும், தொழிலற்றும், வியாபார மற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள். இந்தப் பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்.

ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது, இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடை, மேள வாத்தியம் வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்கு தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜ் ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப் பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா என்றுதான் கேட்கின்றேன். ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும், நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கி விடும். இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.

—————-ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது – 20.10.1929 “குடிஅரசு” இதழில் வெளியானது.

Friday, October 19, 2012

என் ஓட்டலுக்கு சாப்பிட வருகிறவர்கள் எனது அடிமைகள் ! இழிமகன்கள் !

ஸ்ரீரங்கத்தில் ஒரு பார்ப்பனர், “பிராமணாள் உணவு விடுதிஎன்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு காவல்துறையிடம்  ஒரு பெரும் பகுதி சமுதாயத்தைசூத்திரர்என்று இழிவுபடுத்தும் இந்தபிராமணாள்பெயரை அகற்ற வேண்டும் என்று புகார் தரப்பட்டது. ஆனாலும், ஓட்டல் நடத்தும் பார்ப்பனர், தனக்கு ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் ஆதரவாக இருப்பதாக ஆணவத்துடன் பேசி வருகிறார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியாக இருப்பதால் முதல்வர் பார்ப்பனர் என்ற அடிப்படையில் தமக்கு அரசு அதிகாரத்தின் ஆதரவு இருக்கும் என்ற இறுமாப்பில், ‘பிராமணாள்பெயர்ப் பலகையை அகற்ற முடியாது என்று பிடிவாதம் பிடிக்கிறார்.

தேவர்’, ‘நாயுடுஎன்ற பெயரில் ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் இருப்பதை இந்தப் பார்ப்பனர் சுட்டிக் காட்டுகிறார். இவை சாதிப் பெயர்கள்; இந்தப் பெயர்களுக்கும் தடைப் போட வேண்டும் என்பதே நமது கருத்து. பெரியார் நூற்றாண்டு விழாவின்போது முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சாலைகளுக்கு இருந்த சாதிப் பெயர்களை முழுமையாக அரசு ஆணையின் பேரில் நீக்கப் பட்டதை நினைவுபடுத்துகிறோம்.

ஆனால், ‘பிராமணாள்என்பது ஒரு குறிப்பிட்ட சாதிப் பிரிவினரைக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக, ‘மனு சாஸ்திரம்கூறும் நான்கு வர்ணப் பிரிவில் மேலானவர்கள்பிரம்மாவால் படைக்கப்பட்ட வர்கள் என்று கூறப்படும்பிராமணர்என்ற பிரிவை அங்கீகரிக்கும் சொல். இந்தப்பெருமையைபிராமணர்கள்கூறிக் கொண்டால், அதனால் மற்றவர்களுக்கு என்ன சங்கடம் என்ற கேள்வி எழக்கூடும். ஒருவன் தன்னைபிராமணன்என்று அடையாளப்படுத்துவதன் வழியாக ஏனைய பெரும் பகுதி உழைக்கும் மக்களைசூத்திரர்கள்என்று அறிவிக்கிறார்கள் என்பதுதான், இதில் அடங்கியுள்ள முக்கியப் பிரச்சினை.

வறுமைக் கோட்டுக்குக் கீழானவர்கள்என்று அரசு, ஒரு புள்ளி விவரம் எடுக்கிறது என்றால், வறுமைக் கோட்டுக்கு மேலானவர்கள் இருக்கிறார்கள் என்பது எப்படி அர்த்தமாகிறதோ அதே போன்றுதான் இதுவும். அரசு கூட மக்கள் தொகையை சாதி வாரியாகக் கணக்கிடுகிறது. அது வேறு. ஆனால், அரசாங்கமேபிராமணர்’, ‘சூத்திரர்என்ற வர்ணத்தின் அடிப்படையில் கணக்கிடுவது இல்லை. காரணம், ‘பிராமணன்’, ‘சூத்திரன்என்ற வர்ண பேதம் பெரும்பான்மை மக்களான சூத்திரர்களைபார்ப்பனர்களின் தேவடியாள் மக்கள்என்று பறைசாற்றுகிறது.

மனு சாஸ்திரம்என்ன கூறுகிறது? “அந்த பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளிலிருந்து உண்டான பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர வர்ணத்தாருக்கு இம்மைக்கும் மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் (செயல்களை) தனித்தனியாகப் பகுத்தார். (அத்தியாயம் 1; சுலோகம் 85)

பிராமனன் முதல் வர்ணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் உயர்ந்த இடத்தில் (முகத்தில்) பிறந்ததானாலும் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான். (மனு. அத்தியாயம் 1 - சுலோகம் 100)

மனு தர்ம அடிப்படையில், ‘பிராமணாள் கபேஎன்று ஒரு ஓட்டலுக்கு பெயர் சூட்டப்படுகிறது என்றால், அதன் பொருள் - ஓட்டல் நடத்தும் அந்த உரிமையாளன், ‘நான் பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவன். இந்த ஓட்டலுக்கு வந்து காசு கொடுத்து சாப்பிட்டாலும் பிராமணரல்லாதவர்கள் என்றால், அவர்கள், எனது பார்வையில்சூத்திரர்கள் எனது அடிமைகள். மனுதர்மத்தின் 18வது அத்தியாயம் 122வது சுலோகத்தின்படி என்னுடைய ஓட்டலுக்கு காசு கொடுத்து சாப்பிட வரும் சூத்திரர்கள், நான் ஏற்றுள்ள தர்மப்படி என்னை வணங்க வேண்டியவர்கள். அதே சுலோகத்தின்படி எனது ஓட்டலுக்கு சாப்பிட வருவதே அவர்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.
நான்பிராமணரல்லாதகீழ் வர்ணக்காரர்களான சூத்திரர்களை மனுதர்மம் அத்தியாம் 8 - சுலோகம் 122-ன்படி கீழ்க்கண்டவாறுஅறிவிக்கிறேன்.

போரில் புறமுதுகிட்டு ஓடிவந்த கோழை.
இவன் என்னிடம் பக்தி கொண்டு தொண்டு செய்ய வேண்டியவன்.
இவன் எனது விபச்சாரியின் மகன்.
இவன் என்னால் விலைக்கு வாங்கப்பட்டவன்.
இவன் தலை தலைமுறையாக எனது அடிமையாக இருந்து வருகிறவன்.

இதைத்தான் திருவரங்கத்தில் ஓட்டல் நடத்தும் பார்ப்பனர், தனது விளம்பரப் பலகையில் பொறித்து வைத்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் விற்பனைக்காக வசதிக்காக நடத்தப்படுகிற ஒரு வர்த்தக நிறுவனம் தன்னிடம் வாடிக்கையாளர்களாக சாப்பிட வருகிற பெரும்பான்மை மக்களையும் சமுதாயத்தில் உழைக்கும் பெரும்பான்மை மக்களையும்
, தேவடியாள் மகனே!
, அடிமையே!
, புறமுதுகிட்டு ஓடிய கோழையே!
, என்னை அண்டி வாழக்கூடிய இழிப் பிறவியே!
வா, வா, வந்து காசு கொடுத்துவிட்டு சாப்பிட்டுப் போ என்று பகிரங்கமாக அறைகூவல் விடுப்பதை பக்தித் தமிழர்களே, நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி, பா..கவிலுள்ள பார்ப்பனரல்லாத தமிழர்களே, இந்த கீழ்மையை சிறுமையை அவமானத்தை அங்கீகரிக்கிறீர்களா?
இது நாத்திக-ஆத்திகப் பிரச்சினையல்ல;
இது இந்துமத எதிர்ப்புப் பிரச்சினையுமல்ல;
நீ, மானமுள்ள, சூடு, சொரணையுள்ள மனிதனாக இருக்கிறாயா என்பதை சோதனைக்குள்ளாக்கும் பிரச்சினை!
ஆமாம், நான்சூத்திரன்என்று பச்சை குத்திக் கொள்ளப் போகிறீர்களா?
மானமுள்ள மனிதன் என்று போர்க்கொடி உயர்த்தப் போகிறீர்களா?

Friday, October 5, 2012

அறிவுக்குப் பொருந்தாத ஆபாசப் பண்டிகை சரஸ்வதி பூஜை – ஆயுதபூஜையைப் புறக்கணிப்போம்!

சரஸ்வதி பூசை (ஆயுத பூசை)

சரஸ்வதி பூசை என்பது ஒரு அர்த்தமற்ற பூசைகல்வியையும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி , அதற்குச் சரஸ்வதி என்று பெயர்  கொடுத்து அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி , கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து  கொள்ளாமல், சாமியையே நம்பிக் கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே , அவர்கள்  படித்துப்பெரிய படிப்பாளியாகிக் கொண்டு, நம்மைப் படிப்பு வரமுடியாத ``மக்குகள்என்று சொல்லிக் கொண்டு இருக்கின் றார்கள்.
முதலாவது, சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் , அது பார்ப்பனர்களின் புராணக்கதைகளின்படியே மிக்க  ஆபாசமானதாகும்.  
அதாவது, சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு, அவள் அழகைக் கண்டு, அந்தப் பிரம்மனாலேயே  மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில் , அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண் மான் உருவம் எடுத்து ஓடவும், உடனே  பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் உருவமெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன்  வேட உருவமெடுத்து ஆண்மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் பிரம்மனை உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக  மீண்டும் சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை கூறுகிறது.

இரண்டாவது,

ஒரு விதத்தில் சரஸ்வதி பிரம்மாவுக்குப் பேத்தி என்று சொல்லப்படுகிறதுஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஏற்பட்ட ஆசையின் போது  வெளிப்பட்ட இந்திரியத்தை ஒருகுடத்தில் விட்டு வைக்க, அக்குடத்தில் இருந்து அகத்தியன் வெளியாகி அந்த அகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று  சொல்லப்படுகிறதுஅதனால் பிரம்மாவுக்கு சரஸ்வதி, மகன் வயிற்றுப் பேத்தி யாகிறாள்எனவே சரஸ்வதி பிறப்பும், வளர்ப்பும் மேற்படி நடவடிக்கையும் பார்ப்பனப் புனைவுப்படி மிகவும் ஆபாசமும் ஒழுக்க ஈனமுமானதாகும்.
நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூசை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயம்.
அதாவதுசரஸ்வதி வித்தைக்கு அதிபதி யான தெய்வம் ஆனதால், வித்தையின் பயன் தொழில் என்றும், தொழிலுக்கு ஆதாரமானவை ஆயுதங்கள் என்றும் கருதிக்கொண்டுசரஸ்வதி பூசை, ஆயுத பூசை என்று ஒவ்வொரு நாளைக் குறித்துக் கொண்டு, அந்த நாளை விடுமுறையாக்கி, புத்தகங்களையும் ஆயுதங்களையும் வைத்துப் பூசை செய்கின்றார்கள்.
இந்தப் பூசையில் அரசன் தனது ஆயுதங் களையும் வியாபாரி தனது கணக்குப் புத்தகங் களையும் , தராசு, படிக்கல், அளவு மரக் கால், படி , உழக்குபெட்டி முதலியவற்றையும்; தொழிலாளிகள் தங்கள் தொழிலுக்குரிய ஆயுதங்களையும், இயந்திரக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணவர்கள் தங்கள்  புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கை களையும், சேலைகளையும் நகைகளையும், வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியங்களையும் இதுபோல் ஒவ்வொருவரும் தங்கள் இலட்சியத்திற்கு வைத்திருக்கும் அவரவர் ஆயுதங்களையும் வைத்துப் பூசை செய்கிறார்கள். இதனால் அந்தத்  தினத்தில் தொழில்கள் நின்று அதனால் வரும் படிகளும் போய் பூசை, ஓய்வு முதலிய ஆடம்பரங் களுக்காகத் தங்கள் கையில் இருக்கும் பணத்தில் ஒரு பகுதியைச்  செலவழித்து, போதாவிட்டால் கொஞ்சம் கடன் வாங்கியும் செலவழிப்பதைவிட இதனால் யாதொரு நன்மையும ஏற்படுவதாகச் சொல்வதற்கு இடமே இல்லை.
சரஸ்வதி பூசை செய்யும் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக் குப் பயந்து பொய்நிறை நிறுக்காமலோ குறையளவு அளக்காமலோ, தப்புக்கணக்கு  எழுதாமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.  
அதுபோலவே கைத்தொழிலாளர்கள் தங்கள் ஆயுதத்தைக் கழுவிச் சந்தனம், குங்குமப் பொட்டு வைத்து  விழுந்து கும்பிடுவார்களே தவிர அவர்களுள் எவனாவது நாணயமானவனாய் நடக்கின்றான் என்றோ, தொழில்கள் தாராளமாய் கிடைக்கின்றது என்றோ  சொல்லுவதற்கு இடமில்லாமல் இருக்கின்றார்கள்
அதுபோலவே புத்தகங்களையும், கூளக்குப்பை களையும் அள்ளி  அவற்றிக்குப் பொட்டுவைத்துப் பூசை  செய்கின்றார்களே அல்லாமல், காலோ கையோ பட்டு விட்டால், தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொள்கின்றார்களே அல்லாமல், நமது நாட்டில் படித்த மக்கள் 100- க்குபேர்கள் என்று தான் உள்ளார்கள்.
இவ்வளவு ஆயுத பூசை - சரஸ்வதி பூசை செய்தும் நமது வியாபாரிகள் நஷ்டமடைந்தும், தொழிலாளர்கள் பிழைக்கத் தொழில்கள் இன்றியும்  அவதிப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்சரஸ்வதியின் சாதியைச் சேர்ந்த பெண்கள்                1,000 த் துக்கு 9 பேர்கள் படித்து உள்ளார்கள் இதன் காரணம் என்ன? நாம்  செய்யும் பூசைகளை சரஸ்வதி அங்கீகரிக்கவில்லையா?  
அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயத்திற்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லையா? அல்லது  சரஸ்வதி என்கிற தெய்வமே ஒரு பொய்க் கற்பனையாஎன்பவை யாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத் தான் இருக்க வேண்டும்.
இவையாவும் சுத்த  முட்டாள்தனமான கொள்கைகள் என்பது தான் எனது அபிப்பிராயம்அயல்நாட்டானைப் பார்த்தால் அவனுக்கு சரஸ்வதி என்ற  பேச்சோ கல்வித்தெய்வம் என்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது. அன்றியும், நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய்க் கருதிக்கொண்டும், தொட்டுக்  கண்ணில் ஒத்திக் கொண்டும் நமக்குக் கல்வி இல்லை.   
ஆனால் வெள்ளைக்காரன் மலங்கழித்தால் சரஸ்வதியைக் கொண்டே (காகிதத்தை) மலம் துடைத்தும்  வருகிறான்ஆனால் 100-க்கு 60 பெண்கள் அவர்களில் படித்து இருக்கிறார்கள் உண்மையிலேயே சரஸ்வதி என்ற தெய்வம் ஒன்று இருக்கும் என்றால், பூசை  செய்பவர்களைத் தற்குறியாகவும் மலம் துடைப்பவர்களை அபார அறிவாளிகளாகவும் கல்விமான்களாகவும் செய்யுமா என்று தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.
உண்மையில் யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம்வியா பார ஆயுதம் ஆகியவைகள் சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாய் இருக்குமானால்அதைப் பூசை செய்யும் இந்த நாடு அடிமைப் பட்டும் தொழிலற்றும், வியாபாரமற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கவும், சரஸ்வதியைக் கனவிலும் கருதாதுசரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து ``முட்டாள்கள், அறிவிலிகள் , காட்டு மிராண்டிகள்என்று சொல்லிக்கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும்வியாபாரிகள் அரசாட்சி யுடனும், தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள்இந்தப் பூசையின் மூலம் நமது  முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகிறது என்று பாருங்கள்
இராசாக்கள் கொலு இருப்பது, பொம்மைகள் கொலு இருப்பது, சாமிகள் கொலு இருப்பது , இதற்காக ஜனங்கள் பணம்  செலவு செய்வது, அறிவுச்செலவு செய்வது, லட்ச ரூபாய்க்குப் பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடைமேளவாத்தியம் வாழைக்கம்பம், பார்ப்பனர் களுக்குத் தட்சணை, சமாராதனை , ஊர்விட்டு ஊர் போக ரயில் சார்ஜ் ஆகிய எவ்வளவு செலவா கின்றன என்பதை  எண்ணிப் பாருங்கள்
இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்தேசத்தின் செல்வமல்லவாஎன்று கேட்கிறேன்ஒரு வருஷத்தில் இந்தப் பூசையில், இந்த நாட்டில்  செலவாகும் பணமும், நேரமும் கோடி ரூபாய் பெறுமானது என்ற கணக்குப்பார்த்தால் , மற்றப் பண்டிகை, உற்சவம் புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு  என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும்இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை