Saturday, February 26, 2022

பெரியாருக்குத் தண்டனை விதித்தவர் மேல் 'ஆசிட்' வீசினேன்" - ஆசிட் தியாகராசன்....

 #வீரவணக்கம்...

தந்தை பெரியாருக்கு – 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததால் ஆத்திரமடைந்த பெரியார் தொண்டர் ஒருவர், அரசு வழக்கறிஞரான பார்ப்பனர் முகத்தில் ‘ஆசிட்’ வீசினார். விளம்பர வெளிச்சம் ஏதுமின்றி, பெரியாரை அவமதித்தவர்களுக்கு எல்லாம் பதிலடி தந்து, ‘பகத்சிங்காக’ வாழ்ந்து கொண்டிருக்கும் 78 வயது தோழரின் பெயர் திருச்சி தியாகராசன். மேடையில் ஏறி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், கொள்கைக் குன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவரை, பெரியார் திராவிடர் கழகம் அடையாளம் கண்டு, சாதி ஒழிப்பு மாநாட்டுக்கு அழைத்து வந்தது. சாதி ஒழிப்பு மாநாட்டில் அவரது உரை, மின்சாரத்தைப் பாய்ச்சியது. ஆழமான உணர்வுகளைத் தூண்டி, என்றும் நினைவில் நிற்கும் முத்திரை பதித்த திருச்சி தியாகராசன் உரையிலிருந்து..


என்னருமை உணர் வாளர்களே! நான் அதிகம் பேச முன்வரவில்லை. உண்மையைச் சொன்னால் – எனது 78 வயதில் நான் ஏறியுள்ள முதல் மேடை இது தான். புரட்சிகர இயக்கங்களுக்கு தனித் தனிப் படைகள் தேவை. நீங்கள் பிரச்சாரப் பீரங்கிகள்; பிரச்சாரப்படை. நான் தீவிர வாதத்தில் தான் இருப்பேன் (கைதட்டல்) . பெரியார் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் போராட்டங்களில் நான் கலந்து கொள்வது இல்லை. நான் கருப்புச் சட்டையும் போடமாட்டேன். என்னுடைய நடவடிக்கைகளால் கழகம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று கருதுபவன். என்னுடைய போராட்டங்களை நான் தனிப்பட்ட முறையில் எனக்கு நானே பொறுப்பாக்கிக் கொண்டுதான் நடத்துவேன். சுருக்கமாகச் சொல்கிறேன்..


பெரியாரின் பிள்ளையார் உடைப்புப் போராட்டத்துக்கு என்ன காரணம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் விபூதி வீரமுத்து என்பவன், பெரியார் படத்தை செருப்பால் அடித்து ஊர்வலம் போவதாகச் சொன்னான். திருச்சி திராவிடர் கழகத் தலைவர் டி.டி.வீரப்பா, எந்தத் தோழரும், விபூதி வீரமுத்து பக்கம் போக வேண்டாம் என்று கண்டிப்பாக உத்தரவிட்டார், அறிக்கையும் விட்டார். நான் வீட்டில் இருந்து கொண்டு, எனது சகாக்களை அழைத்துப் பேசினேன். டி.டி.வீரப்பா, கட்சியின் கட்டுப்பாடுபடி நடக்கட்டும். ஆனால், நாம் நமது ‘சட்டத்திட்டப்படி’ அதை சந்திப்போம் என்று கலந்து பேசினேன். அன்று எனக்கு டைபாயிடு காய்ச்சலே வந்துட்டுதுங்க. கடும் காய்ச்சலில் கிடந்த நான் கண்விழித்துப் பார்த்தபோது – என் கையில் கத்தி இருந்தது.


அப்போது மணி மாலை 7. அய்யோ, இந்நேரம் பெரியார் படத்தை செருப்பால் அடித்திருப்பானே யென்று, தலைதெறிக்க ஓடினேன்.


திருச்சி டவுன் ஹாலை நோக்கி, கூட்டத்தைக் கலைக்க, போலீசார் தடியடி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். ஆனால், விபூதி வீரமுத்து விடம் எத்தனை பேர் இருந்தார்கள் தெரியுமா? 25 பேர் மட்டும்தான். ஆனால் போலீஸ் பட்டாளம் அதிகமாக இருந்தது. நம்முடைய தோழர்கள் சாலையின் மறு பக்கத்தில் நின்று கொண்டு, பயங் கரமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த னர். என்னுடைய சகாக்களுக்கு நான் செய்ய வேண்டியதை எல்லாம் முன் கூட்டியே சொல்லி விட்டேன்; நான் சோடா விற்பவனாக மாறு வேடத்தில் போலீஸ் தடையை மீறி உள்ளே நுழைந்துவிடுவேன்; நான் சைகை காட்டியதும், நீங்கள் கற்களை வீச வேண்டும்; கல் விழுந்தவுடன் நான் செய்ய வேண்டியதை செய்வேன் என்று கூறி விட்டேன்.


அப்போதெல்லாம் என்னிடம் காசு கிடையாது; ஒருவரிடம் கடன் வாங்கி, அதில் ‘சோடா கிரேடு’களை வாங்கி, அதைத் தூக்கிக் கொண்டு, தலையில் துண்டு கட்டிக் கொண்டு, சோடா விற்பவனைப் போல் உள்ளே நுழைந்தேன். விபூதி வீரமுத்துவின் ஆள் கண்ணன் என்பவர், யார் நீ என்று கேட்டார். தலைவருக்கு சோடா தர வந்திருக்கிறேன் என்றேன்; உள்ளே போனதும், விபூதி வீரமுத்துவை நோக்கி எனது தோழர்கள் மலத்தை வீசினார்கள்; நான் டவுன் ஆல் கதவை உடைத்து, டவுன் ஆல் கோபுரத்தின் மீது ஏறி விட்டேன்; விபூதி வீரமுத்து என்பவன் பெரியார் ரஷ்யாவுக்குப் போன போது எடுத்த படத்தை ஒரு மூட்டையில் ஒட்டி, அந்தப் படத்தை செருப்பால் அடிக்கத் திட்டமிட்டிருந்தான். ‘வெள்ளைக்காரனுக்கு காட்டிக் கொடுத்த நாயை செருப்பால் அடிக்கிறேன்’ என்று கூறி – பெரிய செருப்பை, விபூதி வீரமுத்து தூக்கினான். அவ்வளவுதான், டவுன் ஹால் கோபுரத்திலிருந்து சோடா பாட்டிலையும், கற்களையும் விபூதி வீரமுத்து தலையை இலக்கு வைத்து அடித்தேன்; முதல் அடியில் அவன் தலை கிழிந்தது. பெரியார் படம் கீழே விழுந்தது. என்னைக் கெட்ட வார்த்தை பேசி திட்டினான்.


மீண்டும் விட்டேன் எனது ‘அஸ்திரத்தை’; பிறகு 7 பேர் மொட்டை அடித்துக் கொண்டு பெரியார் படத்தை வைத்துப் பாடை கட்டி தூக்கி வந்தனர். அத்தனை பேரையும் இலக்கு வைத்து அஸ்திரத்தை வீசினேன்; அப்படியே ஓட்டம் பிடிச்சானுங்க; மேலே இருந்த என்னைப் பார்த்து, போலீசார் வெறிக் கூச்சல் போட்டு, என்னை சுற்றி வளைக்க வந்தாங்க; நான் மேலே இருந்து அப்படியே கீழே குதித்தேன்; எனக்கும் சில ‘ஸ்டண்ட்’ வேலைகள் தெரியும்.


ஆனால் உங்களை எல்லாம் ஒன்று கேட்டுக் கொள்கிறேன்; யாரும், டி.வி., சினிமாக்களைப் பார்க்காதீங்க. அதெல்லாம் ‘விசிலடிச்சான் குஞ்சு’ சமாச்சாரம்; நடைமுறைக்கு வாங்க. நான் ஃபால் ஆப் பெர்லின், பகத்சிங், உலக யுத்தத்தில் – உடம்பில் குண்டைக் கட்டிக் கொண்டு கப்பலைத் தகர்ப்பானே, அது போன்ற படங்களைத்தான் பார்த்திருக்கிறேன். கூட்டத்தையே கலைத்தேன். என்னுடைய திட்டம் முழு வெற்றிப் பெற்றது. என்னுடைய வாழ்நாளில் எவ்வளவோ போராட்டம் செய்திருக்கிறேன். சொல்ல நேரமில்லை.


பெரியாருக்கு 3 ஆண்டு தண்டனை தரப்பட்டபோது, முதல் நாளே என்னைக் கைது செய்து விட்டார்கள். கைது செய்த என்னை அடுத்த நாள் நீதிமன்றம் கொண்டு வந்தார்கள். இரண்டாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன் என்னை நிறுத்தி வைத்திருந்தார்கள். மாவட்ட நீதிமன்றத்தில் அய்யாவுக்கு 3 வருட தண்டனை கொடுத்து, மற்றொரு பக்கம் அய்யாவைக் கொண்டு போகிறார்கள். தண்டனை அறிவித்தவுடன் எனது சகாக்கள் கடும் அமளியில் இறங்கி விட்டார்கள். அய்யாவுக் குத் தண்டனை தந்த பிறகு என்னால் சும்மா இருக்க முடியுங்களா? சீனிவாசாச்சாரி என்ற வெறி பிடித்த அய்யங்கார் பார்ப்பனன்தான் அரசு வழக்கறிஞர். நமது இனத்துக்கு மிகப் பெரும் கேடு செய்த வன். அவனது கடந்த கால சரித்திரம் முழுமையும் நான் தெரிந்து கொண்டேன். அதனால் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.


என்னிடம் கழக முக்கியஸ்தர்கள் எல்லாம் வந்து, நீங்கள் தயவுசெய்து பொறுமையாக இருங்கள் என்று மன்றாடி கேட்டுக் கொண்டார்கள். ஜனவரி 26 ஆம் தேதி அய்யாவை விட்டு விடுவார்கள் என்றார்கள். அதுவரை பொறுமையாகக் காத்திருந்தேன். ஜன.26 மாலை ஓரு முடிவுக்கு வந்தேன்.


என்னுடைய அருமையான தோழர் சின்னச்சாமி. ஒரு பெரிய திட்டத்துக்கு தயா ராகி நின்ற எங்களிடம் இருந்த பணம் எவ்வளவு தெரியுமா? நான்கு அணா. வெறும் நான்கு அணா தான்! ரேடியோ செய்தி கேட்டேன். பெரியார் விடுதலைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. குடியரசு நாள் நிகழ்ச்சியில், அரசு வழக்கறிஞர் கலந்து கெள்கிறார் என்ற சேதி கிடைத்தது. என்னுடைய நண்பன் சின்னச்சாமியிடம் கூறினேன். நான் முடிவு செய்து விட்டேன்; நீ போய்விடு என்று கூறினேன். பெரியார் வாழ்க என்று கூறி இருவரும் கை குலுக்கினோம்.


என்னுடைய நண்பன் சின்னச்சாமி பற்றி சொல்ல வேண்டும். அற்புதமான நண்பன். பீடி சுற்றித்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். ஒரு நாள் பீடி சுற்றினால் 75 காசு கிடைக்கும். அதை வைத்துத்தான் குடும்பம் நடத்த வேண்டிய நிலை. நான் அழைக்கும்போது, பீடி சுற்றுவதை அப்படியே நிறுத்திவிட்டு என்னோடு வந்துவிடுவான். என்னால் மறக்கவே முடியாத காட்சிகள் அவை. அந்த நண்பன் சின்னச்சாமி, இப்போது காச நோய்க்கு உள்ளாகி மருந்து வாங்குவதற்குக்கூட காசு இல்லாமல் இருக்கிறான்.


அப்போது, சின்னச்சாமி, என்னைத் தனியே விட்டுப் போக மறுத்துவிட்டான். நானும் சேர்ந்து கொள்கிறேன் என்றான். “வேண்டாம் சின்னச்சாமி, தயவு செய்து நீ போய்விடு. என்னுடைய தாயை மறந்துவிட்டு நான் இந்த இடத்தில் நிற்கிறேன்; எனக்கு அய்யா தான் முக்கியம்” என்று சொன்னேன்.


சீனிவாசாச்சாரி குடியரசு நாள் விழாவில் பங்கேற்றுவிட்டு வந்தான். போலீசுக்கு எதிரேயே போய் கழுத்தைப் பிடித்துச் சுழற்றி முகத்தில் ‘ராஸ்கல்’ என்று கூறி ‘ஆசிட்’ வீசினேன். அவன் கீழே விழும்போது 8 மணி சங்கு ஊதியது. தோளிலும், முகத்திலும் குத்தினேன். 300 பேர் விரட்டி வந்தனர். முடியுமா? என்னிடம் யாரும் நெருங்க முடியவில்லை.


அதற்குப் பிறகு காவல்நிலையத்தில் – என்னை அழைத்துப் போய் விசாரித்தார்கள். இன்ஸ்பெக்டர் என்னை மிகவும் மதித்து சமமாக உட்கார வைத்து தோளில் கைபோட்டுப் பேசினார். அப்போது என்னிடம் கேட்டார். “எவ்வளவோ பெரியார் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இல்லாத கவலை உனக்கு மட்டும் ஏன்? நீ மட்டும் ஏன் இத்தகைய தீவிரவாத செயல் களில் ஈடுபடுகிறாய்?” என்று கேட்டார், நான் சொன்னேன்.


“நீங்கள் சேர்வை சமூகத்தைச் சார்ந்தவர்; நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன்; என்னை சமமாக உட்கார வைத்து, நீங்கள் எனது தோளில் கை போட்டுப் பேசுகிறீர்கள். 25 ஆண்டுகளுக்கு முன், எனது சமூகம் தீண்டப்படாத சமூகம்; இன்று எனக்கு இந்த சம உரிமையைப் பெற்றுத் தந்தது பெரியார். அந்த உணர்வுதான் என்னை இயக்குகிறது. ஏதோ ஒரு நாள் – இதே திருச்சியில் பெரியாரின் இறுதி ஊர்வலம் போகும். அப்போது எல்லோரும் கண்ணீர் விட்டு அழுவார்கள்; அப்போது நான் மட்டும் அழமாட்டேன். காரணம், பெரியாரை தண்டித்தவர்களுக்கு எல்லாம், சரியான பாடம் புகட்டி விட்டேன் என்ற மனநிறைவில் நான் மகிழ்ந்து நிற்பேன்” என்று கூறி விட்டு, நான் குலுங்கி குலுங்கி அழுதேன். எனக்கு முன்னாள் புகைப்பிடித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர், சிகரெட்டை தூக்கி வீசி விட்டு அவரும் கண்ணீர் விட்டார்.


பெரியாரின் தளபதிக்கு வீரவணக்கம்...

Sunday, October 24, 2021

கடவுள், மதம், கோயில்களை இன்னமும் கட்டிக் கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்?

 தந்தை பெரியாரவர்கள் நன்றியுரை ஆற்றுகையில் குறிப்பிட்டதாவது:-

இன்றைய தினம் எனக்குச் சிலை திறப்பு என்னும் பெயராலேஇந்தத் தர்மபுரியில் என்றும் காணாத அளவிற்குப் பெரும் விழாவாகக் கொண்டாடுகின்றனர்இங்குக் கூடி இருக்கின்ற இலட்சக்கணக் கான மக்கள் என்னைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று கூடியிருக்கின்றீர்கள்அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்என்னைப் புகழ்ந்து மிகப் பெருமைப்படுத்திபாராட்டிப் பலர் இங்கு பேசினார்கள்வைதால் கூடப் பொறுத்துக் கொள்ளலாம்மனதறிந்துநமக்குப் பொருத்தமில்லாத புகழ் வார்த்தைகளைக் கேட்கும் போது மனம் சங்கடப்படுகின்றதுஎன்றாலும்அவர்கள் மனம் நிறையும்படி என்னால் இயன்ற அளவுக்கு நடந்து கொள்கிறேன்என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நம் இயக்கத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும்;  நம் இயக்கம்  நாச இயக்கம்ஆக்க இயக்கமல்லஅழிவு இயக்கமாகும்நாசமான காரியங்களை ஆக்கவேலை யாகக் கொண்டிருக்கிற இயக்கமாகும்இந்த மாதிரி நாசவேலை செய்தவர்கள் எல்லாம் புராணங்களில்சரித்திரங்களில் பார்த்தால் அவர்கள் எல்லாம் அழிக்கப் பட்டு இருக்கின்றார்கள்நம் புலவர்கள் எல்லாம் நம்மை மூடநம்பிக்கைக் காரர்கள் ஆக்கிவிட்டார்கள்அவ்வளவு பெரும் எதிர்ப்புகளுக்கு இடையே நாம் தொண்டு செய்து நமக்கு முன்னோர்கள் அடைந்த கதியை அடையாமல் எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கின்றோம் என்றால்நாசவேலை செய்பவர்கள் கையில் ஆட்சியை ஒப்படைத்து இருக் கின்றோம்நாச வேலை செய்பவர்கள் என்றால் பகுத்தறிவுவாதிகள் - அறிவைக் கொண்டு சிந்திப்பவர்கள் - அறிவின் படி நடப்பவர்கள் ஆவார்கள்.

மூடநம்பிக்கை மக்கள் நிறைந்த இந்த நாட்டில் பகுத்தறிவாளர்கள் ஆட்சி என் றால் பலாத்காரத்தால் ஆட்சிக்கு வர வில்லைமக்களை ஏமாற்றி வரவில்லைஎங்கள் கொள்கை கடவுள் இல்லைமதம் இல்லைசாஸ்திரம்சம்பிரதாயம் இல்லை,  சாதி இல்லைஇவை யாவும் ஒழிக்கப்பட வேண்டும் என்று மக்களிடையே எடுத்துச் சொல்லிஅதன் மூலம் அவர்கள் ஓட்டு களைப் பெற்று அமைந்த ஆட்சியாகும்.

நமக்கு முதலமைச்சராக இருந்த அண்ணா அவர்கள்,  இராமாயணத்தைக் கொளுத்தியவர்புராணம்இதிகாசம் ஆகியவற்றை எல்லாம் கண்டித்துப் புத்த கம் எழுதியவராவார்பத்திரிகைக்காரன் எல்லாம் நமக்கு எதிரிகள் என்பதால்நம் கொள்கைகளை - செயல்களை வெளி யிடாமல் அதற்கு மாறானவற்றை விளம் பரம் செய்கின்றார்கள்என்றாலும்அப் படிப்பட்ட அண்ணா மறைவு எய்தியதற்கு 30 லட்சம் மக்கள் வந்தார்கள் என்பதை அவர்களால் மறைக்க முடியவில்லைவெளியிடாமல் இருக்க முடியவில்லை.  இந்த 30 இலட்சம் மக்களும் அண்ணா யார்என்று தெரியாமல் வந்தவர்கள் அல்லவே!  அவர் நாத்திகர் என்பதைத் தெரிந்து வந்தவர்கள் தானே?

அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்ட பூர்வமாக்கினார்கள் என்றால்கல்யாணத்திற்குக் கடவுள்மதம்சாதிபழைமைதேவையில்லைஓர் ஆணும்பெண்ணும் நாங்கள் சேர்ந்து வாழ்கின்றோம் என்று சொன்னால் போதும் என்று சொல்லிவிட்டாரேஇது இந்த ஆட்சிக்குக் கடவுள்-மதம்-சாஸ்தி ரங்களில்சாதிபழமைகளில் நம்பிக்கைக் கிடையாது என்பதைக் காட்டிக் கொள்வது தானேஇது அண்ணாவின் பெருமையா அல்லது வேறு யாரின் பெருமையா என்று கேட்கின்றேன்அதோடு மட்டுமில்லையேஅரசாங்க அலுவலகங்களிலிருந்த சாமி படங்களை எல்லாம் நீக்க வேண்டும் என்று உத்தரவுப் போட்டாரேஇதை வேறு எந்த ஆட்சியிலும் செய்ய முடியாதே!

இந்த ஊரில் எனக்குச் சிலை வைத் தார்கள் என்றால்இந்தச் சிலை என்ன மணியடிக்கிற சிலை இல்லைபூசை செய்கிற சிலை இல்லைகடவுள் இல்லைஎன்று சொல்கின்றவன் சிலைஇந்தச் சிலை ராமசாமியின் சிலையில்லைகடவுளைக் கற்பித்தவன் முட்டாள்கடவுளைத் தொழு கிறவன் காட்டுமிராண்டி என்று சொல்ப வனுடைய சிலையாகும்கடவுள் உண்டு என்பவர்களுக்கு இல்லை என்பதைக் காட்டுவதற்காக இது அமைக்கப்பட்டதாகும்இந்த ஆட்சி இன்னும் 10 வருஷம் இருந் தால் கோயில்களை எல்லாம் அவர்களா கவே இடித்து விடுவார்கள்.

நாம் இந்த ஒரு துறையில் மட்டுமல்லபல துறைகளில் மாற்றமடைந்து இருக்கின் றோம்ஆட்சி என்று உலகத்தில் எப்போது ஏற்பட்டதோ அன்று முதல்மூடநம்பிக் கைக்காரன் ஆட்சிதான்பார்ப்பான் ஆட்சிதான் நடைபெற்றிருக்கிறதுபார்ப் பானை மந்திரியாகக் கொண்டு பார்ப்பான் சொல்கிறபடி கேட்கிற ஆட்சிதான் நடை பெற்றிருக்கிறது.

பார்ப்பானுக்கு ஆட்சியில்இயக்கத்தில் இடமில்லை என்ற நிலை இப்போது தானேஅதுவும் நம்முயற்சியால் ஏற்பட்டிருக்கிறதுஇல்லை என்றால் இன்றும் பார்ப்பான் அல்லது பார்ப்பானின் அடிமைதான் ஆட்சி யிலிருப்பார்கள்நம்முடைய தொண்டின் காரணமாகபிரச்சாரத்தின் காரணமாகத்தான் பார்ப்பான் அரசியலை விட்டு வெளியேறும் படி ஆயிற்றுநமக்கு மேலே உயர்ந்தவன் எவனுமில்லைஅவன் மட்டும் என்ன உயர்ந்தவன்நீ மட்டும் ஏன் தாழ்ந்தவன்எதற்காக ஒருவன் பார்ப்பானாக இருப்பதுஇன்னொருவன் பஞ்சமன்பறையன்தீண்டப்படாதவனாக இருப்பதுஎன்கின்ற இது மாதிரிப் பிரசாரம் செய்ததாலே தான் இன்றைக்குப் பஞ்சமனைநாவிதனைபள்ளன்பறையனை எல்லாம் மந்திரியாக்கி இருக்கின்றோம்.  பல பெரும் உத்தியோகங் களில் நம்மவர் இருக்கும் படியாயிற்றுஇந்த நாட்டில் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று உண்மையில் பாடுபட்டவர்கள்தொண்டாற்றியவர்கள் எங்களைத் தவிர வேறு யாருமில்லை.

காங்கிரசாரும்காந்தியும் இந்தத் தீண் டாமையைக் காப்பாற்றும் வகையில்  தான் நடந்து கொண்டனரே தவிரதீண்டாமை ஒழிய வேண்டும் என்று கருதியது கூடக்  கிடையாதுநம் நாட்டில் தீண்டாமை இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

கடவுள்மதம்கோயில் இவற்றை எல் லாம் இன்னமும் கட்டிக்கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்ஒருவன் தீண்டத்தகாதவனாக இருப்பது அவன் வழி படுகிற கடவுளால்பின்பற்றுகிற மதத்தால்கோயிலுக்குப் போய் வெளியே நின்று கொண்டு கும்பிடுவதால் தானேஎனக்குக் கடவுளும் வேண்டாம்மதமும் வேண்டாம்என்னைத் தீண்டத்தகாதவனாக மதிக்கிற கோயிலுக்கு நான் போகமாட்டேன்என் கின்ற துணிவு வருகிறவரைத் தீண்டாமை நம்மை விட்டுப் போகாது.

இன்றைக்குக் காங்கிரஸ்காரன்தான்தீண்டாமையை ஒழித்ததாகப் பேசிக் கொண்டு திரிகிறான்.

நாங்கள் மலையாளத்தில் செய்த போராட்டத்தின் காரணமாகதிருவாங்கூர் காரன் கோயிலைத் திறந்து விட்டு நாயாடி களை எல்லாம் நுழையவிட்டான்.

நாங்களும் மத மாற்ற மாநாடு கூட்டிமக்களை எல்லாம் முஸ்லிம்களாக மாற்ற முற்பட்டபோதுபலர் இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு அந்த மாநாட்டிலேயே மாறிவிட்டனர்மாறியவுடன் அதுவரை ஈழவர்கள்கீழ்சாதிக்காரர்கள் நடக்கக் கூடாது என்றிருந்த இடங்களுக்குப் போக ஆரம்பித்ததும்மேல் சாதிக்காரர்கள் அவர்களை நுழையவிடாமல் தடுத்தனர்கலவரம் ஏற்பட்டதுஅதில் முஸ்லிமாக மதம் மாறிய ஒருவன் இறந்து போய்விட் டான்உடனே கலவரம் முற்ற ஆரம்பித்ததுஇந்து முஸ்லிம் கலவரமாக ஆக ஆரம் பித்து விட்டதுஎங்குப் பார்த்தாலும் கலகம் ஏற்படலாயிற்றுஇதைப் பார்த்துப் பயந்துஅப்போது இருந்த சி.பி.ராமசாமி அய்யர் எங்கள் ஆட்சியின் கீழுள்ள பொது  இடங்கள்கோயில்குளம்பள்ளிக்கூடம் எல்லாவற்றிற்கும்எல்லா மக்களும் செல்ல உரிமை உண்டுஎன்று திறந்து விட்டார்அதன் பிறகுதான் இங்கு இவர்கள்தீண்டப் படாதவர்கள் கோயிலுக்குள் செல்ல உரிமை வழங்கினர்அப்போது நான் காந்தியிடம் பறையர்களைக் கோயிலுக்குள் அனுமதித்ததன் மூலம் எங்களையும் பறை யனாக்கினீர்களே தவிரபார்ப்பான் போகிற இடம் வரை எங்களை அனுமதிக்கவில் லையே என்று கேட்டேன்உடனே காந்தி சூழ்ச்சியாக இந்துக்கள் போகிற இடம் வரை தான் பார்ப்பனர்களும் போகவேண்டும் என்று சொன்னாரே ஒழியபார்ப்பான் போகிற இடத்திற்கு நாம் போகலாம் என்று சொல்லவில்லை என்பதோடுநடைமுறை யில் பார்ப்பான் முன்பு போய்க் கொண்டி ருந்த இடம்வரை போய்க் கொண்டுதான் இருக்கின்றான்அதை ஒன்றும் அவன் மாற்றிக் கொள்ளவில்லை.

நாட்டின் சகல துறைகளிலும் பார்ப் பானின் ஆதிக்கமே இருந்து வந்ததுஆட்சித்துறைஅரசியல் துறைமதத்துறைஎல்லாவற்றிலும் அவனே ஆதிக்கத்தி லிருந்து வந்தான்.

எனக்குத் தெரிய முதன் முதல் அய்க் கோர்ட்டில் தமிழர் ஜட்ஜாக வந்தது ராமசாமி ரெட்டியார்முதலமைச்சராக இருந்த போதுதான் ஆகும்அதற்கு பின் ஒன்றிரண்டாக இருந்து இன்று 10 பேர்கள் தமிழர்கள் ஜட்ஜாக இருக்கிறார்கள் என் றால்அதற்குக் காரணம் இந்த ஆட்சி தான் ஆகும்.  இன்று அய்க்கோர்ட்டில் இருக் கின்ற 14 ஜட்ஜூகளில் 10 பேர்கள் தமிழர்கள்மீதி 4 பேர்கள் தான் பார்ப்பனர்கள்இன்னும் இரண்டு மாதம் போனால் தமிழர்கள் எண்ணிக்கை  12 ஆகிவிடும்பார்ப்பானின் ஆதிக்கம் தொலைந்ததுஇதனால் என்ன பயன் என்பீர்கள்நம் வக்கீல்களுக்கும்நம் மக்களுக்கும் அத னால் நல்ல வாய்ப்புக் கிடைக்கும்இன்னும் ஒரு மாதத்தில் அய்யா அவர்கள் டில்லி ஜட்ஜாக ஆவார் என்று நினைக்கின்றேன்நீதித்துறையில் மட்டும் அல்லகல்வி விஷயத்திலும் காமராசரைப் போலஅவரைவிட ஒருபடி அதிகமாகவே நடந்து கொள்கின்றனர்இதுவரை எஸ்.எஸ்.எல்.சி வரை சம்பளம் இல்லாமல் இருந்ததுஇப்போது கல்லூரி வகுப்பு (பி.யு.சிவரை இலவசமாக்கி இருக் கிறார்கள்நம் மக்களுக்கு இருந்த மற்றும் எத்தனையோ கேடுகள் இந்த ஆட்சி வந்தபின் நீங்கி இருக்கின்றனஇந்தக் கட்சியைப் போல இனஉணர்ச்சியுள்ளஅரசியல் கட்சி வேறு எதுவும் கிடையாதுஇந்தக் கட்சியைத் தவிர மற்ற கட்சிக்காரன் அனைவரும் பார்ப்பான் கையைப் பார்ப்ப வனாகத்தான் இருப்பான்பார்ப்பான் சொல் கிறபடி நடப்பவனாகத் தான் இருப்பான்.

நம் பத்திரிகை என்பவை ஆரம்பிக் கும் போது நம் படங்களைப் போட்டுகொள்கைகளைப் போட்டு மக்களிடையே பரவும்மக்களிடையே பரவிய பின் பார்ப்பானுக்கு வேண்டியவனாகி அவன் பிரசாரத்தை இவன் செய்ய ஆரம்பித்து விடுகின்றான்.

இன்று நம் பிள்ளைகள் அத்தனையும் படிக்கின்றனஇது மாடு மேய்க்கப் போகாதுஉத்தியோகம் வேண்டும் என்று தான் கேட்கும்நம்முடைய கடமை நம் இனத்தை ஆதரிப்பதே ஆகும்இன உணர்ச்சியோடு நம் இனத்திற்குத் தான் முதலிடம் கொடுக்க வேண்டும்மற்ற ஆட்சியிலில்லாத குறைகளோஅவற்றில் நடக்காத எந்தக் காரியங்களோ இந்த ஆட்சியில் நடைபெறவில்லையேநம் மக்களுக்கு இன உணர்ச்சிஅறிவுப் புத்தி இருக்க வேண்டும்இந்த ஆட்சி நம் ஆட்சி என்கின்ற எண்ணம் வேண்டும்இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்பார்ப்பானுக்கு இருக்கிற இன உணர்ச்சி நமக்கு வர வேண்டும்இந்த ஆட்சியில் நாம் பல முன்னேற்றங்களை அடைந்து இருக்கின்றோம்அந்த நன்றி நமக்கு இருக்க வேண்டும்.

நாமடைந்திருக்கின்ற நிலை நிரந்தர மான நிலையில்லைமுட்டுக்கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.  கையை விட்டால் கீழே விழுந்துவிடும் நிலையில் இருக்கின்றதுஅந்த நிலை மாறிநிரந்தரமாக நிற்கிற வரைநாம் இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

இந்தச் சிலை வைப்பதுபடம் திறப்பதுஞாபகச்சின்னம் வைப்பது போன்ற இவை எல்லாம் பிரசார காரியமே தவிர இது பெருமையல்லஒருவன் இது யார் சிலை என்றால் இது பெரியார் சிலை என்று ஒருத்தன் பதில் சொல்வான்பெரியார் என்றால் யார் என்று கேட்பான்உடனே அவன் பெரியாரைத் தெரியாதாஅவர் தான் கடவுள் இல்லை என்று சொன்ன வராவார் என்று சொல்லுவான்இப்படி நம் கருத்தானது பரவிக் கொண்டிருக்கும்அதற்கு ஒரு வாய்ப்புத் தான் இந்தச் சிலை யாகும்நான் இன்னும் வெகு நாளைக்கு இருக்க வேண்டுமென்று சொல் கிறார்கள்அவர்கள் மாப்பிள்ளை மாதிரி இருக்கிறார் கள்அதனால் தான் சொல்கிறார்கள்வெகு நாளைக்கு இருக்கிற எனக்கு அல்லவா அதன் தொல்லை தெரியும்?

நம் கருத்து மக்களிடையே பரவ வேண்டும்நம் கொள்கை பரவ வேண்டும் என்பது தான் இது போன்ற விழாக்களின் கருத்தாகும்.

24.5.1969 அன்று தர்மபுரியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.

('விடுதலை', 9.6.1969)

Saturday, October 23, 2021

குசேலருக்கு வெட்கமாக இருந்திருக்காதா??

 குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்து,குடும்பம் பெருத்து விட்டதாம்,அதனால் சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் திண்டாடினாராம்..

குசேலரின் பெண்ஜாதி வருசத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும், கைக்குழந்தைக்கு ஒரு வருஷமாகும் போது, மூத்த பிள்ளைக்கு 27 வருசம் ஆகி இருக்க வேண்டும்..

ஆகவே,

20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேர் இருந்திருப்பார்கள்..

இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசு கூட சம்பாதிக்காத சோம்பேறிகளா??

20 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சை எடுக்கப் போக குசேலருக்கு வெட்கமாக இருந்திருக்காதா??

அல்லது இந்த 7 பிள்ளைகளுக்காவது மான அவமானம் இருந்திருக்காதா??

அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக்காவது, தடிப்பயல்களை வைத்துக் கொண்டு பிச்சை எடுக்கிறாயே, வெட்கமில்லையா? என்று கேட்கக் கூடிய புத்தி இருந்திருக்காதா???

--பகுத்தறிவு இதழில், 1935 ல் பெரியார்

Monday, September 11, 2017

கட்டுரையை வாசிக்கும் முன்னரான சிறு குறிப்பு:
ராஜீவ் காந்தி படுகொலை பற்றி முன்பொருமுறை திருச்சி வேலுசாமியின்
புத்தகத்தை வாசித்த கையோடு எழுதியது இக்கட்டுரை.  இவ்வழக்கு விசாரணையில்இருக்கின்ற மிக மிக வெளிப்படையான சிலஅபத்தங்களைச்சுட்டிக்காட்டஇக்கட்டுரையை இப்போது மீளப்பகிர்கின்றேன்.இந்தக் கொலையை யார் செய்தார்கள் / செய்யவில்லை என்பதைவிட இவ்வழக்குவிசாரணையின் அபத்தங்களும், வேண்ட்மென்றே சில விடயங்கள் கடந்துசெல்லப்பட்டதன் பின்னால் இருக்கக்கூடிய சதிவலையும் கவனிக்கப்படவேண்டும்என்பதும் மரண தண்டனை ஒழிப்பு மீதான அக்கறையுமே இப்போது என்னிடம் மேலோங்கி நிற்கின்றது என்றென்றும்  அன்புடன்அருண்மொழிவர்மன்
அவிழ்க்கப்படாத மர்மங்களுடன் இருக்கின்ற அரசியற் படுகொலைகள்
தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.  அந்த வகையில் ராஜீவ் காந்தி
படுகொலையும் ஒன்று.  அதுவும் ராஜீவ் காந்தியின் படுகொலை ஒரு இனத்தின்
தலையெழுத்தையே மாற்றி எழுதியதில் பெரும்பங்கு வகித்தது என்பதை நாம் கடந்த
காலங்களில் கண்கூடாகவே கண்டிருக்கின்றோம்.
1991ம் ஆண்டு மே 21ம் திகதி இரவு கொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின்
கொலை வழக்கின் விசாரணைகள் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதுடன், 5 ஆண்டுகாலம்
விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி மாற்றப்பட்டு புதிதாகப் பொறுப்பேற்ற
நீதிபதி சில மாதங்களிலேயே ஐந்தாண்டுகால விசாரணை பற்றிய ஆவணங்களையெல்லாம்
படித்தறிந்து 26 பேருக்குத் தூக்குதண்டனையும் வழங்கினார்.  இந்தக்
கொலையில் எந்த விதமான சட்ட நுணுக்கங்களும், துப்புத் துலக்கவேண்டிய
தேவைகளும் இல்லாமல் இந்த விசாரணை நடத்தபட்ட முறையிலும், அதில்
சாட்சியங்களைச் சேர்த்தது, குறிப்பிட்ட சிலரை விசாரணை செய்யாமல்
தவிர்த்தது போன்ற மிகச் சாதாரணமாக வெளித்தெரிகின்ற ஓட்டைகளை முன்வைத்து
திருச்சி வேலுசாமி ஜெயின் கமிஷன் முனிலையில் தனது மனுவினைத் தாக்கல்
செய்திருந்தார்.  தனது மனுவில் சுப்ரமணிய சாமியையும், சந்திரசுவாமியையும்
குற்றம் சாற்றி இருந்த வேலுச்சாமி அதற்கான மிக எளிதான ( கணித பாடத்தில்
வெளிப்படை உண்மை என்று படிப்போமே அதை விட வெளிப்படையான உண்மைகள் இவை)
காரணங்களையும் பட்டியல் போட்டிருந்தார்,  ஆனால் துரதிஸ்ட வசமாக
சுவாமியும் சாமியும் சரியான முறையில் விசாரிக்கப்படாததுடன் வழக்கு
தனக்கேயுரிய எல்லாவிதமான ஓட்டைகளுடன் அப்படியே மூடிக்கட்டப்பட்டது.
இது பற்றி குமுதம் இணையத்தில் பேட்டி ஒன்றினைக் கொடுத்திருந்த திருச்சி
வேலுச்சாமி, பின்னர் அந்தப் பேட்டியையே “ராஜீவ் காந்தி படுகொலை வெளிவராத
மர்மங்கள்” என்ற பெயரில் ஒர் சிறு புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார்.
நாம் வாழ்ந்த காலத்திலேயே நடந்து, நம் இனத்தின் தலைவிதியையும் பாதித்த
இந்தக் கொலைவழக்கு கொண்டு செல்லப்பட்ட விதம் பற்றிய மர்மங்களை நிச்சயம்
எல்லாரும் படிப்பதும் தொடர்ந்து கேள்வி எழுப்புவதும் முக்கியமானதாகும்.
இந்தக் கொலையை யார் செய்தார்கள் என்று பேசுவதற்கு முன்னர் இந்தக்
கொலைக்குப் பின்னால் இருக்கக்கூடிய மிகப்பெரிய சதிவலையையும், சதிவலையில்
இன்னும் நிறையப் பேர் பங்குபற்றி உள்ளனர் என்றும் ஆராயவேண்டியது
முக்கியமானது என்று நினைக்கின்றேன்.  மாறாக கொலை நடந்து காவல்துறை
ஆரம்பகட்ட விசாரணையையே ஆரம்பிக்க முன்னரே எல்லா உள்நாட்டு, வெளிநாட்டு
ஊடகங்களும் சுப்பிரமணியசுவாமியையே மேற்கோள்காட்டி இந்தக் கொலையை புலிகள்
செய்தனர் என்ற செய்தியை வெளியிட்டனர் என்பதில் தொடங்கி ஆரம்பிக்கின்றது
இந்த கொலை தொடர்பான மர்மமுடிச்சுகள்.
திருச்சி வேலுச்சாமி எழுப்புகின்ற எளிய கேள்விகள் சில

   1. ராஜீவ்காந்தி படுகொலையை விசாரித்த ஜெயின் கமிஷனின் இறுதி
அறிக்கையில் கடைசியாக “இந்தக் கொலையில் உண்மையான குற்றவாளிகளை இன்னும்
கண்டுபிடிக்கப்படவில்லை என்று இந்த கமிஷன் கருதுகின்றது.  ஆகவே உண்மையான
குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணையை இன்னும் தீவிரப்படுத்தவேண்டும்”
என்று சொன்ன ஜெயின் கமிஷன் அதற்கு காரணமாக திருச்சி வேலுச்சாமி கொடுத்த
வாக்குமூலத்தையும் குறிப்பிட்டிருந்தது.  அந்த வாக்கு மூலத்தில் திருச்சி
வேலுச்சாமி சுப்ரமணிய சுவாமியையும் சந்திரசாமியையுமே குற்றஞ்சாற்றி
இருந்தார். (பக்கம் 13)
   2. மே 21ம் திகதி இரவு 10 15 மணிக்கு ராஜீவ் கொலைசெய்யப்பட்டு பின்னர்
அது தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் மறுநாள் காலை 9 மணிக்குத்தான்
ஆரம்பமாகின.  ஆனால் இரவு 11 மணிக்கு முன்னரே சுப்ரமணிய சுவாமி
ஊடகங்களுக்கு ராஜீவ் காந்தி படுகொலையை விடுதலைப்புலிகளே நிகழ்த்தியதாக
சொல்லி இருக்கின்றார் (பக்கம் 14)
   3. கொலை நடந்த இடத்தில் இருந்த ஜெயந்தி நடராஜனும் மூப்பனாருமே கூட
கொலை நடந்து 30 நிமிடங்களின் பின்னரே ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்டதை
உறுதி செய்திருக்கின்றனர்.  ஆனால் 10;20க்கே அதாவது 5 நிமிட நேரத்தில்
வேலுச்சாமி சுப்ரமணியசுவாமியுடன் மறு நாள் நடைபெற உள்ள கூட்டம் பற்றி
பேசிய போது ராஜீவ் காந்தி இறந்துவிட்டார் என்று சுப்ரமணிய சுவாமி
கூறுகிறார்.  (இது நேர்காணல் ஒளிவடிவத்தில் உள்ளது)
   4. மே 22ம் திகதி சுப்ரமணிய சுவாமி மதுரையில் பேச இருந்த கூட்டம்
ராஜீவ் கொலை காரணமாக ரத்துச் செய்யப்படுகின்றது.  ஆனால் ராஜீவ் கொலை
ஆகும் முன்னரே அதற்கான விமான டிக்கட்டை சுப்ரமண்ய சுவாமி ஏன் உறுதி
செய்யவில்லை / ஏன் ரத்துச் செய்தார்.
   5. ராஜீவ் இறந்த போது அவருக்கு மிக அருகில் இருந்து உயிர் தப்பிய
அனுசுயா என்கிற காவல்துறை அதிகாரி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் தா.
பாண்டியன் போன்றோரிடம் சரியான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இது போன்ற மிக எளிய கேள்விகளின் மூலம் ராஜீவ் காந்தி கொலையிலும் வழக்கு
விசாரணையிலும் அனேக மர்மங்கள் இருக்கின்றன என்கிற நியாயமான கேள்விகளை
முன்வைக்கின்றார் திருச்சி வேலுச்சாமி.  இது தொடர்பான வீடியோ
இணைப்புகளையும் கீழே தருகின்றேன்

Sunday, April 20, 2014

மூவர் விடுதலை தீர்ப்பு குறித்த அறிவிப்பையும் அரசியலாக்குவது ஒரு முதிர்ந்த அரசியல் தலைவருக்கு அழகல்ல - கொளத்தூர் மணி

உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு சதாசிவம் அவர்கள் கோவையில் 18-04-2014 அன்று நடைபெற்ற நீதிபதிகளின் மாநாட்டின் முடிவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்  “வழக்கின் தீர்ப்பினை ஒரு வாரத்திற்குள் (தான் ஓய்வு பெறும் நாளுக்கு முன்னதாகவழங்கப்படும்,அதுவரைப் பொற்த்திருங்கள்”,  எனக் கூறியுள்ளார்.

அவரது பதவிக்காலம், அவரது பிறந்த நாள் அடிப்படையில் 26-04-2014 - உடன் நிறைவடைகிறது. அந்த அடிப்படையில் 25-04-2014க்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றும், அதுவரை பொறுத்திருங்கள் என்றும் கூறியுள்ளார். அவர் பேட்டியில் கூறியிருக்கா விட்டாலும், எந்த ஒரு நீதிபதியும் தான் விசாரித்த வழக்குகளின் தீர்ப்பை, தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக வழங்குவது என்பது மரபான ஒன்றுதான்.
ஆனால் ஏதோ 24-04-2014 அன்று தமிழ்நாட்டில், நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுவதைக் கணக்கில் கொண்டே, பேட்டி கொடுக்கப்பட்டதைப் போல, தலைமை நீதிபதியின் இயல்பான பேட்டியை விமரிசனம் செய்து தி.மு.. தலைவர் கலைஞர் தனது தேர்தல் பரப்புரையில் கூறியிருப்பது அனைவரையும் முகம் சுளிக்கச் செய்துள்ளது.

மரண தண்டனையிலிருந்து மீண்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவர் உள்ளிட்ட எழுவரையும் விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா? இல்லையா? என்பதே வழக்கின் அடிநாதமாய் உள்ள பொருளாகும். அவ்வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்தால் கலைஞர் தொடர்ந்து எழுப்பிவரும்  “மத்தியில்  கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சிஎனும் கருத்துக்கு வலுசேர்ப்பதாகவே அது அமையும்.

எதையும் அரசியலாக்கி அரசியல் சதுரங்கம் விளையாடுவதைப் போலவே - தமிழின உணர்வாளர்களும், மனிதநேயப் பற்றாளர்களும் ஏங்கி எதிர்பார்த்து நிற்கும் தீர்ப்பு குறித்த அறிவிப்பையும் அரசியலாக்குவது ஒரு முதிர்ந்த அரசியல் தலைவருக்கு அழகல்ல.

இருபத்து முன்றாண்டு காலம் சிறையில் வாடும் எழுவருக்கும், அது போலவவே இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் போன்றோருக்கான விடுதலைக்கும் முன்னோடியாக உள்ள இத்தீர்ப்பு குறித்து திசைதிருப்பும் திருகல் வாதங்களை முன்வைக்கும் கலைஞரின் சுயநல அரசியல்போக்கைத் திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.  

நீண்ட நெடிய உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஒரு தமிழர் தலைமை ஏற்று அமர்ந்துள்ளார். அவரது குறைவான பதவிக் காலத்தில் முத்திரைப் பதிக்கும் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

தனது தீர்ப்புகளில் எல்லாம்டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மேற்கோள்களைப் பொருத்தமாக சுட்டிக்காட்டித் தீர்ப்பை எழுதும் பழக்கமுள்ள அவர், பதினைந்து பேர்களின் மரண தண்டணையை ஆயுள் தண்டணையாக குறைத்து வழங்கிய தீர்ப்பு, எதையும் அழுத்தம் திருத்தமாக, தெளிவாக சொல்வதில் நமது அரசியல் சட்டம் பெரிதும் மதிக்கப்படுகிறது என்றே  தொடங்குகிறது. மேலும், அரசின் எந்நிலையில் உள்ளோர் பிறப்பித்த ஆணையாக இருந்தாலும் அதைப் பரிசீலிக்கிற உரிமையை நீதிமன்றங்களுக்கு வழங்கியுள்ள பிரிவு 32ஐக் குறிப்பிட்டு அம்பேத்கர் கூறியுள்ள மேற்கோளையும் எடுத்துக் கூறியே, தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கலாம். அதை பயன்படுத்தியே முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த மாண்புமிகு கே.ஜி. பாலகிருஷ்ணன் கேரளத்தவர் என்பதால் ஓணம் பண்டிகைக்கு விடுமுறை அறிவித்தார். ஆனால் மாண்புமிகு சதாசிவம் அவர்களோ புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14- உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக விடுமுறை அறிவித்து அம்பேத்கருக்கு தனது நன்றியை, மரியாதையை வெளிப்படுத்தினார்.

சட்ட உதவி மையம் என்பது நீதித் துறையில் போதிய நிதியின்றி திணறியபடி இயங்கிவந்த அவல நிலையை மாற்றி, ஏழை எளிய மக்களும் தங்களுக்கான நீதியைப் பெறுவதற்கு வாய்ப்பாக அரசே தனியாக சட்ட உதவி வாரியத்தை உரிய நிதி ஒதுக்கீடோடு அமைத்திட வேண்டுமென அவர் பரிந்துரைத்து வழிவகை கண்டது அடித்தட்டு மக்களின் நலனில் அக்கறையுள்ள அனைவரும் போற்றி வரவேற்ற ஒன்றகும்.

மேலும், மனித மலத்தை மனிதனே அள்ளும் கொடுமைக்கு முடிவுகட்டி வழங்கிய  தீர்ப்பும் மனிதநேயர் அனைவரின் வரவேற்பையும் பெற்றது.

உச்ச நீதிமன்ற நீதி காலத்தில், ஸ்டெய்ன்ஸ்   பாதிரியார் வழக்கில் தண்டனை பெற்ற தாராசிங்கின் தண்டனையை உறுதி செய்தது, தனியார் முதலாளிகளின் நலனுக்குக்காக மக்களின் நலனுக்கு எதிராக நிலங்களை கையகப்படுத்தல் கூடாது என்ற அறிவுரையோடு, கெய்ல் நிறுவன நில ஆக்கிரப்பை எதிர்த்து தீர்ப்பு, பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு கருணை காட்டி சிறையில் இருந்த காலத்தை தண்டனையாகக் கருதி விடுவிக்கும் போக்கைக் கண்டிக்கும் குறிப்புரையோடு அவ்வழக்குகளில் தண்டனைகளை உறுதி செய்தது, புகழ் பெற்ற நடிகரான சஞ்சய்தத்துக்கு ஐந்தாண்டு தண்டனையை வழங்கியது என பல முத்திரைத் தீர்ப்புகளை வழ்ங்கியவர் நீதிபதி சதாசிவம் அவர்கள்.

அவ்வாறான ஒரு நீதிபதியை, தமிழருக்கு, தமிழ்நாட்டுக்குப் புகழ் சேர்த்த ஒரு நீதிபதியை, தன் சுயநல அரசியல் நோக்கத்திற்காகக் களங்கப்படுத்துவது  மேலும் கண்டிக்கத்தக்கதும், அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியதுமாகும்.

இடம்: மேட்டூர் அணை                                                                                    கொளத்தூர் தா.செ.மணி
நாள்: 21.04.2014  தலைவர், தி.வி.