Saturday, April 25, 2009

உடனடியாக சண்டையை நிறுத்துங்கள்: அமெரிக்கா கோரிக்கை

நியூயார்க் (ஏஜென்சி), சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2009 ( 13:27 IST )
இலங்கையில் நடைபெற்றுவரும் சண்டையால் அப்பாவி மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம் கவலையளிக்கிறது என்று கூறியுள்ள அமெரிக்க அரசு, சிறிலங்க அரசும், விடுதலைப் புலிகளும் உடனடியாக சண்டையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.இலங்கை இனப் பிரச்சனைக்கு இராணுவத் தீர்வ காண சிறிலங்க அரசு முற்பட்டால் அது இலங்கையின் ஒற்றுமைக்கே ஆபத்தாக முடியும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளது.அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பொறுப்பேற்றப் பிறகு இலங்கைப் பிரச்சனையில் வெள்ளை மாளிகை இன்று முதல் முறையாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
“சிறிலங்க அரசிற்கும் தமிழ் புலிகளுக்கும் இடையே நடைபெற்றுவரும் போரினால் அப்பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்கள் அனுபவித்துவரும் துயரம் அமெரிக்காவை மிகவும் கவலை கொள்ளச் செய்துள்ளது. அங்கு பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு தரப்பினரும் உடனடியாக சண்டையை நிறுத்தி அங்கு சிக்கியுள்ள அப்பாவி மக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ள வெள்ளை மாளிகை அறிக்கை, மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும், போர் பகுதியி்ல் இருந்து வெளியேறியுள்ள மக்களுக்கு உதவிட சர்வதேச குழுக்களையும், ஊடகங்களையும் அனுமதிக்குமாறும் சிறிலங்க அரசை கோரியுள்ளது.போர் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை அனுப்புவது தொடர்பாக சர்வதேச கூட்டாளிகளுடன் அமெரிக்கா ஆலோசித்து வருவதாக கூறியுள்ள வெள்ளை மாளிகை அறிக்கை, இராணுவ நடவடிக்கை மூலம் இனப் பிரச்சனைக்குத் தீ்ர்வு காண்பது இலங்கையின் ஒற்றுமைக்கு ஆபத்தாக முடியும் என்று எச்சரிக்கை செய்துள்ளது.
“இலங்கை இனப் பிரச்சனையை இராணுவ நடவடிக்கையின் மூலம் முடித்துவிட முனைவது தற்பொழுது தொடரும் இந்த துயரத்தை மேலும் சிக்கலாக்கிவிடும் என்பது மட்டுமின்றி, அது இரண்டு இனங்களுக்கும் இடையே மேலும் பகைமையை வளர்த்துவிடும். அதன் பிறகு பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பதற்கான வாய்ப்பைபிற்கும், இலங்கையின் ஒற்றுமைக்கும் அது முடிவு கட்டிவிடும்” என்று அறிக்கையில் கூறியுள்ளது.சிறிலங்க அரசும் விடுதலைப் புலிகளும் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்குட்பட்டு நிற்கவேண்டு்ம் என்றும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்கள் தங்களுக்கு மிகுந்த கவலையளிக்கிறது என்றும், அதனை அமெரிக்கா மிக கடுமையாக எடுத்துக் கொள்ளும் என்றும் எச்சரித்துள்ளது.
மூலம் - வெப்துனியா

இலங்கை அரசு மீது உலகநாடுகள் அதிருப்தி : ஹில்லாரி

வாஷிங்டன், வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2009

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவித் தமிழர்களைக் கொல்லும் இலங்கை அரசின் நடவடிக்கை அதிருப்தியளிப்பதாக அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அயலுறவு விவகாரங்களுக்கான பேரவையில் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், " அப்பாவித் தமிழர்களை கொல்லப்படுவதால் உலகநாடுகள் அதிருப்தி அடைந்துள்ளதை இலங்கை அரசு உணர்ந்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இலங்கை அரசு தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், உலக மக்களிடையே சொல்ல முடியாத அளவு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது " என்றார்.இலங்கையின் தற்போதைய சூழ்நிலை “மனிதப் பேரவலம்” எனக் குறிப்பிட்ட ஹில்லாரி, போரை நிறுத்தும்படி இலங்கை அரசை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், இதன் மூலமே போர்ப் பகுதியில் சிக்கியுள்ள பல ஆயிரக்கணக்கான மக்களை மீட்க முடியும் என்றும் கூறினார்.போர் நிறுத்தப்படுவது அல்லது போரை முடிவுக்கு கொண்டு வருவதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் மட்டுமின்றி அரசியல் தீர்வும் கிடைக்கும் என்பதை அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளதாகவும் ஹில்லாரி அப்போது தெரிவித்தார்.
மூலம் - வெப்துனியா

Thursday, April 23, 2009

அடுத்தது நாடகம் என்ன?

ராஜினாமா டிராமா முடிஞ்சுது. மனித சங்கிலி நீ்ட்டமா 60 கிலோ மீட்டர் போச்சு, உண்ணாவிரதம் நல்லபடியா போச்சு. கடிதம் எழுதியாச்சு. அதவிட வேகமா போகனும்னு தந்தியும் அடிச்சாச்சு. பேரணி நடத்திக் காமிச்சாச்சு. உணர்ச்சித்தமிழர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போட்டாச்சு, இப்போ பொது வேலை நிறுத்தம்.அடுத்தது என்ன? சவ ஊர்வலம் தான? எது பண்றதாருந்தாலும் முன்னாடியே சொல்லிடுங்க. அடிக்கடி உங்களையெல்லாம் திட்டி திட்டி வாய் வலிக்கறது தான் மிச்சம். அதுசரி. மனுஷனா இருந்தா உரைக்கும். தெருத் தெருவா ஒட்டு பொறுக்குற நாய்ங்களுக்கு (நாய்கள் சங்கம் மன்னிக்கவும்) எப்படி உரைக்கும்?அப்புறம். ஊர்வலத்தின் போது தாரை தப்பட்டைக்கு பதிலா ஜால்ரா அடிக்கனும்னா செலவே இல்லாம நிறைய பேர் வருவாங்க. தாரை தப்பட்டை செலவ மிச்சம் பிடிச்சு அதுல ஏதாவது புதுசா சேனல் ஆரம்பிச்சு உங்க மகத்தான சேவையை தொடருங்க.கடைசியா வயித்தெரிச்சலுடன் ஒரு சாபம் - உங்க யாருக்கும் நல்ல சாவே வராது.அளவில்லா எரிச்சலுடன்தமிழன் என சொல்லிக்கொள்ள வெட்கப்படுபவன்.

Wednesday, April 22, 2009

சிறிலங்கா இராணுவம் தமிழ்மக்களை மிருக வெறி கொண்டு தாக்குகிறது; இதுபோன்று படுகொலை உலகில் எங்குமே நிகழ்ந்ததில்லை: ஜெயலலிதா

’இலங்கையில் பாதுகாப்பு வளையத்தில் சிக்கி இருக்கும் தமிழர்கள் அனைவரையும் இலங்கை இராணுவம் மிருக வெறி கொண்டு தாக்கி வருகிறது. தப்பி ஓடுபவர்களை எல்லாம் இலங்கை இராணுவம் விரட்டி அடித்துக் கொள்கிறது. என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:-அங்கே தமிழ் இனமே அழிந்து கொண்டிருப்பதாக கவலை தரும் செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற இனப் படுகொலை உலகத்தில் எங்குமே நிகழ்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் முதல்வர் கருணாநிதி தெளிவான முடிவை, தைரியமாக எடுக்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள். பல நாடுகளில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால் கருணாநிதி உடனடி நடவடிக்கை எதையும் எடுக்காமல், நிமிடத்திற்கு ஒரு பேச்சு பேசிக் கொண்டிருக்கிறார். மீண்டும் மீண்டும் தந்தி கொடுப்பதுதான் கருணாநிதிக்கு தெரிந்த ஒரே தீர்வு போலும்.
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்த நிமிடத்தில் நமது ஒரே முழக்கம். அதற்கு அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அதை இந்திய அரசு உடனடியாகச் செய்ய வேண்டும். அதற்கு தமிழக முதலமைச்சரின் பங்கு என்ன என்பதுதான் எல்லோரும் கேட்கும் கேள்வி. இந்த நேரத்திலாவது கருணாநிதி ஒரு முதலமைச்சராக செயல்பட்டு மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும். எஞ்சியுள்ள தமிழர்களை காப்பாற்ற முன்வர வேண்டும். இல்லையெனில் வரலாறு எப்படி அவரை மன்னிக்கும்? ’’என ஜெயலலிதா கூறியுள்ளார்.

Tuesday, April 21, 2009

இந்திய அரசாங்கத்தின் நேரடி உதவிகளுக்கு இலங்கை மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும்: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா

இலங்கையில் ஊடறுத்துள்ள பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கு நட்புறவு நாடுகள் வழங்கிவரும் இராணுவ ரீதியிலான உதவிகள் பாராட்டிற்குரியவை என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறைமையையும் பிரதேசத்தின் தன்னாதிக்கத்தினையும் பாதுகாப்பதற்கென இந்திய அரசாங்கம் வழங்கிவரும் நேரடி உதவிகளுக்கு நாட்டு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் இராணுவ தளபதி மேலும் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது இந்நியா உள்ளிட்ட பல நட்புறவு நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்குத் தேவையான அனைத்துவித இராணுவ உதவிகளையும் வழங்கி வருகின்றன.
இந்நிலையில் இலங்கை இராணுவ வீரர்களுக்குத் தேவையான பயிற்சிகளையும் வழங்க அந்நாடுகள் முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும். விடுதலைப் புலிகள் இயக்கமானது முழு நாட்டினையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் ஈழம் இராச்சியத்தை அமைப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர் என்று பாதுகாப்பு தரப்பினருக்கு இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. அவர்களின் இந்த கனவு ஒருபோதும் நனவாகிவிட இராணுவத்தினர் இடமளிக்கப் போவதில்லை.
இலங்கை மக்கள் ஒற்றுமையாக வாழ்வதன் மூலமே பலமான அபிவிருத்தியுள்ள நாட்டினைக் கட்டியெழுப்ப முடியும். இன அடிப்படையில் நாட்டைப் பிரிப்பது நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதை அனைத்து இன மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். இந்நிலையில் இராணுவத்தின் பலத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் இராணுவத்தின் பலத்தை ஒன்றுதிரட்டும் நீண்ட கால நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டுமானால் இராணுவம் முற்றாக புனரமைக்கப்பட வேண்டும் என்றார்.
கூட்டமைப்பினரின் போர்நிறுத்த கோரிக்கையினை நிராகரித்த இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு நன்றி - அரசாங்கம் தெரிவிப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் போர்நிறுத்த கோரிக்கையை நிராகரித்த இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு தொடர்பில் அந்நாட்டுக்கு இலங்கை மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றது. பிராந்திய வல்லரசான இந்தியா ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றமை பிராந்தியத்தை மேலும் பலப்படுத்தும் விடயமாகும்.
விரைவில் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். மேலும் சில தினங்களில் புலிகளிடமிருந்து அனைத்து சிவிலியன்களையும் பாதுகாப்பு படையினர் மீட்டுவிடுவர். உலகில் பிரதேசங்களை கைப்பற்றியுள்ள பயங்கரவாத இயக்கங்களை எவ்வாறு தோற்கடிப்பது என்பதற்கு இலங்கை இராணுவத்தினர் சிறந்த முன்னுதாரணத்தை வழங்கியுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஊடகத்துறை அமைச்சில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழின துரோககாங்கிரசுக்கு வாக்கு போடாதீர்

19.04.09 மாலை 4.00 மணிக்கு சேலம் இளம்பிள்ளையில் ஈழமக்களை இத்தாலி சோனியா ஆதரவுடன் இந்தியப்படையின் துணையுடன் நச்சுவாயு குண்டுகளை வீசி கொன்றுக்குவிக்கும் சிங்கள இந்தியப்படையினை கண்டித்து இலங்கை அரசுக்கு இன்றுவரை துணை நிற்க்கும் காங்கிரசு அரசை வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டி காயக்கட்டு ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் தி.க மாவட்ட இணைசெயலாளர் முத்துமாணிக்கம் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் ஈழத்தமிழரை கொன்று குவிக்கும் காங்கிரசை புறக்கணிப்பீர், வாக்குக்காக தமிழர்களை தேடிவரும் சோனியாவை தமிழகத்தில் அனுமதிக்க மறுப்போம், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும்,
தமிழர்களே தமிழர்களே மன்றாடி கேட்கின்றோம், காலில் விழுந்து கேட்கின்றோம் உங்கள் மானமுள்ள வாக்கை தமிழின துரோக காங்கிரசுக்கு போடாதீர்- கை சின்னத்திற்கு போடாதீர் என்று முழக்கமிட்டு சென்றனர். ஊர்வலத்தில் 100 கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.











ஈழத்தமிழர்மீது இரசாயன குண்டு வீச்சுக்கு எதிர்ப்பு - பெரியார் தி.க ஆர்ப்பாட்டம்-ஊர்வலம்

ஈழத்தமிழர்மீது படுகொலை தாக்குதலை அதிகரித்து உலகநாடுகள் தடை செய்யப்பட்ட இரசாயன எறிகுண்டுகளை ஏவி வன்கொடுமை தாக்குதல் மேற்கொண்டுள்ள சிங்கள காடையர்களையும் அவர்களுக்கு துணை போகும் இந்திய அரசை கண்டித்தும் இக்கொடுமைகளையெல்லாம் கண்டும் காணாம்மல் இருக்கும் முதல்வர் கருணாநிதி அரசை கண்டித்து கண்டன ஊர்வலம் ஆர்ப்பாட்டம் பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பில் சேலம் தீயணைப்பு நிலையத்தில் துவங்கி கண்டன முழக்கங்களுடன் பழைய பேருந்து நிலையம் மத்திய தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழினம் அனாதையாகி விட்டதா, உலகில் தடைசெய்யப்பட்ட இரசாயன குண்டுகளுக்கு ஆயிரம் ஆயிரமாய் தமிழர்கள் பலியாகிரார்களே சிங்களர்களுக்கு ஆயுதம் வழங்கிவிட்டு தமிழர்களிடம் வாக்கு கேட்கவரும் காங்கிரசே போரை நிறுத்து, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு, சிங்கள இராணுவத்தை வழிநடத்தி செல்லும் இந்திய இராணுவ வல்லுனர்களை திரும்பபெரு, தேர்தல் களம்காணும் அரசியல் கட்சிகளே ஈழப்போர்களத்தில் எம் இன தமிழர்களும் குழந்தைகளும் பிணமாவதை எதிர்த்து குரல் கொடுங்கள் உணர்ச்சியுள்ள தமிழர்களே ஈழத்தில் போரை நிறுத்தும்வரை போராட வாருங்கள் என முழக்கமிட்டு ஊர்வலமாக வந்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் தி.க மாவட்ட செயலாளர் அ.சக்திவேல் தலைமை தாங்கினார். மற்றும் தோழமை அமைப்புகள் கலந்துகொண்டனர்.