Saturday, March 21, 2009

தேசிய பாதுகாப்பு சட்டத்தை கூட்டணி பாதுகாப்புக்கு பயன்படுத்தாதே

பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், ம.தி.மு.க. கொள்கை பரப்புச்செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைதை கண்டித்தும், 3 பேரையும் விடுவிக்க கோரியும் நேற்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

16.03.09 காலை 11.00 மணிக்கு சேலம் போஸ் மைதானத்தில் கழக சார்பில் மாவட்ட தலைவர் மார்ட்டீன் தலைமையில் கழக தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான், நாஞ்சில் சம்பத் ஆகியோர் கைதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 150க்கும் மேற்பட்ட கழக தோழர்கள், ஆதரவு அமைப்பு தோழர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை கூட்டணி பாதுகாப்புக்கு பயன்படத்தாதே, நசுக்காதே நசுக்காதே கருத்துரிமையை நசுக்காதே,தேசிய பாதுகாப்பு சட்டத்தை கூட்டணி பாதுகாப்புக்கு பயன்படத்தாதே திரும்பபெரு போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க, குடியுரிமை பாதுகாப்பு நடுவம், மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், சட்டக்கல்லுரி மாணவர்கள், தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி , தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட ஆதரவு அமைப்புகள் கலந்துகொண்டன.

கோவையில் ஆர்ப்பாட்டத்துக்கு பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி , விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் சுசிகலையரசன், ம.தி.மு.க. சார்பில் சேதுபதி, ராமகிருஷ்ணன், கவுன்சிலர் ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் மு.கிருஷ்ணசாமி, திலக்கபாபு, ஆதித்தமிழர் விடுதலை முன்னணி ரவிக்குமார், தலித் விடுதலை கட்சியை சேர்ந்த எம்.பி.செங்கோட்டையன், நிலவேந்தன் மற்றும் தேவேந்திரன், வக்கீல் காந்தி, முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கு.இராமகிருட்டிணன் கூறும்போது, பாதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை காப்பாற்ற அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய இந்த நேரத்தில், 3 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தததை கண்டிக்கிறோம். காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து பேசக்கூடாது என்பதற்காகவும், வாய்ப்பூட்டு போடவும் தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி உள்ளனர். இந்த விடயத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கு.இராமகிருட்டிணன் கூறினார்.




திண்டுக்கல்லில் மாலை 4.00 மணியளவில் பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் துரை.சம்பத் தலைமையில் நகராட்சி அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் க.சூ.இரவணா, ம.தி.மு.க மாவட்டச்செயலாளர் செல்வராகவன், விடுதலைச்சிறுத்தைகள் நகரச்செயலாளர் அன்பரசு, திருச்சித்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் பேட்ரிக் சகாயராஜ், அருட்திரு பிலிப் சுதாகர், தமிழர் தேசிய இயக்க மாநிலத் துணைத்தலைவர் கு.செ.வீரப்பன், புரட்சிகர இளைஞர் முன்னணி பாண்டியன், சி.பி.ஐ.( எம்.எல்) மாவட்டச்செயலாளர் ஆபிரகாம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பெ.தி.க நகரத் தலைவர் துரை.சுப்பிரமணி நன்றி கூறினார்.
பெரியார் நம்பி, பழனி நல்லதம்பி, திருச்செல்வம், முருகன், குணா, செம்பட்டி ஆல்பர்ட், பாரத், கிருட்டிணமுர்த்தி உட்பட பல தோழர்களும் கலந்துகொண்டனர்.
இதே போல் திருப்பூர் , சேலம் , ஈரோடு மற்றும் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளது.





என் உயிருக்கு பாதுகாப்பு கொடுத்தவர்கள் விடுதலைப்புலிகள் தான். வை.கோ

என்னை கள்ளத்தோணியில் சென்று வந்தவன் என்றும், உயிர் பிச்சை கொடுத்ததாகவும் முதலமைச்சர் சொல்கிறார். ஆனால் உண்மையில் என் உயிருக்கு பாதுகாப்பு கொடுத்தவர்கள் விடுதலைப்புலிகள் தான். இவ்வாறு காந்திபுரம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் வைகோ தெரிவித்தார்.

மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத், பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த தமிழக அரசை கண்டித்து கோவை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்றுக்காலை 10 மணி அளவில் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்துக்காக ஒரு லாரியில் தற்காலிக மேடை அமைக்கப்பட்டு இருந்தது. கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர்,
”உலக நாடுகள் கொடுக்கும் ஆயுதங்களையெல்லாம் வாங்கிக் கொண்டு ஈழ தமிழர்களை அழித்து வரும் இலங்கை இராணுவத்தை எதிர்த்து எந்த நாடும் உதவி செய்யாத நிலையிலும் போராடி வரும் விடுதலைப்புலிகளை ஆதரித்தார் என்பதற்காக நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதே போல எங்களையும் சிறையில் அடைத்து நிராயுதபாணியாக்கி தேர்தலை சந்திக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நான் பேசினேன். நான் பேசியதை இங்குள்ள நூற்றுக்கணக்கானவர்கள் திருப்பி சொல்லியுள்ளனர். எனவே இவர்கள் அனைவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வீர்களா?
அப்படியென்றால் ஒட்டு மொத்த தமிழகத்தையும் சிறைச்சாலை ஆக்குவீர்களா?. தமிழகத்தில் தேசிய பாதுகாப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை. தமிழனத்துக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சிக்கு வரக்கூடாது.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி பொதுமக்களிடம் கையெழுத்து வாங்குங்கள். அதனை வாங்கி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு அனுப்பலாம்.
ஐக்கிய நாடு பாதுகாப்பு சபையினால் மட்டுமே இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய முடியும். ஆனால் அந்த சபையில் தீர்மானம் கொண்டு வர விடாமல் இந்தியா தடுக்கிறது.

புலிகளை அழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது என்று ராஜபக்ச கூறுகிறார். ஆனால் விடுதலைப்புலிகளை அழிக்க முடியாது. அவர்களை நெருங்கக் கூட முடியாது.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இங்கு இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள். கோவை மாவட்டத்தில் ம.தி.மு.க. பலவீனமடைந்து விட்டது என்று யாரோ சொல்கிறார்கள். ஆனால் இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்து அவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

பிள்ளை பிடிக்கிற கூட்டம் போல ஆட்களை பிடிக்கிறார்கள். 1993-ல் எங்களோடு வந்தவர்களுக்கு பதவி தருகிறோம் என்று நாங்கள் சொல்லவில்லை. என்னை கள்ளத்தோணியில் சென்று வந்தவன் என்றும், உயிர் பிச்சை கொடுத்ததாகவும் முதல்-அமைச்சர் சொல்கிறார். ஆனால் உண்மையில் என் உயிருக்கு பாதுகாப்பு கொடுத்தவர்கள் விடுதலைப்புலிகள் தான்.

சுற்றி நின்று தாக்குதல் நடத்திய போதிலும் என்னை பாதுகாத்து அனுப்பி வைத்தவர்கள் விடுதலைப்புலிகள். அவர்களில் சரத் என்கிற பீட்டர் கென்னடி என்பவரும் ஒருவர். அவருடைய பெயரை தான் நாஞ்சில் சம்பத் தனது மகனுக்கு வைத்துள்ளார்” தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவத்தினர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தங்கியுள்ளார்களே. அவர்களை எப்படி அனுமதித்தீர்கள்? என்று இலங்கை பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கு இலங்கையின் சுகாதார மந்திரி பதில் அளிக்கையில், ‘விடுதலைப்புலிகளை இந்த அளவுக்கு அழித்ததற்கு காரணம் இந்திய இராணுவம் தான். எனவே நாம் கட்சி வித்தியாசமின்றி இந்திய இராணுவத்திற்கு நன்றி தெரிவிக்கவேண்டும் என்று பேசுகிறார்.

இந்த கொடுமையை தான் நாஞ்சில் சம்பத் பேசினார். இதற்காக தான் அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் நாஞ்சில் சம்பத்தின் குடும்பத்தினர் நேற்று அவரை பார்க்க கோவை சிறைக்கு வந்துள்ளனர். ஆனால் நாஞ்சில் சம்பத்தை பார்க்க அவர்களை அனுமதிக்கவில்லை.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படும் அளவுக்கு நாஞ்சில் சம்பத் என்ன பேசினார்? இந்திய இறையாண்மைக்கு எதிராக நாஞ்சில் சம்பத் பேசியதாக அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இலங்கையில் தனி ஈழம் வளரும். தமிழ் ஈழம் வளரும் என்று பேசினார். இது தேச துரோக குற்றமா?
இந்திய இறையாண்மைக்கு எதிராக நாஞ்சில் சம்பத் பேசவில்லை. ஈழ தமிழர் பாதுகாப்புக்காகத் தான் அவர் பேசினார். தமிழர்களை கொன்று குவிக்கும் துரோகம் தொடர்ந்தால் நாட்டின் ஒருமைப்பாடு துண்டு துண்டாக சிதறும். தமிழ்நாட்டின் தூதரகம் டெல்லியில் அமைய வேண்டிய நிலையும் ஏற்படும் என்றும் அவர் பேசினார். இதில் தவறில்லை. அவர் கூறிய கருத்தை தான் நானும் கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.

ஈழ தமிழர்களை கொன்று குவிக்கும் நிலை நீடித்தால், இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு ஆயுதம் கொடுக்கும் நிலை நீடித்தால், இந்திய ஒருமைப்பாடு துண்டு துண்டாக உடையும்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நான் குரல் கொடுக்கிறேன். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஆதரவு குரல் ஒலிக்கும். எனவே நாஞ்சில் சம்பத், கொளத்தூர் மணி, சீமான் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இல்லையென்றால் நாங்கள் எல்லோரும் நாஞ்சில் சம்பத்தாக மாறுவோம். நாஞ்சில் சம்பத்தை வெளியே கொண்டு வருவதற்காக சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்வோம். என்று ஆக்ரோசமாக வைகோ பேசினார்.

சுதந்திர ஈழம் மலரும் நாள் அண்மிக்கிறது....



ராஜபக்சவின் முட்டாள்தனத்தால் ஈழம் மலரும் நாள் மிக அருகாமையில் வந்து விட்டது. ஒழுங்காக சமாதான காலத்தில் தனியாட்சி நடத்திக் கொண்டிருந்த புலிகளை அப்படியே விட்டிருக்கலாம். அதை விடுத்து புலிகளை வீண் வம்புக்கு இழுத்து போரை சோனியாவும், ராஜபக்சவும் தொடக்கினார்கள். இப்போது அவர்கள் வைத்த பொறிக்குள் அவர்களே சிக்கிக் கொண்டார்கள். இராணுவம் மரணப்பொறிக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. புதை குழிக்குள் சிக்கியிருக்கும் இலங்கை அரசை இனி யாராலும் காப்பாற்ற முடியாது. யாராவது அப்படி முயன்றால் அவர்களும் சேர்ந்து உள்ளே போக வேண்டியதுதான்.

ஏனென்றால் போர் எதிர்பாராத வகையில் மிகவும் நீண்டு கொண்டே செல்கிறது. காங்கிரஸ் ஆட்சி முடிவதற்குள் போர் முடிவுக்கு வந்து விடும் என்று கணித்த இவர்களின் எண்ணம் தவிடு பொடியாகிவிட்டது. 50,000 இராணுவத்தினர், ஏராளமான ஆயுதங்களை வைத்து சண்டையிட்டால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற இவர்களின் எண்ணம் புலிகளின் தந்திரங்களில் சிக்கி மண்ணாகிப் போனது.

ஒட்டப் பந்தயங்களில் முதலில் ஒடுபவர்கள் கடைசியில் மூச்சு வாங்கி திணறுவதைப் போல முதலில் எல்லா வளங்களையும் உபயோகித்த இராணுவம் இப்போது ஆளணி இல்லாமல் திணறுகிறது. புலிகளோ எல்லா வளங்களையும் அப்படியே காப்பாற்றி வைத்திருந்து இப்போது உபயோகப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த இரு வார காலமாக இராணுவம் செமத்தியாக அடி வாங்கிக் கொண்டுள்ளது.

இத்தனை காலமும் புலிகளுக்கு மிகப் பெரும் இழப்பு. அதே சமயம் இராணுவத்திற்கு சிறிதளவு இழப்பு என்று கதை விட்டுக் கொண்டிருந்த இராணுவம் கடந்த சில நாட்களாக இரு தரப்பிற்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒத்துக் கொண்டுள்ளது.

இன்னும் புலிகளிடம் என்னென்ன இரகசியமான ஆயுதங்கள் உள்ளன என்று தெரியவில்லை. கனரக ஆயுதங்கள் தங்களிடம் இருப்பதை வெளிக்காட்டாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்து கடைசியில் அவைகளை உபயோகப்படுத்தக் கூடும்.

எப்படியாவது ஒரு இராணுவ வெற்றியை பெற்று விடலாம். அதன் பின்பு தொடர்ந்து குடும்ப ஆட்சியை நாமே நடத்தலாம் என்று ராஜபக்ச கணக்கு போட்டார். சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அவர் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. சென்ற ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட திடீர் பொருளாதார நெருக்கடி வலிமையான நாடுகளையே ஆட்டம் காணச் செய்திருக்கிறது .

அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே வல்லரசு நாடுகளே சிரமப்படுகின்றன. இந்த இலட்சணத்தில் சுண்டைக்காய் இலங்கை நாடு போரை நடத்திக் கொண்டிருக்கிறது. போர் பெருமளவு பணத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. அரசின் பொருளாதாரமோ அதல பாதாளத்திற்கு போய் விட்டது.

புலிகள் விட்டுச் சென்ற இடங்களை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு வெற்றி பெறுகிறோம் என்ற மாய வலைக்குள் மக்களை ராஜபக்ச ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். எத்தனை நாளைக்குதான் இப்படி ஏமாற்ற முடியும்? கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை கணக்கு போடுவதற்கு கணணி கூட திணறும் போலிருக்கிறதே? இ ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு அவர் எப்படி பதில் சொல்லப் போகிறார்?
இலங்கை அரசின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் வேறு தொடங்கி விட்டது. மூழ்கிக் கொண்டிருக்கும் இலங்கை பொருளாதாரத்தை எப்படி தூக்கி நிறுத்தப் போகிறார்? பிரபாகரன் வேறு நாட்டிற்கு ஓடி விட்டார் என்று சொல்லிக் கொண்டிருந்த ராஜபக்சதான் தாக்குப் பிடிக்க முடியாமல் வேறு நாட்டிற்கு ஓடப் போகிறார். ஏனென்றால் பலவீனத்தையும் பலமாக மாற்றும் சக்தி தேசியத் தலைவருக்கு உண்டு.

இந்திய காங்கிரஸ் அரசின் ஆயுள் முடிந்து விட்டது. இனிமேல் இந்திய அரசும் இந்த போரை முட்டு கொடுத்து தூக்கி விட முடியாது. பணம், ஆயுதம் கொடுத்து உதவ முடியாது. புலிகளுக்கு இந்த பிரச்சினைகள் இல்லை. அவர்களுக்கு இராணுவத்தினரிடமிருந்து பிடுங்கப்படும் ஆயுதங்களே போதும்.
இலங்கை அரசு போரை வெற்றி கொள்ள வேண்டுமானால் புலிகளின் மரபுவழிப் படைத்திறனையும் ஆளணியையும் அழிக்க வேண்டும். புலிகளின் கட்டமைப்பு வசதிகள் உடைக்கப்பட வேண்டும். மக்களையும், புலிகளையும் தனித்தனியாக பிரிக்க வேண்டும். அது எதுவும் இதுவரை நடக்கவில்லை. அப்படியே இராணுவம் பிரிப்பதில் வெற்றி கண்டாலும் புலிகள் மீண்டும் கொரில்லா படையாக மாறுவார்கள். காலத்திற்கும் தலைவலியாய் இருப்பார்கள்.

வன்னி மக்களோ புலித்தலைவரை விட்டு அகல மறுக்கின்றனர். ராஜிவ் மரணத்திற்கு பின் எப்போதும் இல்லாத அளவு எழுச்சி தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. 11 இளைஞர்கள் இதுவரை உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள்.

புலம் பெயர் தமிழர்கள் பிற நாடுகளை முடக்கும் வண்ணம் மிகப் பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எப்போதும் இல்லாத அளவில் புலம் பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களால் இப்போது இந்திய, இலங்கை அரசுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது
போர் நீண்டு கொண்டே செல்வதால் இலங்கை இராணுவத்தினர் சோர்ந்து போய் உளவுரண் பாதிக்கப்பட்டு உள்ளனர். இராணுவம் கைப்பற்றிய பகுதிகளில் ஏற்கனவே புலிகளின் சிறப்புப் படையணிகள் ஊடுருவி விட்டனர். ஆளணி பற்றாக்குறையால் ஊர்காவல் படைதான் அங்கு பாதுகாப்புக்கு நிற்கப் போகிறது.

மக்கள் எழுச்சியுடன் புலிகள் ஒரு பெரிய ஊடறுப்புத் தாக்குதலை நிகழ்த்தும் போது இலங்கை இராணுவம் இறுதி மூச்சை விடும். வெற்றிக்கனி நிச்சயம் பறிக்கப்படும். காலம் நமக்கு சாதகமாக கனிந்து வருகிறது, இந்த சந்தர்ப்பத்தை நாம் நழுவ விடக் கூடாது.

ஆகவே தனியரசை நிறுவ நமது மக்கள் மன உறுதியை இழக்காமல் எழுச்சியுடன் தொடர்ந்து போராடினால் நிச்சயம் ஈழத்தை வென்றெடுக்கலாம். அந்த பொன்னாள் வெகு தொலைவில் இல்லை.
தமிழ்நாட்டிலிருந்து அதிபதி.

Friday, March 20, 2009

முக்கியத்துவம் கொடுக்கவும்

ஏப்ரல் 14 இற்குள் புலிகளை அழியுங்கள் – இந்தியா சிறீலங்காவிற்கு உத்தரவு தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் நாளுக்குள் முற்றாக அழித்து விடுமாறு இந்திய ஆளும் கொங்கிரஸ் கட்சி சிறீலங்கா அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 16ஆம் நாள் முதல் மே 13ஆம் நாள்வரை நடைபெறவுள்ள நிலையில், இந்த உத்தரவை சிறீலங்கா அரசுக்கு கொங்கிரஸ் கட்சி பிறப்பித்திருப்பதாக, கொங்கிரஸ் கட்சியின் நம்பகமான உள்ளக வட்டாரங்கள் மூலம் தமிழ்நாட்டில் தகவல் கசிந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதன்மூலம், அடுத்த தேர்தலில் தாம் வெற்றிபெற முடியும் என கொங்கிரஸ் கட்சி திடமாக நம்புவதால், இந்த காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு தமிழ்நாட்டில் ஆட்சியிலுள்ள தி.மு.க கட்சி உடந்தையாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மற்றொரு பிரதான கட்சியான ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க, இடதுசாரி மற்றும் பொதுவுடமைக் கட்சிகளுடன் நெருங்கிய உறவைப்பேண ஆரம்பித்திருப்பதாலும், ஈழ ஆதரவுக் கட்சிகளும் இந்தக் கூட்டணியில் இணைந்து கொள்ளலாம் என்பதாலும், கொங்கிரசுடன் இணைந்திருப்பதே தமக்கு தேர்தல் வெற்றியை ஈட்டித்தரும் என எண்ணும் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க, ஈழத்தில் தமிழினப் படுகொலையைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாக, தமிழ்நாட்டிலுள்ள தமிழின உணர்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார். இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும், இந்தியப் புலனாய்வுத் துறையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட வேண்டும் என கங்கணம்கட்டி நிற்கின்றனர்.
இதற்கு உடந்தையாக இருப்பதன்மூலம் அடுத்த தவணையும் ஆட்சியை தக்க வைக்க முடியும் எனவும் சோனியா காந்தி தலைமையிலான கொங்கிரஸ் கட்சி எண்ணுகின்றது. இதனாலேயே தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை ஆதரவுப் போராட்டங்கள் நடைபெறும்போது, அதனை திசை திரும்பும் வகையில் தமிழ்நாட்டின் ஆளும் கட்சி மற்றொரு தமிழீழ ஆதரவுப் போராட்ட நாடாகத்தை அரங்கேற்றுவதாகவும், ஈழத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்படுகின்ற போதிலும், கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு ஆக்கபூர்வ நடவடிக்கை எதனையும் இதுவரை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகின்றது.
கடந்த மாதம் 20ஆம் நாள் முதல் 26ஆம் நாள்வரை நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்ரடாமில் நடைபெற்ற உலகின் தொழிற்கட்சி மற்றும் இடதுசாரிகளின் நாள்காம் மண்டல மாநாட்டின்போது ஊடகவியலாளர்கள் மத்தியிலும், பின்னர் நெதர்லாந்தின் முன்னணி வானொலிச் சேவை ஒன்றிற்கும் கருத்துரைத்த இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, ஈழத்தமிழ் மக்கள் மீது தற்போதைய போர் முற்றாகவும், நேரடியாகவும் இந்திய அரசினால் முன்னெடுக்கப்படுவதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். கடந்த 17ஆம் நாள் சிறீலங்காவின் நாடாளுமன்றத்தில் கருத்துரைத்திருந்த சிறீலங்காவின் முக்கிய அமைச்சர்களுள் ஒருவரான நிமால் சிறீபால டி சில்வா, விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது போரில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருவதாகவும், இந்தியாவிற்கு சிங்கள மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என பகிரங்கமாகக் கூறியிருந்தார்.
அண்மையில் சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்துரைத்திருந்த சிறீலங்கா படைகளின் முக்கிய தளபதி ஒருவர், கிளிநொச்சியைக் கைப்பற்றிய பின்னரும், அதற்கு முன்னரும் இந்தியாவே வன்னியில் போரை முன்னெடுப்பதாகவும், தமது படைகள் பெயரளவிலேயே அங்கு பணிகளில் அமர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வவுனியா முப்படைத்தளம் மீது 2008ஆம் ஆண்டு செப்ரெம்பர் 9ஆம் நாள் வான் புலிகள் மேற்கொண்ட தாக்குதலின்போது, அங்கு ராடர் கருவிகளை இயக்கிவந்த இரண்டு இந்தியப் படையினர் காயமடைந்த தகவல் வெளியுலகிற்குக் கசிந்திருந்தது. இதன் பின்னர், சிறீலங்கா படைகளுக்கான இந்தியப் படைத்துறை உதவிகள் மிக இரகசியமாக வழங்கப்பட்டு வருவதாகக் கருதப்படும் நிலையில், வன்னி களமுனைகளில் இந்தியப் படைகளும், அதன் தளபதிகளும் இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தன.
இவற்றை மூடி மறைப்பதற்காகவும், வேறு சில படைத்துறைக் காரணங்களுக்காகவுமே, வன்னியில் காயமடைந்த மக்கள் விடுதலைப் புலிகளின் நிருவாகத்திலும், ஏனைய சிலர் திருகோணமலை நகருக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ள போதிலும், திருகோணமலை – முல்லைத்தீவு மாவட்டங்களின் எல்லையிலுள்ள புல்மோட்டைக்கு இந்திய படைத்துறை மருத்துவர்கள் அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன

Sunday, March 15, 2009

அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் ஊடகங்கள்

அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் ஊடகங்கள் - அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது கண் தெரியவில்லையா?


சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் கொடுங்கோன்மையான இன அழிப்பு போரில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயப் பகுதிகள், விநியோக நிலையங்களின் மீது கூட தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த உண்மை செய்திகளை வெளியிட வேண்டிய கடைமை தமிழ் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கு இருக்கிறது.

ஆனால் அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் இந்த ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன. பெரும்பான்மையான ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக உள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.


உண்மை செய்திகள் வெளிவந்தால் நம் குட்டு வெளிப்பட்டு விடும் என்று நினைக்கும் அரசியல்வாதிகள் பிற ஊடகங்களையும் விளம்பரங்கள் தர மாட்டோம் என்று சொல்லி மிரட்டுகிறார்கள்.


செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டால்தான் தாய் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு உண்மை நிலவரம் தெரிய வரும். இணைய தளங்களை பார்க்கும் வசதி சாதாரண மக்களுக்கு இல்லை.


டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற பேட்டியையும், புலிகளின் அழிவுச் செய்தியையும் முதல் பக்கத்தில் வெளியிடும் இந்த ஊடகங்களுக்கு அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது கண் தெரியவில்லையா?. பாகிஸ்தானில், இராக்கில் குண்டு வெடிப்பையும், கிரிக்கெட் வீரர்கள் தாக்கப்பட்டதையும் பக்கம் பக்கமாக படங்களுடன் ஆராய்சிக் கட்டுரை வெளியிடும் இந்த ஊடகங்களுக்கு வன்னியில் பிஞ்சு குழந்தைகள் கொன்று குவிக்கப்படுவது தெரியவில்லையா?


சன் / ஜெயா தொலைக்காட்சிகளில் இராணுவம் வெளியிட்ட இடம் பெயர் மக்களின் மீது நடந்த குண்டு வெடிப்பை திரும்ப திரும்ப காட்டியவர்களுக்கு அப்பாவி மக்கள் கொல்லப்படும் கானொளிகள் கிடைக்க வில்லையா? 100க்கும் மேற்பட்ட சேனல்களை வைத்திருக்கும் சன் குழுமமும், கலைஞர் தொலைக்காட்சியும் இப்படி துரோகம் செய்தால் பிறகு எப்படி உண்மைகள் மக்களை சென்றடையும்? இன்னமும் சன் செய்திகளில் ராணுவம் வெளியிடும் கானொளிகள்தான் காண்பிக்கப்படுகின்றன.


புலம் பெயர் வாழ் தமிழர்களின் ஆதரவில் பணம் சம்பாதித்து கொழுத்துப்போய் உள்ள தினமலர், தினகரன் பத்திரிக்கைகள், சன் குழுமம், ஜெயா, கலைஞர் தொலைக்காட்சிகள் தொடர்ந்து தமிழின விரோத போக்கை கடைப் பிடித்து வருகின்றன.


சிங்களர்களும், சிங்கள அரசும் தொடர்ந்து பொய்ப்பிரச்சாரத்தை வேகமாக முன்னெடுத்து வருகிறார்கள். Youtube, Wikimapia, defence போன்றவற்றை பார்த்தால் அவர்களுடைய நோக்கம் புரியும். 8 கோடி தமிழ் மக்கள், எண்ணற்ற தொலைக்காட்சிகள், கட்டமைப்பு வசதிகளை தமிழர்கள் கொண்டுள்ள போதிலும் சிங்களர்கள் நம்மை விட வேகமாக முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.


ஆகவே உலகத் தமிழ் சங்கங்கள், தமிழர்கள் அனைவரும் தமிழ் ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் வழிக்கு வருவார்கள். புலம் பெயர் தமிழர்கள், தமிழ் சங்கங்களின் ஆதரவு இல்லாமல் அவர்களால் பத்திரிக்கை / தொலைக்காட்சிகளை நடத்த முடியாது.

மக்கள் புரட்சியை தடுக்கும் நோக்கில் தமிழின துரோகத்தை செய்து வரும் இந்த ஊடகங்களுக்கு புலம் பெயர் வாழ் தமிழர்களும், தமிழ் சங்கங்களும் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.


நடுநிலை தவறிய இந்த ஊடகங்களுக்கு தக்க பாடம் புகட்ட கீழ்க்கண்டவர்களுக்கு மின் அஞ்சல் மூலம் அழுத்தம் கொடுக்குமாறு அனைத்து தமிழ் சங்கங்களையும், புலம் பெயர் வாழ் தமிழர்களையும் மிகவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இதன் பிறகும் இந்த ஊடகங்கள் தங்களது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் அனைவரும் சேர்ந்து அவற்றை புறக்கணிக்க வேண்டுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
Dinamalar :dmrcni@dinamalar.com
Dinakaran :dotcom@dinakaran.com,
Sun TV :suntv@sunnetwork.in
Jaya TV :program@jayanetwork.in
Kalaignar TV :info@kalaignartv.co.in

நன்றி

தமிழ்வின்

Saturday, March 14, 2009

முத்துக்குமாரை புதைத்தவர்களும்... விதைத்தவர்களும்... இவர்களே!


முத்துக்குமாரை புதைத்தவர்களும்... விதைத்தவர்களும்...இவர்களே!
நரி தான் உண்பதை வாந்தி எடுத்துத்தான் தன் குட்டிகளுக்குக் கொடுக்கும். தாய் வாந்தி எடுத்துத் தருகிற உணவைத்தான் குட்டிகளும் உண்ணும். குட்டிகளின் ஜீரணத்துக்கு அதுதான் நல்லது என்பதால் நரி அவ்விதமாய்ச் செய்கிறது. ஆனால் தாயானாலும் யாரானாலும் மனித குலத்தில் ஒருவர் எடுத்த வாந்தியை இன்னொருவர் உண்ண முடியாது. ஏனென்றால் நரி எடுக்கும் வாந்தி இயற்கையானது அதை நரி சாப்பிடுவதுதான் சுகாதாரம்.
மனிதன் எடுக்கும் வாந்தி உடல் உபாதைகளால் தோன்றுவது. சமீபத்தில் கருணாநிதி ஒரு வாந்தி எடுத்திருந்தார். கடந்த ஐம்பதாண்டுகளாக உண்ட உணவை இத்தனை ஆண்டுகள் கழித்து ஒருவர் வாந்தி எடுத்து அதை ஈழத் தமிழர்களை உண்ணவும் சொல்லியிருக்கிறார். ‘என்ன விலை கொடுத்தேனும் ஈழத் தமிழரைக் காப்பேன்’ என்றவர் இப்போது ‘என்ன விலை கொடுத்தேனும் காங்கிரஸ் கட்சியைக் காப்பேன். அதன் மூலம் என் மைனாரிட்டி அரசை இரண்டரை ஆண்டுகாலம் தக்க வைப்பேன்’ என்கிற நிலைக்கு தரம் தாழ்ந்து இறங்கி வந்திருக்கிறார். அத்தோடு யார் மனமும் புண்படாமல் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்கிற அமைப்பைத் தொடங்கி காங்கிரஸ் கட்சியினரோடு தோளோடு தோள் நின்று போராடத் துவங்கியிருக்கிறார், கருணாநிதி முன்னெடுத்திருக்கும் இந்த நலச்சங்கத்தின் கோரிக்கை பேரணியில் கலந்து கொள்ளும் கருணாநிதியின் ஆதரவாளர்கள் யார் மனமும் புண்படாமல் எழுப்ப வேண்டிய கோஷங்கள் இவை:
‘‘இலங்கையில் போர் நிறுத்தம் செய்க’’
‘‘நிலையான அமைதிக்கு வழி காண்போம் வாரீர்’’
‘‘தமிழினம் தாழாது தாழாது யாரையும் தாழ்த்தாது’’
‘‘தடுப்போம் தடுப்போம் இனப்படுகொலையை தடுப்போம்’’
திமுகவும் காங்கிரஸ் கட்சியும் யாருக்கு எதிராக இந்த கோஷங்களை முன்வைக்கிறார்கள் என்றோ, யாரிடம் கோரிக்கை வைக்கிறார்கள் என்றோ அவர்களுக்கே தெரியவில்லை. இலங்கை விவகாரத்தில் வெளிப்படையாகவே மத்திய அரசின் நிலையை ஆதரித்துப் பேசும் திமுக அமைச்சர்களின் குரலிருந்து நாம் ஒரு முடிவுக்கு வர முடியும். தமிழகத்தில் ஈழம் தொடர்பாக எழுந்துள்ள கொதிப்புகளை குழப்பி நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற நோக்கமாக மட்டுமே திமுக, காங்கிரஸின் இந்த ஈழத் தமிழர் ஆதரவு நாடகங்களை பார்க்க வேண்டியுள்ளது. அதனால்தான் கருணாநிதியே சொல்கிறார் ‘வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை’. உண்மையில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மக்கள் மன்றத்தில் உருவாகியிருக்கும் எதிர்ப்புணர்வுகளை அறுவடை செய்து மக்கள் விரோத காங்கிரஸை தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
காங்கிரசுக்கு முட்டுக் கொடுத்து நிற்கும் திமுகவையும் மக்கள் தனிமைப்படுத்த நேரிடும். இதுதான் தமிழக மக்களின் விருப்பமும் நமது விருப்பமும் கூட. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் தமிழகத்தில் வெடிக்கத் துவங்கி அது முத்துக்குமாரின் தியாகத்துக்குப் பிறகு கொழுந்து விட்டு எரிவதற்கு முன்னரே கருணாநிதி இந்த எழுச்சிகளை சட்டம் காவல்துறை கொண்டு அடக்கிப் பார்த்தார். அந்த அடக்குமுறைகளும் முத்துக்குமாரின் தியாகமும் அந்த எழுச்சியை பல மடங்கு தூண்டி விட இப்போது தன் கட்சியையே காங்கிரசுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்னும் அமைப்பின் கீழ் களம் இறக்கியிருக்கிறார். அதிமுக ஆட்சியில் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக வைகோ, சுபவீ, நெடுமாறன் ஆகியோரை பொடாச் சட்டத்தில் கைது செய்த ஜெயலலிதாவின் பாசிசத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாத நடவடிக்கைகளை இன்று கருணாநிதி ஈழ ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் எப்போதுமே ஈழத் தமிழர்களின் விடுதலைப் போரை கொச்சைப்படுத்தி வரும் ஜெயலலிதா செய்ததை விட கருணாநிதி செய்தது பெருந்துரோகம்.
இந்த நூற்றாண்டில் ஒரு இனத்தின் அழிவுக்கே இட்டுச் செல்லும் படியான காட்டிக் கொடுப்பு என்று கூட கருணாநிதியின் ஈழ ஆதரவு நாடகங்களை சொல்லலாம். ஈழ மக்களுக்காக தான் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டிய பொறுப்பை தட்டிக் கழிப்பதோடு, இன்று மக்கள் விரோத மன்மோகன்சிங் அரசு இலங்கையில் சிங்களப் பாசிஸ்டுகளோடு சேர்ந்து நடத்தி வரும் போரிலிருந்து காங்கிரஸ் கட்சியை காப்பாற்றும் ஒரு வரலாற்றுத் துரோகத்தையும் செய்யத் துவங்கியிருக்கிறார், இந்த தமிழினத் தலைவர். யார்மனமும் புண்படாமல் போராடுவது எப்படி? சில மாதங்களுக்கு முன்பு கவிஞர்கள் எழுத்தாளர்கள் எல்லாம் இலங்கைத் தமிழர்களுக்காக சென்னை கடற்கரையில் ஒரு போராட்டம் நடத்தினார்கள். அதில் ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற தமிழ் படைப்பாளிகள் அதிகம்.
மத்திய அரசை விமர்சித்தவர்கள் மேடையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார்கள். ராஜபக்ச்ஜேவை பற்றி விமர்சிக்கும் உரிமை கூட அங்கே மறுக்கப்பட்டது. ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற அந்த போராட்டம் அரசியல் நீக்கம் செய்யப்பட்டு யார் மனமும் புண்படாமல் போராடப்பட்டது. அந்தத் தமிழ் படைப்பாளிகளின் அரசியல் ஆசானும் இன்று காங்கிரஸ் கட்சியையும் இணைத்துக் கொண்டு யார்மனமும் புண்படாமல் போராடக் கிளம்பிவிட்டார். யாரை எதிர்க்க வேண்டுமோ யாரை அம்பலப்படுத்த வேண்டுமோ அவர்களை வைத்தே இந்தப் பிரச்சனையை குழப்புகிறார் கருணாநிதி. ஆனால் உண்மையான போராட்டங்களை நடத்திய தோழர்கள் காவல்துறை மரபுகளையும் மீறி மாலையில் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள்.
கொளத்தூர் மணி, பெ. மணியரசன், சீமான்ஆகியோரைக் கைது செய்த அரசு அவர்களை ஜாமீனில் வெளிவராமல் பார்த்துக் கொண்டது. அதே சமயம் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்கள், யார் மனதும் புண்படாமல் போராட்டம் நடத்தினால் அதற்கு கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் ஆதரவோடு திமுக அரசின் மறைமுக ஆதரவும் கிடைத்து வந்தது. இதன் உச்சபட்ச வடிவமாக திமுக இப்போது இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவையைத் துவங்கியிருக்கிறது.
இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது முன்னெடுத்து வரும் பாசிசப் போரை இந்திய அரசு வலது கரமாக இருந்து நடத்திவருவதோடு பெரும் தொகையான சிங்கள் ராணுவத்தினர் தமிழகத்திலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ரகசிய பயிற்சி பெற்று தமிழ் மக்கள் மீது குண்டு வீச யுத்த முனைக்கு அனுப்பப்படுகிறார்கள். இவர் கொல்கிறவனுடன் சேர்ந்தே இலங்கைத் தமிழரின் உரிமைக்காக பேசப் போகிறாராம். ஈழ மக்களை கொன்று குவிக்கும் சிங்கள பாசிசத்தோடு கூட்டு சேர்ந்திருக்கும் மத்திய காங்கிரஸ் மன்மோகன்சிங் அரசு ஒரு பக்கம். அந்த அரசின் பிரதிநிதிகளான துரோக காங்கிரஸை பதவி அரசியலுக்காக பாதுகாக்கும் கருணாநிதி இன்னொரு பக்கம். இன்று ஈழ மக்கள் சந்திப்பது பல முனைத்தாக்குதலை. கருணாநிதி இவ்வளவு கேவலமாக தங்களை காட்டிக் கொடுப்பார் என்பதை ஈழமக்கள் யாரும் கனவிலும் நினைக்கவில்லை.
பிரபாகரனை சர்வாதிகாரி என்று சொல்வதன் மூலம் யுத்த முனையில் பின்னடைவுகளை சந்திக்கும் புலிகளையும் வன்னிப் பகுதிக்குள் சிக்கியிருக்கும் இரண்டரை லட்சம் மக்களையும் இந்திய அடியாட்களுக்கு இரையாக்கி விட்டார் கருணாநிதி. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டியளித்த பிரபாகரன் நாளை மலரப் போகும் தமிழீழத்தில் தான் சர்வாதிகாரியாக இருக்கப் போவதாக சொன்னபோதே பிரபாகரனை இவருக்குப் புளித்து விட்டதாம். ஆகவே வடக்கு கிழக்குக்கு அதிகாரப் பரவல் கிடைத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். இந்த முடிவுக்குத்தான் இவர் வருவார் என்பதும் நாளை தென்கிழக்கின் போர் வெறியன் ராஜபக்ஷே தமிழ் மக்களுக்கு வழங்குவதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் - இலங்கை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்கும் திட்டத்தையும் இந்த கருணாநிதி ஆதரித்து நிற்பார் என்பதும் நம்மால் புரிந்து கொள்ளக்கூடிய விஷயங்களே.
அதற்காக தான் அரசியலில் உருவாக்கி வைத்திருக்கும் ரப்பர் ஸ்டாம்புகளையும், கைத்தடிகளையும் பயன்படுத்திக் கொள்வார். இப்போது தமிழர்களின் முதுகில் குத்தியிருக்கும் கருணாநிதி இன்று நேற்றல்ல எல்லா காலத்திலும் - காவிரி பிரச்சனையிலும் ஓகேனக்கல் பிரச்சனையிலும் இதைச் செய்தவர்தான். ஆனால் போருக்கு முகம் கொடுத்து அன்றாடம் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் பேரினவாதத்திற்கு பலியாகிக் கொண்டிருக்கும் சூழலில் இதைச் செய்ததோடு அதற்காக முனைந்து வந்து தன்னெழுச்சியாய் போராடுகிறவர்களையும் அடக்கி ஒடுக்கிற ஒரு பாசிச சர்க்காராக இன்று உருமாறியிருக்கிறார் கருணாநிதி. புலிகளை ஆதரிக்க மாட்டேன். ஆனால் ஈழம் கிடைத்தால் மகிழ்வேன். சுப.தமிழ்ச் செல்வனுக்கு அஞ்சலிக் கவிதை எழுதுவேன் ஆனால் சுப. தமிழ்ச்செல்வனின் படுகொலையை ஆதரிப்பேன் என்கிற மாதிரி கருணாநிதியின் பேச்சுகள் குழப்பமாக இருக்கும்.
உங்களின் இத்தனை ஆண்டுகாலத்தில் ஈழ மக்களுக்காக நீங்கள் செய்தது என்ன? என்று யாராவது கேட்டால் ‘நான் டெசோ மாநாடு நடத்தினேன். இரண்டு முறை ஈழமக்களுக்காக ஆட்சியை தியாகம் செய்தேன். எண்பதுகளில் என் பிறந்த நாளில் வசூலான தொகையை ஈழப் போராளிக்குழுக்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தேன். நாலு தடவை அளவுச் சாப்பாடு போட்டேன்’ என்றெல்லாம் சொல்வார். (எந்த ஈழப் போராளிக் குழுத்தலைவரும் இவரை ஒரு ஒப்புக்குக் கூட மதித்ததில்லை. அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையர்க்கரசியாரும், தமிழக அரசுப்பணத்தை அகதிகள் மறுவாழ்வு என்னும் பெயரில் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும் தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசனும்தான் இன்று கருணாநிதியின் ஆதரவாளர்கள். மங்கையர்க்கரசியாருக்கும், சந்திரஹாசனுக்கும் ஈழ விடுதலைப் போருக்கும் அங்குள்ள ஈழ மக்களுக்கும் என்ன சம்பந்தம் என்றுதான் நமக்குத் தெரியவில்லை.) இரண்டு முறை காங்கிரஸ் துரோகிகள் ஜெயலலிதாவோடு சேர்ந்து கொண்டு புலிகளைக் காட்டி கருணாநிதியின் ஆட்சியைக் கலைத்ததை இவர் தியாகம் என்கிறார். அதுவும் எவன் இவரது ஆட்சியைக் கலைத்தானோ அவனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே இதை தியாகம் என்கிறார். தியாகம் என்பதற்கும் டிஸ்மிஸ் என்பதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை காங்கிரஸ்காரர்களிடம் கேட்டாவது கருணாநிதி தெரிந்து கொள்ளலாம். தவிரவும் கருணாநிதி சந்தித்தது காங்கிரசாரின் துரோகம் அதையே மாற்றி ஈழ மக்களுக்கான தியாகம் என்று சொல்வது அற்பத்தனத்திலும் அற்பத்தனம்.
அது போல ஈழ மக்களுக்காக கருணாநிதி என்னவெல்லாம் செய்தார் என்று சமீபத்தில் ஒரு பட்டியல் வெளியிட்டிருந்தார். அது அனைத்துமே ஆட்சியில் இல்லாத காலத்தில் உள்ளூர் அரசியலை மனதில் வைத்து விளையாடிய விளையாட்டு. இதை எல்லாம் மீறி அப்படியே செய்திருந்தால் கூட இவ்வளவு கீழ்த்தரமாக அதைச் சொல்லிக் காட்டி தமிழக மக்களை அவமானப்படுத்தியிருக்க வேண்டியதில்லை. ஆனால் இன்று தியாகம் செய்வதற்கான சூழல் எழுந்திருக்கும் நிலையில் கருணாநிதி அதைச் செய்யாமல் இருப்பதும் தியாகமே செய்யாமல் எவன் போட்ட சோற்றையோ தான் போட்டதாக சொல்லிக் கொள்வதும் இந்த நூற்றாண்டில் தமிழகம் பார்க்காத ஏமாற்றுத்தனம். எவன் திமுக ஆட்சியைக் கலைத்து அதை கருணாநிதி தியாகம் என்கிறாரோ அவனுடனேயே இணைந்து ஈழத் தமிழர்களுக்காக போராடப் போவதாக கருணாநிதி சொல்வது, கள்ளனோடு சேர்ந்து கள்ளனைப் பிடிக்கிற கதையாக இருக்கிறதே? இதை எல்லாம் யாருமே உங்களுக்கு சொல்ல மாட்டார்களா? அல்லது சொல்கிற மாதிரி ஆட்கள் யாருமே உங்களை நெருங்க முடிவதில்லையா? தமிழகத்தில் எழும் இந்த ஈழ ஆதரவு எழுச்சிகளை ஜெயலலிதாவோடு தான் நடத்திக் கொண்டிருக்கும் லாவணி அரசியலுக்கு பயன்படுத்துவதன் மூலம் இது ஏதோ திமுக, அதிமுக பிரச்சனை என்னும் ஒரு தோற்றத்தை சித்தரிக்க முயல்கிறார் கருணாநிதி.
முத்துக்குமார்:நின்று எரிய வேண்டிய தீ...
காலையில் முத்துக்குமார் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த செய்தி கிடைத்தபோது அவரின் உடலின் சில பாகங்கள் எரிந்து கொண்டிருந்தது. அப்போது அவர் உடலில் எரிந்த நெருப்பு அவர் எழுதிய நான்கு பக்க கடிதத்தையும் எரித்திருந்தது. அந்தக் கடிதம் என் கையில் கிடைத்தபோது நெருப்பின் சூடு ஆறாமலேயே இருந்தது. அணைந்த நெருப்பை சாம்பல் மூடியிருந்தது. மூடப்பட்ட சாம்பலுக்குள் பெருநெருப்பு ஒன்று தணலாக அந்த மரணசாசனத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த நெருப்புதான் கருணாநிதி மீதான நமது பாசாங்கை எரித்து சாம்பலாக்கியது; ஜெயலலிதா என்னும் பாசிச சக்தியை மக்கள் முன் தோலுரித்தது. அவரது மரண சாசனம் அதிர்வேட்டாகி இதயத்தை சுட்ட போது, அந்த நெருப்பை அணைப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன. கடந்த இருபது ஆண்டுகளில் ஈழத் தமிழர் தொடர்பான சிறந்த ஆவணமான முத்துக்குமாரின் மரணசாசனம் அத்தனை அரசியல்வாதிகளையும் நிராகரிக்கிறது. அதனால்தான் ஈழ விடுதலையை, புலிகளை ஆதரிக்கிறவர்களே முத்துக்குமாரை அரசியல் நீக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள்.
இவர்கள் பதவி அரசியலுக்காக அமைத்திருக்கும் கூட்டணியும் இந்த தேர்தல் அமைப்புக்குள் குதிரை ஓட்டியாக வேண்டிய நிர்ப்பந்தமும் முத்துக்குமாரை அரசியல் நீக்கம் செய்யத் தூண்டியிருக்கலாம். ‘‘உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.
உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள்.’’ என்று முத்துக்குமார் எச்சரிப்பது திமுகவை மட்டுமல்ல தேர்தல் அரசியல் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு மக்களின் இயல்பான எழுச்சிகளை அடக்க நினைக்கும் அத்தனை சக்திகளையும் தான். இந்தி எதிர்ப்பு காலத்தின் பயனை தாளமுத்து நடராசனின் வீரச்சாவை, சின்னசாமியின் தீக்குளிப்பை தேர்தலில் அறுவடை செய்த திமுக இரு மொழிக்கொள்கையை கொண்டு வந்து எப்படி தமிழுக்குத் துரோகம் செய்ததோ அது போல ஈழத் தமிழருக்காக எழுந்திருக்கும் தமிழகத்தின் கொதிப்பை அரசியல்வாதிகள் அறுவடை செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், இதுதான் முத்துக்குமாரின் ஆசை. இன்னும் சொல்லப் போனால் காங்கிரஸையும் அதை முட்டுக் கொடுத்து நிற்கும் திமுகவையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் அந்த தியாகியின் தீர்க்கமான சிந்தனை.
‘‘என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.’’ முத்துக்குமாரின் உடலை கைப்பற்றும் அளவுக்கு மாணவர்களுக்கு அரசியலோ தலைமையோ இல்லாத சூழலில் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை அவரது இறுதிச் சடங்கை ஒரு சடங்காகவே செய்து முடிக்க நினைத்தது. ஆனால் மாணவர்கள் அவ்வாறு நடக்கவிடாமல், அதை மிகப்பெரிய எழுச்சிப் பேரணியாக்கினார்கள். எப்படி முத்துக்குமாரின் அடக்கத்தை ஒரு சடங்காக மாற்ற நினைத்தார்களோ அது போலவே இந்த மக்கள் எழுச்சியையும் பெரியவர் நெடுமாறன் தலைமையிலான இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை ஒரு சடங்காக மாற்றுகிறது.
முத்துக்குமாரின் வீரச்சாவை ஒட்டி இயல்பாக எழும் ஈழ ஆதரவு கொந்தளிப்புகளை மீண்டும் மீண்டும் சடங்காக மாற்றுவதன் மூலம் அந்த சடங்கிற்குள் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்த கருணாநிதிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை முன்னெடுக்கிற போராட்டங்களை நாம் ஆதரிக்கிற அதே வேளையில் ஏன் அதை ஒரு சடங்காக செய்ய வேண்டும் என்னும் அடிப்படையான கேள்வியையும் நம்மால் கேட்காமல் இருக்க முடியவில்லை? சென்னை சர்.பி.டி.தியாகராயா அரங்கில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவை நடத்திய கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய ராம்தாஸ் ‘‘இங்கு பேசுவோர் எந்த அரசியல் கட்சிகளையோ தலைவர்களையோ விமர்சிக்கக் கூடாது’ என நிபந்தனை போட்டாராம். அது போல கிராமங்களில் கருப்புக் கொடி ஏற்றப்படும் என்ற அறிவிப்போடு, யாரையும் விமர்சிக்கக் கூடாது என்ற கண்டிஷனும் போட்டிருக்கிறார் ஜி.கே. மணி.
இது இலங்கைத் தமிழர்களுக்காக பல்வேறு புரட்சிகர அமைப்புகள், பொதுமக்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள் நடத்துகிற போராட்டம். தேர்தல் அரசியலில் இருந்து விலகியிருக்கும் அமைப்புகள் பலதும் கலந்து கொள்ளும் கூட்டத்தில் ஒருவர் அரசியல் நீக்கம் செய்து விட்டுப் பேசுங்கள் என்றால் நாம் என்னவென்று சொல்வது. ராமதாஸ் காங்கிரஸோடு இருக்கிறார் அவர்களுடன் பதவியைப் பங்கிட்டிருக்கிறார். ஆகவே ராமதாஸ் கலந்து கொள்ளும் கூட்டத்தில் காங்கிரஸை யாரும் விமர்சித்து விடக் கூடாது என எதிர்பார்க்கிறீர்கள்.
வைகோவோ யாரும் ஜெயலலிதாவை விமர்சித்து விடக் கூடாது என்று பார்க்கிறார்.
திருமாவோ யாரும் கருணாநிதியை விமர்சித்து விடக் கூடாது என்று பார்க்கிறார்.
உண்மையில் ஈழத் தமிழர்களை கொன்று குவிக்க ஆயுதம் அனுப்பும் காங்கிரஸையும் அதை தட்டிக் கேட்காமல் மௌனமாக சகித்துக் கொண்டு இருக்கும் கருணாநிதியையும் எப்படி விமர்சிக்காமல் இருக்க முடியும். ‘போரில் மக்கள் சாவது இயல்பான ஒன்றுதான்’ என ராஜபக்ஷேவின் தங்கச்சி போல பேசுகிற ஜெயலலிதாவும் ஒன்றுதான், ‘இலங்கையில் தமிழர்கள் மீதான போரை இந்திய அரசு நடத்தவில்லை; அது பொய்’ என்று ராஜபக்ஷேவின் அண்ணனைப் போல பேசுகிற கருணாநிதியும் ஒன்றுதான்.
கருணாநிதி ஜெயலலிதாவை வெல்லலாம். காங்கிரசுக்கு காவடி தூக்கலாம், வைகோவை முடக்கலாம், ராமதாசை தனிமைப்படுத்தலாம், நெடுமாறனை இழிவுபடுத்தலாம். ஆனால் இனி எப்போதும் கருணாநிதியால் வெல்ல முடியாத ஒரு தியாகிதான் முத்துக்குமார்.
அந்த வீர மகன் மூட்டிய நெருப்பே இன்று கருணாநிதிக்கு எதிராக நின்று எரிகிறது என்பதுதான் உண்மை. திமுக சீரழிவின் இறுகிய வடிவம்.... திமுக மத்திய அரசுக்கான அதரவை வாபஸ் வாங்கினால் மத்திய அரசு கவிழுமா கவிழாதா என்பதல்ல இங்கு பிரச்சனை. அதற்கான முயற்சியை திமுக இதய சுத்தியோடு எடுத்ததா என்பதுதான் கேள்வி.
அது போல நண்பர் கோவி.லெனின் கலைஞருக்கு ஆதரவாக எழுதிய கட்டுரை ஒன்றில் இப்படி எழுதியிருந்தார். ‘‘2009ல் முல்லைத்தீவுக்குள் சிங்கள ராணுவம் நுழைந்தபோது தமிழகத்தில் எழுந்த உணர்ச்சியலைக்கும், 1995ல் யாழ்ப்பாணத்தை சிங்கள ராணுவம் பிடித்தபோது இங்கே நிலவிய மயான அமைதிக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். முல்லைத்தீவு தாக்குதல் நடந்தபோது கலைஞர் ஆட்சி. எல்லோரும் பதைபதைத்து குரல் கொடுத்தனர். யாழ்ப்பாணத் தாக்குதலின்போது ஜெயலலிதா ஆட்சி. அதனால்தான் அந்த மயான அமைதி. இதுதான் கலைஞர் ஆட்சிக்கும் ஜெயலலிதா ஆட்சிக்குமான அடிப்படை வேறுபாடு’’ என்று ஒரு காரணத்தைச் சொல்கிறார்.
யாழ்ப்பாணம் சிங்கள ராணுவத்திடம் விழுந்தபோது வடக்கு கிழக்கின் பெரும்பாலான இடங்கள் புலிகளின் கைகளில் இருந்தது. தவிரவும் ‘‘ஓயாத அலைகள்’’ நடவடிக்கை மூலம் வடக்கை முழுமையாக கைப்பற்றி கிழக்கையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து புலிகள் வலிமையாக இருந்த நேரம் அது. ஆனால் யாழ்ப்பாணம் எப்போதும் புலிகளிடம் நிரந்தரமாக இருந்ததில்லை. எப்போதெல்லாம் ராணுவத்தால் யாழ்ப்பாணம் ஆக்ரமிக்கப்பட்டதோ அப்போதெல்லாம் யாழ் மக்கள் ராணுவ நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து திறந்த வெளிச்சிறைக்குள் வாழப் பழகி விட்டார்கள். ராணுவ ரீதியிலும், கேந்திர ரீதியிலும் ஈழ விடுதலைப் போருக்கு வடக்குப் பகுதிதான் முக்கியம். கிழக்கை போராளிகள் இழந்தபோது கூட கருணாநிதி ஆட்சிதான் இங்கே நடந்து கொண்டிருந்தது. 1995ல் எப்படி யாழ்ப்பாணம் ராணுவத்தின் கைகளில் விழுந்தபோது ஜெயலலிதாவின் ஆட்சியில் மயான அமைதி நிலவியதோ அப்படித்தான் கிழக்கு விழுந்து பிள்ளையான் முதல்வர் ஆன போதும் இங்கு மயான அமைதி நிலவியது. ஆனால் கிழக்கை ஆக்ரமித்த சிங்கள பேரினவாதிகள் இன்று வடக்கையும் ஆக்ரமித்திருக்கிறார்கள்.
ஆனால் யாழ்ப்பாணத்துக்கும், கிழக்கிற்கும் வன்னிப் பிரதேசத்திற்கும் உள்ள வித்தியாசத்தையும் போரால் ஏற்பட்ட பாதிப்புகளை நினைக்கத் தவறுவதாலும் கேந்திர ரீதியாக தமிழர் விடுதலைப் போரில் வடக்கின் பங்கு பற்றி தெரியாத காரணத்தாலும் லெனின் பிழையாக எழுதுகிறார். வன்னிப்பகுதி மட்டும்தான் எப்போதும் சிங்களப் பேரினவாதத்திற்கு அடிபணிய மறுக்கும் மண். (வன்னிமைகள் என்றழைக்கப்பட்ட வன்னிச் சிற்றரசுகள் கூட கடைசி வரை வெள்ளையனுக்கு அடிபணிந்ததில்லை) வன்னியின் உள்ள ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் வீட்டிற்கு இரண்டு பிள்ளைகளை புலிப் போராளியாக களமுனைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
தங்கள் பிள்ளைகள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு கள முனைக்குச் செல்லும்போது புலிகளைப் பெற்றவர்கள் அவர்களை விட்டுவிட்டு ராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு செல்ல முடியாது. அப்படிச் சென்றவர்களை நூற்றுக்கணக்கில் கொன்று புதைத்து வருகிறது சிங்கள அரசு. ஆக தங்கள் பிள்ளைகள் எங்கு போகிறார்களோ அவர்களும் அங்குதான் செல்ல முடியும். புலிகளோடு புலிகளாக முல்லைத் தீவின் மரண விளிம்பில் சிக்கியிருக்கிறார்கள் மக்கள். புலிகளைத் தாக்குகிறோம் என்று இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து வீசுகிற குண்டு புலிகளைக் கொல்கிறதோ இல்லையோ புலிகளை ஈன்ற ஈழத் தமிழச்சியைக் கொல்கிறது; புலியின் தங்கையைக் கொல்கிறது; புலியின் மச்சானை, மாமனைக் கொல்கிறது. இப்படி கொன்றொழிப்பதுதான் தமிழகத்தை உசுப்பியிருக்கிறதே தவிர ‘கருணாநிதி ஆட்சிக்கு வந்து விட்டார். ஆகவே எல்லோரும் ஈழத் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று பிரச்சனை பண்ணுங்கள்’ என்று வேண்டுமென்றே நாங்களெல்லாம் கூச்சல் போடவில்லை. ‘இது கருணாநிதிக்கு தலைவலியை உண்டாக்குகிறது. ஆகவே யாரும் இது பற்றி பேசக் கூடாது’ என்று நண்பர் லெனின் விரும்புகிறாரோ என்னவோ? எம்மைப் பொறுத்தவரையில் ஈழத் தமிழர்களின் தமிழீழ சுதந்திரப் போர் என்பது ஆறரை கோடி தமிழ் மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சனை.
அத்தோடு தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கும் இந்தியாவின் தென்கோடியை அரசியல் மயப்படுத்த உதவும் ஒரு கருவிதான் ஈழம். அதை ஜெயலலிதாவோ கருணாநிதியோ தங்களின் பதவி அரசியலுக்குப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். பதவி வெறி பிடித்த இந்த அரசியல்வாதிகளை இனியும் சகித்துக் கொண்டிருப்பது ஈழத் தமிழனுக்கு மட்டுமல்ல இந்தியத் தமிழனுக்கும் ஆபத்து. ஏனென்றால் ஈழத்தையும் தாண்டி ஓகேனக்கல், முல்லைப்பெரியாரு, காவிரி என தமிழர்களை நெருக்கும் சக்திகளிடம் இவர்களே நம்மைக் காட்டிக் கொடுத்து விடுவார்கள். இந்தப் பார்வையின் முதல் வித்தை விதைத்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கில் திரண்டது கட்சித் தொண்டர்கள் அல்ல பொது மக்களும் இளைஞர்களும். அவர்கள்தான் கண்ணீரும் கம்பலையுமாக முத்துக்குமாருக்காக அழுதார்கள்.
ஒரு பிரதான அரசியல் தலைவர் அந்த இறுதி ஊர்வலத்துக்கு வரவே இல்லை. முத்துக்குமாரின் தியாகத்தை ஒரு மனிதாபிமான பிரச்சனையாக மாற்றுவது எவ்வளவு அபத்தமோ அது போலத்தான் ‘யாரையும் யாரும் விமர்சிக்கக் கூடாது’ என்பதும். ஒரு பக்கம் கூட்டணியையும் தொடர்ந்து கொண்டு மத்தியில் பதவியையும் சுகித்துக் கொண்டே ஈழத் தமிழர்களுக்காக போராடும்போதுதான் ‘யாரும் வீதிக்கு வந்து போராட வேண்டாம். வீட்டில் சும்மா இருந்தாலே போதும்’ என்று சொல்ல முடியும். உண்மையிலேயே ஈழத் தமிழர்களுக்காக உதவ நினைக்கும் யாரும் காங்கிரஸ் துரோகிகளுடனோ பார்ப்பன பாசிஸ்டுகளுடனோ கூட்டணி வைக்கக் கூடாது.
இந்த இரண்டு மக்கள் விரோத சக்திகளுமே ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்திய உழைக்கும் மக்களுக்கும் எதிரானவர்கள்தான். இந்த கூட்டணிக்குள் தொடர்ந்து கொண்டே இந்தப் போராட்டங்களை முன்னெடுக்கலாம் என்பதும் வீணாய்ப்போன பகல் கனவுதான்.
தோழர்களே!
கடந்த நாற்பதாண்டுகளில் தமிழகத்தில் உருவாகி வளர்ந்த திராவிட இயக்கம் தேர்தல் அரசியலில் சீரழிந்து அதன் இறுகிய வடிவத்துக்கு இன்று வந்திருக்கிறது, அதே நேரம் அரசியலற்ற வெற்று தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் பல நேரங்களில் பார்ப்பனர்களைப் போல நடந்து கொள்கிறார்கள். இந்தியா ஈழத்தில் முன்னெடுக்கும் போர் என்பது அதன் முதலாளித்துவ நலன் சார்ந்தது. தென்கிழக்கில் அமெரிக்காவின் அடியாளாக உருவாகி இருக்கும் இந்தியா, அமெரிக்கா சீரழித்த ஆப்கானில் இன்று வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கிறது. மீள்கட்டுமானம் என்ற பெயரில் இந்திய முதலாளிகள் ஆப்கானை சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். அது போலவே இலங்கையையும் சுடுகாடாக்கி விட்டு அதையும் மீள்கட்டுமானம் என்ற பெயரில் வியாபாரத் தந்திரமாக மாற்றுகிறார்கள்.
அதனால்தான் ஈழ மக்களின் சுய நிர்ணய உரிமைப் போரை நசுக்கி புலிகளை அழித்து விட்டு துரோகக் குழுக்களை அங்கே இறக்கி உள்நாட்டுப் போரை தொடர விரும்புகிறது இந்தியா. கிளிநொச்சியை சிங்கள ராணுவம் கைப்பற்றியதைத் தொடர்ந்து இலங்கைக்கு சென்ற பிரணாப் முகர்ஜி கிளிநொச்சியை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு இந்தியா உதவும் என்று உறுதி அளித்து வந்திருப்பதும், முல்லைத்தீவு வரை சிங்கள ராணுவம் ஆக்ரமித்த பிறகு ‘‘புலிகளும், இலங்கை ராணுவமும் ஒரே நேரத்தில் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு கையைத் தூக்கி சமாதானப் பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டும்’’ என்று ப.சிதம்பரம் சொல்வதிலிருந்தும் இது தெரிகிறது. ஒரு போதும் இலங்கை இனப்பிரச்சனை தீர இந்தியா விரும்பாது. தென்கிழக்கில் இந்து மகா சமுத்திரத்தில் தனது ராணுவ மேலாண்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றால் இலங்கை எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என இந்தியா ஆசைப்படுகிறது. அதன் மூலம் ஆயுத வியாபாரமும் செய்யலாம், கூலிப்படைகளையும் கட்டி எழுப்பலாம், இந்து மகா சமுத்திரத்தையும் தன் கட்டுக்குள் வைக்கலாம் என்று கணக்கிடுகிறது இந்தியா.
இப்போது நம் முன்னால் நிற்கும் கேள்வி இரண்டுதான். முத்துக்குமாரின் கனவான கிளர்ச்சியை நாம் முன்னெடுக்கப் போகிறாமா? அல்லது இருக்கிற ஓட்டுக் கட்சிகளால் மீண்டும் காயடிக்கப்படப் போகிறோமா? வெறுமனே ஈழத்துக்கான போராட்டமாக மட்டுமல்லாமல் தமிழகத்தில் புரட்சிகர சக்திகளை வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இன்று முத்துக்குமார் உருவாகியிருக்கிறார். அந்த தியாகியின் நேர்மையான அரசியலை தேர்தல் அரசியல்வாதிகளால் ஒரு போதும் முன்னெடுக்க முடியாது.
உழைக்கும் மக்களாலும், இளைஞர்களாலும், மாணவர்களாலும், பெண்களாலும் மட்டுமே முன்னெடுக்க முடியும். நடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஓட்டுப் பொறுக்கிகள் ஈழப் பிரச்சனையை அம்போவென கைவிடுவார்கள். ஆனால் இதுதான் சரியான தருணம். மக்களைத் திரட்டி ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளின் நாடகங்களை நாம் அம்பலப்படுத்த வேண்டும்.
காங்கிரஸ் கட்சியையும் அதைத் தாங்கிப் பிடிக்கும் கருணாநிதியையும் அனைத்துச் சக்திகளும் ஒன்றிணைந்து தனிமைப்படுத்த வேண்டும். தமிழக மக்களை அரசியல் ரீதியில் அணி திரட்டாமல் இந்தப் போர் வெல்லாது. இந்திய ஆக்ரமிப்புச் சக்திகளை நாம் முறியடிப்பது என்பது ஈழத்திற்கு மட்டுமேயான விடிவு மட்டுமல்ல, அது நமக்குமானதுதான். முத்துக்குமார் அதைத்தான் அதற்கான வாசலைத்தான் திறந்து விட்டுச் சென்றிருக்கிறான்.
நன்றி
பொன்னிலா

பெரியார் மட்டும் இருந்திருந்தால்(ஒரு தொண்டணின் ஏக்கம்)


'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம்!' என்று மொழி அலங்காரத்துடன் சொல்லப்பட்ட கதைகள் உண்டு. பகத்சிங்,உத்தம்சிங்,சௌரி சௌரா என வரலாறு சொல்ல மறந்த கதைகளும் உண்டு. எல்லா வெளிச்சங்களின் பின்னும் இன்னொரு நிழல் இருக்கிறது. அனைத்து ஒடுக்குமுறைகளும் வன்முறையுடனேயே தோன்றின்; வன்முறையாலையே நிலைபெற்றன;அவை வன்முறையாலேயே அழிக்கப்படும்!என்று சித்தந்தத்தின் மீது நன்பிக்கைகொண்டவர்கள் எல்லா எழுச்சிகளின்போது கூடவே பிறக்கிறார்கள். அப்படி ஒரு போராளியாகப் போராடிய பெரியாரின் இயக்கத்தில், வன்முறையை வழிமுறையாகப் கடைபிடித்த முரட்டுத் தொண்டர் இந்த ‘ஆசிட்’ தியாகராஜன்.


அநேகமாக தமிழகத்தில் முதன்முதலில் ஆசிட் பாட்டிலைத் தூக்கியவர் இவராகத்தான் இருக்கும். ஒரு ஆசிட் தாக்குதல், நாம் எதிர்பார்த்தேயிராத மனிதர் மீது கொலை முயற்சி என இவரது ‘சொல்ல மறந்த கதை’


திருச்சியில் எங்க தெருவைச் ‘ சுயமரியாதைத்தெரு’ன்னுதான் சொல்லுவாங் அந்தளவுக்குப் பெரும்பாலானவர்கள் பெரியாரின் சுயமரியாதை இயத்தில் தீவிரமாகச் செயல்பட்டாங்க. நாகம்மையார் இறந்த இரண்டாவது நாளிலேயே எங்க பெரியம்மா பையன் திருமணத்தை நடத்திவைக்க பெரியார் திருச்சி வரும் அளவுக்கு அவருக்கும் எங்க குடும்பத்துக்கும் நெருக்கம். எனக்கு அவர் மேல் வெறி பிடிச்ச அளவுக்கு பிரியம். பத்தாவதோடு படிப்பை நிறுத்திவிட்டு, இயக்கப் பணிகளில் தீவிரமாயிட்டேன். பெரியார் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இந்திப் பெயர்களைத் தார் பூசி அழிக்கும் போராட்டம் அறிவிச்சப்போ, முதல் நாலே திருச்சியில் இருக்கும் எல்லா ஸ்டேஷன் பெயர்களையும் தார் பூசி ஆழிச்சுட்டேன். ஐயா வந்து அழிக்க இருக்கட்டும்னு திருச்சி ஜங்ஷனை மட்டும் விட்டுவெச்சிருந்தேன்.


ஆசிட் வீச்சு

1957-ல் பெரியார் மீது திருச்சி செஷன்ஸ் கோர்ட்டில் ‘வெட்டுக் குத்து’ வழக்கு நடந்தது. குறிப்பிட்ட சமுகத்தின் மீது ஐயா வன்முறையைத் தூண்டிவிட்டார்ங்கிறது வழக்கின் சாராம்சம். தினமும் கேஸ் விசாரணை முடிந்து, ‘கோர்ட்ல என்ன நடந்துச்சு?’ன்னு ஐயா தொண்டர்கள்கிட்டே விளக்கமாகச் சொல்வார். ஒரு நாள், பெரியாரின் பொதுக்கூட்டப் பேச்சுக்களைக் குறிப்பெடுத்து அரசாங்கத்துக்கு அனுப்பும் சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கண்ணப்பன் சாட்சி சொல்லணும். அவர் தன் சாட்சியத்தில், ‘பெரியார்..... பெரியார்’னு சொல்லவும் அரசு வக்கீல் சீனிவாசாச்சாரி, ‘ பெரியாருன்னா யாரு?’ன்னு வேணும்னே கேட்டிருக்கார். திராவிடர் கழகத் தலைவருன்’னு இன்ஸ்பெக்டர் சொல்ல, அதுக்கு ‘ராமசாமி நாயக்கர்னுதான் சொல்லனும், பெரியார்’னு கோர்ட்ல சொல்லக் கூடாது’ன்னு சொல்லியிருக்காரு. இந்தச் சம்பவத்தை ஐயா எங்கிட்ட சொல்லும்போது, எனக்குப் பயங்கர கோபம்.


அந்த வக்கீலைப் பழிவாங்கியே ஆகணும்னு வெறியேறிச்சு. என் முரட்டுக் குணம் தெரிஞ்ச இயக்கத்து நண்பர்கள், இந்த மாதிரி சமயங்களில் என்னை எங்கேயாவது அடைச்சுவெச்சிடுவாங்க. அந்த வெட்டு்க்குத்து வழக்கில் ஐயாவுக்கு ‘மூணு வருஷம் ஜெயில்’னு தீர்ப்பு வந்துச்சு. அப்ப என்னைப் பிடிச்சுக் கட்சி ஆபீஸ்ல பூட்டிவெவ்கசுட்டாங்க. வக்கீல் சீனிவாசாச்சாரி மேல உள்ள கோபம் அடங்கவே இல்லை. அவரை காரோடு சேர்த்து காவிரி ஆத்துல தள்ளிவிடுறதுன்னு போட்ட திட்டம் சரிப்பட்டு வரலை அதுக்குப் பிறகும் சில முயற்சிகள் தோல்வியில் முடிஞ்சிருச்சு. கடைசியா குடியரசு தினத்தன்னிக்கு தேதி குறிச்சேன். குடியரசுதினக் கூட்டம் முடிஞ்சு சீனிவாசச்சாரி வந்துட்டிருந்தார். அவர் வீட்டு வாசலை நெருங்கவும், நான் பாய்ஞ்சு அவர் கழத்தைப் பிடிச்சுட்டேன். இடுப்பில் இருந்த ஆசிட் பாட்டிலை அவர் முகத்துமேல ஊத்தினேன்.


அந்த நேரம் பார்த்து எட்டு மணிச் சங்கு ஊதினதுனால, அவர் கத்தினது யாருக்கும் கேக்கலை. நான் தப்பிச்சு ஓடி வந்துட்டேன். கை,கால், நெஞ்சுன்னு பல இடங்களில் அவருக்கு ஆசிட் காயம். எனக்கும் தொடையிலும் கையிலும் ஆசிட் காயம்.ஆறு மாசம் பாண்டிச்சேரி தலை மறைவு வாழ்க்கை. மாறுவேஷத்தில் இருந்தப்போ போலீஸ் என்னைப் பிடிச்சாங்க. வழக்கில் ‘குற்றம் நிரூபிக்கப்படலை’ன்னு என்னை விடுதலை செஞ்சாங்க. பெரியாருக்காக எதுவும் செய்யத் தயாரா இருந்த எனக்கு சிறைத் தண்டணை கிடைச்சிருந்தா, இன்னும் சந்தோஷமா இருந்திருப்பேன். அந்தக் கொலை முயற்சி தோல்வி அடைஞ்சிருச்சு. ஆனா, நேருவைக் கொலை பண்ணலாம்னு வெடிகுண்டெல்லாம் கட்டிக்கிட்டுப் பக்கத்துல போயிட்டேன். ஆனா,

"அட ஆமாங்க! இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்தப்ப , தமிழர்களை ‘ நான்சென்ஸ்’னு நேரு திட்டிட்டார். அவர் மேலே எனக்கு வழக்கம் போல பயங்கரக் கோபம். அந்த நேரம் பார்த்து நேரு திருச்சிக்கு வந்தார் .அவர் வர்றதக்கு முதல் நாளே ரயில்வே லைன் முழுக்க ஆட்கள் லைட் அடிச்சு பாதுகாப்புக்கு நிக்கிறாங்க.


நான் சத்தம் காட்டாம தண்டவாளத்துக்குப் பக்கத்தில் படுத்துக்கிட்டேன். வெடிகுண்டைக் கயித்துல கட்டிவெச்சிருக்கேன். ரயில் வந்நவுடனே குண்டடைத் தண்டவாளத்தில் போடடு வெடிக்க வைக்கிறதுதான் திட்டம். அசோகச் சக்கரம் போட்ட ரயில் மெதுவா ஊர்ந்து வருது...... வெடிகுண்டை வீசிடலாடமனு நிமிர்ந்து பார்த்தா,கம்பார்டமென்ட் வாசல்ல இடுப்புல கை வெச்சுக்கிட்டு கம்பீரமா நிக்கிறார் காமராஜர். ஒரு நிமிஷம் எனக்கு உடம்பு ஆடிப்போச்சு. அப்ப , ‘பச்சைத் தமிழன்’னு காமராஜரை பெரியார் தீவிரமா ஆதரிச்சுட்டு இருந்த நேரம். வெடிகுண்டைக் கீழே போட்டுட்டுக் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பிச்சுட்டேன்'!"


ராஜாஜி குலக் கல்வித்திட்டம்


ராஜாஜி குலக் கல்வித்திட்த்தை அறிவிச்சப்பவும் ஆத்திரம் ஆத்திரமா வந்துச்சு. சுடுகாட்டுக்குப் போனேன் ஒரு எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்து பேப்பர் துணி சுத்தி கண்ணாடி மாட்டிவிட்டு ராஜாஜியைக் கொலை செய்வேன்‘னு எழுதி போலீஸ் ஸ்டேஷன் முன்னாலே போட்டுட்டேன்.


ஏழும்புக்கூட்டுல சுத்துன லேபிளை வெச்சு, போலீஸ் என்னைக் கண்டுபிடிச்சிருச்சு. அப்புறமும் சின்னதும் பெருசுமா ஏகப்பட்ட போராட்டங்கள். ஆனா, நான் எப்பவுமே திராவிடர் கழகத்தில் உறுப்பினரா இருந்ததில்லை.


ஐயா மட்டும் இருந்திருந்தால்


சூத்திரப் பட்டத்தை ஒழிக்க மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கிட்டு பொதுதொண்டை செய்தாரு ஜயா ,ஆனா இன்னிக்கு நம்ம இனமே இலங்கையில் அடிபட்டுச் சாகுறப்ப, சாதிக்க வேண்டியவங்க போர்த்திக்கிட்டு இருக்காங்க. அந்தக் காலத்தைப்போல தமிழ்ச் சமுதாயம் தான் சுயமரியாதையோடு ஆதரவா எழுந்து நிற்குது.


ஆனா ஜயா பேரைச் சொல்லிப் பொழைப்பு நடத்தினவங்க இன்னிக்கு அவருக்கே எதிரியாகவும் துரோகியாகவும் மாறிட்டாங்க. ஜயா மட்டும் இருந்திருந்தா, ஈழத் தமிழனின் துயரம் இந்நேரம் ‘போறேன் போறேன்’னுட்டு காணாப் போயிருக்குமே!"

என்ற ஏக்கத்துடன் வெளியிட்டுள்ள அறிக்கை



நன்றி ஆனந்த விகடன் (18.03.2009)





வேலுசாமி அளித்த சாட்சியம்:

வேலுசாமி அளித்த சாட்சியம்:

1991 மே 24-ம் தேதியோடு தமிழகத் தில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இருந்தது. அதற்கு 3 நாட்களுக்கு முன்பு மே 31-ம் தேதி ராஜீவ் திருப்பெரும் புதூரில் கொலை செய்யப்பட்டார்.

மே 19-ம் தேதி தில்லியிலிருந்து தமிழகம் வந்த சுப்ரமணியசாமி திருப்பெரும்புதூர் பகுதிக்குத்தான் சென்றார். திருப்பெரும்புதூர் வழியாக நாங்கள் காஞ்சிபுரம் சென்று, பகல் உணவை முடித்துக் கொண்டு வாலாஜா பாத்துக்குச் சென்று பிரச்சாரம் செய்துவிட்டு, மீண்டும் காஞ்சிபுரம் திரும்பி கூட்டம் பேசிவிட்டு, பிறகு திருத்தணி, பள்ளிப்பட்டுக்குச் சென்று பிரச்சாரம் செய்துவிட்டு வேலூர் திரும்பினோம்.

அடுத்த நாள் 20-ம் தேதி சேலம், ஆத்தூர் சென்றுவிட்டு நான் விடை பெற்று திருச்சி சென்றுவிட்டேன். அடுத்து 21-ம் தேதி காலை சுப்ர மணியசாமி, விமானம் மூலம் டில்லி செல்லத் திட்டமிட்டிருந்தார். 21-ம் தேதி பகலில் டில்லியில் ஒரு முக்கிய வேலை இருக்கிறது. எனவே, அதை முடித்துக் கொண்டு 22-ம் தேதி சென்னை வந்து திருச்சி வழியே மதுரைக்குச் செல்கிறேன் என்று என்னிடம் சுப்ரமணியசாமி பயணத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தார்.

21-ம் தேதி இரவு தான் ராஜீவ் கொலை செய்யப்படுகிறார். அன்று சுப்ரமணியசாமி நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. 21-ம் தேதி காலையில் அவர் திட்ட மிட்டபடி டில்லி செல்லவில்லை. அவரின் அன்றைய அனைத்து நடவடிக்கைகளும் மர்மமாகவே இருந்தன. அன்று, அவர் யாரை யாரைச் சந்தித்தார் என்ற விவரங்களும் ரகசியமாகவே இருக்கின்றன. 21-ம் தேதி காலை அவர் சென்னை விமான நிலையம் அருகே உள்ள டிரைடென்ட் ஓட்டலில்தான் தங்கியிருந்தார். சென்னையில் அவர் ஏன் மர்மமாகத் தங்கினார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. தன் கட்சியின் நெருங்கிய தோழர்களுக்குக் கூட தெரிவிக்காமல் அவர் தில்லி பயணத்தை ரத்து செய்தது ஏன் என்பது மர்மமாகவே இருக்கிறது.

நான் 21-ம் தேதி காலை - தில்லிக்கு சுப்ரமணியசாமியின் வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண் டேன். அவர் சென்னையில்தான் இருப்பார் என்று அவரது மனைவி கூறினார். பிறகு கட்சிப் பிரமுகர்களிடம் தொடர்பு கொண்டு விசாரித்தேன். சுப்ரமணியசாமி எங்கு இருக்கிறார் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை.

21-ம் தேதி காலை தில்லிக்கு விமானம் மூலம் புறப்படப் போவதாகக் கூறிய சுப்ரமணியசாமி அன்று காலையில் தில்லி பயண டிக்கெட்டை ரத்து செய்தார். பிறகு சென்னையி லிருந்து பெங்களூருக்கு திருப்பெரும் புதூர் வழியாக காரில் செல்ல வேண்டிய அவசியமென்ன? இதைத் தனது முக்கியத் தோழர்களுக்குக்கூட தெரிவிக்காமல் மறைத்தது ஏன்?

பெங்களூரில் யாரைச் சந்திக்க அவர் அவசரமாகப் போனார்? ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் பெங்களூரைத் தளமாகக் கொண்டு செயல்பட்டிருக்கலாம். ராஜீவ் கொலைக்குப் பிறகு கூடி அவர்கள் பெங்களூர் வழியாக வெளிநாட்டுக்குத் தப்பியிருக்கலாம். இந்த நிலையில் பெங்களூருக்கு யாரையோ அவசர மாகச் சந்திக்க சுப்ரமணியசாமி சென்றிருக்கிறார்.

அப்போது சுப்ரமணியசாமி மத்திய அமைச்சர். அமைச்சர் பதவிக்குரிய பல்வேறு வசதிகள் அவருக்கு உண்டு. மே 21-ம் தேதி அவருக்காக செய்யப் பட்ட ஏற்பாடுகள் என்ன? பாது காப்புக்காக செய்யப்பட்ட வசதிகள் என்ன? இது பற்றிய ஆவணங்களை தமிழக அரசு மற்றும் மத்திய அரசிடமிருந்து ஜெயின் கமிஷன் பெற வேண்டும்.

21-ம் தேதி இரவு 10.25 மணிக்கு நான் சுப்ரமணியசாமி வீட்டுக்குத் தொலை பேசியில் பேசினேன். அப்போது ராஜீவ் கொலை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. யாருக்குமே எதுவுமே தெரியாது. 23-ம் தேதி அவரது திருச்சிப் பயணத்தை உறுதி செய்து கொள்ளவே நான் தொடர்பு கொண்டேன். தொலைபேசியை எடுத்த சாமி, என் குரலைக் கேட்டதும், மிக சர்வ சாதாரணமாக, ராஜீவ் காந்தி படு கொலை செய்யப்பட்டுவிட்டார் என்ற செய்தியைச் சொல்லத்தானே போன் செய்தீர்கள்? என்றார். நான் அதிர்ந்து போனேன். வெளி உலகத்துக்குத் தெரியாத தகவல் - இவருக்கு மட்டும் எப்படி தெரிந்தது?

சிறிது நாட்கள் கழித்து - அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டிருந்த திருப்பெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் மரகதம் சந்திரசேகரை நலம் விசாரிக்க நானும் சாமியும் போனோம். மரகதத்துக்குத் துளி காயம் கூட ஏற்படவில்லை. மரதகம் அம்மாள் பாசாங்கு செய்வது போலவே எனக்குத் தோன்றியது.

மரகதம் பற்றி பேச்சு எடுத்தபோது - அறையில் சொல்கிறேன் - நிறைய விஷயம் இருக்கு என்றார் சாமி. திருப் பெரும்புதூரில் - பொதுக் கூட்டத் துக்குத் தேர்வு செய்த இடம் மரகதத்துக்கேத் தெரியாது. அவருக்கே தெரியாமல் சிலர் தேர்வு செய்து விட்டனர். அது சதிகாரர்களுக்குச் சாதகமாகிவிட்டது என்றார் சாமி. இந்த அளவுக்குத் துல்லியமான தகவல்கள் சாமிக்கு எப்படித் தெரிந்தன?

பிரதமர் சந்திரசேகருக்குத் தெரியும் முன்பே எனக்கு ராஜீவ் மரணச் செய்தி தெரிந்துவிட்டது என்று சுப்ர மணியசாமி கூறியிருப்பதை கமிஷன் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- என்று சுப்ரமணியசாமியுடன் மிக நெருக்கமாக உடனிருந்த திருச்சி இ.வேலுசாமி தனது சாட்சியத்தில் கூறி இருக்கிறார்.

ஜெயின் கமிஷன் முன்பு தரப்பட்ட இந்த சாட்சியமும் கமிஷன் தந்துள்ள பரிந்துரையும் சுப்ரமணியசாமி மீது விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

ராஜீவ் கொலையில் சு.சாமி தொடர்பு



ராஜீவ் கொலையில் சு.சாமி தொடர்பு

ராஜீவ் கொலையில் நடந்த சதி பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் கமிஷன் சந்திராசாமி - சுப்ர மணியசாமி இருவர் மீதும் சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

ராஜீவ் கொலையில் - தமிழகத் தலைவர்களைத் தொடர்புபடுத்தி மிரட்டி வந்தவர் சுப்ரமணியசாமி. இந்த பார்ப்பனரே - ராஜீவ் கொலையில் சந்தேகத்துக்கு உரியவர். ஜெயின் கமிஷன் - சுப்ரமணியசாமி மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. ஜெயின் கமிஷன் அறிக்கையில் சுப்ரமணியசாமி பற்றி கூறப்பட்டிருப்பது என்ன? இதோ சில பகுதிகள்:

1995 ஜூன், ஜூலையில் சந்திராசாமி யும், சுப்ரணியசாமியும் லண்டனுக்குப் போயிருக்கிறார்கள். இவர்களில் லண்டன் பயணத்தின் நோக்கம் குழப் பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்து கிறது.

காலிஸ்தான் விடுதலைப் படையைச் சார்ந்த ஜெக்ஜித்சிங் சவுகான் என்பவர் - அகாலிதளம் கட்சியைச் சார்ந்த சேவா தாஸ் என்பவரிடம் ராஜீவ் காந்தியைக் கொல்லத் திட்டம் இருப்ப தாகக் கூறி இருக்கிறார். இதை சேவா தா° என்பவர் ஜெயின் கமிஷன் முன் தெரிவித்தார். லண்டனில் உள்ள சவுகான் வீட்டில் - தீவிரவாதிகள் பங்கு கொண்ட ஒரு கூட்டம் நடந்தது என்றும், அதில் இந்தக் கொலைத் திட்டம் பற்றி கூறப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார். இந்த நிலையில் - சவுகானை அப்ரூவராக மாறும்படி வலியுறுத்தவே சந்திராசாமியும், சுப்ர மணியசாமியும் லண்டன் சென் றார்களா என்று, கமிஷனில் கேள்வி எழுப்பப்பட்டது. ஜெயின் தனது அறிக்கையில் இதைக் குறிப்பிட்டு சுப்ரமணியசாமிக்கு எதிராக சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார்.

கமிஷன் முன்பு சுப்ரமணியசாமி நடந்து கொண்ட முறையையும் கமிஷன் குறை கூறியுள்ளதோடு, பல தேவை யான பொருத்தமுள்ள கேள்விகளுக்கு, சுப்ரமணியசாமி பதிலளிக்க மறுத்து விட்டதால் உண்மையைக் கண்டறிய அவர் ஒத்துழைக்கவில்லை என்றும் கமிஷன் தனது அறிக்கையில் 8-வது பகுதியில் 231-வது பக்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.
If would appear that consistant and persistant effort is there on his (Subramania samy) part not to answer the questions which are most relevant in order to find out the truth (jain commission report vol. viii-page 231)
இந்தப் பின்னணியில் - சுப்ரமணிய சாமி பற்றி அவரது கட்சிச் செய லாளராக இருந்த வேலுசாமி என்பவர் ஜெயின் கமிஷன் முன்பு அளித்த சாட்சியத்தையும் குறிப்பிட வேண்டும்.


வேலுசாமி கொடுத்த ஆதாரங்கள் (தொடரும்)




பிரணாப் பேசிய ‘போர் நிறுத்தம்’ எங்கே?


பிரணாப் பேசிய ‘போர் நிறுத்தம்’ எங்கே?

மத்திய அரசிடமிருந்து ஈழத் தமிழர்களின் மீதான இனப்படுகொலைக்கு எதிராக - ஏதேனும் ஒரு கருத்து வெளி வராதா என்று வழிமேல் விழி வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறது, தமிழகத்தை ஆளும் கலைஞர் ஆட்சி. ஆனால், சிறு துரும்பையும் அசைக்க டில்லி தயாராகவே இல்லை.

மத்திய அரசுக்கு ‘கெடு’ விதித்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறியும் எல்லைக்குப் போய் தீர்மானங்களைப் போட்ட தி.மு.க., இப்போது - கைகட்டி, வாய்ப்பொத்தி நிற்பது மட்டுமல்ல, தமிழ் நாட்டில் மத்திய அரசின் துரோகத்தைக் கண்டித்துப் பேசுவதைக்கூட அனுமதிக்க மறுக்கிறது. ஒருமைப் பாட்டிற்கு எதிராகப் பேசி விட்டார்கள் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமானை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து விடுகிறது.

எத்தனையோ முறை வேண்டுகோள்; சட்டமன்ற தீர்மானம்; நேரில் வலியுறுத்தல் எல்லாம் நடந்து முடிந்த பிறகும், கொழும்புக்கு போக மறுத்த வெளிநாட்டுத் துறை அமைச்சரான பார்ப்பனர் பிரணாப் முகர்ஜி, சிறீலங்கா அழைப்பை ஏற்று, கொழும்பு போனபோது, ஏதோ, தங்கள் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாக - தி.மு.க. கொண்டாடியது. கொழும்பு போன பிரணாப் முகர்ஜி, சிங்கள ராணுவத்தின் வெற்றிகளைப் பாராட்டினாரே தவிர, போரை நிறுத்து என்று சொல்லவில்லை. ஒவ்வொரு நாளும் சராசரியாக 75 முதல் 100 அப்பாவித் தமிழர்கள் - ஆண்களும், பெண்களும், குழந்தை களுமாக - ராக்கெட் வீச்சு, செல் வீச்சு, விமானக் குண்டுவீச்சுக்கு பலியாகிக் கொண்டே இருக்கிறார்கள். கடந்த ஜனவரிக்குப் பிறகு 2000 தமிழர்கள் பலியாகி விட்டனர். 700 குழந்தைகள் கொல்லப்பட்டுவிட்டனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகாயத்துக்கு உள்ளாகி, மருத்துவ சிகிச்சையின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரணாப் முகர்ஜி கொழும்புக்குப் போய் வந்த பிறகும் இந்தப் படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

கடந்த 28 ஆம் தேதி தூத்துக்குடியில் அரசு விழா ஒன்றில் பங்கேற்க பிரணாப் முகர்ஜி வந்தபோது, அவருக்கு எதிராக வை.கோ. தலைமையில் தமிழின உணர்வாளர்கள் கருப்புக்கொடி காட்டியபோது தி.மு.க. ஆட்சி கைது செய்து சிறையிலடைத்துவிட்டது. ‘பிரணாப் முகர்ஜி’ உருவ பொம்மையை எரித்தால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என்கிறார் கலைஞர்.

தூத்துக்குடியில் பேசிய பிரணாப் முகர்ஜி, முதல்முறையாக போரை நிறுத்துமாறு இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுத்தபோது, “பரவாயில்லை, தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கத் தொடங்கியிருக்கிறதே” என்ற நம்பிக்கை துளிர் விட்டது. மத்திய அரசைப் பாராட்டுவதற்காக காத்துக் கொண்டே இருந்த கலைஞர், உடனே பிரணாப் முகர்ஜிக்கு ‘தூயவர்’ என்ற புகழாரம் சூட்டி அறிக்கை விடுத்தார். “பிரணாப் பேச்சு நம் நெஞ்சத்து அணலைத் தணித்து, ஆறுதல் பூங்காற்றால் வீசச் செய்திருக்கிறது” என்று எழுதியதோடு, பிரணாப் முகர்ஜிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தியவர்களை, “வக்கிர மூளையினர்; நாகரிகக் கேடர்கள்” என்றெல்லாம் கடும் வார்த்தைகளால் ‘அர்ச்சனை’ செய்தார்.

அது மட்டுமல்ல, பிரணாப் முகர்ஜி, இலங்கை அரசுக்கு விடுத்த வேண்டு கோளில், பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தியின் கருத்தும் கலந்திருக்கின்றன என்பதை நான் சொல்லவும்வேண்டுமோ? என்று அவர்களையும் இணைத்துக் கொண்டார்.

இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையும் அவசரமாகக் கூடி, கலைஞர் மேற்கொண்ட இடைவிடாத முயற்சிக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று தீர்மானம் போட்டு, பிரணாப் முகர்ஜிக்கு பாராட்டு மாலைகளை சூட்டி தீர்மானம் நிறைவேற்றியது. மின்னல் வேகத்தில் இவ்வளவு பாராட்டுகளைக் குவித்து, வெற்றி மாலைகளைத் தாங்களே கழுத்தில் போட்டுக் கொண்டு, காங்கிரஸ் ஆட்சிக்கு தமிழ்நாடு மக்களிடம் நற்சான்றிதழைப் பெற்றுத் தந்து, அதன் வழியாக தங்களது ‘அரசியல் சந்தர்ப்பவாத’ங்களை மறைத்துக்கொள்ளத் துடித்தார்கள். ஆனால் என்ன நடந்தது?

“போரை நிறுத்துமாறு, இந்திய அரசிடமிருந்து அதிகாரபூர்வமாகவோ அல்லது அதிகாரபூர்வமற்ற முறையிலோ எந்தத் தகவலும் எங்களுக்கு வரவில்லை” என்று இலங்கையின் வெளியுறவுத் துறை செயலாளர் பாலித கோகனா அறிவித்து விட்டார்.

சிங்களர்களின் அதிகாரபூர்வ ஏடாக தமிழகத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் ‘இந்து’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியிலும், இலங்கையின் வெளிநாட்டுத் துறை செயலாளர் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியைப் பாராட்டுவதற்கு பேனாவை உதறிக் கொண்டு, மாலைகளைக் கரங்களில் ஏந்திக் கொண்டு காத்திருப்பவர்கள்.

தூத்துக்குடியில் பேசிய கருத்தை பிரணாப் - ஏன் இலங்கைக்கு அதிகாரபூர்வமான தெரிவிக்கவில்லை என்று கேட்டிருக்க வேண்டாமா?

அப்படியானால், தூத்துக்குடியில் பிரணாப் வெளியிட்ட கருத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காகவா? சோனியா - மன்மோகன்சிங் எல்லாம் கலந்து ஆலோசிக்காமலா, பிரணாப் பேசியிருப்பார் என்று எழுதிய கலைஞர், சோனியா - மன்மோகன்சிங் ஆலோசனையோடுதான்இப்படி ஒரு ஏமாற்று நாடகம் நடந்திருக்கிறது என்று இப்போது எழுதுவாரா? இவை தமிழர்களிடம் எழுந்துள்ள நியாயமான சந்தேகங்கள்!

ஞாயிறு தோறும் ‘முரசொலி’ நாளேடு, முரசொலி மாறன் எழுதிய மாநில சுயாட்சி நூலின் பகுதிகளை வெளியிட்டு வருகிறது. அதில் கடந்த மார்ச் முதல் தேதி முரசொலி மாறனின் கட்டுரைக்கான தலைப்பு, ‘கட்டளையிடுகிற எஜமானன் மத்திய அரசு’ என்பதாகும்.

ஆனால், கட்டளையிடாமலே மத்திய அரசை எஜமானனாக ஏற்றுக் கொள்கிற நிலைக்கு, தி.மு.க. அரசு இப்போது வந்து நிற்கிறது, என்பதே உண்மை.

இப்படி - மத்திய அரசின் எஜமானத்துவத்தை வலியுறுத்தும் முரசொலி மாறன் கருத்தைப் பேசினால்கூட இறையாண்மைக்கு எதிரானது என்று, தேசியப் பாதுகாப்புச் சட்டம் கலைஞர் ஆட்சியில் பாய்ந்தாலும் வியப்பதற்கில்லை.

Tuesday, March 10, 2009

ஆயுதம் ஏந்தும் காலம் வரும்-கலைஞர்



‘டெசோ’ கூட்டங்களில் கலைஞர் பேசியது என்ன? (2)
ஆயுதம் ஏந்தும் காலம் வரும்

நாம் கீழே வெளியிட்டிருப்பது கலைஞரின் உரை.

தமிழின உணர்வோடு இந்திய ஒருமைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் போர் முழக்கம். 1985 ஆம் ஆண்டு எதிர்கட்சியில் இருந்த கலைஞர் காங்கிரஸ் ஆட்சியை நோக்கி வைத்த கேள்விகள். தி.மு.க. தலைமைக் கழகமே, “தமிழனுக்கு ஒரு நாடு; தமிழ் ஈழ நாடு” என்ற தலைப்பில் இந்த உரையை நூலாக வெளியிட்டுள்ளது. ஒருமைப்பாட்டுக்கு எதிராக, கலைஞர் பேசியதில் கால்பங்கு கூட பேசாத சீமானை, கொளத்தூர் மணியை அதே கலைஞர் சிறைப்படுத்தியிருக்கிறார். அப்போது ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர். - கலைஞர் மீது இந்த உரைகளுக்காக எந்த வழக்கையும் போடவில்லை.

“நான் உறுதியாகச் சொல்கிறேன். அரசியல் லாபத்திற்காகத் தான் இலங்கைப் பிரச்சினையை எடுக்கிறோம் என்று யாராவது சொன்னால், நாங்கள் நடந்து முடிந்த பொது தேர்தலிலேயே இலங்கைப் பிரச்சினையை முன் வைத்திருப்போம்.

நாங்கள் இலங்கைப் பிரச்சினையை அரசியல் ஆதாயத்திற்காக வலியுறுத்த விரும்பவில்லை. இங்கே இருக்கின்ற எல்லாக் கட்சியினருக்கும், கட்சி சார்பற்ற முறையில் உடலிலே ஓடுகின்ற இரத்தம், தமிழ் இரத்தமானால், இதயத்தில் துடிக்கின்ற துடிப்பு ஒவ்வொன்றும் தமிழ்!! தமிழ்! என்று துடிப்பது உண்மையானால் அந்தத் தமிழன் சிந்திக்கட்டும்.
இலங்கையில் செத்துக் கொண்டிருக்கும் தமிழனை காப்பாற்ற வேண்டுமா? வேண்டாமா?
அவனுடைய உரிமைக் குரலுக்கு ஆதரவு தர வேண்டுமா வேண்டாமா என்பதை! பழங்கதை பேசிப் பயனில்லை; வீரம் பேசிப் பயனில்லை. கனக விஜயர் தலையில் கல்லேற்றிக் கொண்டு வந்தான் செங்குட்டுவன். காவிரிக்கு கரை கட்ட பன்னீராயிரம் சிங்களவர்களை கைதிகளாகக் கொண்டு வந்தான் கரிகாலன்; ராஜேந்திர சோழன் கடாரம் சென்றான்; வென்றான்! இது சரித்திரம்!

ஆனால், அந்த சரித்திரத்தின் விழுதுகளாக நாம் இருக்கிறோமா? இனிப் பழங்கதைப் பேசிப் பயனில்லை. செயலில் இறங்க வேண்டும்.

என்ன செயலில்? எப்படிப்பட்ட செயலில்? ஆளுக்கு ஓர் ஆயுதத்தைத் தூக்குவதா என்று கேட்பீர்கள். அப்படி ஒரு காலம் வந்தால் தட்டிக் கழிக்க முடியாது. ஆனால், அந்தக் காலம் இப்போது வந்துவிடும் என்றும் என்னால் சொல்ல முடியவில்லை.

இந்தத் தலைமுறையில் இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறையில் அது வரலாம்.
ஏனென்றால் தமிழினத்தை அழித்துத்தான் தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப் பதும், அதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நம்மை ஆளுகின்ற அரசு இங்கே இருப்பதும், அதைப் பார்த்தும் பார்க்காததைப் போல நாம் பாமரர்களாய், பஞ்சைகளாய், பரிதாபத் திற்குரியவர்களாய் உலவுவதும் நியாயமில்லை.

எனவேதான் சொல்லுகிறேன், இன்றில்லாவிட்டாலும் நாளை, நாளை தவறினால் மறுநாள் உலகத்திலே இருக்கின்ற தமிழனுக்கு ஒரு நாடு கிடைத்தாக வேண்டும். அப்படிக் கிடைக்கின்ற நாடு எளிதாய்க் கிடைக்கக் கூடிய ஒன்றாக - அதற்குத் தயாராகிவிட்ட நிலையிலே உள்ளதாக இருப்பது தனித் தமிழ் ஈழ நாடாகும். அந்தத் தனித் தமிழ் ஈழ நாட்டைப் பெறுவதற்காக நம்மாலான அனைத்துத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்போம்.

தமிழகத்திலுள்ள எல்லாக் கட்சிகளுமே கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக ஓரணியில் நிற்க வேண்டும்.

பிரதமர் ராஜீவின் பொல்லாத பேச்சு

பத்திரிகைச் செய்தியின் குறிப்புப்படி அக்டோபர் முதல் நாள் பயங்கரமான எரிகுண்டுகள் தமிழர்கள் பெரும்பாலும் வாழுகின்ற திரிகோண மலைப் பகுதியிலே வீசி எறியப்பட்டு, பத்தாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்திருக்கிறது.

250 பேர் தப்பித்துப் பிழைத்து அகதிகளாக வந்திருப்பதாகச் செய்தி கிடைத்திருக்கிறது. இரண்டு விடுதலைப் போராளிகள் முகமெல்லாம் கருகிப் போய் தமிழகத்திற்கு வந்து சேர்ந்தார்கள் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது.
இப்படி நடைபெறுகின்ற அக்கிரமங்களை நாம் கண்டிக்கத்தான் இந்த பேரணிகளையும் பொதுக் கூட்டங்களையும் நடத்துகிறோம்.

இந்த அக்கிரமத்தை கேட்க வேறு ஆளே இல்லையா? நாம் கேட்க வேண்டிய முறைப்படி யெல்லாம் கேட்டாகி விட்டது -
1983 ஆம் ஆண்டில் இந்த அநியாய இனப் படுகொலை இலங்கையில் தொடங்கியவுடன் தமிழகம் கொந்தளித்தது - கிளர்ச்சி வடிவெடுத்தது.

ஜனநாயக ரீதியில் அணுகிப் பார்த்தோம். போராட்ட ரீதியில் அணுகிப் பார்த்தோம். பல முறையீடுகளை எடுத்துச் சென்று அன்றைக்கு பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவர்களை சந்தித்துப் பார்த்தோம். எதுவும் நடைபெறவில்லை.
இப்போது நடைபெறுகின்ற அக்கிரமங்களை மாநிலங்களவையில் வை.கோபால்சாமி, எல். கணேசன் போன்றவர்கள் எடுத்துச் சொன்ன போதும், நாடாளுமன்றத்திலே என்.வி.என். சோமுவும், கலாநிதியும் எடுத்துச் சொன்ன போதும் கிடைத்த பதிலென்ன?

வெளிநாட்டிலிருந்து வரும் ஒரு விமானத்தில் சிங்களவர் ஆயுதங்களை ஏற்றி வந்தார்கள். அப்படி ஆயுதங்களை ஏற்றி வந்த அந்த விமானம் எண்ணெய் இல்லாத காரணத்தால் திருவனந்தபுரத்திலே இறங்கி யது. அந்த விமானத்தில் ஆயுதங்கள் இருக்கின்றன. அதை இலங்கைக்கு அனுப்புவீர்களேயானால், அது இலங்கைத் தமிழர்களைக் கொல்லப் பயன்படுத்தப் படும். எனவே அங்கே அனுப்பாதீர்கள் என்று தமிழ்நாடு ஒருமித்த குரல் கொடுத்து கேட்டுக் கொண்டது. அப்படியிருந்தும் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தமிழ்நாட்டு மக்களுடைய கோரிக்கையை காலில் போட்டு மிதித்து விட்டு, தமிழர்களைக் கொல்லுகின்ற ஆயுதங்களைத் தாங்கியிருந்த அந்த விமானத்தை இலங்கைக்கு அனுப்பியது நியாயம் தானா? என்று கோபால்சாமி கேட்டபோது பிரதமர் எழுந்து, “அந்த ஆயுதங்களில் - ‘இது தமிழர்களைக் கொல்ல’ என்று எழுதப்படவில்லை” என்று சொன்னார்.

உலகத்தில் எந்த யுத்தத்திலாவது - எந்த துப்பாக்கிக் குண்டிலாவது - அல்லது எந்த துப்பாக்கியிலாவது இது இன்னின்னாரைக் கொல்ல என்று எழுதப்பட்டிருக்குமா?
நான் வேதனையோடு ராஜீவ்காந்தி அவர்களை பார்த்து கேட்கிறேன். அன்னை இந்திராகாந்தியின் உடலைப் பல குண்டுகள் துளைத்தனவே - அதிலே எந்தக் ‘குண்டிலாவது இது இந்திரா காந்தியைக் கொல்ல’ என்று எழுதப்பட்டிருந்ததா?
ஆனால், கொஞ்சமும் ஈவிரக்கம் இல்லாமல், உணர்வு இல்லாமல், விமானத்தை அனுப்பி - அதிலே வந்த ஆயுதங்கள் தமிழர்களைக் கொல்ல பயன்படுத்தப்பட்டன. இது நியாயம்தானா என்று கேட்டோம்.

இப்படிக் கேட்ட கோபால்சாமிக்கு கிடைத்த பதில் அந்த ஆயுதத்தில் தமிர்களைக் கொல்ல என்று எழுதப்படவில்லை என்கின்ற ஹாசியமான - நகைச்சுவை வாய்ந்த ஒரு பதிலைத்தான் பிரதமர் ராஜீவ்காந்தி தருகிறார்.
எனவேதான் இலங்கையில் இருக்கிற தமிழர் களைக் காப்பாற்ற நாம்தான் முன்வரவேண்டும். நாம் தான் குரலெழுப்ப வேண்டும் என்கின்ற இறுதி முடிவுக்கு இன்றைக்கு நாம் வந்திருக்கின்றோம்.
(தொடரும்)

Friday, March 6, 2009

இராஜீவ்- கொலை அல்ல, தண்டனை


இராஜீவ்- கொலை அல்ல, தண்டனை

கொளத்தூர் மணி உரை:

மறைந்த எங்கள் தோழர் முத்துகுமாருக்கு நடக்கின்ற இந்த வீரவணக்கப் பொதுக்கூட்டத்திற்கு வந்து மேடையிலும் எதிரிலும் அமர்ந்திருக்கின்ற தமிழர்களே, அனைவருக்கும் வணக்கம். இன்று ஈழத்தில் நம்முடைய இன சொந்தங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், அதற்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ நாடாக ஏற்றுக்கொண்டிருக்கின்ற இந்திய நாடு உதவிக்கொண்டிருக்கின்ற வேளையில், பல்வேறு சிக்கல்களைப் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றோம், உரையாடிக்கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் நான் ஒரு செய்தியை மட்டும் பேச நினைக்கிறேன். ஈழத்தின் சிக்கல்களைப்பற்றி அடுத்து பேச சீமான் இருக்கிறார். நான் பேச நினைப்பது, இந்த நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிற சில முழக்கங்கள்: மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம் - காங்கிரஸ் முழக்கம்; ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு - மார்க்சிஸ்டு முழக்கம்; சகோதர யுத்தம், சர்வாதிகாரி - திமுக முழக்கம். இதில் ஒரு முழக்கத்தை மட்டும், நாம் யாரை ஒழிக்க நினைக்கிறோமோ அந்த காங்கிரசின் முழக்கத்தை மட்டும் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். எதைக் காரணமாக வைத்துச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்? ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி கொலையை நாங்கள் மறக்க மாட்டோம் அதற்காக ஈழத்தமிழர்களை, புலிகளை மன்னிக்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். அது குறித்து சில செய்திகளைப் பேசவிரும்புகிறேன்.

நம் உடலில் ஏற்பட்ட புண்போல தமிழர் வரலாற்றில் ஒரு புண் தோன்றியது. ஈழத்தில், ஈழ விடுதலை ஆதரவில், தமிழர்களுடைய உரிமை முழக்கத்தில் ராஜீவ் காந்தி பெயரால் ஏற்பட்ட, ஏற்படுத்தப்பட்ட அந்தக் கீறல் ஊறுபுண்ணாகப் போய்விட்டது. அது உள்ளே சீழ் பிடித்துக்கொண்டிருக்கிறது. காலை அசைத்தால் வலிக்கிறது, நடந்தால் வலிக்கிறது, அசைந்தால் வலிக்கிறது. கீறிவிட்டு அதை ஆற்றவேண்டும். யாரும் நாம் முயற்சிக்கவில்லை. நாம் அந்தப்புண்ணைக் கீறிப்பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தி யார்? எப்பொழுதும் சொல்வதுண்டு. ராஜீவ் காந்தி கொலையல்ல, மரண தண்டனை, அது கொலை என்ற சொல்லால் சொல்லக்கூடாது என்று ------- யார் அந்த ராஜீவ் காந்தி? அவன் எந்தக் கட்சியைச் சார்ந்தவன்? காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளை முன்னெடுத்துச் செல்கின்ற இயக்கங்களில் ஒன்றாக இருக்கின்ற நான், அதை விளக்கவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. யார் அந்தக் காங்கிரசுக்காரர்கள்? இந்தத் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்? எப்பொழுதாவது நன்மை செய்து இருக்கிறார்களா? நம்முடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு இருக்கிறார்களா? அந்த இடத்தில் நமக்காக யாராவது உட்கார்ந்து இருக்கிறார்களா, காங்கிரஸ் தலைமையில்? ஒருமுறை காமராஜர் அமர்ந்திருந்தார். அதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? அவர் கூட சொன்னார், தலைமை அமைச்சர் தேர்வுக்காக ஆட்களைத் தேடித்திரிந்த காமராஜரிடம், ஏன் நீங்களே நிற்கக் கூடாது என்று கேட்டார்கள்? காமராஜர் சொன்னார், ‘நான் சொன்னா போடுவான் நின்னா போட மாட்டான்’னு.

தமிழனை ஏற்றுக்கொள்ள மாட்டான் வடவன். அவன் வரலாற்றுப் பகைவன், நம்மை வரலாற்றுப் பகையாகக் கருதுகிறான். இனத்தால் ஆரியன், திராவிடரான நம்மை ஏற்றுக்கொள்வதில்லை, மொழியால் சமஸ்கிருதக் குடும்பத்துக்காரன், திராவிடமொழிக்குடும்பமான தமிழை ஏற்றுக்கொள்வதில்லை. அதுதான் இலங்கையிலும் நடக்கிறது. ஆரிய இனத்தைச் சார்ந்தவன், சமஸ்கிருத மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவன், திராவிட இனத்தைச் சார்ந்த தமிழ் மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவனை நசுக்கப்பார்க்கிறான், இங்கு இருக்கின்ற வரலாற்றுப் பகைவன் அங்கு இருக்கிற வரலாற்றுப் பகைவனுக்கு உதவுகிறான். நாம் உதவ நினைக்கிறோம். ஆனால் தடையாகக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் காங்கிரசுக்காரர்கள். காந்தி, நேரு காலத்திலிருந்து, எப்போதாவது இந்தக் காங்கிரசு நமக்கு, தமிழர்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறதா என்று வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது. ஏதும் தடையமே காணோம். எந்தச் செய்தியையும் காணோம்.

ஆரம்பத்தில் இந்தியை ஆட்சிமொழி ஆக்குவதற்கு, தமிழர்களுடைய மொழி உரிமையை நசுக்குவதற்கு இந்தக் காங்கிரசு காரணமாக இருந்தது. காங்கிரசு கட்சியில் ஆட்சிமொழி தீர்மானம் வந்தபோது சரிபகுதி வாக்குகள், இந்திக்கு ஆதரவாக, இந்திக்கு எதிராக சரிபகுதி வாக்குகள், காங்கிரசு தலைவர் பட்டாபி சீதாராமையா தன் வாக்கை அளித்துத்தான் காங்கிரசு கட்சியில் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அரசியல் நிர்ணய சபையில் வாக்கெடுப்பு வந்தது. அங்கும் சரிசமமான வாக்குகள் இரண்டு பக்கமும், நிர்ணயசபைத் தலைவராக இருந்த இராஜேந்திர பிரசாத் வாக்களித்துத்தான் இந்தி ஆட்சிமொழியானது. இது கள்ள ஓட்டு போல, தலைவர் ஓட்டு. யாரும் வாக்களிக்கவில்லை, கள்ள ஓட்டை காங்கிரசு தலைவர்கள் போட்டுத்தான் நம் மீது இந்தியைத் திணித்தார்கள். இட ஒதுக்கீடு வந்தது. 1951-யில் பெரிய யோக்கியன் போல் பேசினார், நான் பொருளாதார அளவுகோலை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பேசினார் நேரு. பெரியார் சொல்லுவார், முற்போக்கு வேடம் தரித்த பிற்போக்குவாதியவர். ஆனால் அவர் சொன்னார், நான் பொருளாதாரம் என்ற சொல்லை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டு, 1951-யில் சொன்னவர், 1961-யில் மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதினார், சாதி அடிப்படையில் கொடுப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று. பொருளாதார அடிப்படையில் வேண்டுமானால் கொடுங்கள் என்று கடிதம் எழுதியவர்.

இலங்கை வரலாற்றில் அப்படி ஒன்று இருக்கின்றது. 1956-யில் சிங்கள ஆட்சி மொழி சட்டம் வந்த பொழுது, ஒரு மொழி என்று சொன்னால் இது இரு நாடாகிவிடும், இரு மொழி என்று சொன்னால் ஒரே நாடாக இருக்கும் என்று சொன்னவர் ------------ 1972-யில் அவர் தலைமையில் அரசியல் சட்டம் எழுதப்பட்டது, அவர் தான் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று எழுதியவர். வரலாற்றில் மனிதர்கள் மாறுகிறார்கள். நம் வரலாற்றில் நமக்கு எதிராக மாறியவன் நேரு. இந்திரா காந்தி, நமது உரிமை நிலமான கட்சத்தீவை வாரிக்கொடுத்துவிட்டு, இன்று வரை தமிழக மீனவர்கள் சாவிற்குக் காரணமாக இருந்தவர், நிறைய குற்றங்களைச் சொல்லலாம்.

நம்ம ராஜீவ் காந்தியைப் பற்றிப் பேசுவதானால் சொல்லுவோம். ராஜீவ் காந்தி யார்? ஒரு வேளாண்மை செய்பவனுக்கு, விவசாயிக்கு விதை முக்கியம். அதில் எவனாவது கேடு செய்தால் அவன் வேளாண்மையே, மகசூலே பாழ். அவன் வாழ்க்கையே முடிந்தது. ஒரு நாட்டுக்கு பாதுகாப்பு தான் முக்கியம். பாதுகாப்புக்கு நல்ல வீரன் வேண்டும், நல்ல படைக் கருவி வேண்டும். பாதுகாப்புக்கு வாங்கிய படைக் கருவியில் குறைந்த தரம் உள்ளதை வாங்கி பணம் சம்பாரித்து போஃபோர்ஸ் ஊழல் செய்த அயோக்கியன் ராஜீவ் காந்தி. அவன் நம் நாட்டு மக்களின் நலனில் அக்கறையில்லாமல் தனக்கு காசு சேர்த்துக் கொண்டவன். அவன் தான் மரண தண்டனை வழங்கப்பட்டவன். அதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து மண்டல் குழு, இந்த நாட்டில் 52 சதமாக இருக்கிற பிர்படுத்தப்பட்ட மக்களினுடைய உரிமைக்காக பரிந்துரை செய்யப்பட்ட மண்டல் குழு பார்ப்பனர்களால் எதிர்க்கப்பட்டதாக நாம் பேசிக்கொள்வோம், ராஜீவ் காந்தியும் எதிர்த்தவன். மண்டல் நிறைவேற விடமாட்டேன் என்று சொன்னவன் ராஜீவ் காந்தி. பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருந்தவன்.

அல்லது அடிப்படை அறநெறியிலாவது நேர்மையானவனா? -------- என்பவன், இங்கிருந்து இந்திய அரசால், ஒரு விடுதலைப் புலி வீரன் அங்கு அனுப்பப்பட்டான். சில செய்திகளைப் பற்றி விளக்கம் கேட்டு வர, கருத்து கேட்டு வர அனுப்பப் பட்டார். அனுப்பப்பட்ட அதே தூதுவனை, அதே அரசு அதே அரசப் படைகள் சுட்டுக் கொன்றன. ராஜீவ் காந்திப் படைதான் சுட்டுக்கொன்றது. சினிமாவிலெல்லாம் பார்ப்போம், கட்டபொம்மன், சொல்லுவான் தூதுவனாக வந்ததால் உன்னை உயிரோடு விடுகிறேன் எட்டப்பா என்று சொல்லுவான். இராமாயணத்தில் இராவணன் சொல்லுவான், அனுமா நீ தூதுவனாக வந்ததால் உயிரோடு விடுகிறேன் என்று. ஆனால் தூதுவனைக் கொன்ற துரோகி இராஜீவ் காந்தி. அது மட்டுமல்ல, அறநெறிக்குப் புறம்பாக என்பது சாதாரணமாக அல்ல. அறநெறிக்கு புறம்பானவன் என்பது ஹர்சரத் சிங் என்கிற இந்திய நாட்டின் படைத் தளபதி இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமைதிப் படையின் தலைமைத் தளபதியாக இருந்த ஹர்சரத் சிங் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ‘இண்டர்வென்சன் ஆஃப் இந்தியா(அல்லது இன் சிறீலங்கா)’ என்ற புத்தகம். அதில் பல செய்திகள் இருக்கின்றன, நாங்கள் கூட புத்தகம் போட்டு விற்றுக்கொண்டு இருக்கின்றோம், ‘ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?’ என்ற நூலை பெரியார் திராவிடர் கழகம் தோழர்.விடுதலை இராஜேந்திரன் எழுதிய நூல், அதை விற்றுக் கொண்டிருக்கிறோம், அதைப் படித்துப்பாருங்கள். அதில் பல செய்தி, அதில் ஒன்று ஹர்சரத் சிங் அங்கு தலைமைத் தளபதியாக இருந்தபோது 1987-யில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் கூறுகள் கூட நிறைவேற்றப்படவில்லை. அதற்காக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள், போராட்டம் தொடங்கவிருக்கிறார்கள். திலீபன் நாளை போராட்டம் தொடங்கப் போகிறார். செப்டம்பர் 16-ஆம் நாள் அது குறித்து பிரபாகரனிடம் பேசுவதற்கு விரும்புகிறார். பிரபாகரன் சந்திக்க இருக்கிறார். 14-க்கும் 15-க்கும் இரவில் சந்திக்க வருகிறார், சந்திக்கப் போகிறார். அப்போது இலங்கையிலிருந்த இந்தியத் தூதர் தீட்சித், ஹர்சரத் சிங்கிற்குச் சொல்கிறான், அந்தச் செய்தியை தொலைபேசியில் சொல்கிறான். இன்று பேசவருகிற போது பிரபாகரனை சுட்டுவிடு என்று சொல்கிறான். அவர் மறுக்கிறார். நான் அறநெறி பிறழாத இராணுவ வீரன், வெள்ளைக் கொடியின் மேல் பேசுகிற போது சுடமுடியாது என்று சொல்கிறார். மீண்டும் சொல்கிறார், தன்னுடைய தலைமை தளபதி திபீந்தர் சிங்கைக் கேட்கிறார், மறுத்துவிடு என்று சொல்லிவிடு, முடியாது, அப்படியெல்லாம் அறநெறி பிறழ்ந்து செய்யமுடியாது என்று சொல்கிறார். மீண்டும் தீட்சித்துக்கு முடியாது என்று சொல்கிறார்,

இது நான் சொல்லவில்லை, தலைமை அமைச்சர் பிரதமர் ராஜீவ் காந்தி சொன்னது என்று அவன் சொல்கிறான். எழுதி இருக்கிறார் ஹர்சரத் சிங். இந்த நாட்டின் படைத் தளபதி அப்போது நடந்த செய்தியைப் பதிவு செய்திருக்கிறார். நூல் வந்திருக்கிறது. இரண்டாண்டுகளாக இந்தியாவில் உலவுகிறது. எனில் அறநெறி பிறழ்ந்து உங்களை நம்பிப் பேச வந்தவனைச் சுடத் துணிந்த அயோக்கியன் அப்போது சொல்லைக் கேட்டிருந்தால் பிரபாகரன் நமக்கு இல்லை. ஈழத்தமிழர்களுக்கு இல்லை. அப்படிப்பட்ட துரோகி அவன். ஒவ்வொன்றாக, தோழர் இராஜேந்திரன் சொன்னார். தன்னுடைய தாய், தனக்குப் பதவி வரக் காரணமாக இருந்தவள், விமானம் ஓட்டிக்கொண்டிருந்தவன் நேரடியாக பதவிக்கு வந்து உட்காருகிறான், அவரை கொல்லப்பட்டதற்கு அமைக்கப்பட்ட ஆணையம் பரிந்துரை செய்கிறது, இவன் தான் காரனமாக இருக்கக் கூடும் விசாரிங்கள்.

ராஜீவ் கொலைக்கும் அப்படி பரிந்துரை செய்கிறது ஜெயின் ஆணையம். ஜெயின் ஆணையம் சொன்ன பரிந்துரையின் இடைக்கால அறிக்கை வந்தவுடன், முன்பு இருந்த தி.மு.க அரசையும் குற்றம் சொல்கிறது இவன் தான் ராஜீவ் காந்தி கொலைக்கு என்று, தி.மு.க. அமைச்சரவையில் இருந்தால் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்வோம் என்று காங்கிரசு சொன்னது. தலைமை அமைச்சர் அவர்களை நீக்க முடியாது என்று சொன்னார், அந்த இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின் அமைக்கப்பட்ட ஆணையம் குற்றம் சொன்ன ஒருவரை தனது கட்சிக்கு பொது செயலாளராக நியமிக்கிறார். அதுமட்டும் இல்லை. இப்படிப்பட்ட ஆணையங்களின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைக்கவேண்டியதில்லை என்ற புதிய சட்டம் ஒன்றை அதற்காகக் கொண்டுவருகிறார். அறிக்கையையே வைக்கவில்லை நாடாளுமன்றத்தில். தன் தாய்க்கே துரோகம் செய்த துரோகி. ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு போனால், ஏராளமான குற்றச்சாட்டுகளைச் சொல்லலாம். அதுமட்டுமில்லை இங்கிருந்து அமைதிப் படையை அனுப்புகிறேன் என்று சொல்லி, எதிரிக்கும் எதிரிக்கும் உடன்பாடு பேசப்போனவன், இவன் ஒரு உடன்பாடு போடுகிறான். இரண்டு பேரையும் உட்கார வைத்தா போட்டார்கள் உடன்பாட்டை? 1987 ஒப்பந்தத்தில் யார் கையெழுத்து போட்டிருக்க வேண்டும்? இந்தப் பக்கம் இலங்கை குடியரசுத் தலைவர் என்றால் அந்தப் பக்கம் பிரபாகரன் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். அப்படித்தானே நார்வே செய்தது. ஆனால் இவர் ஒரு பக்கம் கையெழுத்தாம் அவர் ஒரு பக்கம் கையெழுத்து போட்டு நிறைவேற்றி விட்டு அதில் சொன்னதைக் கூட நிறைவேற்றாமல், அமைதிப்படை என்ற பெயரால் அனுப்பப்பட்டது நம்முடைய தமிழர்களை தமிழர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பவர்களைக் கொல்லத்தான் பயன்பட்டது. அந்த அமைதிப்படை அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு 1987-யில் போட்ட ஒப்பந்தத்தை சிவசங்கர மேனன் இலங்கைக்குப் போய்விட்டு இப்போது தான் பேசுகிறார். 1987 ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டிருக்கிறோம் 22 ஆண்களுக்கு பின்னடி இப்ப கேட்டிருக்கிறார். கலைஞருக்கு 1985-யில் கொடுத்த பேட்டி இப்பொழுது நினைவிற்கு வந்ததைப் போல, 1987 ஒப்பந்தம் இப்பொழுது தான் நினைவிற்கு வந்திருக்கிறது. அவர் சொல்லுகிறார். சரி அந்த ஒப்பந்ததைப் போட்டு அனுப்பினாயே என்ன அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சியெடுத்துக் கொண்டாய்? ஒப்பதத்தின் கூறு இதுவரை ஏதாவது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒரே நிலப்பகுதியாக ஆக்கப்படவேண்டும் என்று ஒப்பந்தம். இந்த காங்கிரசு, இந்த இந்திய அரசு, அதற்காக உயிர்தியாகம் செய்த ராஜீவ் காந்தியின் நினைவாக என்ன செய்திருக்கிறார்கள்? இது வரை! இந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல், இந்திய ------ கால் வைக்க விடமாட்டோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இதுவரைக்கும் கேட்டிருக்கிறீர்களா? சீன நாடு அங்கே கால்வைத்து விட்டது. நீ கொடுத்த கட்சத்தீவில் வரலாம். ஏன் என்றால் இப்படித்தான் பர்மா/மியான்மருக்கு ஒரு தீவைக் கொடுத்தார்கள். கோகோ தீவு என்று ஒரு தீவு. அங்கே இப்போது அந்தமானுக்குப் பக்கத்தில் சீன நாட்டு கப்பற்படை வந்து அமர்ந்திருக்கிறது. அதுபோல் கட்சத்தீவிற்கு வராது என்று என்ன நிச்சயம்?

இப்படிப்பட்ட துரோகங்களைப் புரிந்த அந்த ராஜீவ் காந்திக்கு நாட்டுப்பற்றுள்ள இந்தியன் யாராவது மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். என்னாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்தாய், இந்த நாட்டு பிற்படுத்தப்பட்டவர்களால் மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய நலனுக்கெதிராக நீ இருந்தாய். தாய், அறநெறி என்று பேசுபவன் எவனாவது மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். நீ சதிகாரனாக, கொலைகாரனாக, கொலை செய்ய முயற்சித்திருக்கிறாய், நாம் செய்யத் தவறிய செயலை, ஒரு ஈழத்தமிழன் செய்திருக்கிறான் என்று வைத்துக்கொண்டால் அதற்காக மகிழ்ச்சியடைய வேண்டும், காரணம், ஒரு ராஜீவ் காந்திக்கு வருகிற ஏக்கம், ஆறாயிரம் ஈழத்தமிழர்களுக்கு, அவர்களைக் கொன்றது யார், அமைதிப்படைதானே, ஆயிரம் பெண்களுக்கு கற்பழித்தவன் கொடுமைப்படுத்தியவன் கெடுத்தவன் யார், அமைதிப்படை தானே, வீதியில் படுக்க வைத்து மேலே டேங்கை ஓட்டினார்களே, துடிக்காதா நெஞ்சம்? ஒரு ஈழத்தமிழன் செய்திருந்தால் நியாயம், விடுதலைப் புலிகள் செய்யாமல் இருந்தால் குற்றம். செய்திருந்தால் பாராட்டுகிறோம், செய்யாமலிருந்திருந்தால் கண்டிக்கிறோம் என்று நாம் பேசியிருக்க வேண்டும். அதுதான் தமிழ்நாட்டில் முழங்கியிருக்கவேண்டிய கூற்று. நாம் துன்பியல் நாடகம், வருத்தப்படுகிறோம் என்று பேசி தவறு செய்துவிட்டோம். இந்தக் குற்றத்தைச் சொல்லி சொல்லித்தான் மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் என்று சொல்கிறான்.

கலைஞருக்கு எவ்வளவு பெருந்தன்மை. இவ்வளவு கூட்டு இருந்து, இவ்வளவு நாள் கட்சி நடத்துகிறாயே இவர் மறப்போம் மன்னிப்போம், அவன் மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம். அவர் மறப்போம் மன்னிப்போம், தன்னுடைய மகனைக் காப்பாற்ற நெருக்கடி நிலையில் நிறையில் உயிர் கொடுத்த சிட்டிபாபு, பாலகிருஷ்ணன் செத்து இரண்டரை ஆண்டில் கூட்டு சேர்ந்தாரேப்பா, அந்தப் பெருந்தன்மை ஏன் காங்கிரசுக்காரனுக்கு வரவில்லை என்று கேட்கிறேன்.

இப்படிப்பட்ட அவர்களுடைய பொய்முகத்தை நாம் புரிந்தாக வேண்டும். ஆம், கொலை செய்திருந்தால் நியாயம், ஏனென்றால் அந்த ஒப்பந்தத்தை ஏற்று புதுமலையில் ஏற்று பிரபாகரன் சொன்னார், ஆயுதங்களை ஒப்படைக்கிறோம், ஆயுதங்களை உங்கள் கையளித்த நிமிடத்திலிருந்து, ஈழத்தமிழர் பாதுகாப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம், இந்திய அரசின் நேர்மையை நான் நம்புகிறேன் என்று சொன்னார். நம்பிக்கை துரோகம் செய்தீர்களா இல்லையா? இப்படிச் சொல்லித்தானே ஆயுதங்களை கொடுத்தார், தனது உயிருக்கு உயிரான மக்களைக் காப்பாற்ற ஆயுதம் எடுத்தார், ஆயுதம் எவன் எடுப்பான்? இரக்கம் மிகுந்தவன் தான் ஆயுதம் எடுப்பான். இரக்கம் இருக்கிறவன், சாதாரண மனிதர்கள், ஒருவன் தாக்கப்பட்டால், அநியாயமாக உதைக்கப்பட்டால், அக்கிரமம் என்று சொல்லிவிட்டு போய்விடுவான். மீறிப்போனால் கண்ணீர் விடுவான். இவன் சாதாரண இரக்கம் உள்ளவன். இரக்கம் மிகுந்தவன் தான் தட்டிக்கேட்கப் போவான், தடுக்கப் போவான், மீறிப்போனால் ஆயுதம் எடுத்தாவது போராடுவான். அது தான் முத்துக்குமார் சொன்னார், அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார், மறத்திற்கும் அஃதே துணை என்று சொன்னார், முத்துக்குமார் தனது கடிதத்தில் எழுதி வைத்திருந்தார். அறத்திற்கே அன்பு சார்ப என்ப என்று திருக்குறளை நினைவூட்டுகிறார், வள்ளுவரே சொல்லியிருக்காரப்பா, அறத்திற்கே அன்பு சார்ப என்ப அறியார், மறத்திற்கும்-விடுதலைப்புலிகள் போராட்டத்திற்கும் அன்பு தான் காரணம். அவர்கள் இரக்கம் மிகுந்த காரணத்தால் ஆயுதம் எடுத்துப் போராடுகிறார்கள்,

எனவே அந்தப் போராளிகளினுடைய நம்பிக்கைக்கு துரோகம் செய்து, தங்கள் உயிருக்கு மேலாக நேசிக்கிற தங்கள் மக்களை காப்பதற்கு கையில் வைத்திருந்த ஆயுதத்தை உன் நேர்மையின் மீது நம்பிக்கை வைத்து ஒப்படைக்கிறோம் என்று சொல்லிவிட்டு கொடுத்த அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்த துரோகியல்லவா! நீ சொல்லுகிறது எல்லாம் எவ்வளவு, இந்திய மண்ணில் வந்து கொலை செய்யலாமா? பேசுகிறான். இலங்கையில் அடித்தவன் ஒருவேளை ஓங்கி அடித்திருந்தால், கப்பற்படை வீரன் இந்நேரம் செத்துப் போயிருப்பான். அவன் கேட்டான் சொன்னான், நான் துடைப்பத்தில் அடிக்கவேண்டுமென்று கருதினேன், கெட்ட வாய்ப்பாக என் கையில் துப்பாக்கியிருந்தது என்று சொன்னான். கேட்டாங்க அவனை, சொன்னான், அதை குற்றமென்று சொல்லவில்லை. ஆனால் அங்கே செத்திருப்பான் அல்லவா, இவங்க சொல்கிறான் அல்லவா, நாங்கள் ஆயுதம் கொடுக்கவில்லை என்றால் ஈரான் கொடுத்துவிடும், பாகிஸ்தான் கொடுத்துவிடும், இவன் கொடுக்கிறானோ கொடுக்கவில்லையோ சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

நாங்கள் சொல்கிறோம், அவன் கனமாக அடித்த்திருந்தால் கொன்று இருப்பான், இங்கே கொல்லாமல் விட்டிருந்தால் பாகிஸ்தான்காரன் கொன்றிருப்பான், பஞ்சாப்காரன் கொன்றிருப்பான் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? காங்கிரசுக்காரன் வாதத்தைச் சொல்கிறோம், நான் ஆயுதம் கொடுக்கவில்லையென்றால் அவன் ஆயுதம் கொடுப்பான் என்று சொல்கிறாயே, நாங்கள் கொல்லாட்டி பஞ்சாப்காரன் கொன்றிருப்பான், அப்ப நாங்கள் செஞ்சது தப்பில்லை என்று சொன்னால் ஒத்துக்கொள்வானா அவன்? இப்படிப்பட்ட சொத்தை வாதங்களை வைத்து அவன் நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள், அந்தக் காங்கிரசுக்காரர்கள் இந்த மண்ணில் இருக்கக் கூடாது, இருக்கக் கூடாது என்றால் ஆட்சியில், பதவியில் எந்த இடத்திலும் இருக்கவிடக் கூடாது என்பதுதான் எங்களுடைய கருத்தாக நாங்கள் மூன்று இயக்கங்களும் இப்பொழுதைக்கு இணைந்து இருக்கிறோம்.

ஆனால் தொடர்ந்து ஈழத்தமிழர் ஆதரவு என்ற முழக்கம் போதாது. ஈழத்தமிழர்களை, இலங்கைத் தமிழர்களை எப்படி வேண்டுமானால் இருக்கட்டும், எப்படி அவர்களைப் பாதுகாக்க முடியும்? பாதுகாக்க வானத்திலிருந்து கடவுள் வருவாரா? தேவதூதன் வந்து காப்பாற்றுவானா? அவர்களிப் பாதுகாப்பதற்கு பலமான பாதுகாப்புக் கவசம் வேண்டும். அமைதியான ஒரு நாடாக இருந்திருந்தால் ஒரு கட்சி ஒரு இயக்கம், ஆட்சி போதும். ஆயுதம் கொண்டு தாக்கப்படும் போது, ஆயுதம் கொண்டு பாதுகாக்கின்ற ஒரு இயக்கம் தான் வேண்டும். அதற்குச் சரியான இயக்கமாக தொடர்ந்து போராடுகிற இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் தான். அவர்கள் ஈழத்தமிழர் ஆதரவு என்பதற்குச் சரியான பொருள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் என்றுதான் பொருள். நாம் அஞ்சியஞ்சிச் சொல்லிப் இனி பயன் இல்லை. அவர்களையும் ஆதரிக்க வேண்டும். ஆதரிப்பது இருக்கட்டும், அவர்கள் மீது தேவையில்லாமல் விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கப்படவேண்டும் என்பது முழக்கமாக இருக்கவேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது முழக்கமாக இருக்கவேண்டும். அவர்களுக்கு அநியாயமாக ஆயுதங்கள் கொடுக்கின்ற இந்திய அரசு எங்கள் அரசாக இருக்குமா என்ற அய்யம் வரவேண்டும், அய்யம் வந்தால் தான் முடிவுக்கு நாம் வரமுடியும்.

முதலில் சந்தேகிக்கனும், நம்ம நாடாக இருந்தால் கொடுப்பானா? நாம் சந்தேகிக்கிறோம், ஆயிரம் காரணம் இருக்கிறது. பக்கத்து நாடான வங்க நாட்டில் நடந்த விடுதலைப் போருக்கு பாகிஸ்தானிலிருந்து பிரித்து நாடு கொடுக்க இந்திரா காந்தி தொடுத்த யுத்தம். அந்த நாட்டிற்குப் போராட்டம் நடந்த போது அங்கிருந்த சில மக்கள் இங்கு வந்தார்கள், அகதிகள் வந்தார்கள், அவர்களுக்கு உதவி செய்வதற்காக இந்த இந்திய அரசு நாம் எழுதிய ஒவ்வொரு கடிதத்திற்கும் அய்ந்து காசு வசூலித்தது. பலருக்கு நினைவிருக்கலாம், 15 காசு அஞ்சலட்டைக்கு கூடுதலாக 5 காசு அஞ்சல் வில்லை ஒட்டவேண்டும். Refugee Relief Fund என்று தனியாக ஒரு முத்திரை ஒட்டவேண்டும் என்று வைத்திருந்தார்கள். நமக்கு எழுதுகிற கடிதத்திற்கெல்லாம் 25 விழுக்காடு நாம் அவர்களுக்காக நாம் பணம் செலுத்தினோம். யாருக்கு? இன்னொரு நாடிலிருந்து இந்த நாட்டிற்கு போரின் போது வந்தவர்களுக்காக இந்திய அரசு நம்மிடம் வசூலித்தது. நமது தமிழக முதல்வராக அப்போது இருந்த கலைஞர், 6 கோடி ரூபாய் நிதியை வங்க அகதிகள் உதவிக்காக திரட்டிக் கொடுத்தார், தமிழ்நாட்டிலிருந்து. 6 கோடி அப்போது என்றால், எழுபதுகளில், ஒரு பவுன் 150 ரூபாய்; இன்றைக்கு 10,000 க்கும் மேலே. கணக்குப் போடுங்கள் 100 கோடி ரூபாயுக்கும் மேலாக தமிழர்கள்
இன்னொரு நாட்டிலிருந்து பாதிக்கப்பட்ட வங்காளிகளுக்கு இங்கிருந்து பணம் திரட்டி அளிக்கிறோம். குஜராத்தில் பூகம்பம், தமிழ்நாட்டிலிருந்து நிதி போனது. நம்முடைய இரத்த உறவு ஈழத்தமிழனுக்காக நிதி திரட்டிய போது எத்தனை வெளிநாட்டுக்காரன், வேறு மாநிலத்துக்காரன் பணம் கொடுத்திருக்கிறான். எங்களுக்கு அய்யம் வராதா? நாங்கள் வேறு அவர்கள் வேறு. எங்களுக்கு சிந்தனை வராதா? இந்த இந்திய அரசு என்ன முயற்சியை செய்திருக்கிறது? அந்த வங்க அகதிகளுக்காக அத்தனை உதவி செய்தவன், திபெத்திய அகதிகளை, நான் கர்நாடக எல்லையில் இருக்கிறவன். ஒரு 50 கி.மீ அந்தப் பக்கம் போனால் திபெத்திய அகதிமுகாம் இருக்கிறது. அழகான வண்ணம் பூசப்பட்ட நிரந்தர கட்டிடங்கள், காண்கிரீட் கட்டிடத்தில், வங்கிகள் இருக்கிறது, விளையாட்டுத்திடல் இருக்கிறது, 5000 ஏக்கர் அவர்களுக்கு ஒதுக்கித் தரப்பட்டிருக்கிறது. அந்த முகாமுக்குள் காவல்துறையை அவர்கள் அனுமதிப்பதில்லை. கோகிற நமக்கெல்லாம் ஒரு மதுவைக் கொடுக்கிறார்கள். அவர்கள் பாணியில் அவர்கள் செய்து காய்ச்சிய மதுவை கொடுக்கிறார்கள். மதுவை விருப்பமானவர்கள் குடிக்கிறார்கள். அதைத்தடுப்பதற்கு பார்ப்பதற்கு காவல்துறை அந்த முகாமுக்குள் நுழைந்துவிட முடியாது. அதே நாடு தானே, தமிழன் இங்கு இருக்கிறான், அவன் திபெத்தியன் அவன் கர்நாடகத்தில் இருக்கிறான். என் தமிழன் தமிழன் நாட்டில் தமிழ் நாட்டில் வந்து இருக்கிறான். அந்த அகதி முகாமுக்குள் நாம் உள்ளே நுழைய முடியுமா? நாம் பார்க்கப் போக முடியுமா? எத்தனைக் கொடுமை?

அவர்களுக்கு செங்கல்பட்டு முகம் என்ற சிறப்பு முகாம் இருக்கிறது. பலபேருக்குத் தெரிந்து இருக்காது. நமது மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் துவக்கி வைத்தது 1990-யில். குற்றமே செய்யாத ஈழத்தமிழன் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பிடித்து வைக்கப்பட்டது தான் அந்த முகாம். 180 பேர் கடந்த ஆட்சியின் போது இருந்தார்கள். இந்தக் கொடுமைக்கார ஜெயலலிதா 6 ஆகக் குறைத்தார் அந்த முகாமில் இருப்பவர்களை. இப்பொழுது திரும்ப 87 ஆகிவிட்டது. அவர்களைப்பார்க்க குடும்ப உறவுகள், மனைவி வந்தால் பார்க்க அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள். அவர்களிலும் 18 பேர் விடுதலைப் புலிகள் என்று வேறு இடத்தில போட்டாச்சு மீதியிருக்கிற 65 பேரைப் பார்க்கப் போகிற மனைவிகள், குழந்தைகள் மாதம் ஒருமுறை வந்து பார்த்துவிட்டுப் போகலாம். உள்ளேயிருக்கிறவர்களை. வெளிக்காற்றைச் சுவாசித்து 5 ஆண்டுகள் 6 ஆண்டுகள் ஆனவர்கள் எல்லாம் அங்கேயிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கொடுமைகள் நம் சொந்தங்களுக்கு நடக்கிற போது, அதைச் செய்யச் சொல்லி நிர்பந்திக்கிற போது நம் அரசு செய்கிறதோ இல்லையோ நாம் யோசிக்கிறோம். இது நம் அரசாக இருக்க முடியுமா? சந்தேகம் வருகிறது நமக்கு அய்யம் வருகிறதல்லவா? இதை நாம் எப்படி வெளிக்காட்டப் போகிறோம்.

ஏற்கனவே சொன்னேன், வெளி நாட்டுக்காரன் நம்நாட்டில் வந்து கொலை பண்ணலாமா என்று கேட்டான்? இதற்கொரு எடுத்துக்காட்டைச் சொல்லவேண்டும். இந்த நாட்டில் ஒரு கொடுமை நடந்தது, ஜாலியன் வாலாபாக் படிகொலை, 1919-யில் 300க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றதாக அவர்கள் சொன்னான், நாம் ஆயிரம் பேர் என்று சொன்னோம், அதைச் செய்தவனைக் கொல்லவேண்டும் என்று இந்த நாட்டு இளைஞன் அப்போது நினைத்தான். அவனை விடக் கூடாது என் நாட்டில் கொடுமைச் செயல் புரிந்தவனைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று 1919-யில் செய்த குற்றத்திற்காக, 1940-யில் இங்கிலாந்தில் போய், அங்கே ஒரு விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் போய் ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றானே உத்தம் சிங். 21 ஆண்டுகள் கழித்து இங்கிலந்து மண்ணில் போய் இந்தியாவில் செய்த குற்றத்திற்காக கொலை செய்தான். அவனைப் பாராட்டுகிறது நம் இந்திய நாடு. 40-யில் கொல்லப்பட்ட அடக்கம் செய்யப்பட்ட உடலை 1974-யில் எடுத்துக்கொண்டு வந்தார்கள். மிச்சங்களை, எச்சங்களை மீதியிருந்த பகுதிகளை இந்தியாவிற்குக் கொண்டு வந்தது. கொண்டு வந்த மிச்சங்களை வரவேற்கப் போனவர்கள் யார் தெரியுமா? அப்போது காங்கிரசு தலைவராக இருந்த பின்னாள் குடியரசுத் தலைவரான சங்கர் தயாள் சர்மா வரவேற்கப் போனார் விமான நிலையத்தில், மீதி எச்சங்களை வரவேற்பதற்கு. அப்போது பஞ்சாப் முதல்வராக இருந்த பின்னால் குடியரசுத் தலைவரான ஜெயில் சிங் வரவேற்கப் போனார். அந்த எச்சங்கள் அடங்கிய பெட்டிக்கு மலர்வளையம் வைத்தவர் யார் தெரியுமா? இந்திய நாட்டின் தலைமை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி போய் மலர்வளையம் வைத்தார். இந்த நாட்டில் நடந்த குற்றத்திற்காக அடுத்த நாட்டில் 21 ஆண்டுகள் கழித்து கொலை செய்தவனைத் தியாகி என்று நீங்கள் பாராட்டலாம், ஈழத்தில் 6000, 7000 பேரைக் கொன்றவனை ஆயிரம் பெண்களைக் கெடுத்தவன் காரணமானவனை. அங்கே போய் நம்ம ஆள்கள் சுட்டது துப்பாக்கியில் சுட்ட டயர் அல்ல, ஜெனரல் டயர் என்று சொல்லவில்லை நல்லா ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும், அவன் ரெஜினால்டு டயர், அவன் தளபதி, சுட ஆணையிட்டவனும் அதே பெயர் தான் மைக்கேல் டயர், நல்ல எலெக்ட்ரீசியனாக இருந்தால் ஷாக் அடிக்கற போது சுவிட்சை ஆஃப் பண்ண மாட்டான், மெயினைத் தான் போய் ஆஃப் பண்ணு என்பான். அதுபோல மெயினை ஆஃப் பண்ணினார்கள். உத்தரவு போட்டவனை போய்க்கொன்றான். சுட்டவன் என்ன பண்ணுவான் பாவம், எய்தவன் இருக்க அம்பை ஏன் நோகனும், அதனால எய்தவனைப் போய்க் கொன்றான். அதற்கு ஆணையிட்ட கவர்னரைப் போய்த்தான் கொன்றான், ஜெனரல் டயரை. அந்த டயரைத் தான் சுட்டான். அது போல் ஈழத்தமிழன் எவனாவது கண்ணெதிரே தனது சொந்தங்களை அநியாயமாகக் கொன்றவனை, அங்கே சுட்டுக் கொல்றான், அந்த நியாயத்தின் படி இது நியாயம் தானே. உனக்கு அவன் தியாகி தானே. எப்படி அவனைக் குற்றவாளி என்று சொல்கிறீர்கள்?

அதுதான் சொன்னேன் ஈழத்தமிழனென்றாலும் எவனாக இருந்தாலும் அதை செய்திருக்க வேண்டும், நல்லது தான். புலிகள் செய்யாமல் இருந்திருந்தால் குற்றம் என்று சொல்கிறோம். ஏனென்றால் அவர்களுக்கானவர்கள் நீங்கள் தான். அவர்களுக்குப் பாதுகாப்பானவர்கள் நீங்கள் தான். புலிகள் செய்யாமல் இருந்தால் கண்டிக்க வேண்டும். இந்த நிலைப்பாடு நாம் எடுக்க வேண்டும். இந்த நிலையில் தான் ஏற்கனவே சொன்னேன். அவர்கள் எல்லாம் நம்மை தமிழனென்று மதிக்கவில்லை. அவன் பாதிக்கப்பட்ட போது நாம் நிதி அனுப்பினோம், நமக்கு அவன் அனுப்ப மாட்டான். எப்படி நாம் கருதுவது என்றால், நாட்டில் எது நடந்தாலும் தமிழர்களாகிய நாம் இந்தியர்கள் என்று கருதிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்தியாவில் இருக்கும் வேறு எவனும் அகில இந்தியா பேசுகிறவன் கூட அவனை அவன் தேசிய இனத்தின் பெயரில் தான் இனம்காண்கிறான், நான் இந்திக்காரன், நான் பெங்காளி. அதனால் தான் காங்கிரசு கட்சியினுடைய முதல்வராக இருந்த சித்தார்த்த சங்கர் ரே வங்க தேசத்தில், பாகிஸ்தானில் வங்காளிகள், தன் மொழி பேசுகிற மக்கள் பாதிக்கப்பட்ட போது அவன் சொன்னான், இந்திரா காந்தி தலைமை அமைச்சராக இருந்தபோது, இந்திராவே நீ படை அனுப்புகிறாயா, நான் என் மாநிலத்தின் ரிசர்வ் போலீசை அனுப்பச் சொல்லவா என்று சட்டமன்றத்தில் பேசினார் டாக்டர் சித்தார்த்த சங்கர் ரே, அகில இந்திய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர், அவனும் நம்மை மாதிரி மாநிலக் கட்சியைச் சார்ந்தவன் அல்ல, அகில இந்திய கட்சி சார்பில் இருக்கிற தேசிய உணர்வு ஏன் நமக்கு இல்லை.

செல்வா அவர்கள் பெரியாரிடம் தனது திட்டங்களைப் பற்றிச் சொல்லி ஆதரவு கேட்கிறார். 1972-யில் வருகிறார். பெரியார் சொன்னார். ஒரு அடிமை எப்படி இன்னொரு அடிமைக்கு உதவ முடியும். அந்த நாட்டு மக்கள் தலைவர் செல்வநாயகத்துக்கு நமது தலைவர் சொன்ன பதில் ஓர் அடிமைக்கு எப்படி இன்னோர் அடிமை உதவ முடியும் நாம் அடிமைகளாக இருக்காமல் இருந்தால் தான் அவர்களுக்கு உதவ முடியும். நாம் அடிமைகளாக இல்லாமல் இருப்பதற்கு என்ன முயற்சி செய்திருக்கிறோம், இது வரை, இனிமேலாவது செய்வோம் என்று சொல்லி கேட்டுக்கொள்வது தான் நமது கோரிக்கை.

நான் கூட தோழர் கிட்டே பேசினேன், ஐ.நா மன்றம் சொல்லியிருக்கிறது ஒவ்வொரு தேசிய இனத்திற்கும், இபோழுதில்லை 1966-யில் சொல்லியிருக்கிறது, 1970-யில் சொல்லியிருக்கிறது. ஐ.நா மன்றத்தின் பிரகடனம் சொல்கிறது, ஒவ்வொரு தேசிய இனத்திற்கும், தன்னுடைய சுயநிர்ணய உரிமையை தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு என்பது தான் ஐ.நா வில் பிரகடனம். முதலாவது கூறு அதுதான். எனவே இங்கிருக்கிற வழக்கறிஞர்கள் வழக்காடலாம், ஐ.நாவின் பிரகடனத்தை நிறைவேற்று, தமிழ்நாட்டுத் தமிழனிடம் வாக்கெடுப்பு நடத்து. நீ இந்தியாவில் தொடர்ந்து இருக்க விரும்புகிறாயா, இல்லையா? ஒரு வாக்கெடுப்பு நடத்தலாம். வழக்கு போடுவோம். அல்லது லயோலா கல்லூரியைச் சேர்ந்த பேரா.ராஜநாயகத்தைக் கேட்டுக் கொள்வோம், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்துங்கள். இப்படிப்பட்ட இந்திய அரசோடு இணைந்து இருக்க தமிழர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பதைத் தெரிந்தாவது வெளியிடுங்கள். தெரியட்டும் அப்பொழுதாவது தெரியட்டும். ஐ.நா மன்றம் இந்தியாவிடம் சொன்னது, 1947-யில் பாகிஸ்தான் காஷ்மீருக்குள் வந்த போது, காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துகிறேன், அவர்கள் இந்தியாவோடு இருக்க விரும்புகிறார்களா, பாகிஸ்தானுடன் இருக்க விரும்புகிறார்களா, தனிநாடாக இருக்க விரும்புகிறார்களா? வாக்கெடுப்பு நடத்துங்கள் என்று ஐ.நா மன்றம் சொன்னது. 1949, ஜனவரி-1-யில் நடத்தவேண்டிய வாக்கெடுப்பை 60 ஆண்டுகாலமாக நடத்தவே இல்லை இந்திய அரசு. இதற்கு மேலே நடத்திடவா போகிறது? நாம் நடத்தியாவது அறிவிப்போம். நமது உணர்வுகளை வெளிப்படுத்துவோம். அதற்காகத்தான் முதல் கட்டமாக 20-ஆம் தேதி நாங்கள் நடத்துகிற போராட்டம் இந்தத் தமிழ் மண்ணில் தமிழ் மக்களின் உணர்வை மதிக்காத அவர்களிடம், பலவகைகளில் போராட்டம் நடக்கலாம், மாணவர்கள் ஒரு பக்கம், வழக்கரிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் எத்தனையோ போராட்டங்கள் நடக்கின்றன, பலவகையில். நான் தோழர்களிடம் எல்லாம் கேட்டேன், என்ன செய்யலாம் என்று அப்போது தான் சொன்னேன், இந்த வாரத்தில் பெரியார் முழக்கத்தில் கூட எழுதியிருக்கிறோம்.

நமது குத்தூசி குருசாமி --------- சத்திய மூர்த்தி பவன் என்பதால் சத்தியமூர்த்தி நமது நினைவிற்கு வரவேண்டும். சத்திய மூர்த்தியை குறித்து குத்தூசி குருசாமி ஒரு கட்டுரையை எழுதினார். அழுகிய முட்டை அரையணாவிற்கு ஆறு என்ற தலைப்பு. கட்டுரையில் எழுதினார், தோழர்களே முட்டையால் அடிப்பதால் மனிதன் சாகமாட்டான். அதற்காக முட்டையை வீணாக்காதீர்கள். அது சத்துள்ள உணவு, அப்பா, அழுகிய முட்டையைப் பயன்படுத்தலாம் அரையணாவிற்கு ஆறு என்று நினைத்துவிடாதே, வேண்டாம். யார் மீது வீசினாலும் சத்தியமூர்த்தி மீது வீசாதீர்கள் என்று எழுதினார்கள். அடுத்த வாரமே அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். நான் சொன்னேன். எத்தனையோ போராட்ட முறைகள் இருக்கின்றன. காங்கிரசுகாரன் போகிறபோது, அதோ காங்கிரசுகாரன் போறாங்கிறது ஒரு போராட்டம். அவனை அவமானப்படுத்த வேண்டும், வீதியில் நடக்கும்போது. வெட்கப்படவேண்டும் வீதியில் நடப்பதற்கு. எத்தனையோ போராட்ட முறை எதிர்ப்புகளைப் பண்ணுவோம், எதிர்ப்புகளைக் காட்டுகிற புதுவழியாக நாங்கள் 20-ஆம் தேதி எடுக்க இருக்கிற மத்திய அரசின் அலுவலகங்களை இழுத்துப் பூட்டுவது என்ற போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள்.

தொடர்ச்சியாக அடிமைத்தனமாக இருந்த நாங்கள், அடிமை எப்படி ஈழத்தமிழனுக்கு எப்படி உதவ முடியும் என்பதை நெஞ்சில் நிறுத்துங்கள், அதற்கான முயற்சிகளும் பரப்புரைகளும் நடக்கட்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

15.02.2009 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற மாவீரன் தோழர் முத்துக்குமாரின் வீரவணக்கக் கூட்டத்தில் கொளத்ததூர் மணி அவர்கள் ஆற்றிய உரை