Friday, March 6, 2009

ஆசிட்.தியாகராசன்

ஆசிட்.தியாகராசன்
பெரியாருக்கு 14.12.1957 ஆம் ஆண்டு திருச்சி நீதிமன்றத்தில் குத்து, வெட்டு வழக்கில் 3 கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. அதில் அரசுக்காக வாதாடி பெரியாருக்கு தண்டனை பெற்றுத்தந்த பார்ப்பன அரசு வழக்கறிஞரை திருச்சியில் கொலை செய்ய முயற்சித்தவர் பெரியார் போராளி திருச்சி.தியாகராசன். அந்த முயற்சியில் கடுமையான காவல்துறை பாதுகாப்பையும் மீறி பார்ப்பன வழக்கறிஞர் மீது ஆசிட் அடித்து, கத்தியாலும் குத்தி காவல்துறையிடமிருந்து தப்பியும் ஓடியவர். இந்த போராட்டத்திலிருந்து அவருக்கு ஆசிட் தியாகு என்ற பெயர் கிடைத்தது. பெரியாரே இவருக்காக தனது சொந்த வக்கீலை வைத்து வாதாடி இருக்கிறார். மிகவும் வறிய நிலையில் இருந்த போதும், பெரியார் அவருக்காக ஏராளமாக பணஉதவி செய்யத் தயாராக இருந்தபோதும் அதை மறுத்து, பொருள் உதவிகளை வெறுத்து கொள்கைப் போராளியாக இன்னும் வாழ்கிறார். அண்மையில் 2007 இல் தஞ்சையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய சாதி ஒழிப்பு மாநாட்டில் இவர் ஆற்றிய உரை மிகவும் புகழ்பெற்றது. அவரைப் போன்ற போராளிகள்தான் இன்றைய இளைஞர்களுக்கு பாடமாய் இருக்கவேண்டும் என்ற நோக்கில் அவரது பெயரில் இந்த வலைப்பூ.

No comments: