Monday, April 27, 2009

தமிழ்நாட்டுக்கு ஒரு எம்.ஜி.ஆர்,தமிழ்ஈழத்துக்கு ஒரு பிரபாகரன்?-இயக்குனர் சீமானின் ஆவேச பேட்டி

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இயக்குனர் சீமான்நேற்று இரவு விடுதலையானவுடன் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:சட்டம் என்னை விடுதலை செய்துள்ளது. இது தனிப்பட்ட சீமானின் விடுதலை அல்ல.கருத்து சுதந்திரத்திக்கு கிடைத்த வெற்றி.என் மீது போடப்பட்ட வழக்கு தேவையற்றது,தவறானது.தடை செய்யப்பட்ட இயக்கத்திக்கு எதிராக எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம்,ஆதரித்து பேசக்கூடாது என்ற சர்வாதிகாரம் இருந்தது.அதை எனது வழக்கு உடைத்தெறிந்துள்ளது.

எங்களுக்கு கிடைக்க வேண்டியது விடுதலை.அது கிடைக்கும் வரை போராடுவோம்.ஈழவிடுதலையை யார் அங்கீகரிக்கிறார்களோ,விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க யார் பாடுபடுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிப்போம்.தமிழீழத்தை ஆதரிக்கும் இயக்கத்துக்கு ஆதரவுஅளிப்போம்.இதற்காக பலபேர் பலவடிவத்தில் போராடுகிறார்கள்.13 பேர் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள்.இந்த சமூகத்தை அதிகம் நேசிப்பவர்களை சமூகவிரோதிகள் என்கிறார்கள்.இதற்காக போராட்டங்கள் நடத்தினால் என் போன்றவர்கள் போராட வேண்டியிருக்காது.


காங்கிரஸ் தான் இனப்பேரழிவுக்கு காரணம். காங்கிரசை வீழ்த்தும்வரை போராடுவோம் .அது யாருக்கு சாதகம்,பாதகம் என்று பார்க்க மாட்டோம். இலங்கை தமிழர் பற்றி பலரும் பேசும்போது, சோனியாகாந்தி ஒருவார்த்தைகூட பேசவில்லை.அதற்கு என்ன அர்த்தம்? என்றார்.பின்னர் இரவு 8:45 மணியளவில் அவர் உட்பட பத்து இயக்குனர்கள் சேர்ந்து நடித்துள்ள "மாயாண்டி குடும்பத்தார்"படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார்:"சிறை என்றால் எல்லோரும் பயப்படுகிறார்கள்.எனக்கு பெரியபயம் இருந்தது.ஆனால் உள்ளே போய்வந்த பிறகுதான் அந்த பயம்நீங்கியது.சிறைக்குள் எந்த பயமும் கிடையாது.ரொம்ப நல்லவர்கள்எல்லாம் உள்ளே இருக்கிறார்கள்.ரொம்ப கெட்டவர்கள் எல்லாம் வெளியே இருக்கிறார்கள்.நான் 70 நாட்கள் தனிமையில் இருந்தேன்.உள்ளே எனது அலைபேசியை(செல்போன்) பயன்படுத்தக்கூடாது.ஒரேஒரு ரூபாய் நாணயம் போட்டு வெளியில் யாரிடமாவது பேசிக்கொள்ளலாம்.அப்படி பேசும்போது இலங்கையில் நடப்பதையும்,இங்கே நடப்பதையும் தெரிந்துகொண்டு கழிவறைக்குள் உட்கார்ந்து அழுதேன்.


கட்டிப்பிடித்து அழக்கூட துணைக்கு யாருமில்லை.எம்.ஜி.ஆர் தான் தமிழ் இனத்தலைவன்.தமிழ் இனத்துக்காக பாடுபட்டவர்.தமிழ்நாட்டுக்கு ஒரு எம்.ஜி.ஆர்.தமிழ் ஈழத்துக்கு ஒரு பிரபாகரன்.இப்படி பேசுவதால் என்னை யாரும் கைது செய்யமுடியாது.கைதுசெய்தால் தேர்தலில் தோற்றுப்போய்விடுவார்கள்" இவ்வாறு இயக்குனர் சீமான் பேசினார்.

No comments: