தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு இந்தியாவில் 1984 ஜனவரி முதல் 1986 நவம்பர் வரை ஏறத்தாழ 3 ஆண்டுகள் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள கும்பாரப்பட்டி, புலியூரில் ஆயுதப்பயிற்சி நடைபெற்றது. முகாமிற்கு தலைமைப் பொறுப்பேற்று பயிற்சி அளித்தவரும், இலங்கையில் நவாப்புலி இராணுவ முகாமை தாக்கச் செல்ல 14.02.1987 இல் கைத்தடியில் கரும்புலிகளுக்குப் பயிற்சிஅளிக்கும்போது நடந்த விபத்தில் வீரமரணம் எய்தியவருமான தளபதி பொன்னம்மான் நினைவாக புலியூர்பிரிவில் கொளத்தூர் பகுதிபொதுமக்களால் பொன்னம்மான் நினைவு நிழற்கூடம் எழுப்பப்பட்டது.
அந்த தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் 27.11.13 அன்று மாலை 06.05 மணியளவில் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பாக நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
அங்கு கூடியிருந்த 1700 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈகச்சுடர் ஏற்றி மறைந்த மாவீரர்களுக்கு வீரவணக்கத்தைச் செலுத்தினர்.
No comments:
Post a Comment