Friday, September 24, 2010

திருச்சி கிறிஸ்தவக்கல்லறையின் தீண்டாமைச்சுவரை அகற்றுங்கள்! - பெரியார் தி.க தலைவர் கொளத்தூர் மணியின் போர்க்குரல்

அக்.2 போராட்டம்: ஓர் உரிமையான வேண்டுகோள்



தீண்டாமை எனும் தேசிய அவமானம், இன்னும் நீடிக்கிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகளே குமுறுகிறார்கள். “மாநிலத்தின் அதிகாரத்திலுள்ள தீண்டாமை தடுப்புச் சட்டங்கள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை காமன்வெல்த் விளையாட்டுகளுக்கு திருப்பிவிட்டது தவறு” என்று, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் கூறுகிறார். எனவே கட்சிகளுக்கு அப்பாற்பட்ட இந்த சமுதாயப் பிரச்சினையில் களம் இறங்கிப் போராட, சாதி தீண்டாமை எதிர்ப்பு கொள்கையில் உடன்பாடுடைய ஒவ்வொரு அமைப்பையும், ஒவ்வொரு தோழரையும், பெரியார் திராவிடர்க ழகம் அறைகூவி அழைக்கிறது!


‘அக்கிரகாரம்’ - ‘சேரி’களை உருவாக்கிய இராசஇராசன் ‘சூத்திர’ இழிவை நிலைநிறுத்தும் தஞ்சை பெரிய கோயில் அவமானச் சின்னங்களுக்கு அரசு விழாவா?

- வடநாட்டுப் பார்ப்பனர்களுக்கு அடிபணிந்து

- தமிழர்களிடையே சாதிப் பிரிவுகளை உருவாக்கி மோதவிட்டு, குருதி ஆறு ஓடவிட்டு,

- கோயில்களில் வடமொழியை வழிபாட்டு மொழியாக்கி

- ‘அக்கிரகாரங்களையும்’, ‘சேரி’களையும் தனித்தனியே உருவாக்கி

- தேவதாசி முறையை அறிமுகப்படுத்தி

- தமிழர்களை பார்ப்பனியமாக்கிய

இராசஇராசசோழனுக்கும், இன்றைக்கும் சூத்திர இழிவை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் தஞ்சை பிரகதீசுவரன் கோயிலுக்கும் விழா எடுத்து கொண்டாடி மகிழ்கிறது, கலைஞர் ஆட்சி! அவமானங்களுக்கு அரசு விழாவாம்!



பெரியாருடன் ஒரு பயணம்

No comments: