சேலம் மாவட்டம் கண்ணாமூச்சி கிராம
பஞ்சாயத்துக்கு சொந்தமான நிலத்தில் அரசு நடுநிலைப்பள்ளி, ஊட்டச்சத்துணவு
மையம், ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ள வளாகத்தில் பொது மேடை ஒன்றும்
உள்ளது. இந்த மேடை பள்ளி மற்றும் அனைத்து பொது
விழாக்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் 22.10.12 அன்று இரவு
அப்பகுதியை சேர்ந்த
மர்மநபர்களால் பிள்ளையார் சிலை ஒன்று வைத்து பூசை செய்யப்பட்டிருந்நது.
இத்தகவலை அறிந்த திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் திரண்டு கண்ணாமூச்சி
பஞ்சாயத்து தலைவரை அணுகி இது பஞ்சாயத்துக்கு சொந்தமான அரசு இடம் இதை
பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் தமிழக
அரசாணைப்படி அரசுக்கு சொந்தமான வளாகங்களில், இடங்களில் மதம் சம்மந்தப்பட்ட
குறியீடுகள் கோவில்கள் அமைப்பது சட்டப்படி குற்றம் என்ற அரசாணையை கொடுத்து
பிள்ளையார் சிலையை உடனடியாக அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அப்படி
பிள்ளையார் சிலையை அகற்றாவிட்டால் அரசாணைப்படி நாங்கள் அகற்ற நேரிடும் என
வேண்டுகோள்விடுக்கப்பட்டது. உடனடியாக பஞ்சாயத்து தலைவர்
திரு.கே.கே.பழனிசாமி அவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் விவரத்தை கூறினார்.
உடனடியாக
மேட்டூர் காவல்துறை துணைகண்கானிப்பாளர் தலைமையில் கொளத்தூர் ஆய்வாளர்,
துணை ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் நேரில்
வந்து விசாரணை நடத்தி பிரச்சணைக்குரிய பிள்ளையார் சிலையை உடனடியாக
அகற்றினர். மீண்டும் அந்த பொது மேடை மக்கள் பயன்பாட்டிற்கு
கொண்டுவரப்பட்டது.
No comments:
Post a Comment