Thursday, June 10, 2010

விடுதலை ! விடுதலை !பெரியார் திடலில் இருந்து பெரியாருக்கு விடுதலை !

1983 ஆம் ஆண்டில் தொகுத்து 2003 ஆம் ஆண்டுவரை 20 ஆண்டுகளாக தோழர் வீரமணி அவர்களால் முடக்கிவைக்கப்படிருந்த குடி அரசு இதழ்கள் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 2003 ஆம் ஆண்டில் ( 1925 குடி அரசு ) வெளியிடப்பட்டது. 1925 முதல் 1938 வரையிலான 28 தொகுதிகளை மொத்தமாக 2008 ஆம் ஆண்டு பெரியார் தி.க வெளியிடத் தயாரானபோது பெரியார் சிந்தனைகள் வெளிவராமல் தடுக்க தன்னால் ஆன எல்லாவகையான காரிய்ங்களையும், சட்டரீதியான காரியங்களையும் செய்து பார்த்தார் தோழர் வீரமணி. பொறுமையாகக் காத்திருந்தோம்.
உயர்நீதிமன்றம்
தோழர் வீரமணியிடமிருந்து பெரியாரை விடுதலை செய்துள்ளது. நீதிபதி சந்துரு அவர்கள் குடி அரசை பெரியார் தி.க வெளியிட எந்தத் தடையும் இல்லை என தீர்ப்புக்கொடுத்தார். அதையும் எதிர்த்து வீரமணி மேல் முறையீடு செய்தார். அந்த மேல்முறையீடும் நியாயமில்லை. பெரியார் திராவிடர் கழகம் குடி அரசு தொகுப்புகளை வெளியிட எந்தத்தடையும் இல்லை என ( 09.06.2010 ) மாண்பமை நீதியரசர்கள் இப்ராகிம் கலிஃபுல்லா, கிருபாகரன் ஆகியோர் தீர்ப்பளித்திருக்கின்றனர்.

பெரியாரின் சிந்தனைகள் எவருக்கும் தனிப்பட்ட சொத்தல்ல. ஆனால் மீண்டும் தோழர் வீரமணி பெரியாரைத் தன் தனிப்பட்ட சொத்தாக்கி அதன் வழியாக தன் மகனுக்கு சொத்து சேர்த்துக் கொடுக்க எந்த எல்லைக்கும் போவார்.

எனவே பெரியாரின்கருத்துக் கருவூலங்களை - 2000 ஆவது ஆண்டிலிருந்து 2010 ஆம் வரை 10 ஆண்டுகளாக பெரியார் திராவிடர் கழகம் உழைத்து, தேடித் தேடி அலைந்து தொகுத்து அச்சிட்ட 28 தொகுப்புக்களை இலவசமாக அனைவருக்கும் அனுப்பிவைக்கிறோம். படித்து பாதுகாத்து வையுங்கள். இந்த மின்னஞ்லை உங்களால் முடிந்த அளவு எல்லோருக்கும் அனுப்பிவையுங்கள். பல இலட்ச ருபாய் பொருள் நட்டம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அச்சிட்ட தொகுப்புகள் விற்பனை ஆகாவிட்டாலும் பரவாயில்லை. பெரியார் கருத்துக்கள் அனைவருக்கும் செல்லவேண்டும். அடுத்த தலைமுறைக்கும் செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் அனுப்பிவைக்கிறோம்.

படியுங்கள் - பரப்புங்கள் - வாழ்வில் கடைபிடியுங்கள்



10 .06.2010 இன்று காலை முதல் குடிஅரசு முன்பதிவாளர்களுக்கு அவர்கள் இல்லம் தேடி பெரியார் தி.க தோழர்கள் குடிஅரசு தொகுப்புகளை வினியோகம் செய்தனர்.