Saturday, March 17, 2012

இந்தியாவை புறக்கணிப்போம்!

தண்டிக்கப்படாத குற்றங்கள் என்ற பெயரில் சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கானொளியில் இடம்பெற்றுள்ள தமிழர் படுகொலை காட்சிகள் உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

அதில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் திட்டமிட்ட அடிப்படையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதும் காட்டப்படுகிறது.

இப்படியாக உலகமும் தமிழகமும் கொந்தளித்து கிடக்கும்போது தீரமானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று உண்மையிலேயே குரல் எழுப்புவது யார்? போலியாக நடிப்பவர்கள் யார் என்பதையும், தமிழ் நாட்டில் இருந்து கொண்டே தமிழ் மொழி பேசிக்கொண்டு சிங்களவனாக வாழும் சுப்பிரமனிய சுவாமி குறித்தும் பார்ப்போம்.

உண்மையான உண்ணாவிரதம்: இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரி கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் 48 மணி நேர உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர். (15.03.2012) இரவு உண்ணாவிரதம் தொடங்கியது. கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் இதனைத் தெரிவித்தார்.

ஆர்பரிக்கும் மாணவர்கள் சக்தி: இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று சென்னை விவேகானந்தா கல்லூரி மாணவர்கள், அதுபோல் புதுவை சட்டக்கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
தொடரும் இலங்கையின் ஆராஜகம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டு இருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி மீன்வலைகளை கடலில் அறுத்து வீசி எறிந்தனர். உயிர் தப்பி வந்த 4 மீனவர்கள் படகுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இப்படியாக மானம் கேட்ட இந்தியாவிற்கு எதிராக இலங்கை தொடர்ந்து அராஜகம் புரிந்து வருகிறது.

நீலிகண்ணீர் வடித்த கனிமொழி: இலங்கையில் 40 ஆயிரம் அப்பாவி மக்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளதை அறிந்த பிறகும், நாம் எப்படி வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியும்?'' என, பார்லிமென்டில் தி.மு.க., எம்.பி., கனிமொழி, ஆவேசமாக கேள்வி எழுப்பியதன் மூலம், "மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியேறப் போகிறதா?' என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேவலமான கருணாநிதி: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடிக்க முற்பட்டால் நான் தீக்குளிப்பேன்,'' என பொதுக்கூட்டத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். ஈழத்தமிழர் படுகொலைக்கு, தமிழக மீனவர்கள் படுகொலைக்கு தீக்குளிப்பேன் என்று மனித உயிர்கள் சாகும் போது சொல்லாத கருணாநிதி ஒரு கல்கட்டிடத்துக்காக தீக்குளிப்பேன் என்று சொல்லி தன்னைவிட ஒரு கேவலமான பிறவி இருக்க முடியாது என்று நிருபித்துள்ளார்.

ஹிந்துத்துவா பயங்கரவாதி சூ சாமி: தமிழ் நாட்டிலே வசித்து கொண்டு, தமிழ் மொழி பேசிக்கொண்டு சிங்களவனுக்கு ஆதரவாக பேசுகிறார் சுப்பிரமனிய சுவாமி. ஈழத்திலே நடந்தது இன படுகொலை என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. ஒரு தொலைகாட்சி பேட்டியில் உண்மைகளை மறைத்து ராஜீவ் படுகொலையை பேசி ஈழத்து இனப்படுகொலையை ஆதரிக்கும் திருபுவாதம் செய்கிறார் திருவாளர் சூ சாமி.

இந்தியா தனது நிலையை மாற்றி கொள்ள தயாராக இல்லை. எனவே ஒவ்வொரு தமிழனும் நம்மை தமிழன் என்றே அழைப்போம். இந்தியன் என்கிற அந்த வார்த்தையை சொல்ல, கேட்க நாராசமாய் இருக்கு. இந்தியாவை புறக்கணிப்போம். நாபாராளுமன்றத்திலே ஈழமக்களுக்கு ஆதரவாக பேசும்போது 90 சதவீதம் பேர் அவையை விட்டு வெளியே சென்று விட்டார்கள். ஹிந்திகாரனுக்கு தமிழனை பற்றி கவலையில்லை.
தமிழர் விரோத இந்தியாவை புறக்கணிப்போம்!