திராவிடர்
விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் தாயார் கு.பாவாயம்மாள்
நேற்று இயற்கை எய்தினார். இன்று 05-10-2013 காலை 11-00 மணியளவில் சேலம்
மாவட்டம் கொளத்தூர் உக்கம்பருத்திக்காடு இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம்
நடைபெற்றது. பிணத்தை சுமக்கும் பாடை தயாரிப்பதற்கான கோல்களை, வீட்டு
கூறையில் இருந்து பிரித்தெடுத்து பயன்படுத்தப்பட்டு, மீண்டும் வீட்டுக்
கூறையிலேயே பொருத்தப்பட்டது. கழகப் பெண்களே உடலை சுமந்து சென்றனர். எந்த
விதமான மத சடங்குகளும் பின்பற்றப்படவில்லை. ஆத்மா மறுப்பு கூறி, காரியம்,
கருமாந்திரம், கல்லெடுப்பு, படத்திறப்பு முதலிய எதுவும் கிடையாது என்றும்,
இத்துடன் அனைத்து நிகழ்வுகளும் நிறைவடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டவுடன்,
இறுதியாக பாவாயம்மாள் அவர்களின் மகளும், கழகத் தலைவரின் சகோதரியுமான சரோஜா
அவர்கள், தயாரின் உடலுக்கு தீயிட்டார்.
| | | | | |  |
No comments:
Post a Comment