Friday, July 17, 2009

கோவை இராணுவ வாகனத்தாக்குதல் - சிறைப்பட்ட தோழர்கள விடுதலை - வரவேற்பு

கோவை நீலாம்பூர் புறவழிச்சாலையில் கடந்த மே மாதம் இலங்கைக்கு ஆயுதங்கடந்த முயன்ற இந்திய இராணுவத்தைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டு, இந்திய இராணுவ வாகனங்களைத் தாக்கிய வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட தோழர்களில் 11 பேருக்கு கடந்த வாரம் பிணை கிடைத்தது. கடந்த 16.07.2009 அன்று பெ.திக தோழர்கள் சிறையிலிருந்து விடுதலை ஆனார்கள்.






16.07.2009 இல் விடுதலை ஆன தோழர்கள்
1. பொள்ளாச்சி பிரகாசு
2.திருப்பூர் தியாகு
3.திருப்பூர் இராவணன்
4.திருப்பூர் சண்முகம்
5.குளத்துப்பாளையம் குமார்
6.காளப்பட்டி அம்பேத்கர்
7.ஆவாரம்பாளையம் விக்னேசுவரன்
8.ஆவாரம்பாளையம் சண்முகசுந்தரம்
9. கலங்கள் வேலு
10. சேலம் சிவப்பிரியன் (தமிழர் தேசிய இயக்கம்)
11. வள்ளுவராசன் (புரட்சிகர இளைஞர் முன்னணி)
16.07.2009 காலை 10 மணியளவில் 4 தோழர்களும் மாலை 6 மணிக்கு 7 தோழர்களும் கோவை சிறையிலிருந்து விடுதலை ஆனார்கள். சிறைப்பட்ட தோழர்களுக்கு சிறை வாயிலில் எழுச்சிகரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தோழர்களுக்கு கருப்பு ஆடை அணிவித்து வரவேற்றார். கோவை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் திருப்பூர் துரைசாமி, இல. அங்கக்குமார், முகில்ராசு கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் பொள்ளாச்சி மனோகரன், உடுமலை கருமலையப்பன், யாழ்.நடராசன், மடத்துக்குளம் மோகன், கோவை மாநகரப் பொறுப்பாளர்கள் கோபால், சாஜித், கதிரவன், தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் பன்னீர்செல்வம், சேலம் மாவட்டப் பொறுப்பாளர்கள் மார்டின், சேலம் டேவிட், வீரமணி, மேட்டுர் ஆசை, முத்துராஜ், கொளத்தூர் பிரபு, சூலூர் தோழர் பன்னீர்செல்வம் குடும்பத்தினர், திருப்பூர் தமிழ்ச்செல்வி, பொள்ளாச்சி நாகராசு, கொடுமுடி பாண்டியன், தாராபுரம் குமார், திண்டுக்கல் தாமரைக்கண்ணன், திருப்பூர் கார்த்தி ஆகிய தோழர்கள் உட்பட பாடகர் சமர்ப்பா மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர்களும் காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை சிறை வாசல் முன்பு மழையில் நனைந்து கொண்டே காத்திருந்து தோழர்களை வரவேற்றனர். சிறை வாசலில் இருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்குச் சென்று மாலை அணிவித்து இறுதியாக பெரியார் படிப்பகம் வந்தடைந்தனர்.

விடுதலை ஆன தோழர்களைத் தவிர மேலும் 15 பெ.தி.க தோழர்கள் இன்னும் சிறையில் உள்ளனர். கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், பெரம்பலூர் இலட்சுமணன், சூலூர் வீரமணி ஆகிய தோழர்கள் தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

No comments: