Monday, April 27, 2009

தே.பா.சட்டதில் இருந்து கொளத்தூர் மணி விடுதலை

பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்.இவர் திண்டுக்கல்லில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அவரது பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து மார்ச் 2 ந்தேதி கைது செய்தனர். இந்நிலையில் திண்டுக்கல் கலெக்டர், கொளத்தூர் மணி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் கொளத்தூர் மணியின் சகோதரர் பழனிச்சாமி, தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை நீதிபதிகள் தர்மராஜ், சுப்பாராவ் ஆகியோர் முன்பு இன்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.

No comments: